Thursday 30 January 2020


வரலாறு  நினைவில் கொள்ளும்...
 

இன்னாது இனியார்ப்பிரிவு..
என்றார் வள்ளுவர்....

இந்திய தேசத்தின் மக்கள் சேவைக்காக..
இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக...
பல காலம்... பல்லாண்டு காலம்... 
தங்கள் வாழ்வை அளித்த... அழித்த...
பல்லாயிரம் தோழர்கள்
இன்று பணிநிறைவு பெறுகின்றார்கள்...

வாழ்நாள் முழுவதும்
இந்த நிறுவனத்தையே
நேசித்து... யோசித்து... சுவாசித்து
வாழ்ந்து வந்த தோழர்கள்...
இன்று விடை பெறுகின்றார்கள்...

தங்கள் சேவையால்
அரசுக்கு வருமானத்தை...
அள்ளிக் கொடுத்த தோழர்கள்...
வெறும் நினைவுகளோடு...
வெறும் கைகளோடு....
விடை பெறுகின்றார்கள்...

வக்கற்ற அரசும்...
திக்கற்ற நிறுவனமும்...
வெட்கித்தலை குனியட்டும்...

வீரர்களே... தோழர்களே....
நீங்கள் தலை நிமிர்ந்து செல்லுங்கள்...
BSNL உங்களால் தலை நிமிரும்...
வரலாறு உங்களை நினைவில் கொள்ளும்...
------------------------------------------

இன்று... புதிதாய்ப் பிறந்தோம்...


சென்றதினி மீளாது எப்போதும்..
சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும்
குழியில் வீழ்ந்து குமையாதீர்!
சென்றதனைக் குறித்தல் வேண்டாம்...

இன்று...
புதிதாய்ப் பிறந்தோம் என்று
நீவிர் எண்ணமதைத்
திண்ணமுற..
இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி
இன்புற்றிருந்து வாழ்வீர்..
தீமையெலாம் அழிந்து போகும்...
திரும்பி வாரா...

மறவாதீர்....
மகாகவியின் வரிகளை....

5 comments:

  1. ஊழியர் தற்கொலை பற்றி பதிவு

    ReplyDelete
  2. *மனதை உருக்கும் இந்த மரணம் நம் ஊதியத்தை பெற்று தருகிறது என்றால் நிச்சயம் அது நிர்வாகத்திற்கு மிக பெரிய அவமானம் தான்*

    ReplyDelete