Wednesday, 14 November 2018


மாநாடு வெல்ல வாழ்த்துக்கள் 

AIBSNLPWA
அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம்
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
 -----------------------------------------------------------------------------
மாவட்ட மாநாடு
15/11/2018 – வியாழன் – காலை 10 மணி
மீனாட்சி திருமண மண்டபம் – பரமக்குடி
 ------------------------------------------------------------------------------
தலைமை : தோழர்.S.ஜெயச்சந்திரன் 
மாவட்டத்தலைவர் - AIBSNLPWA 
 -------------------------------------------------------------------------------
பங்கேற்பு
தோழர். V.மாரி
மாவட்டச்செயலர் NFTE

தோழர். R.வெங்கடாச்சலம்
மாநிலச்செயலர் AIBSNLPWA

மற்றும் தலைவர்கள்…

மூத்த தோழர்களின் ஊன்றுகோலாம்…
AIBSNLPWA நலச்சங்கத்தின்
மாவட்ட மாநாடு வெற்றி பெற
அன்புடன் வாழ்த்துகின்றோம்…

NFTE தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி.

Tuesday, 13 November 2018


ஓரணியாய் கூடுவோம் பேரணியில்… 
தோழர்களே…
நவம்பர் 14
நமது தேசத்தின் ஆலயங்களாம்..
பொதுத்துறைகளை உருவாக்கி…
கலப்பு பொருளாதாரம் கண்ட
இந்திய தேசத்தின் சிற்பி
ஜவஹர்லால் நேரு பிறந்த நன்னாளில்…

நமது உரிமைகளுக்காக…
BSNL வளர்ச்சிக்காக…
பொதுத்துறை காப்பதற்காக…
நாம் நடத்தும்…
நவம்பர் 14 பேரணியில்..
ஓரணியாய்.. பேரணியாய்
அணி திரள்வோம் தோழர்களே…

கஜாப் புயல் கரைகடக்கும்…
பாம்பன் தீவு தொடங்கி…
பன்றிக்காய்ச்சல் பரவிக்கிடக்கும்…
காரைக்குடி வரை…
பணிசெய்யும் நிரந்தர ஊழியர்கள்…
பணிநிறைவு பெற்ற தோழர்கள்…
பணிசெய்தே பாடுபடும் ஒப்பந்த ஊழியர்கள்…
அணி அணியாய்.. ஓரணியாய்…
காரைக்குடி நோக்கி திரண்டு வாரீர்….

JCM தலமட்டக்குழு

காரைக்குடி மாவட்ட JCM தலமட்டக்குழுக் கூட்டம் 
16/11/2018 வெள்ளிக்கிழமையன்று காரைக்குடி
 பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெறும்.

 தலமட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும்  
தவறாது கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

Monday, 12 November 2018


நவம்பர் 14... நாடெங்கும் பேரணி… 

BSNL நிறுவனத்திற்கு…
4G அலைக்கற்றை வழங்கக்கோரி…

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு
மூன்றாவது ஊதியமாற்றம் அமுல்படுத்தக்கோரி…

BSNL ஓய்வூதியர்களுக்கு…
ஓய்வூதிய மாற்றம் செய்திடக்கோரி…

BSNL ஓய்வூதியப்பங்களிப்பை…
அரசு விதிகளின்படி பிடித்தம் செய்யக்கோரி…

BSNL ஊழியர்களின் பல்வேறு…
ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி...

AUAB அனைத்து அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பாக...

நவம்பர் 14 அன்று…
தேசமெங்கும் தெருவோரப்பேரணி…

 தேசியத்தலைவர் தேவர் சிலை தொடங்கி...
தேசத்தலைவர் இராஜீவ்காந்தி சிலை வரை…

ஒட்டுமொத்த BSNL ஊழியர்கள் அதிகாரிகளின்...
ஒன்றுபட்ட கோரிக்கைப்பேரணி…

14/11/2018 – புதன்கிழமை – 
மாலை 03.00 மணி - காரைக்குடி...
 பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக...
அணிதிரள்வீர் தோழர்களே…
அனைத்து சங்க கூட்டமைப்பு – காரைக்குடி.

ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு…
சென்ற ஆண்டிற்கான போனஸ் வழங்கிடக்கோரி…
அக்டோபர் மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யக்கோரி…
அநியாயமான ரூ.500/= பிடித்தம் திருப்பி தரக்கோரி…
முழுமையான வைப்புநிதியை முறையாக செலுத்தக்கோரி…

NFTE – BSNLEU இணைந்த
கண்டன ஆர்ப்பாட்டம்

13/11/2018 – செவ்வாய்க்கிழமை – மதியம் 12.30 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

மற்றும்…
இராமேஸ்வரம் – இராமநாதபுரம்
பரமக்குடி – சிவகங்கை
தொலைபேசிநிலையங்கள் முன்பாக

தோழர்களே…
அநியாயங்கள் தொடரும்வரை…
போராட்டங்களும் தொடரும்….
அணி திரள்வீர்… ஆர்ப்பரிப்பீர்…

Sunday, 11 November 2018


மாவட்டச்செயற்குழு போராட்ட முடிவுகள்

13/11/2018 செவ்வாய்க்கிழமையன்று
இராமேஸ்வரம், இராமநாதபுரம், பரமக்குடி,
சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் 
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினை தீர்விற்காக
கோரிக்கை ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் பணிபுரியும்
ஒப்பந்த ஊழியர் தோழியர்.முத்துமாரி அவர்களுக்கு எதிரான
வன்கொடுமைப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
பாதிக்கப்பட்ட பாவப்பட்ட பெண்ணிற்கு நியாயம் வழங்கக்கோரி   
27/11/2018 அன்று சிவகங்கைத் தொலைபேசி நிலையம் முன்பாக
கண்டன ஆர்ப்பாட்டம் 
மற்றும் மகளிர்நிலையக் காவல் நிலையத்தில்
ஊர்வலமாகச்சென்று மனு கொடுத்தல்..

தோழர்களே…. அணி திரள்வீர்…

குத்தகைக்காரர்களின் கொடுமை காணீர்…

காரைக்குடி மாவட்டத்தில் பல காலமாக
குத்தகை எடுத்து கொழித்து வருகின்றார்கள் குத்தகைக்காரர்கள்.
எந்த சட்டதிட்டங்களையும் அமுல்படுத்துவதில்லை.
நிர்வாகம் சொல்லும் எதையும் மதிப்பதில்லை.
அவர்கள் தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதி பாரீர்…

ALERT SECURITY கோவை

கடந்த நான்கு ஆண்டுகளாக காரைக்குடி மாவட்டத்தில்
HOUSE KEEPING மற்றும் EOI குத்தகை எடுத்து வந்த
ALERT SECURITY நிறுவனம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக
போனஸ் பட்டுவாடா மறுப்பு…

நான்கு ஆண்டுகளிலும் ஒரு மாதம் கூட உரிய தேதியில்
சம்பளம் பட்டுவாடா செய்யாத அலட்சியப்போக்கு…

ஆகஸ்ட் 2018 மாதச்சம்பளத்தில் காரணம் ஏதுமின்றி
ரூ.500/= அநியாயப் பிடித்தம்.

2018 ஜூன் 2018 மாத EPF தொகையை ஊழியர்கள் கணக்கில்  
இன்னும் வரவு வைக்காமல் ஏமாற்றும் திருட்டுத்தனம்…

மாதந்தோறும்  சரியான தொகையில் EPF செலுத்தாமல்
குறைவான தொகையில் EPF பணம் செலுத்தும் கொடுமை…

MALLI SECURITIES CHENNAI

ஏப்ரல் 2018 வரை பல்வேறு குத்தகை எடுத்து
மகிழ்ந்து வந்த MALLI SECURITIES சென்ற ஆண்டிற்கு போனஸ் வழங்காமல் இழுத்தடிப்பு…

கிராமப்புற பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் 
தொடர்ந்து குறைவான சம்பளம் வழங்கியது…

OFF LINE காலங்களில் EPF தொகையை
முழுமையாக செலுத்தாமல் ஏமாற்றியது.

OFF LINE கால EPF தொகையை 
முழுமையாக ONLINEல் மாற்றி வரவு வைக்காதது…

RAMANI SCREEN சென்னை

மே 2018 முதல் குத்தகை எடுத்துள்ள
RAMANI SCREEN நிறுவனம் தீபாவளிக்கு முன்பு
அக்டோபர் மாதச்சம்பளத்தைப் பட்டுவாடா செய்வதாக
நிர்வாகத்திடம் 99.9 சதம் உறுதி அளித்தும்
இன்றுவரை பட்டுவாடா செய்யாத 100 சதக்கொடுமை…

மே 2018 முதல் அக்டோபார் 2018 வரையிலான காலத்திற்கு
போனஸ் வழங்குவதாக உறுதி அளித்து
ரூ.2000/- மட்டும் அதுவும் குறைவான ஊழியர்களுக்கு மட்டும்
வழங்கி விட்டு ஏமாற்றும் வித்தை…

குத்தகைக்காரர்களின் இந்தக்கொடுமை எதிர்த்தும்
BSNL நிர்வாகத்தை உடனடியாகத் தலையிடக்கோரியும்...

13/11/2018 செவ்வாய்க்கிழமையன்று
மாவட்டம் தழுவிய 
கண்டன ஆர்ப்பாட்டம்
தோழர்களே… அணி திரள்வீர்… 

Thursday, 8 November 2018


சங்க விழா… சங்கமிப்போம்…. 

தோழர்களே…
நமது மாவட்டச்சங்கத்தின் செயற்குழு…
காரைக்குடி பகுதி கிளைகளின் இணைப்பு மாநாடு
பணிநிறைவு பெற்ற தோழர்களின் பாராட்டு விழா…
ஒப்பந்த ஊழியர்களின் சிறப்புக்கூட்டம்.. என

நவம்பர் 10 அன்று சங்க விழாக்கள்…
பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில்…
மாவட்டத்தலைவர் தோழர்.லால்பகதூர் அவர்கள்
தலைமையில் சிறப்புடன் நடைபெறவுள்ளது.

மாநிலச்செயலர் அன்புத்தோழர். நடராஜன்
அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கிளைச்செயலர்களும்…
மாவட்ட சங்கப் பொறுப்பாளர்களும்
JCM மற்றும் பணிக்குழு உறுப்பினர்களும்…
ஒப்பந்த ஊழியர்களும்… முன்னணித்தோழர்களும்…
தவறாது கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றோம்.

தோழமையுடன்…
 பா. லால்பகதூர் - மாவட்டத்தலைவர்
 வெ.மாரி - மாவட்டச்செயலர்

Monday, 5 November 2018


நவம்பர் புரட்சி தின விழா 

தியாகி KMS சிந்தனைச்சோலை
தேவகோட்டை

நவம்பர் புரட்சி தின விழா

07/11/2018 – புதன்கிழமை – மாலை 06 மணி
KMS நூலகம் – பகத்சிங் மண்டபம் – தேவகோட்டை

பங்கேற்பு
பேராசிரியர். இராகுலதாசன்
தோழர்.KMS.தெய்வசிகாமணி
திரு.SP.தனசேகரன்
கம்பவாரிதி ஆ.குமார்

மகாகவி பாரதியின்
சோவியத் புரட்சி சிந்தனைகள்

சிறப்புரை
தோழர். வெ.மாரி
மாவட்டத்தலைவர் – கலை இலக்கியப்பெருமன்றம்
மாவட்டச்செயலர் – தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

தோழர்களே… வாரீர்…
தீபாவளி வாழ்த்துக்கள் க்கான பட முடிவு


மாற்றம் வரட்டும்…
ஏற்றம் பெறட்டும்…

நாடு நலம் பெறட்டும்…
BSNL வளம் பெறட்டும்..
உழைப்போர் ஊக்கம் பெறட்டும்…
இளைத்தோர் உயர்வு பெறட்டும்..
நல்ல மாற்றம் பிறக்கட்டும்…
நாட்டில் ஏற்றம் வளரட்டும்…

அனைவருக்கும் இனிய
தீபாவளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள்..

Saturday, 3 November 2018


அடி மேல் அடிப்போம்…

BSNL ஊழியர்களும் அதிகாரிகளும்
தொடர்ந்து குரல் கொடுத்தும்…
தொடர்ந்து போராடியும்…
மூன்றாவது ஊதியமாற்ற அமுலாக்கத்தில்
மாற்றங்கள் ஏதுமின்றி இருப்பதால்….
திட்டமிட்டபடி…
நவம்பர் 14 புதன்கிழமை அன்று…
பொதுத்துறைச்சிற்பி…
ஜவஹர்லால் நேரு பிறந்த நன்னாளில்…

மாவட்ட.. மாநில… தலைநகர்களில்…
அனைத்து அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் பங்கேற்கும்
மாபெரும் கோரிக்கைப் பேரணி…

அடிமேல் அடி அடித்தால்…
அம்மியும் நகரும்…
அடி மேல் அடி கொடுப்போம்…
அரசாங்க அம்மி நகர்ப்போம்…
அனைவரின் உரிமை காப்போம்….
அணி திரள்வீர் தோழர்களே…

DOT செயலருடன் சந்திப்பு

DOT செயலர் அருணா சுந்தர்ராஜன் அவர்களுடன்
02/11/2018 அன்று AUAB அனைத்து சங்கத்தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. DOT மற்றும் BSNL உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

அவருடன் நடைபெற்ற சந்திப்பின்போது
24/02/2018 அன்று இலாக்கா அமைச்சர்
தொழிற்சங்கங்களிடம் அளித்த உறுதிமொழிகள்
ஒன்று கூட DOTயால் பரிசீலிக்கப்படவில்லை என்பதை
கூட்டமைப்புத் தலைவர்கள் அழுத்தமாக சுட்டிக்காட்டினர்.

DOTயின் பாராமுகம் காரணமாகவே
அனைத்து தொழிற்சங்க அமைப்பு  
தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டது என்பதுவும் சுட்டிக்காட்டப்பட்டது.

கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன…

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால்
அதற்கு முன்பாக ஊதியமாற்றம் அமுல்படுத்தப்பட வேண்டும்
என அனைத்து சங்க கூட்டமைப்பு கோரிக்கை எழுப்பியது.

ஊதிய மாற்றம் சம்பந்தமாக சில கேள்விகளை
BSNL நிர்வாகத்திடம் DOT எழுப்பியுள்ளதாகவும்…
உரிய பதில் வந்தடைந்த பின்பு…
ஊதியமாற்றம் அமுல்படுத்துவது சம்பந்தமான…
முன்மொழிவு இம்மாத இறுதிக்குள்
அமைச்சரவைச்செயலருக்கு அனுப்பி வைக்கப்படும் 
எனவும்… DOT செயலர் உறுதியளித்துள்ளார்.

BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாக
அமைச்சர்கள் உபகுழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும்
விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு
அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு என்னும்
நமது நீண்ட நாள் கோரிக்கை சாதகமாக பரிந்துரைக்கப்பட்டு
DOE என்னும் செலவின இலாக்காவின் பரிசீலனைக்கு
ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்கப்படும்

ஓய்வூதிய மாற்றத்தை ஊதியமாற்றத்துடன்
முடிச்சுப்போடும் நடைமுறையை மாற்ற வேண்டும்
என்ற கோரிக்கை DOT செயலரால் செவிமடுத்து கேட்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக தன்னுடன் விவாதிப்பதற்கு
MEMBER(SERVICES) அவர்களை DOT செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு
ஓய்வூதியப்பங்களிப்பு உயர்த்தப்பட வேண்டும்
என்ற கோரிக்கையின் மீது BSNL நிர்வாகமே முடிவெடுக்கலாம்
என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நமது CMD கூடுதலாக
2 சதம் ஓய்வூதியப்பங்களிப்பை 
உயர்த்துவதற்கு இசைவு தெரிவித்துள்ளார்.
  
DOT செயலர் அருணா சுந்தர்ராஜன் அவர்கள்
தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில்
எதிர்மறையாக நடந்து கொள்பவர் என்பதுவும்
அவர் தொழிற்சங்கங்களை சந்திப்பதில்லை.. மதிப்பதில்லை
என்பதுவும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் 02/11/2018
அன்று நடந்த கூட்டத்தில் நேர்மறையாக
பிரச்சினைகளை கையாண்டுள்ளார் என்பது வரவேற்கத்தக்கது.

முக்கியப் பிரச்சினையான 
3வது ஊதியமாற்றம் தவிர
ஏனைய பிரச்சினைகளான…
4G ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதியப் பங்களிப்பு
ஆகிய பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில்.. DOT செயலருடனான சந்திப்பு
4க்கு3 பழுதில்லை என்ற வகையில் அமைந்துள்ளது.

AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவுகள்

02/11/2018 அன்று DOT செயலருடனான சந்திப்பிற்கு முன்
NFTE சங்க அலுவலகத்தில் அனைத்து சங்க கூட்டமைப்பு 
AUAB கூட்டம் நடைபெற்றது.  
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்கள்
AUAB கூட்டமைப்பின் CHAIRMAN தலைவராகவும் 
BSNLEU பொதுச்செயலர் தோழர்.அபிமன்யு அவர்கள்
AUAB கூட்டமைப்பின் CONVENOR 
ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள்.

மாநில மாவட்ட அளவில் உடனடியாக
AUAB கூட்டமைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு
 மேற்கண்ட முறையில் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்படவேண்டும்.

வேலைநிறுத்தக் கடிதங்களில் அனைத்து சங்கப் பொதுச்செயலர்களும் கையொப்பமிடுவார்கள். மற்ற தகவல் பரிமாற்றங்களில் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடுவார்கள்.