கச்சநாத்தம்
சொல்லக்
கொதிக்குது நெஞ்சம்…
சிவகங்கை
கச்சநத்தம் சாதிவெறிக்கொலை கண்டு..
சொல்லவே
கூசுது நெஞ்சம்…
சாதி
வெறி பிடித்த சிவகங்கை நமது மண் என்று…
சுயமரியாதை
வாழ்வே...
சுகவாழ்வு என்றார் தந்தைப்பெரியார்..
சுதந்திர
தேசத்தில் தலித் மக்கள்
சுயமரியாதையுடன்
வாழமுடியாத நிலை…
காலமெல்லாம்
அடிமைப்பட்ட மக்கள்
கால்
மேல் கால் போட்டு…
டீக்கடையில்
அமரமுடியாத கொடுமை…
ஊர்த்திருவிழாவில்
இருசக்கர வாகனத்தில்
உரசிச்சென்றவரை
“ கொஞ்சம் பார்த்துப்போகக்கூடாதா? “
என்று
கேட்டதற்காக மூன்று படுகொலைகள்…
கச்சநத்தம்
கிராமத்திலே நடந்தேறியுள்ளது.
கச்சநத்தம்
காட்டுமிராண்டித்தனத்தை…
வன்மையாகக்
கண்டிக்கின்றோம்…
கச்சநத்தம்….
சாதி
என்னும் சாக்கடையின் உச்ச நாத்தம்…