நிர்வாகத்துடன் சந்திப்பு
BSNL நிர்வாகத்துடன் NFTE சங்கத்தின்
அதிகாரப்பூர்வ சந்திப்பு
FORMAL MEETING 21/01/2020 அன்று டெல்லியில் நடைபெற்றது.
NFTE தலைவர்களுடன் SNATTA சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.
------------------------------------------
கீழ்க்கண்ட பிரச்சினைகள்
விவாதிக்கப்பட்டன.
சம்பளப்பட்டுவாடா
ஜனவரி 30 அல்லது 31ம்தேதி சம்பளம்
பட்டுவாடா செய்யப்படும். சங்க சந்தாப்பிடித்தம் உள்பட எல்லாவிதப்பிடித்தங்களும் பட்டுவாடா
செய்யப்படும். நிர்வாகத்தின் குறிப்பில்
SALARY PAYMENTS என்று மட்டுமே உள்ளது. டிசம்பர் மாதச்சம்பளமா? அல்லது டிசம்பர் மற்றும்
ஜனவரியும் சேர்ந்தா? என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
எப்படியோ ஜனவரி 31ம்தேதி டிசம்பர்
மாதச்சம்பளம் நிச்சயம்.
ஜனவரி மாதச்சம்பளத்தையும் சேர்த்துப் பெறுவது நமது லட்சியம்.
------------------------------------------
இலாக்காப் போட்டித்தேர்வுகள்
கடந்த 3 ஆண்டுகளாக TT, JE மற்றும்
JAO கேடர்களுக்கான இலாக்காப்போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. எனவே மேற்கண்ட தேர்வுகளை
உடனடியாக நடத்திட கோரிக்கை எழுப்பப்பட்டது. வரும் மார்ச் மாதம் அறிவிப்பு செய்யப்படும்
என நிர்வாகத்தரப்பில் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த JTO தேர்வில் தவறான கேள்விகளும்
பாடத்திட்டங்களும் இடம் பெற்றிருந்தன. இதனால் மிகமிகக்குறைவான தோழர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை மீண்டும்
EXPERT COMMITTEE இடம் பரிசீலனை செய்ய உத்திரவிடுவதாக
BSNL நிர்வாகம் தெரிவித்துள்ளது.
------------------------------------------
விருப்ப ஓய்வு – VIGILANCE
CLEARANCE
தனிப்பட்ட முறையில் வழக்குகள்
நிலுவையில் உள்ள தோழர்களின் விருப்ப ஓய்வுக்கு VIGILANCE CLEARANCE ஒப்புதல் அளிக்கப்படாது என VIGILANCE
பிரிவு அறிவித்திருந்தது. இது நிர்வாகம் அறிவித்த BSNL விருப்ப ஓய்வு விதிகளுக்கு முரணானது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்தப்பிரச்சினை 27/01/2020 அன்று நடைபெறும்
BSNL நிர்வாகக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என நிர்வாகம்
கூறியுள்ளது.
------------------------------------------
விருப்ப ஓய்வில் செல்பவர்களின்
கடன் பிடித்தங்கள்
வங்கிக்கடன் மற்றும் கூட்டுறவு
சங்கக்கடன் ஆகியவை விருப்ப ஓய்வில் செல்பவர்களின் விடுப்புச்சம்பளம் மற்றும்
EXGRATIAவில் பிடித்தம் செய்யப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் வங்கிகள்
தங்களுக்கு செலுத்தப்படாத பிடித்தங்களையும் கட்டப்படாத காலத்திற்கான அபராத வட்டியையும்
சேர்த்து பிடித்தம் செய்திட நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன. கூட்டுறவு சங்கங்கள்
மே மாதத்தில் இருந்து வராத பிடித்தங்களையும் சேர்த்து
கணக்கில் காட்டியுள்ளன. மேலும் உறுப்பினர்களின் கணக்குகளை முடிக்காமல் அவர்களது
ASSET சொத்துக்களை கடனில் இருந்து கழிக்காமல் தங்களுக்கு சேரவேண்டிய தொகையைக் கணக்கிட்டு
அனுப்பியுள்ளன. இது முறையற்ற செயல். கூட்டுறவு சங்கங்களுக்கு எதிராக விருப்ப ஓய்வில்
செல்லும் தோழர்கள் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது.
------------------------------------------
விருப்ப ஓய்வில் செல்பவர்களின்
ஓய்வூதியம்
விருப்ப ஓய்வில் செல்பவர்களின்
ஓய்வூதியம்
தாமதமாகும் சூழல் உள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாமதம் உண்டாகும்
என்பதை ஒத்துக்கொண்ட நிர்வாகம்
தற்காலிக ஓய்வூதியம் வழங்கிட PROVISIONAL PENSION
நடவடிக்கை
எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
------------------------------------------
ஓய்வூதியப்பலன்களின் உள்ள சந்தேகங்கள்
விருப்ப ஓய்வில் செல்பவர்களின்
COMMUTATION மற்றும் பணிக்கொடை பற்றிய சந்தேகங்கள் போக்கப்பட வேண்டும் என கோரிக்கை
எழுப்பப்பட்டது. இது பற்றிய DOT விளக்கம் 27/01/2020 அன்று வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
மேலும் ஓய்வூதிய ஆணையில் இது பற்றிய விவரக்குறிப்புகள்
இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------
விருப்ப ஓய்வுக்குப் பிந்தைய நிலை
விருப்ப ஓய்வுக்குப்பின் BSNL
சேவையை பராமரிப்பதில் உள்ள சிக்கல்கள் சுட்டிக்காட்டப்பட்டன. எனவே விருப்ப ஓய்வில்
செல்பவர்களைத் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டது.
இதுபற்றி விவாதித்து முடிவெடுப்பதாக நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.