மார்ச் - 8
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
வளைக்கரங்கள்...
வளையா
கரங்களாகட்டும்...
உழைக்கும்
கரங்கள்...
உயர்வு
கொள்ளட்டும்...
அனைவருக்கும்...
புரட்சிகர...
உலக மகளிர்தின...
நல்வாழ்த்துக்கள்...
போராட்ட அறிவிப்பும்...
பேச்சுவார்த்தையும்...
இராமேஸ்வரம் மாவட்டச் செயற்குழு முடிவின்படி தேங்கிக்கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள் தீர்விற்காக 03/03/2022 அன்று காரைக்குடி துணைப்பொதுமேலாளர் அலுவலகத்தில் கோரிக்கை முழக்க தர்ணாப் போராட்டம் நடத்திட நிர்வாகத்திற்கு
போராட்ட அறிவிப்பு செய்திருந்தோம்.
அதனையொட்டி...
மாநிலச்சங்கத் தலையீட்டின் பேரிலும்...
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரிலும்...
காரைக்குடி துணைப்பொதுமேலாளர் அவர்கள் நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.
01/03/2022 அன்று காரைக்குடியில் துணைப்பொதுமேலாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நிர்வாகத்தின் சார்பில் துணைப்பொதுமேலாளர், காரைக்குடி மற்றும் இராமநாதபுரம் கோட்டப்பொறியாளர்கள், துணைக்கோட்ட அதிகாரி இயக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
NFTE சங்கத்தின் சார்பில்...
மாநில உதவித்தலைவர் தோழர் சுப்பிரமணியன்,
மாநில அமைப்புச்செயலர் தோழர் சுபேதார் அலிகான்,
மாவட்டச்செயலர் தோழர் முருகன்,
ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச்செயலர் தோழர் மோகன்,
சிவகங்கை மாவட்டக்கிளைச்செயலர் தோழர் ஆரோக்கியதாஸ்,
இராமநாதபுரம் மாவட்டக் கிளைப்பொருளர் தோழர் முருகேசன் மற்றும் தோழர் மாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓராண்டு காலமாக சம்பளம் வராத ஒப்பந்த ஊழியர் பிரச்சினை முதல் நிரந்தர ஊழியர்களின் பிரச்சினைகள், மாற்றல்கள், பதவி உயர்வு பிரச்சினைகள் மற்றும் சேதமடைந்து வரும் BSNL சேவை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டன.
அனைத்துப் பிரச்சினைகளிலும் நிர்வாகம் சாதகமான அணுகுமுறையைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் பத்து நாட்களுக்குள் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று துணைப்பொதுமேலாளர் அவர்கள் உறுதியளித்தார்.
அதனடிப்படையில் 03/03/2022 அன்று நடைபெறவிருந்த தர்ணா போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகின்றது. ஆனாலும் பொதுமேலாளர் மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறிப்பாக ஒப்பந்த ஊழியர் சம்பளப்பிரச்சினை மற்றும் பல்வேறு குத்தகைப் பிரச்சினைகள் தேக்கமடைந்துள்ளன.
எனவே மதுரைப் பொதுமேலாளரின் தாமதப்போக்கை கண்டித்து மதுரை அலுவலகத்தில் நாம் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மதுரையில் நடைபெறவுள்ள நமது போராட்டம் பற்றி விரைவில் அறிவிப்பு செய்யப்படும்.
ஊழியர்கள் பிரச்சினை தீர்விற்கு உறுதுணை செய்த
காரைக்குடி துணைப்பொதுமேலாளர்,
காரைக்குடி கோட்டப்பொறியாளர்
குறிப்பாக இராமநாதபுரம் கோட்டப்பொறியாளர்
ஆகியோருக்கு நமது நன்றிகளும் வாழ்த்துக்களும்...