Saturday, 29 June 2019


N F T E
தமிழ் மாநிலச்செயற்குழு

01/07/2019 மற்றும் 02/07/2019

பம்பாய் அரங்கம் – விருதுநகர்

தலைவர்கள் பங்கேற்பு...

தோழர்களே... வருக....

அஞ்சலி
NFTE இயக்கத்தின் மூத்த தோழரும்... 
மத்தியப்பிரதேச மாநிலச்செயலராகப் 
பலகாலம் பணியாற்றியவரும்... 
நெருக்கடியான கட்டத்தில் NFTE இயக்கத்திற்கு 
தலைமை தாங்கிச்சென்றவரும்... 
சிறந்த பேச்சாளரும்... 
இந்தியில் மிக்கப் புலமை கொண்டவருமான
அருமைத்தோழர் N.T.சஜ்வானி 
அவர்களின் மறைவிற்கு 
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்...

Thursday, 27 June 2019


ண் ர்ப்பாட்ம்
-----------------------------
நாடுமுழுவதும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு
பலமாதங்களாகச் சம்பளம் வழங்காததைக் கண்டித்து
NFTE தமிழ்மாநிலச்சங்க அறைகூவலுக்கிணங்க...
தமிழகம் தழுவிய
ஆர்ப்பாட்டம்
28/06/2019 – வெள்ளிமதியம் 12.30 மணி
பொதுமேலாளர் அலுவலகம்
 காரைக்குடி.
தோழர்களே... வாரீர்... 

Wednesday, 26 June 2019

பரமக்குடி மாவட்டச்செயற்குழு

காரைக்குடி NFTE மாவட்டச்செயற்குழு 22/06/2019 அன்று 
பரமக்குடி தொலைபேசி நிலைய வளாகத்தில்
 மரத்தடியில்... மாண்புற... மகிழ்வுற நடைபெற்றது. 

மாவட்டத்தலைவர் தோழர் லால்பகதூர் தலைமை வகித்தார். 
பரமக்குடி கிளைச்செயலர் தோழர் தமிழரசன் வரவேற்புரையாற்றினார்.
சம்மேளனசெயலரும் மாநிலத்தலைவருமான தோழர். காமராஜ்...
மதுரை மாவட்டத்தலைவர் தோழர்.சிவகுருநாதன்
மதுரை மாவட்டச்செயலர் தோழர். இராஜேந்திரன்
மதுரை மாவட்டப்பொருளர் தோழர்.செந்தில்
மதுரை CSC கிளைச்செயலர் தோழர்.இரமேஷ்
மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான்
AIBSNLPWA ஓய்வூதியர் சங்க கிளைச்செயலர் தோழர் இராமசாமி
NFTCW ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச்செயலர் தோழர் முருகன்
NFTE மாவட்டச்செயலர் தோழர். மாரி ஆகியோர் பங்கேற்றனர்.
அனைத்துக்கிளைச்செயலர்களும் கருத்துரையாற்றினர்.

தோழர்கள் கருப்புச்சாமி,ஜெயராம் மற்றும் தனசேகரன் ஆகியோரது பணிநிறைவு பாராட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. 

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன...

சென்னைக்கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் விரோதப்போக்கை கண்டித்து... கணக்கில்லாத ஊழல் போக்கைக் கண்டித்து   அதன் மதுரைக்கிளையின் முன்பாக மதுரை மற்றும் காரைக்குடி NFTE மாவட்டச்சங்கங்கள் இணைந்து ஜூலை மாதம் 
அதிரடிப் போராட்டம்.

இராமேஸ்வரம், பரமக்குடி,சிவகங்கை,தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதிகளுக்கு போதிய  அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

நன்கு வருவாய் தரக்கூடிய இராமநாதபுரம் பகுதியில் சேவையைச்சீரழித்து வரும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் 
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்குடிநிர்வாகப்பிரிவு மதுரை வணிகப்பகுதியுடன் இணைக்கப்படுவதற்கு முன்பாக நாலுகட்டப்பதவி உயர்வு உள்ளிட்ட ஊழியர் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

தொலைபேசி எண்ணிக்கை குறைந்து வருவாய் குறைந்து களையிழந்த தொலைபேசி நிலையங்கள் கண்டறியப்பட்டு உடனடியாக மூடப்பட வேண்டும்.

நிரந்தர ஊழியர்கள் இல்லாத தொலைபேசிநிலையங்களில்
ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ஒப்பந்த ஊழியர்கள் நிர்வாகத்தால் நேரடியாகக் கண்டறியப்பட்டு
பொய்முகங்கள்  களையப்பட வேண்டும்.

CORPORATE அலுவலக உத்திரவிற்கிணங்க வாடகைக்கார்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும்.

பரிவு அடிப்படை பணி மறுக்கப்பட்ட தோழர்களுக்கு அவர்களது விண்ணப்பங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்கு மாநிலச்சங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தற்காலிக மாற்றலில் சென்னைக்கு விண்ணப்பித்திருக்கும் தோழியர் செளஜன்யா ATT அவர்களின் சூழலைக் கணக்கில் கொண்டு மாற்றல் பெற்றுத்தர மாநிலச்சங்கம் முழுமுயற்சி செய்ய வேண்டும்.

Monday, 24 June 2019


செ ய் தி க ள்
BSNL நிறுவனத்தை புத்தாக்கம் செய்வது குறித்து இலாக்கா அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு 18/06/2019 அன்று 
NFTE மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது. 
இப்போதெல்லாம் மந்திரிகளுக்கு மடல் வரையத்தான் முடிகிறது.  பார்த்துப் பேசிய பழங்காலம் போய்விட்டது
----------------------------------------------------------------
2018ம் ஆண்டிற்கான போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வை உடனடியாக அறிவிக்கக்கோரி CORPORATE நிர்வாகம் 
மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தேர்வெல்லாம் நடக்கும்.  தேர்வு எழுதத்தான் SSLC படித்த எவருமில்லை.
----------------------------------------------------------------
காஜியாபாத் நகரில் உள்ள ALTTC என்னும் சிறப்புமிகு பயிற்சிக் கேந்திரத்தை DOT தனது வசம் எடுத்துக்கொள்வதற்கு முடிவுசெய்துள்ளது. ஏறத்தாழ 80 ஏக்கர் நிலமும் ஏகப்பட்ட கட்டிடங்களும் ALTTCயில் உள்ளன. DOTயின் இந்த முடிவை நமது மத்திய சங்கம் 
வன்மையாகக் கண்டித்துள்ளது. 
அப்படியே 1 லட்சத்து 70ஆயிரம் ஊழியர்களையும் அதிகாரிகளையும் DOT தன் வசம் TAKE OVER செய்தால் நல்லது.
----------------------------------------------------------------
BSNL நிறுவனம் மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளதால்  ஜூன் மாத சம்பளத்தைக் கூட ஊழியர்களுக்கு வழங்க இயலாத நிலையில் இருப்பதாகவும், இந்நிலை தொடர்ந்தால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்திட இயலாது எனவும், இதனால் அரசு உடனடியாக BSNL நிறுவனத்திற்கு ஆபத்துக்கால உதவி அளித்திட வேண்டும் எனவும்  மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக 
பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. 
BSNL  நிறுவனத்திற்கு மூடுவிழா என்று முன்பு செய்தி போட்டவர்கள்தானே இவர்கள்...
----------------------------------------------------------------
ஏறத்தாழ 8 லட்சம் கிலோமீட்டர் அளவிற்கு நாடு முழுவதும் போடப்பட்டுள்ள BSNL FIBRE வலைப்பின்னலைத் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதன் மூலம் வருவாய்ப் பெருக்கம் செய்யலாமென  DOT பரிசீலித்து வருவதாக 
பத்திரிக்கைகளில் செய்திகள் உலா வருகின்றன. 
மொத்தமாக BSNL நிறுவனத்தையே அப்பன்
 அம்பானியிடம் அடகு வைத்து விடலாம்.
----------------------------------------------------------------
25/06/2019 அன்று டெல்லியில் நடைபெறவிருந்த மாநில தலைமைப்பொதுமேலாளர்கள் CGM கூட்டம் நிர்வாகக் காரணங்களுக்காக  மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 
டெல்லியிலும் தண்ணீர்  பஞ்சம் இருக்கலாம்...

தேர்தல் செய்திகள்

நடைபெறக்கூடிய 8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில் பங்கு பெறக்கூடிய சங்கங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைக்கக் கூடாதென்று CORPORATE அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
------------------------------------------------------------------
FNTO  சங்கம் 8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று சமீபத்தில் ராஞ்சியில் நடைபெற்ற மத்திய செயற்குழுவில் முடிவெடுத்துள்ளது. வாழ்த்துக்கள்...
------------------------------------------------------------------
8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை நமது  NFTE சங்கம் 19/06/2019 அன்று 
BSNL நிர்வாகத்திடம் அளித்துள்ளது.
------------------------------------------------------------------
8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து விண்ணப்ப சங்கங்கங்களுக்கும் தகவல் பலகை, சிறப்பு விடுப்பு, மாற்றலில் இருந்து விதிவிலக்கு  உள்ளிட்ட குறைந்த பட்ச 
சலுகைகளை நிர்வாகம் அறிவித்துள்ளது.
------------------------------------------------------------------
NFTE மத்திய சங்கத்தால் அமைக்கப்பட்ட  11 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு 20/07/2019 அன்று டெல்லியில் கூடி தேர்தல் சம்பந்தமான உத்திகளை விவாதிக்கும். தமிழ்மாநிலச்செயலர் தோழர்
நடராஜன் குழு உறுப்பினராவார்.

Friday, 21 June 2019


58 என்னும் அணுகுண்டு...இதோ...
58வது முறையாக வெடித்து விட்டது...
58 வயது என்னும் அணுகுண்டு...
இது
அனுதினமும் வெடிக்கும் குண்டு...
அணுஅணுவாய் ஊழியரை வதைக்கும் குண்டு... 

மெய்ப்பொருள் காண்பதறிவு என்றார் வள்ளுவர்...
அதை இரண்டு குறட்களில் அழுத்தமாகக் கூறியுள்ளார்...

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
...

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
...

மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற ஈற்றடி...
இரண்டு குறள்களில் வருவதிலிருந்தே...
வள்ளுவர் மெய்ப்பொருள் காண்பதில் எத்தகைய
அழுத்தம் கொடுத்துள்ளார் என்பது தெளிவாகும்...

DOT ஊழியர்கள் BSNLலில் நிரந்தரப்படுத்தப்பட்டபோது
அளிக்கப்பட்ட PRESIDENTIAL உத்திரவில்...
Sanction of the President is hereby conveyed to the permanent absorption of 
Sri. A. RUMOUR  in BSNL under the terms and conditions as indicated below:
3. Pension/Gratuity : Shri. A. RUMOUR shall be eligible for pensionary benefits including gratuity as per the provisions of Rule 37-A of the CCS(Pension) Rules as amended from time to time என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

DOTயில் இருந்து BSNL நிறுவனத்திற்கு நிரந்தரப்படுத்தப்பட்டவர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை போன்றவை 
ஓய்வூதிய விதிகள் 37-Aன்படி வரன்முறைப்படுத்தப்படும்.
தற்போதைய ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வு வயது 60 ஆகும்.
இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பின்
ஓய்வூதிய விதிகள் மீண்டும் திருத்தப்பட வேண்டும்.
CDA ஓய்வூதியர்களுக்கு 60 வயது... IDA ஓய்வூதியர்களுக்கு 58 வயது...
என மாற்றம் செய்ய இயலாது. அதற்கு சட்டவிதிகளைத் திருத்த வேண்டும். மேலும் இது ஓய்வு பெறும் ஊழியரிடையே DISCRIMINATION  எனப்படும் பாரபட்சத்தை உருவாக்கும். இது நமது அடிப்படை அரசியல் உரிமைக்கு எதிரானது. எனவே இதன் தொடர்பாக எந்த சட்டவிதிகள் திருத்தப்பட்டாலும் அது சட்டத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது.

தற்போதுதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தமிழ் வாழ்க... மார்க்சியம் வாழ்க... என்று உறுதிமொழி எடுத்து பதவியேற்றுள்ளார்கள். குடியரசுத்தலைவர் உரை 20/06/2019 அன்று நடந்தேறியுள்ளது. இதனிடையே அமைச்சரவை கூடிவிட்டது... 
BSNL ஊழியர்களின் ஓய்வு வயது 01/11/2019 முதல் 
58 ஆகக்குறைக்கப்படுகின்றது என நாடுமுழுவதும் 
கடுமையான வேகத்தில் வதந்தி பரவிக்கொண்டிருக்கின்றது.

இது தொடர்பாக... நமது மத்திய சங்கம் பலமுறை உரிய மட்டங்களுக்கு கடிதம் எழுதி இது முறையற்றது என தெளிவுபடுத்தியுள்ளது.
இன்றும் மத்திய சங்கம் தனது வலைதளத்தில் இது போன்ற 
வதந்திகளை நம்பவேண்டாம் எனகேட்டுக்கொண்டுள்ளது. 
BSNLEU சங்கமும் வதந்திகளை நம்பவேண்டாம் 
என வேண்டுகோள் விடுத்துள்ளது.

தோழர்களே...
BSNL கடும் நிதிநெருக்கடியில் உள்ளது.
ஓய்வு பெறும் வயதை 58 ஆகக்குறைப்பதால்
அதனுடைய நிதிநெருக்கடி குறைந்துவிடப்போவதில்லை.
மாறாக விசுவாசமிக்க ஊழியர்களைத்தான் BSNL இழக்கும்.
AUAB அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக இலாக்கா அமைச்சரை சந்திக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப் பின்பு அரசின் நிலைபாடு என்ன என்பது புரியும்.
அரசு ஊழியர் விரோத முடிவுகளை அமுல்படுத்த தயாரானால்..
அதை எதிர்த்துப் போராட நாம் உறுதியுடன் தயாராவோம்...
அதுவரை பொறுத்திருப்போம்...
வதந்திகளைப் புறம் தள்ளுவோம்...

அநீதி களைந்திட ஆர்ப்பாட்டம் 
NFTE - NFTCW
ஒப்பந்த ஊழியர்களுக்கு...
உடனடியாக கூலி வழங்கக்கோரி...
28/06/2019 அன்று...
மாவட்டத்தலைநகர்களில்
தமிழகம் தழுவிய
ஆ ர் ப் பா ட் ட ம்  

மரத்துப்போன நிர்வாகம்..
மரித்துப்போன மனிதநேயம்...
தோழர்களே... அநீதி களைந்திட...
ஆர்ப்பரிப்பீர்... அணி திரள்வீர்...

Thursday, 20 June 2019

மாவட்டச் செயற்குழு 
தோழர்களே... வாரீர்...

அனைத்து சங்க கூட்ட முடிவுகள்

19/06/2019 அன்று டெல்லியில் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்கள் தலைமையில் AUAB  அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

BSNL நிறுவனத்தின் நிதிநிலை மிகவும் கவலையுடன் பரிசீலிக்கப்பட்டது.
மின்சாரக்கட்டணம் செலுத்தாமை, ஒப்பந்தகாரர்களுக்கு பில்கள் தேக்கம், ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமை ஆகிய காரணங்களால் நமது சேவை பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலை ஆழமாக விவாதிக்கப்பட்டது.

நிர்வாகம் CAPEX என்னும் முதலீட்டு செலவினங்களுக்குத் தடை விதித்துள்ளது. இதனால் சேவை முடக்கம் ஏற்பட்டுள்ளது.

மாதந்தோறும் ஊழியர் செலவுகளுக்காக ரூ.1300 கோடியும் 
இதர செலவினங்களுக்காக ரூ. 900 கோடியும்... 
ஆக மொத்தம் ரூ.2200/= கோடி மாதந்தோறும் தேவைப்படுகின்றது. 
ஆனால் மாதாந்திர வருமானம் ரூ.1200 கோடி மட்டுமே வருவதால் கூடுதல் செலவினங்களைச் சமாளிக்க இயலாமல் 
BSNL நிறுவனம் தடுமாறுகின்றது.

எனவே அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நிறுவனத்தின் நிலை பற்றி இலாக்கா அமைச்சருக்கு விரிவான முறையில் கடிதம் எழுதி நிறுவனத்தின் நிதிமேம்பாட்டிற்கு அரசை உதவிடக்கோருவது...

CAPEX என்னும் முதலீட்டு செலவினங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே நீக்குமாறு நிர்வாகத்திற்கு கடிதம் எழுதுவது...

ஊழியர் அதிகாரிகள் கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தொகுத்து இலாக்கா அமைச்சருக்கு 
கோரிக்கை மனு அளிப்பது...

CMD அவர்களை சந்தித்து ஒரு சில சங்கத்தலைவர்களுக்கு  வழங்கப்பட்டுள்ள FR 17 சேவை முறிவு உத்திரவை 
திரும்பப்  பெற வலியுறுத்துவது...

தோழர்களே...
தற்போதுள்ள சூழலில் கோரிக்கை மனு அளிப்பது, மந்திரியை சந்திப்பது, அதிகாரிகளிடம் முறையிடுவது என்பது மட்டுமே தொழிற்சங்க நடவடிக்கைகளாக மாறிவிட்டன. 
வேறு வழிகள் புலப்படவில்லை என்பதே இன்றைய நிலை...

Wednesday, 19 June 2019


உ த வா க் க ரை 

BSNL நிறுவனத்தில் இருந்து ஊழியர்களும் அதிகாரிகளும் 
TERM CELL  மற்றும் DOTயின் CCA அலுவலகங்களுக்கு பணிசெய்ய DEPUTATION அடிப்படையில் அனுப்பப்படுவதுண்டு. 
அந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை DOT நமது BSNL  நிறுவனத்திற்கு செலுத்திவிடும். அந்த வகையில் இதுவரை ஏறத்தாழ 181 கோடி ரூபாய் நமது நிறுவனத்திற்கு DOT செலுத்தவேண்டும். ஆனால் இதுவரை இந்தப்பணத்தை DOT நமது நிறுவனத்திற்கு வழங்காமல் உள்ளது. 

எனவே BSNL நிர்வாகம் தற்போதுள்ள நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி உடனடியாக மேற்கண்ட 181 கோடியை நமது நிறுவனத்திற்கு வழங்கிட கடிதம் எழுதியுள்ளது. BSNL வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டிய DOT உதவி செய்ய மனமின்றி பல்வேறு வகையில் நமக்கு உதவாக்கரையாகவே உள்ளது என்பது வருத்தத்திற்குரியது.

Monday, 17 June 2019


தேர்தல் செய்திகள்

8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலுக்கான
நிர்வாக அறிவிப்புக்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

19/07/2019 - வாக்காளர் வரைவுப்பட்டியல் வெளியீடு...
24/07/2019 – திருத்தங்கள் நிர்வாகத்திடம் தெரியப்படுத்துதல்...
29/07/2019 – திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு...
03/08/2019 – மேலும் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுதல்...
08/08/2019 – இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...
12/08/2019 – முதன்மை தேர்தல் அதிகாரிக்கு  அறிக்கை சமர்ப்பித்தல்...
16/08/2019 – வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் எண்ணிக்கை அறிவிப்பு...

தோழர்களே...
உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் நடத்துவது சம்பந்தமாக 
நிர்வாகம் தனது பணிகளை முடுக்கி விட்டுள்ளது. 
தொழிற்சங்கங்களும் தங்களது பணிகளைத் துவங்கி விட்டன. 

நமது NFTE மைசூரில் விரிவடைந்த செயற்குழுவை முடித்துள்ளது. 
BSNLEU ஜூலை 29 முதல் 31 வரை புனே நகரில்
விரிவடைந்த செயற்குழுவை நடத்துகின்றது.  
FNTO சங்கம் ஜூன் 21 மற்றும், 22 தேதிகளில் ஜார்க்கண்ட் மாநிலம்  ராஞ்சியில் மத்திய செயற்குழுவை நடத்துகின்றது.

BSNL நிறுவனத்தில் இருள் சூழ்ந்துள்ள இந்நிலையில் 
உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் எந்த ஒளியைப் பாய்ச்சப்போகின்றது?
எந்த வழியைக் காட்டப்போகின்றது? என்று நமக்குப் புரியவில்லை.
இருப்பினும் வரக்கூடிய தேர்தலை எதிர்கொள்வோம். 
தமிழகத்தில் 01/06/2019 முதல்  வணிகப்பகுதி இணைப்பு என்பது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நடைபெறக்கூடிய தேர்தல் வணிகப்பகுதி அளவில் நடைபெறுமா? அல்லது தற்போதுள்ள SSA அளவில் நடைபெறுமா என்பது எங்கும் தெளிவுபடுத்தப்படவில்லை. நிர்வாகத்தின் அனைத்து உத்திரவுகளிலும் SSA என்பதே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தேர்தல் தற்போதைய SSA அளவில்தான் நடைபெறும் என்பது புலனாகிறது. நிர்வாகத்திடம் உரிய விளக்கங்கள் கேட்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டு விட்டால் தலமட்டங்களில் குழப்பமின்றி தேர்தல் பணியைத் துவங்க முடியும். 

எனவே தேர்தல் என்பது வணிகப்பகுதி அளவிலா ?
அல்லது மாவட்ட அளவிலா ? என்பதை...
மத்திய சங்கங்கள் தெளிவு படுத்திட வேண்டும்...

Tuesday, 11 June 2019


சி ற ப் பு க் கூ ட் ட ம்

N F T E
தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி மாவட்டம்
================================
மாவட்டச்செயற்குழு
மற்றும்  
பணிநிறைவு பாராட்டு விழா
================================
22/06/2019 – சனிக்கிழமை – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – பரமக்குடி.
================================
தலைமை : தோழர். B. லால்பகதூர் – N F T E  மாவட்டத்தலைவர்

பங்கேற்பு : தோழர்கள்
S. சிவகுருநாதன்N F T E மதுரை மாவட்டத்தலைவர்
G. இராஜேந்திரன் – N F T E மதுரை  மாவட்டச்செயலர்
G. சுபேதார் அலிகான் – N F T E மாநில அமைப்புச்செயலர்
P. இராமசாமிAIBSNLPWA கிளைச்செயலர்
B. முருகன் NFTCW மாவட்டச்செயலர்-: பேசுபொருள் :-
மைசூர் மத்திய செயற்குழு முடிவுகள்
உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்
மாவட்டங்கள் இணைப்பு
ஊழியர் பிரச்சினைகள்
அமைப்பு நிலை
ஒப்பந்த ஊழியர்  பிரச்சினைகள்
NFTCW ஒப்பந்த ஊழியர் அமைப்பு மாநாடு
எழுப்பப்படும் இதர கோரிக்கைகள்.....

சிறப்புரை
தோழர். P. கா ம ரா ஜ்
N F T தமிழ்மாநிலத்தலைவர் மற்றும் 
அகில இந்திய சம்மேளனச்செயலர்

தோழர்களே... வாரீர்...

அன்புடன் அழைக்கும்...
பரமக்குடி கிளைச்சங்கம் மற்றும் 
காரைக்குடி மாவட்டச்சங்கம்...

Tuesday, 4 June 2019

புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்
ramadan 2019 animation க்கான பட முடிவு

அன்பு பரவட்டும்...
அமைதி தவழட்டும்...
சமத்துவம் பிறக்கட்டும்...
சகோதரத்துவம் வளரட்டும்...

அனைவருக்கும் இனிய
ர ம லா ன் 
நல்வாழ்த்துக்கள்...