Saturday 30 April 2016

உழைப்போர் தின நல்வாழ்த்துக்கள் 

உடமை படைத்தவன் முதலாளி...
உலகைப் படைத்தவன் தொழிலாளி...

படைத்தவனைப் படைப்பவனும் தொழிலாளி...
படைப்புக் கரங்கள் உயரட்டும் 
பாரினில் செங்கொடி பறக்கட்டும் 

அனைவருக்கும் 
உழைப்போர் தின நல்வாழ்த்துக்கள் 

மேதினக்கொடியேற்றம் 
01/05/2016 - ஞாயிறு - காலை 09.00 மணி 
BSNL பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

கொடியேற்றுபவர்
தோழர். ஆர்.கே.,

தோழர்களே... வருக...

Friday 29 April 2016

அனுபவம் பேசுகிறது...
நான் ... காந்திமதி வெங்கடேசன் 
இன்று 30/04/2016 பணி ஓய்வு பெறுகிறேன். 
எனது கணவர் தோழர். வெங்கடேசன்
நேர்மையும் நியாயமும் நிறைந்த தொழிற்சங்கத் தலைவர்.  
குப்தா, ஜெகன்,  முத்தியாலு , ஆர்.கே., மாலி, தமிழ்மணி, பட்டாபி 
என நான் கண்ட தலைவர்கள் 
போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள். 
நான் தொலைபேசி இயக்குனராக பணியமர்ந்தேன். 
இன்று ஒரு எழுத்தராகப் பணி நிறைவு பெறுகிறேன். 
TRUNK தொலைபேசி மூடப்பட்டது. 
ஆனால் ஒருவரைக்கூட பணி இழப்புக்கு ஆளாக்காமல் 
அனைவரையும் எழுத்தர் பணி செய்ய வைத்து
இன்று மத்திய அரசு ஓய்வூதியமும் பெற வைத்த
NFTE சங்கத்தையும்...
அதன் பெருமைக்குரிய தலைவர்களையும் 
நான் மனதார நினைத்துப் பார்க்கிறேன். 

வரலாற்றுச்சிறப்பு மிக்க 2000 போராட்டத்தில் 
நான்  கலந்து கொண்டவள் என்ற பெருமை எனக்குண்டு. 
இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல்  கழன்று போனது 
அன்றைய நம்பூதிரி சங்கம்  என்ற    
இன்றைய  BSNLEU  சங்கம். 
ஆனால் அவர்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள்தான் ஓய்வூதியத்திற்குப் பாடுபட்டதாக கூறியதைக் கேட்டதும் 
அடக்க முடியாத சிரிப்புத்தான் எனக்கு வந்தது. 

பொய் சொல்பவர்களைப் பார்த்து...
எனது கணவர் "நெஞ்சாரப் பொய்தனை சொல்ல வேண்டாம்" என்ற 
அவ்வையின் மொழியை  கூறுவார். 

அதையேதான் நமது BSNLEU தலைவர்களுக்கும் எனது பணிநிறைவுச் செய்தியாக கூற விரும்புகிறேன்.
எனது பணிக்காலம் முழுமையும் 
என்னுடன் பயணித்த NFTE சங்கத்தை மீண்டும் 
பெருமையுடன்  நினைத்துப் பார்க்கிறேன்.


               
நான் சுந்தரராஜன். 
NFTE இயக்கத்தின் மாவட்டத்தலைவர் .
இன்று 30/04/2016  எனக்குப் பணி நிறைவு.
மன நிறைவுடன் பணி நிறைவு  பெறுகிறேன்.
ஒடுக்கப்பட்ட பகுதியில் பிறந்தேன்.
உணர்வும் உரிமையும் நிறைந்த மனிதனாக ஓய்வு பெறுகிறேன்.
நான் தலை நிமிர்ந்து வாழ காரணமான
NFTE இயக்கத்தையும்...
அதன் தலைவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
எளிமையை  உண்மையைக் கடைப்பிடித்து வாழ்ந்த 
அவர்களை வணங்குகிறேன்.

மன நிறைவோடு பணி நிறைவு செய்யும் 
எனக்கு மனக்குறையும் உண்டு. 
இந்த தேர்தலில் இணைந்த கரங்களுக்கு 
வாக்களிக்க இயலவில்லையே என்பதுதான் அது.

அதோடு... 
என் பதவியின் பெயர் கண்காணிப்பாளர் 
SUPERINTENDENT  என மாறும் என எதிர்பார்த்திருந்தேன். 
ஏமாற்றம்தான் மிச்சம்...
25 வருடங்களாக இடைவிடாமல் 
போனஸ் பெற்றிருந்தேன்..
இவர்கள் காலத்தில் போனஸ் பறிபோனது..
இறுதியாக இந்தாண்டு கிடைக்கும் என நம்பியிருந்தேன்...
ஏமாற்றம்தான் மிச்சம்...
கடந்த காலங்களில் ஏமாற்றங்கள்தானே ஊழியருக்கு அனுபவம்..
2008ல்  அமைக்கப்பட்ட DESIGNATION COMMITTEEஐ  உறங்க விட்டது யார்?
போனஸ் கமிட்டியில் கலந்து கொள்ளாமல் 
ஊழியருக்குத் துரோகம் இழைத்தது யார்?
இந்த ஏமாற்றங்களுக்கு யார் காரணம்...
சொல்லாமல் தெரியும்... 
ஏமாற்றங்களின் நாயகன்.. 
ஏமாற்றுவதில் சாம்பியன் BSNLEU என்பது...
ஒன்றா.. இரண்டா...
நவீன மயத்தை எதிர்த்தார்கள்...
கேடர் சீரமைப்பை எதிர்த்தார்கள்...
பதவி உயர்வை எதிர்த்தார்கள்...
போனஸ் என்பதை எதிர்த்தார்கள்..
மிகுதி நேரப்படியை எதிர்த்தார்கள்..
பொதுத்துறையை எதிர்த்தார்கள்...
நல்லவற்றை எல்லாம் எதிர்த்து.. எதிர்த்து 
நம் வாழ்வின்  முன்னேறத்தைப் பாழ்படுத்தினார்கள்...

இன்றோ...
அதைச் செய்தோம்...
இதைச்செய்தோம் என்று 
வெற்று வாய்ச்சவடால் விடுகின்றனர்.

NFTE இயக்கம் போராடி 
உருவாக்கிய உரிமைகளால்தான் 
எங்களைப் போன்ற மூத்த தோழர்கள் 
இன்று நிறைவோடு பணி நிறைவு பெறுகிறோம்..

மிச்சமிருக்கும் ஊழியர்களும்..
அச்சமின்றி பணி நிறைவு பெற வேண்டுமெனில்...

இணைந்த கரங்கள் உயர வேண்டும்...
இறுமாப்புக்கள் அகல வேண்டும்...
இதுவே எனது பணிநிறைவு நாள் ஆசை...
வைப்பு நிதி  வட்டி...

EPF வைப்பு நிதி வட்டியை மத்திய அரசு 
8.8 சதமாக உயர்த்தியுள்ளது.
வைப்பு நிதி வட்டியை 8.7 சதமாக குறைத்து 
உத்திரவிட்ட நிதி அமைச்சகம் தொழிலாளர்களின்
 நாடு தழுவிய போராட்டத்தின் விளைவாக 
8.8 சதமாக  உயர்த்தி உத்திரவிட்டுள்ளது.

கரங்கள் உயராமல் காரியங்கள் ஏதுமில்லை...
போராடிய தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்..

Thursday 28 April 2016

ஆர்ப்பாட்டம் 

வைப்புநிதி EPF வட்டி விகிதத்தை 
8.7 ஆகக் குறைத்து உத்திரவிட்ட 
நிதி அமைச்சகத்தின் 
ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து..

இன்று அனைத்து மத்திய சங்கங்களும் 
 நாடு தழுவிய போராட்டம்...

இன்று  29/04/2016 மாலை 5 மணிக்கு 
காரைக்குடி BSNL  பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 
கண்டன ஆர்ப்பாட்டம் 

தோழர்களே... வாரீர்..

தோழமையுடன் 
சி.முருகன் 
மாவட்டச்செயலர் 
TMTCLU - ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
பணி நிறைவு வாழ்த்துக்கள்

இனி ஓய்வுக்கு ஓய்வில்லை..
தமிழகத்தில் இந்த நிதியாண்டில் 
1086 தோழர்கள் பணி நிறைவு பெறுகின்றனர்.
இம்மாதம்.. ஏப்ரலில்.. 155 தோழர்கள் 
பணி நிறைவு அடைகின்றனர்.
அனைவருக்கும் நமது அன்பான 
வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

காரைக்குடி மாவட்டத்தில் 
30/04/2016 அன்று  பணி நிறைவு பெறும் 

கனிவு மிகு தோழியர் 
காந்திமதி வெங்கடேசன் - STS - காரைக்குடி

பணிவு மிகு தோழர் 
K.சுந்தரராஜன் - CTS - காரைக்குடி 

குணத்தில் தங்கம் கொள்கையில் சிங்கம் 
S. தங்கராஜ்  - TM - இராமநாதபுரம் 

துன்பத்தில் துவளாத... இன்பத்தில் துள்ளாத 
C.இரவிந்திரன் - TM - இராமநாதபுரம் 

கடமையில் கருத்தான...
S. கோபிநாதன் - TTA - இராமநாதபுரம் 

எல்லோருக்கும் இனியவர்..
K. இராமமூர்த்தி - SR.TOA  - சிவகங்கை 

ஆகியோரின் பணி நிறைவுக்காலம் 

வளமும்.. நலமும்.. மிக்கதாய் விளங்கிட 
அன்புடன் வாழ்த்துகிறோம்...

Wednesday 27 April 2016

புழுதி வாரிகள்...

பொய்களைப் புனைவதிலும் 
புழுதிவாரித் தூற்றுவதிலும் 
BSNLEU சங்கத்திற்கு
ஈடு இணை இவ்வுலகில் இல்லை.

தூற்றிய புழுதிகள் காற்றிலே கலந்தால் 
கண்களும் கலங்கி விடும்...
சுவாசமும் தொலைந்து விடும்...

எண்ணற்ற  புழுதிகளில் ஒன்றுதான்..
BSNL நிறுவனத்தை NFTE உருவாக்கியது 
என்ற பதினாறு வருட பழம்புழுதி...

இப்போது பழம்புழுதி மீண்டும் கிளம்பியுள்ளது...
இது  தேவைக்கான புழுதி...
தேர்தலுக்கான புழுதி...

BSNL உருவாக்கம் என்பது அன்றைய 
BJP அரசின் கொள்கை முடிவு...
CPM தலைவர் தோழர்.சோம்நாத் சாட்டர்ஜியைத் 
தலைவராகக் கொண்ட பாராளுமன்றக்குழு 
BSNL உருவாக்கத்திற்கு பரிந்துரை செய்தது.

ஆனால்..
NFTE மட்டும்தான் FNTO  மற்றும் BTEF துணையுடன் 
3 நாட்கள் கடும் போராட்டக் களம் கண்டது..
இறுதியில்  ஓய்வூதியம், பணிப்பாதுகாப்பு, 
இருக்கும் சலுகைகள் தொடர்வு...
என அனைத்தையும் NFTE உறுதி செய்தது...
இன்று வரை  தோழர்கள் அனுபவித்து வருகின்றனர்.

ஆனால் புழுதிவாரிகளோ...
தொடர்ந்து புழுதியை 
வாரிக்கொண்டிருக்கின்றனர்..

BSNL உருவாக்கத்தை எதிர்த்தோம் என்று சொன்னவர்கள் 
3 நாட்கள் போராட்டத்தில் ஒதுங்கி நின்றவர்கள்...
BSNL உருவாக்க விழாவில் முன்வரிசையில்...
வாயில் இனிப்பும்..மனதில் களிப்புமாக..
கலந்து கொண்டு  சுகம் கண்டனர்....

விசாகப்பட்டினத்தில் விரைந்து கூடி  ...
BSNLEU என BSNL பெயர் தாங்கிய சங்கம் கண்டனர்...
பதினோரு ஆண்டுகள்...
ஆலகால  அங்கீகாரம் அடைந்தனர்..

இவர்களது காலத்தில்தான் 
2012ல் BBNL என்றொரு துணை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது?
ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை?
காரணம் இவர்களின் துணையோடுதான் 
BBNL துணை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

அடுத்து...
செல் கோபுரங்களைப் பிரித்து 
துணை நிறுவனம் ஆரம்பிக்க 
அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது...
அதுவும் இவர்களின் இசைவோடுதான் நடந்தது..
அதனால்தான்  இவர்களிடம் அசைவு ஏதுமில்லை...

இதையெல்லாம் 
மறந்து விட்டு... மறைத்து விட்டு..
NFTE சங்கத்தால்தான் BSNL உருவானது...
ஊழியர் வாழ்வு நாசமானது...என்று 
பழைய... புழுதியை தொடர்ந்து தூற்றுவது...
கொண்ட கொள்கைக்கும்...
ஏந்திய கொடிக்கும் ஏற்குமா?
புழுதிவாரிகள் சிந்திப்பார்களா?

புழுதிவாரிகள்  திருந்தாவிட்டாலும்...
புழுதிகள்  குறையாவிட்டாலும்...
NFTE  என்றும் ஊழியர் பணி செய்யும்...
தன் கடன் முடிக்கும்..
உயர்ந்த... கரங்கள்... 

ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி 
என்று பாடினான் பாரதி. 
இதோ பெங்களூருவில் எழுந்தது ஒரு புதுப்புரட்சி.

தொழிலாளர்கள்  குருவி போல் சேர்த்த 
தங்களது வைப்புநிதியை EPF பணத்தை 58 வயது வரை எடுக்க முடியாது என்ற  மத்திய அரசின் மனித விரோத உத்திரவை எதிர்த்து பெங்களூரின் ஆயத்த ஆடைத் தயாரிப்பு தொழிலாளர்கள் பொங்கி எழுந்த காட்சி தொழிலாளர் வர்க்கத்தைத் தலை நிமிர வைத்து விட்டது.

 20000க்கும் அதிகமான தொழிலாளிகள் வீதியில் இறங்கினர். 
தானாகவே வெடித்த,  யாரும்  தலைமை ஏற்காத 
இந்தப் புரட்சி கண்டு மிரண்டது  மத்திய அரசு.
LEADERLESS PROTEST - தலைவர்களற்ற போராட்டம் 
என பத்திரிகைகள் பெயர் சூட்டின.
இறுதியில் அரசு பின் வாங்கியது. 
ஊழியர் விரோத உத்திரவை திரும்பப் பெற்றது.

ஆனால்  மீண்டும் தொழிலாளிகளுக்கு 
துரோகம் செய்ய மத்திய அரசு  முனைந்து விட்டது.
  தொழிலாளர்களின் வைப்பு நிதி வட்டியை 
8.8 சதம் உயர்த்திட வைப்புநிதி வாரியம் அரசுக்குப் பரிந்துரை செய்தது.
ஆனால் நிதி அமைச்சகம்  பரிந்துரையை ஏற்காமல் ஏற்கனவே இருந்த 
8.75 சதத்தையும் குறைத்து 8.7 சதமாக குறைத்து விட்டது. 

இது வரை வைப்புநிதி வாரியம் பரிந்துரைத்த வட்டி விகிதங்களை 
நிதி அமைச்சகம் மாற்றியதில்லை. 
முதன் முறையாக வாரியம் பரிந்துரை செய்ததை நிதி அமைச்சகம் குறைத்துள்ளது. எனவே அனைத்து மத்திய சங்கங்களும் 29/04/2016 அன்று நாடு தழுவிய போராட்டம் நடத்த அறைகூவல் விட்டுள்ளன. 
BMS சங்கம் இன்று 28/04/2016 போராடுவதாக அறிவித்துள்ளது.

அரசின் இந்த ஊழியர் விரோத முடிவை எதிர்த்து 
கண்டன ஆர்ப்பாட்டம் 
29/04/2016 - மாலை 5 மணிக்கு 
BSNL  பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெறும்.
தோழர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பாசமிகு தோழர்களின்... பணி நிறைவு விழா..

Tuesday 26 April 2016

இடது... SORRY 
உங்களுக்குத் தெரியுமா?

எந்த ஒரு சங்கம்..
FNTO சங்கத்தை அழித்ததோ..

எந்த ஒரு சங்கம்..
FNTO சங்கத்தின் சின்னத்தை அபகரித்ததோ.. 

அந்த ஒரு சங்கம்..
FNTO சங்கத்திடம் தங்களுக்கு ஆதரவு கோரியுள்ளது...

தங்களிடம் ஆதரவு கோரியவர்களிடம்...
FNTO  சங்கம் அமைதியாக மறுப்பை சொல்லி விட்டது...

FNTO சங்கத்திடம் இவர்கள் ஆதரவு கோரிய மர்மம் என்ன?
வேறு எதுவுமில்லை...
NFTE சங்கத்தை அழிக்க வேண்டுமாம்...

இடது சாரிகள்  என தங்களைச் சொல்லிக்கொள்ளும் 
இவர்களுக்கு... இடது சாரி ஒற்றுமையைக் கட்டுவதோ...
ஊழியர் பிரச்சினையைத் தீர்ப்பதோ நோக்கமல்ல...
மாறாக...
சகல சங்கங்களையும் சரிக்கட்ட வேண்டும்...
சரிப்படவில்லையென்றால் தீர்த்துக்கட்ட வேண்டும்...

கடந்த 3 ஆண்டுகளாக நமது செயல்பாடு கண்டு 
இவர்கள் அஞ்சுகிறார்கள்...
பிரச்சினையைத் தீர்ப்பது அவர்கள் பணியல்ல...
பிரச்சினையை வளர்ப்பதுதானே அவர்கள் பாணி...
எனவே பிரச்சினைகளைத் தீர்க்கப் பாடுபடும் 
NFTEஐக் கண்டு இவர்கள் அஞ்சுவது இயற்கையே...

இதோ...
காற்று இன்று நம் பக்கம் வீசுகிறது....
கலகக்காரர்கள்  நெஞ்சில்... 
கலக்கம் பிறக்கிறது...

மே 10ல்... 
இணைந்த கரங்கள் எழும்...
எரிந்து விழும் சாம்பலிலும்.. 
எழுந்து வரும்... 
பீனிக்ஸ் பறவையாக...

-மத்திய சங்க இணையதளச்செய்தியின் தமிழாக்கம் -
காலமெல்லாம்... காத்திருப்பு 


இவர்கள்...
கையேந்தும் பிச்சைக்காரர்களும் அல்ல...
காத்திருக்கும் பிச்சைக்காரர்களும் அல்ல...

காரைக்குடி மாவட்டத்தில்...
காலமெல்லாம் காவல் பணி செய்து விட்டு...
சம்பளம் வராதா? என 
கவலையோடு காத்திருக்கும் 
காவல்கார ஒப்பந்த ஊழியர்கள்...

பிப்ரவரி - மார்ச் 
இரண்டு மாத சம்பளம் இன்னும் 
பட்டுவாடா செய்யப்படவில்லை...
இதோ..
ஏப்ரலும் முடிந்து விட்டால்..
மூன்று மாதச்சம்பளம் முழுசாய்ப் பாக்கி...

ஏனிந்த இழிநிலை?
இதைச் சொன்னால் குற்றம்...
ஆனாலும் அழுத்தமாய் சொல்வோம்...
நிர்வாகமே...
உழைப்பவன் வியர்வை காயுமுன்னே கூலி கொடு...
குறைந்த பட்சக்கூலி 10000 
உயர்ந்து விட்ட விலைவாசிப்புள்ளிகளின் அடிப்படையிலும் 
உச்ச நீதிமன்ற  தீர்ப்பின் அடிப்படையிலும் 
ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்சக்கூலி 
மாதம் ரூ.10000/= என உயர்த்தப்பட்டுள்ளதாக 
மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர்
 நாடாளுமன்றத்தில் அறிவிப்பு செய்துள்ளார்.

ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்சக்கூலி
  மாதம் 15000மாக உயர்த்தப்பட வேண்டும் என்பது 
அனைத்து மத்திய சங்கங்களின் கோரிக்கையாகும்.
ஆனாலும் அரசு 10000 என்றே அறிவித்துள்ளது.

குறைந்தபட்சக்கூலி உயர்விற்கான வரைவு நகல் 
இந்திய அரசிதழில் 30/03/2016  அன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆலோசனைகளும், மாற்றுக்கருத்துக்களும்
ஒரு  மாத காலத்திற்குள் அரசிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

எனவே குறைந்தபட்சக்கூலி ரூ.10000/-க்கான 
அரசு உத்திரவு 30/04/2016க்குப்பின் வெளியிடப்படும். 
அதுவரை தோழர்கள் காத்திருக்கவும்.

அரசு வெளியிட்ட வரைவு நகல் 
கீழே தரப்பட்டுள்ளது.

MINISTRY OF LABOUR AND EMPLOYMENT
NOTIFICATION
New Delhi, the 30th March, 2016
G.S.R. 368(E).––The following draft of certain rules further to amend the Contract Labour (Regulation and Abolition) Central Rules,1971, which the Central Government proposes to make, in exercise of the powers conferred by section 35 of the Contract Labour (Regulation and Abolition) Act, 1970 (37 of 1970), is hereby published as required by

sub-section (1) of the said section, for the information of all persons likely to be affected thereby; and notice is hereby given that the said draft rules will be taken into consideration after the expiry of a period of thirty days from the date on which the copies of the Official Gazette in which this notification is published are made available to the public;
Objections or suggestions, if any, may be addressed to the
Joint Secretary to the Government of India-cum-Director
General (Labour Welfare), Jaisalmer House, 
26, Mansingh Road, New Delhi-110011;

DRAFT RULES

1. (1) These rules may be called the Contract Labour (Regulation and Abolition) Central (Amendment) Rules,
2016.
(2) They shall come into force on the date of their publication in the Official Gazette.
2. In the Contract Labour (Regulation and Abolition) Central Rules, 1971, in rule 25, in sub-rule (2), for clause
(iv), the following clause shall be substituted, namely:—

“ (iv) the rates of wages payable to workmen by the contractor shall not be less than––
(a) the rates prescribed under the Minimum Wages Act, 1948 (11 of 1948) for such employment where applicable; or
(b) the rates, if any, fixed by agreement, settlement or award; or
(c) ten thousand rupees whichever is higher ;”.
[No. S-16016/21/2016-LW (A)]

BIPIN MALLICK, Jt. Secy.
குழந்தைப் பராமரிப்பு விடுப்பும்... 
குழந்தைத்தனமான கேள்வியும்...


மத்திய அரசில் பெண் ஊழியர்களுக்கான 
குழந்தைப் பராமரிப்பு விடுப்பு 
01/09/2008 முதல் அமுல்படுத்தப்பட்டது.

மேற்கண்ட குழந்தைப்பராமரிப்பு விடுப்பை 
உடனடியாக BSNLலில் அமுல்படுத்த 
வழக்கம் போலவே BSNLEU சங்கம் தவறியது.
ஜனவரி 2010ல் ஊதிய உடன்பாடு போடும்போது கூட 
குழந்தைப் பராமரிப்பு விடுப்பை அமுல்படுத்த 
BSNLEUவால் இயலவில்லை.
நிர்வாகம் குழந்தைப் பராமரிப்பு விடுப்பை 
அமுல்படுத்த மறுத்து வந்தது.

நமது சங்கத்திற்கு அங்கீகாரம் இல்லாத நிலையிலும்
 குழந்தைப் பராமரிப்பு விடுப்பை அமுல்படுத்தக்கோரி 
நிர்வாகத்தை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இந்நிலையில்.. 78.2 சத IDA இணைப்பை வலியுறுத்தி 
அனைத்து சங்க கூட்டுக்குழுவின் சார்பாக  
13/06/2012 முதல் காலவரையற்ற 
வேலைநிறுத்த  அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

ஏனைய கோரிக்கைகளோடு 
குழந்தை பராமரிப்பு விடுப்பு கோரிக்கையும் 
அனைத்து சங்கங்களால் இணைக்கப்பட்டது. 
12/06/2012 அன்று நிர்வாகத்திற்கும் 
அனைத்து சங்கங்களுக்குமிடையே ஏற்பட்ட உடன்பாட்டில் 
குழந்தைப் பராமரிப்பு விடுப்பை அமுல்படுத்துவது பற்றி  மீண்டும்  
BSNL வாரியக்கூட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 
மறுபரிசீலனை செய்யப்படும் என கையெழுத்தானது.

உடன்பாடு கையெழுத்து ஆன போதிலும் 
நிர்வாகம் தொடர்ந்து இப்பிரச்சினையை இழுத்தடித்து வந்தது.
மீண்டும் அனைத்து சங்க ஊழியர் அமைப்பு
 12/06/2012 உடன்பாட்டு அம்சங்களை அமுல்படுத்திட வேண்டும் என்று நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில்..
5 ஆண்டுகளாக BSNLEUவால் தீர்க்க இயலாத 
 குழந்தைப் பராமரிப்பு விடுப்பை 
BSNLலில் அமுல்படுத்தி 08/03/2013 
அன்று நிர்வாகம்  உத்திரவிட்டது.
அந்த உத்திரவிலும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. 

25/04/2013 முதல் NFTE சங்கத்திற்கு 
இரண்டாவது சங்க அங்கீகாரம் வந்த பின்பு 
குழந்தைப் பராமரிப்பு விடுப்பில் நிர்வாகம் விதித்திருந்த 
தேவையற்ற குழப்பங்களை ஒவ்வொன்றாய் சரி செய்தோம்.

நிலைமை இவ்வாறிருக்க..

என்று BSNLEU  கோவைத் தோழர்கள் 
NFTE ஐப்பார்த்து  கேலி செய்து 
கோ(வை)யபல்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கேள்விகள் கேட்பது BSNLEUவின் வழக்கம்தான்...
நாமும் அவர்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்.

01/09/2008 முதல் மத்திய அரசில் 
குழந்தைப் பராமரிப்பு விடுப்பு 
அமுல்படுத்தப்பட்ட நிலையில்..

BSNLலில் 01/09/2008 முதல்  07/03/2013 வரை 
ஏறத்தாழ  5 ஆண்டுகள் பெண் ஊழியர்களை 
குழந்தை பராமரிப்பு விடுப்பை அனுபவிக்க விடாமல் 
தவிக்க விட்டது ஏன்? தாமதம் செய்தது ஏன்?
தடுத்தது யார்?  கெடுத்தது யார்?
மார்க்சிய எதிரி.. மம்தா பானர்ஜியா?

Monday 25 April 2016


பணி நிறைவு பாராட்டு விழா 

Sunday 24 April 2016

கோணிப்புளுகர்கோயபல்ஸ் 

உலக வரலாற்றில் மக்களின் 
கவனத்தைக் கவர்ந்தவர்களை 
POPULAR  மற்றும் NOTORIOUS என 
இரண்டு விதமாகக் குறிப்பிடுவார்கள்.

வள்ளுவனின் வார்த்தையில் சொன்னால் 
இசைபட வாழ்ந்தவர்கள்.. 
வசைபட வாழ்ந்தவர்கள்.. 
இந்த இரண்டு பிரிவினருமே.. 
மக்களின் கவனத்தைக் கவர்ந்தவர்களாவர்..

அவ்வாறு வசைபட வாழ்ந்தவர்களில் 
இன்றும் மக்களால் உச்சரிக்கப்படுபவர்..
ஹிட்லரின் கொள்கை பரப்புச்செயலரான 
ஜோசப் கோயபல்ஸ்..

கோயபல்சின் கால்கள் 
கழுதையின் கால்கள் போன்று இருந்ததாக 
வரலாற்று ஆசிரியர்கள்  குறிப்பிடுகின்றார்கள்.

 எனவே அவரது தோற்றம் மக்களுக்கு 
கேலிக்குரியதாக இருந்துள்ளது. 
ஆனாலும் அவரது பேச்சைக்கேட்டவர்கள் 
தங்களை மறந்து அவரது பேச்சைக்
குறிப்பெடுத்ததாக வரலாறு கூறுகிறது.

அவரது பேச்சு நாடகத்தன்மை வாய்ந்தது. 
தனது உடல் அசைவின் மூலமும் 
உணர்ச்சிகரமான வார்த்தைகள் மூலமும் 
மக்களைத் தன்வசப்படுத்தினார்.
யூதர்கள் மனித குல எதிரிகள்...
ஆரியர்கள் நாம்... ஆளப்பிறந்தவர்கள் நாம்..
என்ற முழக்கம் ஜெர்மனி மக்களை ஈர்த்தது..
அவரது பிரச்சார வன்மை அவரை 
ஹிட்லரின்  அமைச்சரவையில் 
கொள்கை பரப்புச்செயலராக ஆக்கியது.

அவர் சொல்லும்  கருத்துக்கள் அனைத்தும் 
உண்மைக்குப் புறம்பானவையாக இருந்தன.
ஆனால் அவரது பிரச்சார முறைகள் 
மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. 
எனவே மக்கள் அவர் சொல்வதையெல்லாம் நம்பினர்.

அவரது பிரச்சார முறை இன்றும் கூட 
பலராலும் பின்பற்றப்படுகிறது.
அவர் மூன்று வகையான 
பிரச்சார முறைகளைப் பின்பற்றினார்.

ஒன்று... 
முணுமுணுப்பு பிரச்சாரம்..

அவரது ஆட்கள் இரண்டு மூன்று பேராக..
டீக்கடை.. பேருந்து நிலையம்...சந்தைகள் போன்ற.. 
மக்கள் கூடும் பொது இடங்களுக்குச்செல்வார்கள்.
ஒருவர் ஹிட்லரைப் புகழ்ந்து பேசுவார்.
மற்றவர் ஹிட்லரை எதிர்த்துப் பேசுவார்.
புகழ்ந்து பேசுபவரின் வாதம் வலிமையாக இருக்கும்.
எதிர்த்துப் பேசுவபரின் வாதம் பலவீனமாக இருக்கும்.
இறுதியில் ஹிட்லரை எதிர்த்தவர்..
ஹிட்லரின் செயல்களில் நியாயம் இருப்பதாகவும்.. 
அவரை ஏற்றுக்கொண்டதாகவும்  மற்றவரிடம் கூறுவார்.
இதனைக் கவனித்துக்கொண்டிருக்கும் பொதுமக்களும் 
ஹிட்லரை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இரண்டாவதாக...
ஆருடப்பிரச்சாரம்...

இரண்டாவது உலக யுத்தத்திலே 
ஜெர்மனி மாபெரும் வெற்றியடையப் போவதாகவும் 
கிரக நிலைகள் ஜெர்மனிக்குச்சாதகமாக இருப்பதால்..
ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தோல்வியைத்தழுவும் எனவும்  
ஆருடங்கள் கூறுவதாக பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டார்...
இதனை பத்திரிக்கைகள் மூலம் கணிப்புக்களாகவும் 
வெளியிட்டு  மக்களை கோயபல்ஸ் நம்ப வைத்தார்...

மூன்றாவதாக...  
தொய்வில்லாத தொடர் பிரச்சாரம்..

எந்த ஒரு செய்தியையும்.. 
அது பொய்யாகக் கூட இருக்கலாம்..
ஆனால் திரும்பத்திரும்ப 
சொல்லிக்கொண்டேயிருங்கள்..
மக்கள் அதை உண்மை என்று நம்ப ஆரம்பிப்பார்கள்
என்பதுதான் கோயபல்சின் அசைக்க முடியாத 
நம்பிக்கைப்பிரச்சாரம்.

இப்படியாகத்தான் கோயபல்ஸ் 
உண்மைகளைத்திரித்தும் 
பொய்களைப் புனைந்தும் 
ஜெர்மனிய மக்களை.. உலக மக்களை.. 
தனது பிரச்சாரத்தின் மூலம் தன்வயப்படுத்தினார்.

  ஹிட்லரின் தற்கொலைக்குப்பின்  கோயபல்ஸ்
ஒரேயொரு நாள் 1945 மே முதல் தேதியன்று 
ஜெர்மனியின் அதிபராக முடி சூட்டிக்கொண்டார்.
ஆனால் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த 
அந்த அண்ட மகா கோணிப்புளுகர் 
அதிபராக முடி சூட்டிக்கொண்ட 
அன்றே தன் உயிரையும் துறந்தார்.

 அத்தகைய கோயபல்சின் வழிமுறைகளை 
இன்றும் நாட்டில்  பலர் பின்பற்றி வருவதை நாம் காணலாம்.

குறிப்பாக நமது BSNL நிறுவனத்தில் 
BSNLEU சங்கம் மிகவும் லாவகமாக 
கோயபல்சின் பிரச்சாரக்கொள்கை வழியில்..
தனது சலிப்பில்லாத இடைவிடாத பொய் பிரச்சாரத்தை 
ஊழியர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

எவ்வாறு கோயபல்ஸ் 
அப்பாவி யூதர்களை  மனித குலத்தின் எதிரிகளாகவும்  
ஜெர்மானியர்களை ஆளப்பிறந்தவர்களாகவும் சித்தரித்தாரோ..
அதே வழியில்..

 NFTE   ஊழியர் நல எதிரி
BSNLEU ஊழியர் நல விரும்பி 
என்ற தொடர் கோயபல்ஸ் பிரச்சாரத்தை 
மிகவும் லாவகமாக BSNLEU சங்கம் கையாண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதிப்பிரச்சாரம்தான் 
இரண்டு இலக்கப்போனஸ்... 
டவர் கம்பெனிக்கு ஆதரவு... 
குறைவான சம்பளம் கேட்டது..
என்ற கோணிப்பையில் வடிகட்டிய பொய்களை 
திரும்பத்திரும்ப சொல்வதும்...

நாங்கள்.. தாய்ப்பால் மறந்தவர்கள்...
சாணிப்பால் குடித்தவர்கள்... 
சவுக்கடி பட்டவர்கள்...
சட்டத்தை  வளைத்தவர்கள்..
சமதர்மத்தை வளர்த்தவர்கள்...
என்று தங்களை பெருமிதப்படுத்திக்கொள்வதும்...
கோணிப்புளுகர் கோயபல்சின் பாணி
என்பது எல்லோருக்கும் சொல்லாமல் புரியும்...

தோழர்களே...
என்னதான் பொய்களை உரக்கக்கூறினாலும்...
மற்றவரை பொய் விமர்சனங்களால் இழிவு படுத்தினாலும்...

கவ்விய  சூது  கவிழ்ந்து விடும்.. 
கட்டாயம் வாய்மை  வென்று விடும்...
என்பது ஆன்றோர் வாக்காகும்..
இது ஆன்றோர் வாக்கு மட்டுமல்ல 
கோணிப்புளுகர்களின் குலதெய்வம் கோயபல்ஸே..
"THERE WILL COME A DAY...
WHEN ALL THE LIES WILL COLLAPSE 
UNDER THEIR OWN WEIGHT...
AND THE TRUTH WILL TRIUMPH AGAIN"

பொய்கள் ஒரு நாள் வீழும்... உண்மை நிச்சயம்  எழும்..
என்று கூறியுள்ளதை நாம் நினைவு படுத்த விரும்புகிறோம்.
தோழர்.சக்கணன் 
பணி நிறைவு பாராட்டு விழா 
==================================================================
 NFTE  விருதுநகர் மாவட்டச்செயலர் 
தோழர்.சக்கணன் அவர்களின் 
பணி நிறைவு பாராட்டு விழா 
==================================================================
25/04/2016 - திங்கள்கிழமை - காலை 11.00 மணி 
BSNL பொதுமேலாளர் அலுவலகம் - விருதுநகர் 
==================================================================
பங்கேற்பு : தோழர்கள் 
மாநில சிறப்பு அழைப்பாளர்.  சேது 
சம்மேளனச்செயலர்ஜெயராமன் 
மாநிலத்தலைவர். இலட்சம் 
மாநிலப்பொருளர். அசோக்ராஜன் 
மாநிலத்துணைத்தலைவர். பாலசுப்ரமணியன் 
மதுரை மாவட்டச்செயலர்.  சிவகுருநாதன் 
மாநில உதவிச்செயலர். நடராஜன் 
மற்றும் முன்னணித்தோழர்கள் 

எளிமை... பொறுமை... தனிமை...
அன்பு... அடக்கம்.. பணிவு...
இனிய குணங்கள் நிறைந்த... 
அன்புத்தோழர்.சக்கணன் அவர்களின் 
பணி நிறைவு விழா சிறக்க...
தோழர்களே... வருக...