Saturday, 27 November 2021

 NO QUOTATION 

தோழர் குப்தா அவர்களை

LOW QUOTATION என்று 

நமது புரட்சிகரத் தோழர்கள் அடிக்கடி

விமர்சனம் செய்வது வழக்கம். 

இன்று மூன்றாவது ஊதிய மாற்றம்

சாத்தியமில்லை என்ற நிலையில்

LOW QUOTATION கூட இல்லை

NO QUOTATION என்ற நிலைக்குப் பாவம்

தலைவர்கள் தள்ளப்பட்டு விட்டனர்.

ZERO FITMENT என்னும் பரிதாப நிலையைப்

பரிந்து பேசும் காலம் வந்து விட்டது.

 

இந்த சுழிய ஊதிய நிர்ணயம்

என்ன பலன் தரும்?

கணிதத்தில் ZERO என்பது ZEROவை மட்டுமே தரும்.

ஆனால் BSNL ஊதிய மாற்றத்தில்

ZERO என்பது MINUS என்னும் நட்டத்தைத் தரும்.

 

ஒரு எடுத்துக்காட்டு பார்க்கலாம்.

காரைக்குடி NFTE மாவட்டத்தலைவர்

தோழர் சுப்பிரமணியன் TT அவர்கள்

01/01/2017 அன்று

ரூ.19870/= அடிப்படைச்சம்பளம் பெற்றுள்ளார்.

 

ZERO FITMENT கணக்கீட்டின்படி

01/01/2017  தேதிய IDA 119.5 சதம்.

மொத்தச்சம்பளம் =

ரூ.19870 + IDA 23745 = Rs.43615/= ஆகும்.

 

எனவே ஊதியப் பலன்கள் இன்றி ZEROவில்

அவரது புதிய அடிப்படைச்சம்பளம்

ரூ.43,620/= ஆகும்.

அவரது ஆண்டு உயர்வுத்தேதி அக்டோபர் மாதம்.

எனவே அக்டோபர் 2017 அன்று

புதிய அடிப்படைச்சம்பளம் ரூ.44,930/=ஆகும்.

அக்டோபர் 2021ல்

அவரது அடிப்படைச்சம்பளம் ரூ.50,570/= ஆகும்.

 

இம்மாதம் பழைய அடிப்படைச்சம்பளத்தில்

அவர் பெறும் மொத்தச்சம்பளம் =

ரூ.23770 + IDA 42620 = Rs.66,390/= 

ஆனால்...

ZERO கணக்கீட்டில் அவருக்கு கிடைப்பது

ரூ.50570 + IDA 13755 = Rs.64,325/= 

2017 கணக்கீட்டில் 

அக்டோபர் 2021 மாத  IDA 27.2 சதம் ஆகும்.

தோழர் சுப்பிரமணிக்கு நட்டம்  

ரூ.66390 – 64325 = ரூ.2065/=

இந்த நட்டத்தைச் சந்திக்கவா ஒரு ஊதிய நிர்ணயம்?

 

ரூ.2065 மொத்தச்சம்பளம் குறைந்த பின்பு

அவரது ஓய்வு நாளில் விடுப்புச்சம்பளம் எப்படி கூடும்?

அவரது பணிக்கொடை எப்படி கூடும்?

அவரது ஓய்வூதியம் எப்படி கூடும்?

திருப்பி பிடிக்கப்பட வேண்டிய

COMMUTATION என்னும்

கடன்தொகை மட்டுமே கூடும். 

இன்றைய கையறு நிலையில்

தேக்கநிலை போன்ற இழப்புக்களை

ZERO சரிக்கட்டும் என்ற நம்பிக்கை மட்டுமே

தலைவர்களிடம் உள்ளது.

 

BSNL ஆரம்பிக்கப்பட்டவுடன்

LOW QUOTATION குப்தா

ரூ.1000 முன்பணமும்

குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.1500/= என்றும்

ஊழியர்களுக்குப் பெற்றுத் தந்தார். 

ஆனால் இன்றோ அவர் வாங்கித் தந்த

ஊதியமே பறிபோகும் அவலம். 


SOMETHING  IS  BETTER  THAN  NOTHING...

NOTHING  IS  BETTER  THAN  NON-SENSE...

என்பது பழமொழி.....

Thursday, 25 November 2021

 அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்

நவம்பர் – 26

நாடு தழுவிய 

கண்டன ஆர்ப்பாட்டம்

--------------------------------------

26/11/2021 – வெள்ளி – காலை 10 மணி

தலைமை தபால் நிலையம் – மதுரை

--------------------------------------

கோரிக்கைகள்

மத்திய அரசே....

பொதுத்துறைகளைத் தனியார்மயம் ஆக்காதே...

பொதுத்துறை சொத்துக்களை விற்காதே...

புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கைவிடு...

பெகாசஸ் உளவு சம்பந்தமாக நீதி விசாரணை நடத்திடு...

100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திடு...

தொழிலாளர் சட்டத்திருத்தங்களைத் திரும்ப பெறு...

கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு வாரியங்களை சீர்குலைக்காதே...

அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு

குறைந்தபட்ச கூலி வழங்கு...

--------------------------------------

தோழர்களே... வாரீர்....

Tuesday, 23 November 2021

DOTயுடன் சந்திப்பு

DOTயுடன் AUAB அனைத்து சங்க கூட்டம் 24/11/2021  அன்று டெல்லியில் நடைபெறுகின்றது.

12 சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றார்கள்.

கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன.

BSNLக்கு 4G  விரைவில் வழங்குவது.

4G தாமதத்தால் BSNLக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை அரசு ஈடுகட்டுவது.

BSNLக்கு DOT தரவேண்டிய ரூ.39 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்குவது.

BSNL செல்கோபுரங்கள் மற்றும் OFC வழித்தடங்களை தனியாருக்கு கொடுக்கும் அரசின் முடிவைக் கைவிடுவது.

ஓய்வூதியப்பங்களிப்பு... வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்வது.

BSNL நிலங்களை விற்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி BSNL கடன்களை அடைப்பது.

அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துதல்.

அதிகாரிகளின் E2 மற்றும் E3 சம்பள விகிதங்களை BSNL நிறுவனத்தின் பரிந்துரையின்படி மாற்றிமைத்தல்.

தோழர்களே...

DOTயுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அங்கீகாரம் என்பதைத் தாண்டி அனைத்து சங்கப்பிரதிநிதிகளும் AUAB என்ற குடையின் கீழ் அதிகாரிகள் ஊழியர்கள் என்ற பாகுபாடின்றி கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. FNTO சங்கம் அனைத்து சங்க கூட்டமைப்பில் இல்லை. ஊழியர் நலன் கருதி ஒன்றுபட்ட அமைப்பில் அவர்களும் இணைவார்கள் என்பது நமது எதிர்பார்ப்பு.

புதிய DOT செயலர் பதவியில் அமர்ந்த பிறகு ஊழியர்கள் பிரச்சினையில் சற்று அசைவு ஏற்படுகின்றது. கடந்த காலத்தில் ஊழியர் சங்கப்பிரதிநிதிகளை சந்திப்பதை DOT தவிர்த்து வந்தது.  03/12/2021 அன்று ஊதியக்குழு அடுத்த கூட்டம் நடைபெறவுள்ள சூழ்நிலையில் DOTயுடனான கூட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.

Wednesday, 17 November 2021

 நவம்பர் – 24 

NFTE சம்மேளன தினம்

இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப்படை

NFTE  சம்மேளன தின விழா

24/11/2021 – புதன் – காலை 10 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி.

------------------------------------------

சங்கம் வளர்த்த தலைவர்களும்... 

தோழர்களும் பங்கேற்பு...

--------------------------------------------

தோழர்களே... வாரீர்... வாரீர்...

Monday, 15 November 2021

 தமிழ் மாநில செயற்குழு

தமிழ் மாநில செயற்குழு

18/11/2021 – வியாழன் - காலை 09.30 மணி – திருச்சி

---------------------------------------

தலைமை : தோழர். காமராஜ் – மாநிலத்தலைவர்

---------------------------------------

ஆய்படு பொருள்

மாவட்ட மாநாடுகள்

மாநில மாநாடு

மாநில மாநாட்டு நிதி

வணிகப்பகுதி JCM இணைப்பு

AUAB  பேச்சுவார்த்தை முடிவுகள்

மற்றும் இதரப் பிரச்சினைகள்

Wednesday, 10 November 2021

 உயிர் பெற்ற ஊதியக்குழு

  

BSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்குவது தொடர்பாக நிர்வாகம் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்த பேச்சுவார்த்தைக்குழு  இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னராக 2018ல் குழு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் குழுத்தலைவர் ஓய்வு பெற்றதால் தற்போது புதிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய குழுவில் நிர்வாகத்தரப்பில் 5 அதிகாரிகளும், ஊழியர்கள் தரப்பில் BSNLEU சங்கம் சார்பாக 5 உறுப்பினர்களும், NFTE சார்பாக 3 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்குழு உறுப்பினர்கள்

நிர்வாகத்தரப்பு

திரு. R.K. கோயல் – PGM  - தலைவர்

திரு. A.K.சின்ஹா – DGM – செயலர்

திரு. P.C.பட் – Sr.GM – உறுப்பினர்

திரு. சவுரவ் தியாகி - Sr.GM – உறுப்பினர்

திருமதி. அனிதா ஜோரி - Sr.GM – உறுப்பினர்

ஊழியர் தரப்பு

BSNLEU உறுப்பினர்கள்

தோழர். அபிமன்யு

தோழர். அனிமேஷ் மித்ரா

தோழர். அசோக பாபு

தோழர். ஸ்வபன் சக்கரவர்த்தி

தோழர். சந்தோஷ் குமார்

NFTE உறுப்பினர்கள்

தோழர். சந்தேஷ்வர் சிங்

தோழர். இஸ்லாம் அகமது

தோழர். சேஷாத்திரி

தோழர்களே...

2017ல் நமது ஊதிய மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

2018ல் குழு அமைக்கப்பட்டும் எந்தப்பலனும் இல்லை.

அதன்பின் ஏற்பட்ட பல்வேறு சூழல்கள்

ஊதிய மாற்றத்தை ஒரு கனவாக மாற்றி விட்டிருந்த சூழலில்

தற்போது புதிய பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்குழு 18/11/2021 அன்று கூடி விவாதிக்கும்

என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

சுழியப்பலன் ZERO FITMENT தற்போது

நாடெங்கும் விவாதப்பொருளாகியுள்ளது.

எட்டுத்திக்கும் உள்ள தோழர்களின் எதிர்பார்ப்பு 

எட்டுத் தோழர்களின் மேல் ஏற்றிவிடப்பட்டுள்ளது.

முயற்சி முழுமையாக இருந்தால் பலன்கள் பூஜ்யமாகாது.

முயற்சி திருவினையாக்கும் என்பது வள்ளுவர் வாக்கு.

Tuesday, 9 November 2021

 அஞ்சலி 

TEPU சங்கப் பொதுச்செயலரும், தொமுச – LPF சங்கத்தலைவரும்முன்னாள் FNTO சங்கத் 

தமிழ் மாநிலச்செயலருமான 

அருமைத்தோழர். சுப்புராமன் 

அவர்களின் மறைவிற்கு நமது 

அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

அவரது மறைவையொட்டி 09/11/2021 

காலை 11 மணியளவில் மதுரை பொதுமேலாளர்

அலுவலகத்தில் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது.

அனைத்து சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்ஒன்றுபட்ட NFTE காலம் தொட்டு  TEPU சங்கத்தை தோற்றுவித்த காலம் வரை மிக நீண்ட தொழிற்சங்க அனுபவம் உள்ளவர் தோழர் சுப்புராமன்

தனது 76 வயது உலக வாழ்வில் ஏறத்தாழ 56 வருட தொழிற்சங்க அனுபவம் கொண்டவர் அவர்.  அதனாலேயே தொமுச இயக்கத்தின் அகில இந்தியத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். NFTE இயக்கத்தோடு தொடர்ந்து தோழமையுடனும் இணக்கத்துடனும் பயணம் செய்தார். உடல் நலம் குன்றிய போதும் கூட தொழிற்சங்கப் பணிகளில் தனது பங்கினைச் செலுத்தி வந்தார்

அவரது மறைவு தொழிற்சங்க இயக்கத்திற்கு மாபெரும் இழப்பு

நமது இதயம் கசிந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

Tuesday, 2 November 2021

ஒளி பரவட்டும்.... 

ஏர்முனை ஒளிரட்டும்...

நேர்முனை மிளிரட்டும்...

ஏழாண்டு இருள் விலகட்டும்...

ஏற்றம்தரும் ஒளி பரவட்டும்...

ஆதிக்க அசுரர்கள் அழியட்டும்....

சாதிக்கும் தோழர்கள் பெருகட்டும்...

அனைவருக்கும் மனங்கனிந்த

இனிய 

தீபாவளித் திருநாள்

நல்வாழ்த்துக்கள்