Friday 30 August 2013

செய்திகள் 

01/10/2013 முதல் கிடைக்கவேண்டிய 
IDA 6 சதத்திற்கு மேல் இருக்கும்  என்று செய்திகள் கூறுகின்றன.

மாவட்டம் வாரியாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை விவரங்களை BSNL CORPORATE அலுவலகம் கோரியுள்ளது.

01/09/2013 முதல் முறைப்படுத்தப்பட்ட  கதிர்வீச்சு உள்ள அலைபேசிகளையே இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. கதிர்வீச்சு அளவு SAR (SPECIFIC ABSORPTION RATE)  என்ற முறையில் குறிக்கப்படும். 6 நிமிடங்களில் ஒரு கிராம் மனித செல்லில்
 1.6 watt/kg அளவிற்கு செல் அலைவீச்சு இருக்க வேண்டும்.
சொல்லினால் அழியும் மனிதன் இப்போது செல்லினால் அழிகின்றான்.

JCM தொடர்பாக FNTO  தொடர்ந்த வழக்கு
 03/09/2013 அன்று விசாரணைக்கு வருகின்றது.

Thursday 29 August 2013

BSNL ஓய்வூதியம் பற்றி கபில்சிபலுக்கு 
தோழர். குருதாஸ் தாஸ் குப்தா கடிதம் 

28/08/2013 அன்று தோழர். குருதாஸ் தாஸ் குப்தா, MP தொலைதொடர்பு அமைச்சர் திரு.கபில்சிபலுக்கு BSNL  ஊழியர்களின் ஓய்வூதியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி விரிவான கடிதம் எழுதி உடனடியாக அரசின் தலையீட்டைக் கோரியுள்ளார்.

  • அரசு செப்டம்பர் 2000 உடன்பாட்டை மதிக்க வேண்டும்.
  • ஒய்வூதியச்சுமையை அரசே ஏற்க வேண்டும்.
  • சம்பளத்தின் அதிகபட்சத்தில் (MAXIMUM) ஓய்வூதிய பங்களிப்பு செலுத்தும் நடைமுறையை மாற்ற வேண்டும்.
  • BSNL செலுத்தும் வரியின் அடிப்படையிலேயே  அரசின் பங்களிப்பு இருக்கும் என்னும் உத்திரவை மாற்ற வேண்டும்.
என்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் மீது அரசு கவனம் செலுத்த 
தோழர். குப்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
சிரித்து வாழ வேண்டும்..
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே  
சிரிப்புக்கலையிற் சிறந்த 
கலைவாணர் NSK 
நினைவு நாள் 
30/08/2013
சாவும்... நோவும்.. 

காஞ்சிபுரம் நெசவுக்குப் புகழ்  பெற்றது என்று எண்ணியிருந்தோம்..
பாவம்.. அது வசவுக்கு மட்டுமே லாயக்கு என்பதை 
வலைத்தளத்தில் தெரிந்துகொண்டோம்.
கூடவே கூத்தில் கோமாளியாய் கோவை கொங்கர்கள்...

நம்முடைய வருத்தம்  இதுதான்..

தாரபாதாவின் வாரிசுகள் தரம் தாழ்ந்து போகலாமா?
தாரபாதா இவர்களைக்  கண்டிருந்தால் கேட்டிருந்தால்..
தன்  இன்னுயிர் நீத்திருப்பாரே..

ஏதோ தங்கள் தலைவரை இழிவு படுத்தி விட்டார்கள் என
எக்குத்தப்பாய் கரணம் அடித்து எகிறிக்குதிக்கும் இவர்கள்..

தமிழ் மாநிலச்செயலரை தோழர்.பட்டாபியை 
ஓய்வு பெற்ற மூத்த தோழர்களை..
இன்று வரை தொடர்ந்து தரம் தாழ்த்தி வசை பாடுவதேன்?

புகழ்பாடிகளாகவே இவர்கள் காலம் கழிக்கலாமே..
வசைபாடிகளாக மாறி இசை கெட்டுப்  போவதேன்?

எல்லா மனிதர்களுக்கும் சுயமரியாதை உண்டு..
எல்லாத்தலைவர்களும் 
இந்த இயக்கத்திற்கு தங்கள் பங்கை ஆற்றியுள்ளனர்.
இதில் உயர்வென்ன.. தாழ்வென்ன..

சாவும் நோவும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள் 
விமர்சனமும் அவ்வாறே..
விமர்சனம் செய்யத்துணிபவர்கள் 
அதைத்தாங்கி கொள்ளவும் வேண்டும்..
ஈரோட்டுக்குருக்கள் இதையெல்லாம் சொல்லித்தர வேண்டும்..

வலைத்தள லாவணி தொடரும்..

Wednesday 28 August 2013

பட்டமா.. பாடமா..

ஓய்வூதிய பிடித்தம் கூடாதென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையொட்டி 
வழக்கம் போல் வலைத்தளத்தில் அறை குரைப்பு நடந்தேறியது. 
காஞ்ச புறத்தவனுக்கும், கொங்கனுக்கும் புரிவது 
கம்பன் உறங்கும் காரைக்குடிக்காரனுக்குப் புரியாதா?

காரைக்குடியைப்  பொறுத்தவரை 
இதை மிக முக்கிய தீர்ப்பாக கருதுகின்றோம். 
காரணம் கீழே நீங்கள் காண்பதுதான்..

நமது சங்கத்தின் மிக விசுவாசமான தோழர். P .காமாட்சி, TM.
கடந்த ஜுன் 2012 அன்று ஓய்வு பெற்றார். 
சுயமரியாதை மிக்க தோழர். 
காமாட்சியை ஒரு பொறுக்கி அதிகாரி வா  போ என ஏக வசனத்தில் அழைத்ததை பொறுக்க இயலாமல் காமாட்சி பல்வேறு வசனங்களில் பொறுக்கி அதிகாரியை  பொரித்து எடுத்து விட்டார். 
வழக்கம் போல் தற்காலிகப்பணி நீக்கம். அதன் பின் காவல்துறை நடவடிக்கை என திட்டமிட்ட பழி வாங்குதல்கள் தொடர்ந்தன. 

தற்காலிகப்பணி நீக்கத்தை ரத்து செய்து அவரை பணியில் சேர வைத்து இலாக்கா அனுமதியுடன் ஓய்வும் பெற வைத்தோம். 
பணி ஓய்வு அன்று விடுப்பு பணத்தை முழுமையாகப் பட்டுவாடா செய்ய வைத்தோம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரது பணிக்கொடை DCRG வழங்கப்படவில்லை.
தற்காலிக ஓய்வூதியத்திற்கான PROVISIONAL PENSION அனுமதி மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்பட்டு DOT CELL பரிசீலனையில் உள்ளது. விரைவில் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 
இத்தோடு ஏறத்தாழ 15 மாதங்கள் ஓடி விட்டன . இன்று வரை தோழர். காமாட்சி இது பற்றி முணுமுணுக்கவில்லை. தனக்கு பட்டங்கள் வேண்டுமென சங்கத்தை கேட்கவுமில்லை. 

இந்நிலையில் தான் ஜார்க்கண்ட் மாநில ஓய்வூதிய வழக்கில் 
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்  காட்டி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தோழர். காமாட்சிக்கு சேர  வேண்டிய அவரது உரிமையான பணிக்கொடையை, ஓய்வூதியத்தை உ டனடியாக வாங்க முடியும் என அவரது வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தோழர். காமாட்சி பட்டங்களை நம்மிடம் கேட்கவில்லை.. 
பாடுபட்டு உழைத்த காலத்திற்கான பலன் மட்டுமே வேண்டுமென்றார். தற்போதைய தீர்ப்பை சுட்டிக்காட்டுவதின் மூலம்
அவரது உரிமையை வெல்ல வாய்ப்புக் கிட்டியுள்ளது. 
தீர்ப்புக்கள் உத்திரவாக காலதாமதமாகலாம். 
மாட்சிமை தாங்கியோர்கள்  காத்திருந்து தியாகிகளாகட்டும். 
காமாட்சிகள் நீதி கேட்டு தங்கள் நியாயத்தை நிலைநாட்டட்டும்.

Monday 26 August 2013

மாசற்ற தியாகி 
தோழர். இராஜேஸ்வரராவ் 
நூற்றாண்டு விழா சிறப்புக்கூட்டம்.

27/08/2013 - செவ்வாய்க்கிழமை - மாலை 5 மணி 
வெங்கடேஸ்வரா மந்திர் - தி.நகர் - சென்னை 

பங்கேற்பு : தோழர்கள்
தா. பாண்டியன் 
SS. தியாகராஜன் 
மற்றும் மாநிலச்செயலர்  
R. பட்டாபிராமன் 
தியாகிகளைப் போற்றுவோம்..
போலிகளைப் புறந்தள்ளுவோம் ..

திருத்தம் 

ஊழியர்களின் ஓய்வூதியத்தில் பிடித்தம் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினையொட்டிய நமது வலைத்தள செய்தியின் கடைசி வரிகளை

"இதன் மூலம் சென்னை நீங்கலாக 
மற்ற பகுதிகளில் தியாகிகளின் எண்ணிக்கையை
உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளது" 
என திருத்தி வாசிக்கவும்.

Sunday 25 August 2013

ஆகஸ்ட்  26
அன்னை தெரேசா பிறந்த நாள் 
இல்லறம் கண்டிருந்தால் 
இருவருக்குத்தான் அன்னை..
நல்லறம் கண்டதனால் 
நானிலத்திற்கே அன்னை...
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 
அன்னை தெரேசா நாமறிந்த தெய்வம்..

Saturday 24 August 2013

78.2 சத இணைப்புக்கோரி 
மூத்த குடிமக்களின் போராட்டம் 

வயது 60 ஆகிவிட்டது. அக்கடா என்று அமைதியாக இருக்கலாம் என்றாலும் இந்த அரசும் நிர்வாகமும் இந்த தேசத்தில் யாரையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை.  
01/01/2007ல் இருந்து 09/06/2013 வரை 77.3 மாதங்கள் BSNLலில்  பணி புரிந்து ஓய்வில் சென்ற மூத்த ஊழியர்களுக்கு 78.2 சத இணைப்பை தர இயலாது 
என BSNL நிர்வாகம் கைவிரித்துள்ளது.
இந்த கைவிரிப்பைக்கண்டு கைகட்டி இருக்க முடியாது என ஓய்வு பெற்றோர் கை உயர்த்தி போராட்டக்களம் காண இறங்கிவிட்டனர்.

AIBSNLPWA அமைப்பின் சார்பாக 
23/09/2013 அன்று அனைத்து மாவட்டம் மற்றும் 
மாநில அளவில் ஆர்ப்பாட்டம்.
23/10/2013 அன்று தலைநகர் டெல்லியில் தர்ணா 
ஆகிய போராட்டங்களை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

இன்றைய சூழலில் உழைக்கின்ற ஊழியர்கள் பல்வேறு சங்கங்களாகவும், அமைப்புகளாகவும் இருந்தாலும் பொதுப்பிரச்சினைகளில் ஒன்று பட்டு போராடி வருகின்றனர். ஆனால் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஓய்வுக்குப்பின்னும் TEPU, BSNLEU, FNTO மற்றும்  பல சங்கங்கள் சார்ந்த துக்கடா அமைப்புகளாக சிதறிக்கிடக்கின்றனர் . NFTE மட்டுமே ஓய்வு பெற்றோரின் அமைப்பை  உருவாக்கவில்லை. தோழர். இராமன்குட்டியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட AIBSNLPWA அமைப்பில் இணைந்து முன்னாள் NFTE  தோழர்கள் செயலாற்றி வருகின்றனர். 
78.2 சத இணைப்பை 01/01/2007ல் இருந்து பெறுவது என்பது மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரும் சவாலாகவே இருக்கும். இந்நிலையில் பல்வேறு அமைப்புகளாக சிதறுண்டு இருந்தால் தங்கள் கோரிக்கையை அடைய முடியுமா என்னும் கவலை நமக்கு உண்டாகின்றது. உழைக்கின்ற ஊழியர்களைப் போலவே ஓய்வு பெற்ற தோழர்களும் தங்களுக்குள் ஒரு இணைப்பை உருவாக்க வேண்டியது அவசியமாகின்றது.
ஒரு சிங்கம் நான்கு  மாடுகள் கதையை கற்றுக்கொடுத்த மூத்தோர்கள் தங்கள் இயக்க வாழ்விலும் அதைக்கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

Friday 23 August 2013


அப்பாவி Mrs.அம்பானி 


2G  வழக்கு சம்பந்தமாக 23/08/2013 அன்று CBI சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அம்பானி மனைவி திருமதி. டினா அம்பானி 
"நான் ஒரு இல்லத்தரசி எனக்கு எதுவுமே தெரியாது" 
என்று கூறியுள்ளார்.  2G வழக்கில் சம்பந்தப்பட்ட அம்பானியின் 
6 நிறுவனங்களைப்   பற்றி கூட தனக்கு எதுவும் தெரியாது என 
அம்பானி மனைவி அப்பாவியாக தெரிவித்துள்ளார். 
விசாரணை நடத்திய CBI சிறப்பு நீதிமன்ற நீதிபதியோ 
"அம்பானியை  விட நீங்கள் பரவாயில்லை" 
என்று பெருமூச்சு விட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது பெருசுகள் சொல்லும் 
"வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போன கதைதான்"
நினைவுக்கு வருகின்றது.
அப்பாவி திருமதி. அம்பானி  
ஒரு முன்னாள் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 22 August 2013

ஓய்வூதிய பிடித்தம்  கூடாது
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 

ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் விடுப்புப்பணம் ஆகியவற்றில் பிடித்தம் செய்ய ஓய்வூதிய விதிகளுக்கு அதிகாரம் இல்லை என 
உச்ச நீதிமன்றம் ஜார்க்கண்ட் மாநிலஅரசு தொடர்ந்த SLPக்கு எதிராக 
தனது 14/08/2013 தீர்ப்பில் கூறியுள்ளது.  

அரசு ஊழியர்களுக்கு இது மகிழ்வான தீர்ப்பாகும்.
தற்போது ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்பட்ட ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை நிறுத்தப்படுகின்றது. ஆனால் தற்காலிக ஓய்வூதியம் - PROVISIONAL PENSION தொடர்ந்து வழங்கப்படுகின்றது.  மேற்கண்ட தீர்ப்பின்  மூலம் பணிக்கொடையையும் 
ஒய்வு பெற்றவர்கள் பெற முடியும். 
இதன் மூலம் தியாகிகள் எண்ணிக்கையையும் 
உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளது.
அதிகாரிகள் சங்கங்களுக்கான 
புதிய அங்கீகார விதிகள் 

அதிகாரிகள் சங்கங்களுக்கான புதிய அங்கீகார விதிகளை உருவாக்க குழு அமைக்கப்பட்டு அந்த குழு தனது பரிந்துரைகளை தந்துள்ளது.
 புதிய அங்கீகார விதிகளுக்கான நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  அதன் மீதான கருத்துக்களை அதிகாரிகள் சங்கங்கள் 31/08/2013க்குள் தெரிவிக்க வேண்டும்.

நகல் அறிக்கையில் சில..
  • 3 ஆண்டுக்கொரு முறை தேர்தல் நடைபெறும்.
  • தேர்தல் CHECK OFF முறையில் சந்தா பிடித்தத்தின் மூலம் நடைபெறும்.
  • 35 சதம் அல்லது அதற்கு மேல் வாக்கு பெற்ற சங்கம் முதன்மைச்சங்கமாகவும், 15 சதத்திற்கு மேல் வாக்கு பெற்ற சங்கம் இரண்டாவது SUPPORTIVE அமைப்பாகவும் அங்கீகரிக்கப்படும்.
  • ஓய்வு பெற்றவர்கள் பதவியில் இருக்க முடியாது.
  • ஒருவர் இரண்டு அமைப்புக்களில் /சங்கங்களில் பதவியில் இருக்க முடியாது.
  • தலைவர்,உதவித்தலைவர்,செயலர்,உதவிச்செயலர் மற்றும் பொருளர் பதவிகளில் 4 முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது. 
  • செயலர்,உதவிசெயலர் மற்றும் பொருளர் பதவிகளுக்கு மாற்றல் வசதி உண்டு.
  • அகில இந்திய அளவில் 15 நிர்வாகிகளும், மாநிலத்தில் 9 நிர்வாகிகளும்,மாவட்ட மட்டத்தில் 4 நிர்வாகிகளும் இருக்க வேண்டும்.
  • தங்கள் சங்கத்தின் பத்திரிகை,இணையதளம் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும்.

Tuesday 20 August 2013

ஆகஸ்ட் -21
தோழர். ஜீவா பிறந்தநாள் 

பொதுவுடைமை இவனைப் பெற்றது..
சுயமரியாதை இவனோடு உற்றது...
இலக்கியம் இவனுக்குப் பிறந்தது... 
நேர்மை  இவனிடம் நிறையவே கற்றது..
எளிமை இவனிடம் தோற்றது..
வறுமை வளமாக  இவனோடு வாழ்ந்தது..

பாரதியை உயிர்ப்பித்தான்..
தாய்த்தமிழை தாலாட்டினான்..

இவன்..எழுத்தில் கணல்..
அதை  படிப்போர் இதயம் சுடு மணல்..
இவன் பேச்சில் அனல்.. 
அதை கேட்போர் நெஞ்சு கொதிக்கும் தணல்..

செங்கொடி வீசுமட்டும்..
செம்மொழி வாழுமட்டும்.. 
நிலைத்திருக்கும் இவன் புகழ்..

Sunday 18 August 2013

நுகர்வோர் விலைவாசிக்குறியீட்டெண் 
CONSUMER PRICE INDEX 

வெங்காய விலை 500 சதம் ஏறி விட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA 90 சதமும் 
பொதுத்துறை ஊழியர்களுக்கு DA 78.9 சதமும் உயர்ந்துள்ளது. 

CPI-IW ன் அடிப்படை ஆண்டாக 2001=100 புள்ளிகள் என்று  உள்ளது.
(Base year of the CPI-IW SERIES )
தற்போது அடிப்படை ஆண்டாக 2013-14=100 புள்ளிகள் என்று 
மாற்றம் செய்திட மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊழியரின் DA உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் 
என அரசு கருதுகின்றது.

வெங்காயத்தின் விலையைக் குறைக்க முடியாத
வெங்காயங்கள்
ஊழியரின் DA - விலைவாசிப்படியைக் 
குறைக்க முயலுகின்றனர்.
ஆகஸ்ட் 19 
உலக மனித நேய தினம் 
பெற்றவருக்கு "தண்ணி" காட்டும் உலகத்திலே..
மற்றோருக்கு தாகம் தீர்க்க 
தண்ணீர் தரும் தன் நீர் தரும் 
மனித நேயம் மதிப்போம்..
மனித நேயம் வளர்ப்போம்..
மனிதராய் வாழ்வோம்..
படம் சொல்லும் செய்தி பாடமாகட்டும்..

Friday 16 August 2013


இளையவர்களுக்கு 78.2 
மூத்தவர்களுக்கு 111

78.2 சத IDA இணைப்பு என்பது 10/06/2013 தேதியில்  
இருந்து மட்டுமே அமுல்படுத்தப்பட்டுள்ளதால் 
01/01/2007ல் இருந்து 09/06/2013 வரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு
  78.2 சத IDA இணைப்பு வழங்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என BSNL நிர்வாகம் DOT க்கு பதில் அளித்துள்ளது.

உரிய வாதங்களும் உரத்த குரலும் எழுப்பப்படாமல் 78.2 நமது 
மூத்த குடிமக்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. 
குறைந்த பட்சம் உடன்பாடு கையெழுத்தான 12/06/2012ல் இருந்தாவது ஓய்வு பெற்றவர்களுக்கு  78.2 உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டியது BSNL நிர்வாகத்தின் கடமையாகும்.

Thursday 15 August 2013

பணி சிறந்திட வாழ்த்துக்கள் 
=====================================================================================
                   காரைக்குடி மாவட்ட ஒப்பந்த ஊழியர் சங்கம் 
புதிய நிர்வாகிகள் 

மாவட்டத்தலைவர்     : தோழர். கருப்பையா, CLR, காரைக்குடி 
மாவட்டச்செயலர்        : தோழர். இராமசாமி, TM(RETD) பரமக்குடி 
மாவட்டப் பொருளர்    : தோழர். மணிகண்டன், CLR, தேவகோட்டை 
=======================================================================================
பரமக்குடி NFTE  கிளைச்சங்கம் 
புதிய நிர்வாகிகள் 

தலைவர்     : தோழர். முருகேசன், SSS  பரமக்குடி 
செயலர்        : தோழர். தமிழரசன் , TM பரமக்குடி 
பொருளர்     : தோழர். நாகநாதன், STS பரமக்குடி 
===========================================================
தேவகோட்டை NFTE கிளைச்சங்கம் 
புதிய நிர்வாகிகள் 

தலைவர்     : தோழர். பன்னீர்செல்வம், TSO தேவகோட்டை
செயலர்        : தோழர். பாலமுருகன், TTA , தேவகோட்டை 
பொருளர்    : தோழர். சேவியர், TM, தேவகோட்டை
============================================================
காரைக்குடி  NFTE புறநகர்க்கிளைச்சங்கம் 
புதிய நிர்வாகிகள் 

தலைவர்     : தோழர். ஆறுமுகம், TTA ,காரைக்குடி 
செயலர்        : தோழர். ஆரோக்கியதாஸ்  , TM காரைக்குடி 
பொருளர்     : தோழர். சுப்பையா, TM, காரைக்குடி 
===========================================================
காரைக்குடி NFTE GM அலுவலக கிளைச்சங்கம் 
புதிய நிர்வாகிகள் 

தலைவர்     : தோழர். சுந்தர்ராஜன் , CTS , காரைக்குடி
செயலர்        : தோழர். சுபேதார் அலிகான், SR.TOA, காரைக்குடி  
பொருளர்     :  தோழியர். கார்த்திகா, TTA, காரைக்குடி 
===========================================================
புதிய மாவட்ட சங்க நிர்வாகிகள் 
மாவட்ட உதவி செயலர்  தோழர். லால்பகதூர், TM, காரைக்குடி 
மாவட்ட அமைப்புசெயலர் : தோழர்.தியாகராஜன் TM, பரமக்குடி 
===========================================================

Wednesday 14 August 2013

விடுதலைத்திருநாள் 
நல்வாழ்த்துக்கள் 


உயிர் ஈந்து பெற்ற விடுதலையை 
உயிர் கொடுத்தும் காப்போம்..

அந்நிய  மூலதனம் தடுப்போம்..
அடிமை மூடத்தனம் எதிர்ப்போம் 

அனைவருக்கும் 
ஆனந்த விடுதலைத்திருநாள்
நல்  வாழ்த்துக்கள்..

Monday 12 August 2013

செய்திள் 

ONGC நிறுவனம் 15 ஆண்டு சேவை முடித்த 40 வயதைக்கடந்த ஊழியர்களுக்கு விருப்ப ஒய்வுத்திட்டத்தை அறிவித்துள்ளது. முழு உடல்திறனோடு பணிபுரிய இயலாதவர்கள் மருத்துவ அடிப்படையில் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை பணிபுரிந்த ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 60 நாள் சம்பளம் அல்லது மிச்சமிருக்கும் சேவைக்காலத்திற்கான சம்பளம் இதில் எது குறைவோ அது விருப்ப ஒய்வு பலனாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வருமான வரி திருப்புத்தொகை (INCOME TAX REFUND ) மூலம் BSNL நிறுவனம் இந்த ஆண்டு  எறத்தாழ ரூ. 8100 கோடி அளவிற்கு தனது நட்டத்தைக்குறைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஜூலை 2015க்குள் இராணுவத்திற்கான  வலைப்பின்னலை BSNL நிறுவனம் செய்து முடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

உலகளாவிய தொலைதொடர்பு சேவைக்காக BSNL நிறுவனம் பங்களாதேஷிடம் 100 gigabytes of international bandwidth குத்தகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. இதனால் பிற உலக நாடுகளின் தொடர்புக்காக TATA நிறுவனத்தை முழுவதும் நம்பியுள்ள நிலை மாறும்.

01/10/2000 அன்று TTA  தோழர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்ட முறை அதிக ஏற்றத்தாழ்வுகளை உண்டு பண்ணியதால் புதிய முறையில் மறு நிர்ணயம் செய்ய மத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய சங்க செயற்குழு செப்டம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் நடைபெறும்

நாலு கட்டப்பதவி உயர்வில் மத்திய சங்கம்
கீழ்க்கண்ட மாற்றங்களைக் கோரியுள்ளது.

அதிகாரிகளுக்கு இணையான பதவி உயர்வு 
SC/ST தோழர்களுக்கு உரிய சலுகை 
தேக்க நிலை அடையும் RM/GRD தோழர்களுக்கு மாற்று வழி.
CR குறிப்பில் AVERAGE பதிவுகளை புறந்தள்ளி பதவி உயர்வு அளித்தல்.
01/10/2000ல் 7100 சம்பளத்திற்கு மேல்நிலைப்படுத்தபட்ட TTA தோழர்களுக்கு அதனை முதல்கட்ட பதவி உயர்வாக எடுக்க கூடாது.

Sunday 11 August 2013

ஆகஸ்ட் - 12
உலக இளைஞர் தினம் 

சில்லென்ற பீரில் நனைந்து.. 
சிகரெட் புகையில் கலந்து.. 
சினிமா கனவில் தொலைந்து.. 
மொபைல் போனில் அலைந்து.. 
வலைத்தளத்தில் நுழைந்து.. 
வாழ்வைத் தொலைக்கும்.. 
இன்றைய இந்திய இளைஞனே ..

உலக விடுதலைக்காக..
தான் பிறந்த நாட்டிற்காக.. 
உயிரை துச்சமாக்கி..
பெயரை மட்டுமே மிச்சமாக்கி..
வாழ்ந்து மறைந்த இளைஞர்களை 
உனக்குத்தெரியுமா?..

இளமை வேகத்தின் தந்தை.. 
தியாகத்தின் குழந்தை..
இளைஞனே ..
வாழ்வு தாழ்வுற்ற உன் சக மனிதனுக்காக 
உலகம் சமநிலை பெறும் நாளுக்காக 
வேகமாய் செயல்படு..
தியாகமாய் வளர்ந்திடு..

Thursday 8 August 2013


புனித ரமலான் வாழ்த்துக்கள் 


மதம் வளர்ப்போம்..
எம்மதமும் நம்மதம் என்னும்.. 
சம்மதம் வளர்ப்போம்..
அன்பை வளர்ப்போம்..
அமைதி வளர்ப்போம்...
அனைவருக்கும் 
 இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்..

Tuesday 6 August 2013

NFTE 
பரமக்குடியில் பெருவிழா..

கிளை மாநாடு 
மாவட்ட செயற்குழு 
தோழர். இராமசாமி மற்றும் தோழர்களின் 
பணி நிறைவு பாராட்டுவிழா 
மற்றும் 
ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாடு 
========================================================================
14/08/2013 - புதன்கிழமை - காலை 10 மணி 
மிளகாய் வியாபாரிகள் சங்கம் - 
இரயில் நிலையம் எதிரில் - பரமக்குடி 
========================================================================
தலைமை : தோழர். முருகேசன் 
வரவேற்புரை: தோழர். கணேசன் 

பணிநிறைவு பாராட்டு பெறுவோர்: தோழர்கள் 
P. இராமசாமி - முன்னாள் மாநில உதவித்தலைவர் மற்றும் கிளைச்செயலர் 
K. இராமலிங்கம் - TM
P. நயினான் - STS 
V. ஞானசுந்தரி - TM


பங்கேற்பு : தோழர்கள் 
S. முருகன் - மாவட்ட உதவிச்செயலர் 
G . சுபேதார் அலிகான் - NFTE  மாநில இளைஞர் அமைப்பு 
P. முருகன் - மாவட்டச்செயலர் - ஒய்வூதியர் சங்கம்
B. லால் பகதூர் - மாவட்டச்செயலர் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
P. செல்லப்பா - SNATTA  மாவட்டச்செயலர் 
V. மாரி, மாவட்டச்செயலர்
N. நாகேஸ்வரன் - மாவட்டத்தலைவர்  
 மற்றும் முன்னணித்தோழர்கள்.

-:சிறப்புரை :-
தோழர்.K. சேது - சிறப்பு அழைப்பாளர் 
தோழர் N.சேகரன்மாநில பொறுப்பாளர் - கலைஇலக்கியப்பெருமன்றம் 
தோழர் S. தமிழ்மணி -மாநிலச்செயலர் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
தோழர். R. பட்டாபிராமன் - மாநிலச்செயலர்  

தோழர்களே வருக..
அன்புடன் அழைக்கும் 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
பரமக்குடி கிளை மற்றும் மாவட்டச்சங்கம் 

Monday 5 August 2013

டெல்லியில்.. மாநிலச்செயலர்..

ஆகஸ்ட் 3 கருத்தரங்கிற்காக டெல்லி சென்றுள்ள நமது மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி மற்றும் அகில இந்திய அமைப்புச்செயலர் 
தோழர். கோபாலகிருஷ்ணன் மத்திய சங்கத்தலைவர்களுடன் இணைந்து BSNL மற்றும் DOT யின் உயர் அதிகாரிகளை சந்தித்து 
பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளனர். 
அவற்றில் சில..
  1. ஜூலை  2012 வரையிலான  கருணை அடிப்படை வேலைக்கு ஏறத்தாழ   300 விண்ணப்பதாரர்களுக்கு BSNL நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டாவது ஊதியக்குழுவிற்கு பின் பணிக்கொடை மற்றும்  குடும்ப ஓய்வூதிய பலன்கள் கூடியுள்ளதால்  ஏற்கனவே உள்ள கருணை அடிப்படை வேலைக்கான அளவீடுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
  2. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான 78.2 சத IDA இணைப்பை வழங்க கோரிக்கை விடப்பட்டது. இது சம்பந்தமாக BSNL நிர்வாகத்திடம் DOT சில கேள்விகளை எழுப்பியுள்ளது. தக்க பதில் கிடைத்த பின்பு இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று DOT தரப்பில் கூறப்பட்டுள்ளது.
  3. 78.2 சத IDA இணைப்பில் RM மற்றும்  GR'D தோழர்களுக்கு STAGNATION தேக்கநிலை வந்துவிட்டதால் அவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை விடப்பட்டது. பாதிக்கப்பட்டோரின் நிலையை உரிய உதாரணத்துடன் (with examples) விளக்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
  4. BSNL சீரமைப்பு சம்பந்தமாக மந்திரிகள் குழுவிடம் அளிக்கப்பட்ட நமது கோரிக்கை பற்றி நீண்ட அளவில் விவாதம் நடத்தப்பட்டது.

Sunday 4 August 2013

WORKS COMMITTEE
காரைக்குடி மாவட்ட பணிக்குழு 

காரைக்குடி  மாவட்டத்தில் works committee உருவாக்கம் செய்யப்பட்டு 07/08/2013 அன்று கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
NFTE சார்பாக கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக செயல்படுவர்.

சிவகங்கை மாவட்டம் 
1. N. பாலமுருகன் - TTA -  UDAAN - தேவகோட்டை
2. B. முருகன் - TM - INDOOR - சிவகங்கை 
3. T. அல்போன்ஸ் -TM - OUTDOOR - திருப்பத்தூர் 

இராமநாதபுரம் மாவட்டம் 
1. K. காளிமுத்து - TTA -NWOP - இராமநாதபுரம் 
2. B. இராஜன் - TM - OUTDOOR -இராமேஸ்வரம்
3. S. தியாகராஜன் - TM - SALES - பரமக்குடி 

குழுவின் தலைவராக (Team Leader of  NFTE
தோழர். பாலமுருகன் TTA செயல்படுவார் .
Works committeeஐ பயனுள்ளதாக ஆக்கவேண்டும். ஆக்கபூர்வமான பணிகளை ஆலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் வேண்டுகோள் ஆகும்.
ஊழியர்களும் நிர்வாகமும் இதை உணர்ந்து பணிக்குழுவை 
பயனுள்ள குழுவாக செயல்படுத்திட நமது வாழ்த்துக்கள். 

Saturday 3 August 2013

காலத்தே நடைபெற்ற கருத்தரங்கம்

ஆகஸ்ட் 3 அன்று டெல்லியில் அனைத்து சங்கங்கள் சார்பாக BSNL சீரமைப்புக்கருத்தரங்கம் தோழர்.C.சிங் தலைமையில் சிறப்புடன்  
நடைபெற்றது. தோழர். குருதாஸ் தாஸ் குப்தா உள்ளிட்ட மத்திய சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

  மிகுந்த வருமானமும்,லாபமும், வங்கி இருப்பும் கொண்டு  பொதுத்துறையில் பொன்முட்டையிடும் வாத்தாக விளங்கிய BSNL நிறுவனத்தை திட்டமிட்டு கழுத்தறுத்த அரசின் தவறான முடிவுகளும் கொள்கைகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. 

  • BSNL உருவாக்கத்தின் போது நிதி ஆதார மேம்பாட்டிற்காக  அரசு அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டது..
  • விலை போகாத SPECTRUM விலையாக 18500 கோடியை BSNL நிறுவனத்திடம் இருந்து அபகரித்து BSNL இருப்பைக் காலி  செய்தது..
  • உபகரணங்கள் மற்றும் கருவிகள் வாங்கும் நடைமுறையை இழுத்தடித்து BSNLன் வளர்ச்சியைத்தடுத்தது 
  • திறமையும் நேர்மையும் ஆற்றலும் அற்ற ITS அதிகாரிகளை BSNLக்கு தலைமை தாங்க வைத்து BSNL நிறுவனத்தை நொடிக்க வைத்தது..

போன்ற மிக முக்கிய பிரச்சினைகள்
விவாதிக்கப்பட்டன.  தொலைத்தொடர்பில் 100 சதம் அந்நிய முதலீடு என்று அரசு அறிவித்திருக்கும் நிலையில் இந்த அரசின் பொதுத்துறை விரோத போக்கை BSNL நிறுவனத்தை திட்டமிட்டே வீழ்த்திடும் கயமையை கருத்தரங்கங்கள் மூலமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்ட மட்டங்களில் ஊழியர்களிடமும் மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என கருத்தரங்கம் வழிகாட்டியுள்ளது.

கருத்தரங்க வழி காட்டுதலை 
கருத்துடன் கேட்டிடுவோம்..
காலத்தே செயல்படுத்துவோம்.. தோழர்களே..

Friday 2 August 2013

செய்திகள் 

இன்று 03/08/2013 டெல்லியில் 
BSNL  சீரமைப்பு பற்றி அனைத்து தொழிற்சங்க கருத்தரங்கம் . 
தமிழகத்தில் இருந்து மாநிலச்செயலர் மற்றும் தோழர்கள் பங்கேற்பு.

சென்ற ஆண்டிற்கான வருமான வரியை ஏற்கனவே செலுத்தியவர்கள் வருமான வரித்தாக்கலை 31/03/2014 வரையிலும் செலுத்தலாம். 
எனவே தோழர்கள் அவசரமின்றி வருமான வரித்தாக்கல் செய்யலாம்.
வரி செலுத்தாதவர்களும்,  பாக்கி வரி வைத்துள்ளவர்களும்,
கூடுதலாக வரி கட்டி வருமான வரி REFUND கேட்பவர்களும் 
உடனடியாக வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும். 

ஆகஸ்ட் 1 அன்று கூடிய 
 மத்திய மந்திரிகள் அடங்கிய BSNL சீரமைப்புக்குழு 
MTNL ஓய்வூதிய பிரச்சினை பற்றி மட்டுமே விவாதித்துள்ளது.

01/01/2007க்குப்பின் பணிக்கு வந்த TTA  தோழர்களின் ஊதிய இழப்பை ஈடுகட்ட மத்திய சங்கம் BSNL நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

பல்வேறு பகுதி எதிர்ப்புக்களையும் மீறி தொலைதொடர்பில் 
100 சத அந்நிய முதலீட்டிற்கு அரசு அனுமதி.

LIC ஆயுள் காப்பீட்டுத்துறையில் 49 சத அந்நிய முதலீட்டிற்கு அரசு முயற்சி. 2008ல் இருந்து டெல்லி மேலவையில் இந்த மசோதா 
கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.