Thursday, 31 December 2020

 மாவட்டச் செயற்குழு

தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

காரைக்குடி மாவட்டம்

மாவட்டச் செயற்குழு

 -----------------------------------------------

09/01/2021 – சனிக்கிழமை – காலை 10 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி

  -----------------------------------------------

தலைமை : தோழர். பா. லால்பகதூர் – மாவட்டத்தலைவர்

வரவேற்புரை : தோழர். ம. ஆரோக்கியதாஸ் – கிளைச்செயலர்

 -----------------------------------------------

பங்கேற்பு : தோழர்கள்

பழ. இராமச்சந்திரன்AITUC துணைப்பொதுச்செயலர்

ந. நாகேஸ்வரன்AIBSNLPWA மாவட்டச்செயலர்

க. சுபேதார் அலிகான்NFTE மாநில அமைப்புச்செயலர்

ப. முருகன் TMTCLU மாவட்டச்செயலர்

வெ. மாரிNFTE மாவட்டச்செயலர்

 -----------------------------------------------

ஆய்படு பொருள்

கிளை மற்றும் மாவட்ட மாநாடுகள்

OUTSOURCING அவலங்கள்...

ஆணவக்காரர்களின் அவதூறு...

ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்...

மதுரை மற்றும் சென்னை சொசைட்டிப் பிரச்சினைகள்...

தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகளுக்காக போராட்ட முடிவு...

இராமேஸ்வரம் SDEயின் BSNL மற்றும் தொழிலாளர் விரோதப்போக்கு...

 தேங்கிக்கிடக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகள்

தாமதிக்கப்படும் தோழியர். பாண்டியம்மாள் OS மாற்றல்...

நீண்ட நாளைய விருப்ப மாற்றல்கள்...

கொரோனா காலத்திற்கு விடுப்பு கோரும் கொடுமை...

VRS தோழர்களுக்கு விடுபட்ட பதவி உயர்வுகள்...

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியப் பிரச்சினைகள்...

பதவி உயர்வு சம்பள நிர்ணயப் பிரச்சினைகள்...

HBA வீட்டுக்கடன் பத்திரப் பிரச்சினைகள்...

நலத்திட்டங்களைப் புறந்தள்ளி வட்டிக்கு விடப்படும் சேமநல நிதி...

  -----------------------------------------------

கிளைச்செயலர்கள் மற்றும் 
செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவும்.

அன்புடன் அழைக்கும்

காரைக்குடி மாவட்டச்சங்கம்.

 

நல்லறம் மலரட்டும்... 

2020ல் இந்தியா வல்லரசு...

கனவு கண்டார் கலாம்....

அது கனவாகவேப் போனது....

இந்திய தேசத்தில் இன்று...

உழுதவன் அழுகிறான்...

உழைத்தவன் வாடுகிறான்...

2021ல்...

நல்லறம் மலரட்டும்...

நல்வாழ்வு கிடைக்கட்டும்...

அனைவருக்கும்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Saturday, 26 December 2020

 தேய்ந்து வரும் அகன்ற அலைவரிசை சேவை 

BSNL   கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 

50,000 BROAD BAND அகன்ற அலைவரிசை

சந்தாதாரர்களை இழந்ததுள்ளதாக 

இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான

TRAIன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் அந்த அறிக்கை...

AIRTEL மற்றும் JIO நிறுவனங்கள் புதிய  கூடுதல் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளதாகவும் கூறுகிறது.  AIRTEL EXTREME FIBRE சேவையின் பயனர் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் 2.6 மில்லியனிலிருந்து அக்டோபரில் 2.67 மில்லியனாக அதிகரித்துள்ளது.

ஆனால்  BSNL  BROAD BAND  சந்தாதாரர்களின் எண்ணிக்கையானது கடந்த செப்டம்பர் இறுதியில் 7.8 மில்லியனிலிருந்து அக்டோபர் இறுதியில் 7.75 மில்லியனாகக் குறைந்துள்ளது.  அதாவது 50,000 சந்தாதார்களை BSNL இழந்துள்ளது.

அம்பானி தலைமையிலான JIO  நிறுவனம் வயர்லெஸ் பிராட்பேண்ட் பிரிவில் 406.36 மில்லியன் சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் 167.56 மில்லியன் சந்தாதாரர்களுடன் இரண்டாவது இடத்திலும்,

வோடபோன் ஐடியா 120.49 மில்லியன் சந்தாதாரர்களுடன் மூன்றாவது இடத்திலும்,

பிஎஸ்என்எல் 18.12 மில்லியன் சந்தாதாரர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளது.

WIRED AND WIRELESS  சந்தைப் பங்குகளை பொறுத்தவரை,

JIO ஜியோ அதிக அளவிலான 55.85 சத சந்தைப் பங்கை கொண்டுள்ளது.

AIRTEL 22.86 சதவீத சந்தைப் பங்கோடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

VODOFONE IDEA 16.5 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.

அரசு நிறுவனமான BSNL  3.42 சதவீதத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

(இணைய செய்தி)

Tuesday, 22 December 2020

 வழிகாட்டிய ஒளிவிளக்கு... 

டிசம்பர் – 23

அருமைத்தோழர். வெங்கடேசன்

நினைவு தினம்

 --------------------------------------------

அன்புக்கும் தோழமைக்கும் இலக்கணமானாய்...

அறிவுக்கும் ஆற்றலுக்கும் அடையாளமானாய்...

இருள் சூழ்ந்த பாதையில் கைவிளக்கானாய்...

கடல் சூழ்ந்த பயணத்தில் கலங்கரை விளக்கானாய்...

சுயநலம் பூண்ட  உலகில் பொதுநலம் போற்றினாய்...

பிறர் நலம் பேணி எளியோருக்கு சொந்தமானாய்...

காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...

என்றும் உன் நினைவுகள் மாறாது...

அன்பு மாறா நினைவுகளுடன்....

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்.

 --------------------------------------------

புகழஞ்சலிக்கூட்டம்

23/12/2020 – புதன்கிழமை – மாலை 05.30 மணி

NFTE    சங்க அலுவலகம் – காரைக்குடி

தோழர்களே... வாரீர்...

Thursday, 17 December 2020

 டிசம்பர் 17

ஓய்வூதியர்கள் தினம்

டிசம்பர் 17

ஓய்வூதியம்...

உழைத்தவனின் உரிமை என்று

உரக்க சொல்லப்பட்ட நாள்...

ஓய்வூதியர் சிரம் நிமிர வைத்த

தலைவர்களுக்கு வணக்கங்கள்...

தொலைத்தொடர்பு ஊழியர்களின்

ஓய்வூதியம் காத்து நின்ற காவல் தெய்வம்

ஓ.பி.குப்தா புகழ் என்றும் ஓங்குக...

Monday, 14 December 2020

இரங்கல்

NFTE மாநிலத்தலைவர் 

அருமைத்தோழர். காமராஜ் 

அவர்களின் அன்புத்தாயார் 

திருமதி. ஆனந்தம் அம்மாள் 

அவர்கள் 13/12/2020 அன்று இயற்கை எய்தினார்.

 தாயினும் சிறந்த உறவில்லை. 

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

Friday, 11 December 2020

நம்மைப் பிடித்த பிசாசுகள் போகட்டும்..


டிசம்பர் 11

மகாகவி பாரதி

பிறந்த நாள்

-------------------------------------- 

உழவுக்கும் தொழிலுக்கும்

வந்தனை செய்வோம்...

வீணில் உண்டு களித்திருப்போரை

நிந்தனை செய்வோம்...

-------------------------------------- 

கம்பெடு... தடியெடு...

நம்மைப் பிடித்த பிசாசுகள் போகட்டும்...

நன்மைகள் பெருகட்டும்...

ஓங்குக....

மகாகவியின் மங்காப் புகழ்.....

Sunday, 6 December 2020

கருப்பு  அட்டை அணியும் 

போராட்டம் 

நிலத்தில் கால் வைக்கும் விவசாயியை

இன்று களத்தில் கால் வைக்கும்

கோலத்திற்கு ஆளாக்கிய

சர்வாதிகார அரசை எதிர்த்து

08/12/2020 – செவ்வாய்க்கிழமை

நாடு முழுவதும் நடைபெறும்

பாரத் பந்த்

போராட்டத்திற்கு ஆதரவாக

NFTE 

கருப்பு அட்டை 

அணியும் போராட்டம்...

பயிர்கள் சாவதோ?

களைகள் வாழ்வதோ? 

வீறு கொண்டு

வீதியில் இறங்கிப் போராடும்

விவசாயிகளுக்கு ஆதரவாக

07/12/2020 – திங்கள்

NFTE தமிழகம் தழுவிய

ஆர்ப்பாட்டம்

Friday, 4 December 2020

 NFTE

தமிழ் மாநில

இணையவழி செயற்குழு

 ஜெகன் கலை இலக்கியப்பெருமன்றம்

அண்ணல் அம்பேத்கார் 

நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி

 
தோழர்களே..

இணையில்லாத் தலைவனின்....

இணையவழி புகழஞ்சலி நிகழ்வில்...

பங்கேற்பீர்...

 டிசம்பர் - 6 - 

அண்ணல் அம்பேத்கார்

நினைவு தினம்


உழவர்களை... தொழிலாளர்களை உயர்த்தாமல்

ஒரு தேசம்  ஒரு போதும் முன்னேறாது.

 ----------------------------------------

அம்பேத்கார் சிலைக்கு மாலையணிவிப்பு

 ----------------------------------------

06/12/2020 – ஞாயிறு – காலை 08 மணி

செக்காலை ரோடு

அண்ணல் அம்பேத்கார் சிலை – காரைக்குடி.

தோழர்களே... வருக...

Thursday, 3 December 2020

 ஆழ்ந்த இரங்கல் 

காரைக்குடி மாவட்டத்தின் முன்னணித் தொழிற்சங்கத்தலைவர் 

தோழர்.பூபதி அவர்களின் துணைவியார் 

தோழியர். இராமலதா 

அவர்கள் இன்று 03/12/2020 திருச்சியில் 

உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். 

காதல் மணம் புரிந்த  இராமலதா – பூபதி இணையர் ஒரு எடுத்துக்காட்டான வாழ்வினை வாழ்ந்து காட்டியவர்கள். 

தோழியர் இராமலதா மிகுந்த அமைதியும் அன்பும்

 சங்கத்தில் பிடிப்பும் மிக்கவர். நீண்ட வருடங்களுக்கு முன்பாகவே 

விருப்ப ஓய்வில் பணிநிறைவு பெற்றவர். 

அவரது மறைவிற்கு நமது ஆழ்ந்த 

இரங்கலை உரித்தாக்குகின்றோம்.