Tuesday 31 July 2018


செய்திகள்

பரிவு அடிப்படை பணிக்குத் திருமணமான ஆண் வாரிசுகளும் 
MARRIED SONS விண்ணப்பிக்கலாம் என்ற DPE உத்திரவை 
BSNL நிர்வாகம் வழிமொழிந்துள்ளது. 
இந்த வழிகாட்டுதல்  25/02/2015ல் இருந்து அமுலாகும்.
அதற்கு முந்தைய விண்ணப்பங்கள்
கணக்கில் கொள்ளப்படாது.
------------------------------------------------------------------------------------------
ஜூன் 2018  விலைவாசிப்புள்ளி 2 புள்ளிகள் உயர்ந்துள்ளது. ஜூலை 2018 மற்றும் ஆகஸ்ட் 2018  விலைவாசிப்புள்ளிகளின் உயர்வின் அடிப்படையில் 2018 அக்டோபர் மாத IDA கணக்கீடு செய்யப்படும். அதற்குள் BSNL ஊழியர்களின் சம்பள மாற்றம் 
நிகழும் என நம்புவோமாக.
------------------------------------------------------------------------------------------
நமது சங்கத்தால் நியமிக்கப்பட்ட 5 பேர் உறுப்பினர்களைக் கொண்ட ஊதிய ஆலோசனைக்குழு  02/08/2018 அன்று டெல்லியில் கூடவுள்ளது.
------------------------------------------------------------------------------------------
AIBSNLPWA அகில இந்திய ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின்
6வது மாநில மாநாடு ஆகஸ்ட் 7 மற்றும் 8 தேதிகளில் 
திருச்சியில் நடைபெறவுள்ளது.
 ---------------------------------------------------------------------------------------
BSNLலில் இன்னும் நிரந்தரம் ஆகாமல் UNABSORBED விடுபட்ட 
DOT ஊழியர்களின் விவரங்களை உரிய படிவத்தில் அனுப்பிட
மாநில நிர்வாகங்களை
BSNL தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
------------------------------------------------------------------------------------------
JCM தேசியக்குழுவின் நிலைக்குழுக்கூட்டம்
STANDING COMMITTEE 08/08/2018 அன்று நடைபெறும் 
என எதிர்பார்க்கப்படுகின்றது.

பணி நிறைவு பாராட்டு விழா
தோழியர் R.இராஜலெட்சுமி
பணி நிறைவு பாராட்டு விழா
---------------------------------------------------------------------
01/08/2018 – புதன் – மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி
---------------------------------------------------------------------
 பங்கேற்பு : தோழர்கள் 


N. நாகேஸ்வரன் - மாநில உதவிச்செயலர் – AIBSNLPWA
P. முருகன் - மாவட்டச்செயலர் – AIBSNLPWA
R. பூபதி - மாவட்டப்பொருளர் – AIBSNLPWA
S. முருகன் - மாவட்டத்தலைவர் - NFTCL
B. முருகன் - மாவட்டச்செயலர் – NFTCL
B. லால்பகதூர் – மாவட்டத்தலைவர் NFTE
M. ஆரோக்கியதாஸ் - கிளைச்செயலர் – NFTE
L. கார்த்திகா - கிளைச்செயலர் – NFTE
V. மாரி – மாவட்டச்செயலர் – NFTE
  
மற்றும் முன்னணித்தோழர்கள்…

தோழர்களே… வருக…

Monday 30 July 2018


மிழகம் தலை சிறக்கட்டும்….

தமிழகத் தொலைத்தொடர்பு வட்டத்தின்…
CGM தலைமைப் பொதுமேலாளராகப் பொறுப்பேற்கும்..
நமது அன்பிற்கும்… மதிப்பிற்கும் உரிய..
திருச்சி/காரைக்குடி மாவட்டப் பொதுமேலாளர்
திரு.V.ராஜு 
அவர்களின் பணிக்காலம்…
சிறப்பாய் அமைந்திட வாழ்த்துகின்றோம்….

சிந்தனையில் புதுமையும்…
செயலில் இளமையும் மிக்க...
அவரது பணிக்காலத்தில்…
தமிழகம் உயர்ந்து தழைத்திட…
தலைசிறந்து… தலைநிமிர்ந்து..
நிலைத்திட வாழ்த்துகின்றோம்…

சேவை பெருக்கிய… செம்மல்… 

90 ஆயிரத்துக்கும் அதிகமான..
தரைவழித் தொலைபேசி இணைப்புக்கள்…
27 லட்சத்திற்கும் அதிகமான
அலைபேசி இணைப்புக்கள்…
என தனது பணிக்காலத்தில்…
நாட்டிலேயே அதிகமான எண்ணிக்கையில்…
BSNL சேவையைப் பெருக்கி….
தமிழகத்தின் தலை நிமிர வைத்த…
தலைமைப் பொதுமேலாளர்… CGM
திரு.மார்ஷல் ஆண்டனி லியோ
அவர்களின் பணி நிறைவுக்காலம்
சீரோடும்… சிறப்போடும்... 
விளங்க வாழ்த்துகின்றோம்..

பணி நிறைவு வாழ்த்துக்கள் 

31/07/2018 அன்று… விருப்ப ஓய்வில்...
பணிமுடித்து விடைபெறும்...
அன்புத்தோழியர். 
R.இராஜலெட்சுமி
அலுவலகக் கண்காணிப்பாளர் – காரைக்குடி
அவர்களின் பணி நிறைவுக்காலம் 
சிறக்க வாழ்த்துகின்றோம்.

Sunday 29 July 2018


உண்ணா நோன்பும்… ஒற்றுமையின் மாண்பும்… 

BSNL அனைத்து  தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக
மூன்று நாள் உண்ணாநோன்பு போராட்டம்
நாடு முழுக்க எழுச்சியோடு நடந்து முடிந்துள்ளது.

காரைக்குடி மாவட்டத்தில்… 
மூன்று இடங்களில்...
மூன்று நாட்களும்... 
முழுமுனைப்போடு...
முழுவீச்சில் போராட்டம் நடைபெற்றது.

24/07/2018 அன்று காரைக்குடியில்
அனைத்து சங்க மாவட்டச்செயலர்கள் தலைமையில் நடைபெற்றது.
AIBSNLEA மூத்த தலைவர் தோழர்.மோகன்தாஸ் துவக்கிவைத்தார்.
AITUC மூத்த தலைவர் 
தோழர்.பழ.இராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார்.

25/07/2018 அன்று சிவகங்கையில்
தோழர்.குமரேசன் SNEA..
தோழர்.இராமச்சந்திரன் AIBSNLPWA கூட்டுத்தலைமை வகித்தனர்.
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன் துவக்கி வைத்தார்.
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி நிறைவுரையாற்றினார்.

26/07/2018 அன்று இராமநாதபுரத்தில்
தோழர்.இராமமூர்த்தி… NFTE…
தோழர்.சண்முகம் AIBSNLPWA கூட்டுத்தலைமை வகித்தனர்.
AIBSNLPWA மூத்த தோழர்.ஜெயபாலன் துவக்கி வைத்தார்.
CPI மாவட்டச்செயலர் வழக்கறிஞர் தோழர்.முருகபூபதி…
NFTE மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான்…
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
NFTE மூத்த தலைவர் தோழர்.சேது நிறைவுரையாற்றினார்.

மூன்று நாட்களும்  மூன்று இடங்களிலும்…
முழுமையாகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற மூத்த தோழர்கள்…
ஓய்வின்றி உணர்வுடன் கலந்து கொண்டனர்…
அனைவருக்கும் போராட்ட வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்…

தோழர்களே…
இதுவே பெரும்பகுதி தோழர்களின் கடைசி ஊதியமாற்றம்…
இதனை அடையாமல் நாம் ஓய்ந்திருக்க மாட்டோம்…
இமைப்பொழுதும் ஒற்றுமையை நாம்…
இழக்க மாட்டோம்…

இனி எப்போது அடுத்த கட்டப்போராட்டம்…?
இதுவே தோழர்களின்…
இன்றைய… கேள்வி…
இப்போதைய கேள்வி…
இதோ…
இன்னும் அணையாமல் எரிகிறது…
இணைந்த போராட்ட வேள்வி…

Monday 23 July 2018


முழு வீச்சாகட்டும்… மூன்று நாள் போராட்டம் 


ஊதிய உயர்வு கேட்டு…
ஓய்வூதிய உயர்வு கேட்டு…
4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யக்கோரி…
ஓய்வூதியப் பங்களிப்பை முறைப்படுத்தக்கோரி…
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக 
24/07/2018 – 25/07/2018 – 26/07/2018
மூன்று நாட்கள் முழுவீச்சில்…
நாடு தழுவிய தொடர் உண்ணாவிரதம்…
  --------------------------------------------------------------------------------
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம் 

அனைத்து சங்க மாவட்டச்செயலர்கள் தலைமையில்
அனைத்து சங்கப்பொறுப்பாளர்கள் மற்றும் 
முன்னணித்தோழர்கள் பங்கேற்கும்… 
துவக்க நாள் உண்ணாவிரதம்
  --------------------------------------------------------------------------------
24/07/2018 – செவ்வாய் – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
 --------------------------------------------------------------------------------
மூன்று நாள் போராட்டம்…
முழு வீச்சில் செல்லட்டும்…
நான்கு அம்சக்கோரிக்கைகள்…
நாடு முழுக்க எதிரொலிக்கட்டும்…
தோழர்களே…. வாரீர்…

Sunday 22 July 2018


வரப்புயரட்டும்… வரம்புயரட்டும்…

சோறுடைத்த சோழநாட்டு மன்னனை வாழ்த்தும்போது…
வரப்புயர என்று வாயார வாழ்த்தினார் ஒளவையார்…
கடைநிலை... உயர்நிலை எய்தும்போது….
சகலநிலைகளும் சரிசமமாக உயரும்
என்பதே ஒளவையின் வாக்கு….

BSNL ஊழியர்களின் ஊதியப்பேச்சுவார்த்தை துவங்கி விட்டது….
DOT ஊழியர்களுக்கு இதுவே கடைசி ஊதியத்திருத்தம் என்பதால்…
எதிர்பார்ப்புக்களும் அதிகம்… ஏக்கங்களும் அதிகம்…

ஆறாவது ஊதியக்குழுவில்…
கடைசி ஊதியநிலையாக இருந்த ரூ.7000/= என்பது
ஏழாவது ஊதியக்குழுவில்  01/01/2016 முதல்…
ரூ.18000/= என்று உயர்த்தப்பட்டுள்ளது.
2.57 மடங்கு அடிப்படைச்சம்பளம் உயர்ந்துள்ளது.

தற்போது BSNLலில் 2007ல்…
இரண்டாவது ஊதிய மாற்றத்தில்…
ரூ.7760/- என்பது கடைசிநிலை ஊதியமாகும்….
01/01/2017 அன்று 120.3 சத IDAவை இணைத்து…
மொத்தச்சம்பளத்தில் 15 சத ஊதிய உயர்வு அளித்தால்…
(நிச்சயம் 15 சதம் ஊதிய உயர்வு கிட்டும் என்று நம்புவோம்…)
புதிய அடிப்படைச்சம்பளம் ரூ.19660/- ஆகும்.
ஏழாவது ஊதியக்குழு கணக்கீட்டின்படி…
அடிப்படைச்சம்பளத்தை  2.57 பெருக்கு மடங்கில் பெருக்கினால்….
புதிய அடிப்படைச்சம்பளம் ரூ.19943/= ஆகும்…

எனவே அடிமட்ட ஊழியர்களான GROUP ‘D’ ஊழியர்களின்
அடிப்படைச்சம்பளம் 01/01/2017 முதல்
ரூ.20000/= என்று உயர்த்தப்பட்டால் மட்டுமே…
கடைநிலை ஊழியர்களுக்கு நியாயம் கிட்டும்….

ஆனால் இன்று BSNLலில்
வேதனையில் உழன்று விதியை நொந்து வாழ்பவர்கள்..
GROUP ‘D’ பதவியில் உள்ள கடைநிலை ஊழியர்களே…
காரணம் ஏக்கநிலையான STAGNATION என்னும் தேக்கநிலை…
எந்த தவறும் செய்யாமல்... 
ஆண்டுதோறும்...
ஆண்டு உயர்வுத்தொகையை
ஆயிரக்கணக்கான ஊழியர்கள்
அநியாயமாக இழந்து வருகின்றார்கள்…

நாலுகட்டப்பதவி உயர்வு வந்தது….
ஆனால் அதன் பயன் பலருக்கு கிட்டவில்லை….
காரணம் தேக்கநிலை…

78.2 சத IDA இணைப்பு வந்தது….
ஆனால் அதன் பயன் பலருக்கு கிட்டவில்லை….
காரணம் தேக்கநிலை…

ஆண்டுகள் பல ஆனாலும்…
தேக்கநிலை ஏக்கநிலையாகவே தொடருகின்றது…
எனவே BASIC PAY என்னும் அடிப்படைச்சம்பளம் போலவே…
MAXIMUM என்னும் அதிகபட்ச சம்பளமும் உயர்த்தப்படவேண்டும்…
ரூ.20000/= அடிப்படைச்சம்பளம் என்றால்…
ரூ.48000/= அதிக பட்ச சம்பளமாக உயர்த்தப்பட வேண்டும்….
இல்லையேல் அடிமட்ட ஊழியர்கள்
தொடர்ந்த துயரங்களையே அனுபவிப்பார்கள்…

மூன்றாவது ஊதிய மாற்றத்தில்….
அடிமட்ட  ஊழியர்களின்…
அடிப்படைச்சம்பளம் என்னும் வரப்பு உயரட்டும்…
அதிகபட்ச சம்பளம் என்னும் வரம்பும் உயரட்டும்…

வரப்பு உயரட்டும்… வரம்பும் உயரட்டும்…
ஊதியக்குழு உறுப்பினர்களுக்கு
நமது தலைவர்களுக்கு…
நமது அன்பான வேண்டுகோள் இதுவே…

Friday 20 July 2018


நல்லதொரு துவக்கம்….
முதலாவது இருதரப்பு ஊதியக்குழுக்கூட்டம்

BSNL ஊழியர்களின் நீண்ட போராட்டத்திற்குப்பின்…
20/07/2018 அன்று டெல்லியில் இருதரப்பு ஊதியக்குழுக்கூட்டம்
ஊதியக்குழுத் தலைவர் CGM திரு.H.C.பந்த் 
அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நிர்வாகத்தரப்பில் 5 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஊழியர் தரப்பு  சார்பாக 8 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குறுகிய கால இடைவெளியில் ஊதியக்குழு அமைத்து…
வெகு விரைவிலேயே முதல் கூட்டத்தையும் கூட்டியதற்காக
ஊழியர்கள் தரப்பின் சார்பில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

நிர்வாகத்தரப்பில் ஊதியக்குழு சம்பந்தமான
DPE வழிகாட்டுதல்கள் விவரிக்கப்பட்டன.
விலைவாசிப்படி சம்பந்தமாக ஊழியர் தரப்பில்
எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு DPE இலாக்கவிடம்
உரிய விளக்கம் கேட்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஊதியக்குழு சம்பந்தமான பேச்சுவார்த்தை
ஆகஸ்ட் 2018 மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு
உடன்பாடு போடப்பட வேண்டும் என
ஊழியர் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

அடுத்த கூட்டம் 09/08/2018 அன்று
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த  கூட்டத்தில் புதிய ஊதிய விகிதங்களைக்
கட்டமைப்பது பற்றி விவாதிக்கப்படும்.

மொத்தத்தில்…
தாமதமானாலும்… தடைகள் வந்தாலும்…  
ஊதியக்குழு கூட்டம் நல்லதொரு துவக்கம்….

தொடர் உண்ணாவிரதம்

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

தொடர் உண்ணாவிரதம்
  ---------------------------------------------------------------------------
24/07/2018 – செவ்வாய் – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி
 ---------------------------------------------------------------------------
25/07/2018 – புதன் – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் - சிவகங்கை
  ---------------------------------------------------------------------------
26/07/2018 – வியாழன் – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
   ---------------------------------------------------------------------------
கோரிக்கைகள் 


BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு
01/01/2017 முதல் ஊதிய மாற்றம்…

01/01/2017 முதல் BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம்….

ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப் பங்களிப்பு…

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு…

தோழர்களே… அணி திரள்வீர்….

Tuesday 17 July 2018


மண்டேலா 100...
1918 - 2018
 எரிந்தது நெருப்பு… எழுந்தது கருப்பு…

மண்டேலா பிறந்தார்….
வெள்ளை இருள் விலகியது….
கருப்பு ஒளி பரவியது…

அண்ணல் காந்தி வழி சென்ற…
ஆப்பிரிக்க காந்தியின்…
புகழ் பாடுவோம்….

வாழ்த்துக்கள்

01/01/2017 முதல்
ஓய்வூதிய உயர்வு கோரி
இன்று 18/07/2018
நாடு முழுக்க களம் காணும்
மூத்தோர்களின்
உரிமைப்போராட்டம்
வெல்ல வாழ்த்துகின்றோம்.
-----------------------------------------------------------------
கிடைக்காது என்று சொன்ன
78.2 வென்ற
60 : 40 என்ற
ஓய்வூதிய சுமை குறைத்த…
ஓய்வூதியர்களின் ஊன்றுகோல்…
கூக்குரல்களின் மத்தியில்…
அயராது உரிமைக்குரல் எழுப்பும்…
AIBSNLPWA
வாழ்க… மேலும்… மேலும்… வளர்க…

Monday 16 July 2018


ஓய்ந்திருக்கலாகாது… 

ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை…
BSNL ஓய்வூதியர்களுக்கு அமுல்படுத்தக்கோரி…
01/01/2017 முதல் ஓய்வூதிய உயர்வு கோரி…

அனைத்திந்திய BSNL 
ஓய்வூதியர்கள் நலச்சங்கம்
நாடு தழுவிய தர்ணா
 --------------------------------------------------------------------------------------
18/07/2018 – புதன் – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
  --------------------------------------------------------------------------------------
தலைமை
தோழர்.ஜெயச்சந்திரன்
AIBSNLPWA மாவட்டத்தலைவர்

துவக்கவுரை
தோழர்.பூபதி
AIBSNLPWA மாவட்டப்பொருளர்

கோரிக்கை முழக்கம்
தோழர்.நாகேஸ்வரன்
AIBSNLPWA மாநில உதவிச்செயலர்

வாழ்த்துரை
தோழர்.M.பூமிநாதன்
BSNLEU மாவட்டச்செயலர்

தோழர்.A.பாண்டியன்
SNEA மாவட்டச்செயலர்

தோழர்.B.யுவராஜ்
AIBSNLEA மாவட்டச்செயலர்

தோழர்.V.மாரி
NFTE மாவட்டச்செயலர்

நிறைவுரை
தோழர்.P.முருகன்
AIBSNLPWA மாவட்டச்செயலர்
 ------------------------------------------------------------------------------------- 
ஓய்வூதியர்கள் நாம்…
ஓய்ந்திருக்க மாட்டோம் நாம்…

முதியோர்கள் நாம்…
முடங்கி விடமாட்டோம் நாம்…

விளைந்தவர்கள் நாம்..
வீழ்ந்து விடமாட்டோம் நாம்…

தோழர்களே... திரண்டு வாரீர்...

Thursday 12 July 2018


சிறகுகள் விரியட்டும்…

WINGS இணையதள தொலைபேசி சேவை 

இந்தியாவில் முதன்முறையாக நமது BSNL நிறுவனம்
இணையதள தொலைபேசி சேவையைத்துவக்கியுள்ளது.
இதுவரை இணையதள வசதி உள்ளவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் இணையதளத்தில் இருந்து அலைபேசி மற்றும் தரைவழித்தொலைபேசிக்கு பேசும் VOIP என்னும் வசதியை முதன்முதலில் BSNL அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறகுகளின் சிறப்புக்கள்

சிறகுகள் சேவை  01/08/2018 முதல் நடைமுறைக்கு வருகிறது...
ஒருமுறை பதிவுக்கட்டணம் ரூ.1099/=
வெளிநாட்டு அழைப்புகளுக்கு வைப்புத்தொகை ரூ.2000/=
சிறகுகள் சேவைக்குள் VIDEO அழைப்பு வசதி…
அலைபேசி COVERAGE இல்லாத இடங்களிலும் பேசும் வசதி…
எல்லா தனியார் தொலைபேசியிலும் சிறகுகள் விரியும்…
மாதாந்திர வாடகை இல்லை…
அமைப்புக்கட்டணம் INSTALLATION இல்லை…
ஓராண்டுக்கு இலவச சேவை….

சிறகுகள் விரியட்டும்…
BSNLன்...
சிறப்புகள் பெருகட்டும்…

Tuesday 10 July 2018


ஆர்ப்பாட்டம் 

ஊதிய உயர்வு
ஓய்வூதிய உயர்வு
ஓய்வூதியப்பங்களிப்பு
4G ஒதுக்கீடு
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி
நாடு தழுவிய
ஆர்ப்பாட்டம்

11/07/2018 – புதன்கிழமை – மாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

தோழர்களே… வாரீர்… 
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
காரைக்குடி.

Saturday 7 July 2018


நெகிழ்வான நிகழ்வு….


ஞானத்தந்தை தோழர்.ஞானையா அவர்களின்
முதலாமாண்டு புகழஞ்சலிக்கூட்டம்
07/07/2018 அன்று காரைக்குடி NFTE சங்க அலுவலகத்தில்
மூத்த தோழர்.பூபதி அவர்களின் தலைமையில் நெகிழ்வுடன் நடைபெற்றது.
அஞ்சல் பகுதியின் மூத்த தோழர்.இராமன் அவர்கள்
தோழர். ஞானையாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி
புகழஞ்சலியைத் துவக்கி வைத்தார்.
தூயதலைவனின் திருவுருவப்படத்தை
தூயபணியாம் துப்புரவுப்பணி செய்யும்
அருமைத்தோழர்கள் மலரால் அலங்கரித்திருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில்…
ஓய்வூதியர் சங்க மாவட்டச்செயலர் தோழர்.முருகன்,
ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் தோழர்.முருகன்,
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி ஆகியோர் நினைவுரையாற்றினர்.
ஓய்வு பெற்ற தலைமைத்தபால் அதிகாரி
தோழர்.முத்துராக்கு கவிதாஞ்சலி நிகழ்த்தினார்.
தபால் தந்தி ஊழியர்கள் வரலாற்றில் தனி முத்திரை பதித்த
தன்னிகரில்லாத் தலைவனின்
நினைவேந்தல் நிகழ்வு நெகிழ்வுடன் முடிவுற்றது.