துப்பாக்கித்துறவி
மனித நேயமிக்க மதுரை
ஆதீனம் ...
மதவெறி தாண்டவமாடும்
இந்த தேசத்தில்..
தன் வாழ்நாள் முழுவதும்
மத நல்லிணக்கத்திற்காகப்
பாடுபட்டவர்...
இஸ்லாமியத் தலைவர்களோடு...
இணக்கம் காட்டியவர்....
தமிழ் ஈழ மக்களுக்குத் தார்மீக ஆதரவு தந்தவர்...
ஈழத்தமிழருக்கு இன்னல்
நேர்ந்தால்
எனது கழுத்தில் உள்ள
ருத்ராட்சக் கொட்டைகளும்...
வெடிகுண்டுகளாக மாறும்
என்று வீரமுழக்கமிட்டவர்...
தேசியம்.... திராவிடம்...
தமிழினம்... என்று
பன்முகத்தன்மை கொண்ட
பகுத்தறிவுவாதி...
ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல்....
நித்யானந்தா நியமனத்தில்
சற்று அடி சறுக்கினார்...
ஆயினும் அதனின்றும் எழுந்து
நின்றார்...
சைவமும் தமிழும் இரு
கண்கள் என்று
வாழ்ந்து மறைந்த மதுரை
ஆதீனம்
தவத்திரு அருணகிரிநாதர்
அவர்களின் மறைவிற்கு
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்..
No comments:
Post a Comment