Saturday 29 January 2022

 மாவட்டச்செயற்குழு

தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

மாவட்டச்செயற்குழு

 ----------------------------------------------------------

05/02/2022 – சனிக்கிழமை – காலை 10.00 மணி

புனித ஜேம்ஸ் மகால்

பேருந்து நிலையம் அருகில் - இராமேஸ்வரம்.

  ----------------------------------------------------------

விவாதப்பொருள்

  •  மாவட்டச் சங்க அமைப்பு நிலை
  • புதிய மாநிலச்சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு
  • கீரனூர் மாநில மாநாடு, அஸ்ஸாம் அகில இந்திய செயற்குழு முடிவுகள்
  • அதிகாரிகள் அலட்சியத்தால் தேங்கிக்கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள்
  • பட்டினிப் போடப்படும் பாவப்பட்ட ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்
  • பொறுப்பற்று பொழுது போக்கும் அதிகாரிகளால் நாளும் சீரழியும் BSNL சேவை...
  • BSNL அலுவலகங்களை சத்திரம் சாவடி போல் இலவசமாகப் பயன்படுத்திக் கொண்டு பலர் வாடகை கொடுக்காததால் BSNLக்கு  ஏற்படும் வருமான இழப்பு...
  • BSNL சேவையை நாசம் செய்ய வந்த CLUSTER என்னும் கேடுகெட்ட நடைமுறை...
  • மற்றும் பல பிரச்சினைகள்... 

தோழர்களே... வாரீர்...

தோழமையுடன்...

பா. முருகன் - மாவட்டச்செயலர்

Friday 7 January 2022

 பணி சிறக்க வாழ்த்துக்கள்

 
திருச்சி கீரனூரில் 

ஜனவரி 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெற்ற

NFTE தமிழ் மாநில மாநாட்டில் ஒருமனதாகத்

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச்சங்க நிர்வாகிகளின்

தொழிற்சங்கப் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.

 --------------------------------

மதுரை வணிகப்பகுதி மாநிலச்சங்க நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்க்கண்ட நிர்வாகிகளுக்கு நமது சிறப்பான... அன்பான... வாழ்த்துக்கள்...

மதுரை வணிகப்பகுதி மாநிலச்சங்க நிர்வாகிகள்

தோழர். V. சுப்பிரமணியன் , TT/இராமநாதபுரம்

தோழர்.  G. சுபேதார் அலிகான், SOA/மதுரை

தோழர். S.A. அப்துல் ரசாக், JE/மதுரை

தோழர். D. இரமேஷ், AOS/விருதுநகர்