Friday, 25 February 2022

த ர் ணா


தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

 ----------------------------------------------------

இராமேஸ்வரம் செயற்குழு முடிவின்படி...

நாளும் சீரழியும் BSNL சேவை வீழ்ச்சி தடுத்திட...

தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகள் தீர்த்திட...

 -------------------------------------------------------- 

கோரிக்கை முழக்க 

தர்ணா

 --------------------------------------------------------

03/03/2022 – வியாழன் – காலை 10 மணி

துணைப்பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

 --------------------------------------------------------

10/03/2022 – வியாழன் – காலை 10 மணி

பொதுமேலாளர் அலுவலகம் –  மதுரை

  --------------------------------------------------------

கோரிக்கைகள்

மாவட்ட நிர்வாகமே... 

  • ஓராண்டு காலமாக பட்டினி கிடக்கும் ஒப்பந்த ஊழியருக்கு உடனடியாக சம்பளம் வழங்கு... 

  • எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்று செயல்பட்டு BSNL சேவைக்கு கேடு செய்யும் CLUSTER குத்தகைக்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்... 

  • நாளும் சீரழியும் BSNL சேவையை உடனடியாக மேம்படுத்து... 

  • மூடிக்கிடக்கும் வாடிக்கையாளர் சேவை மையங்களை செயல்படுத்து... 

  • தேங்கிக்கிடக்கும் ஊழியர் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வை...
  • ஊழியர்களின் நீண்ட நாள் மாற்றல்களை அமுல்படுத்து...
  • பற்றாக்குறை உள்ள இடங்களில் ஊழியர்களைப் பணியமர்த்து...
  • தேங்கிக்கிடக்கும் பதவி உயர்வு உத்திரவுகளை வெளியிடு...
  • E-OFFICE என்னும் பெயரில் ஈ ஓட்டாதே...
  • சிறைப்பட்டுக் கிடக்கும் கோப்புக்களை உடனடியாக விடுதலை செய்...
  • ஆய்வு இல்லங்களில் IQ சட்டவிரோதமாக நிரந்தரமாக குடிகொண்டிருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. ஆய்வு இல்ல வாடகையை அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய். 

  • பரமக்குடி வாடிக்கையாளர் சேவை மைய வாடகையை குத்தகைக்காரரிடம் பிடித்தம் செய்... 

  • வாடகை கொடுக்காமல் வருடக்கணக்கில் BSNL நிறுவனத்தை ஏமாற்றி வரும் மதுரை கூட்டுறவு சங்கத்தை உடனடியாக காலி செய்...

Wednesday, 9 February 2022

 சங்கப்பணி வளர்க

 
05/02/2022 இராமேஸ்வரத்தில் NFTE மாவட்டச்செயற்குழு மிகச்சிறப்பாக மாவட்டத்தலைவர் தோழர். சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் தோழர் சுப்பிரமணியன் நடந்து முடிந்த மாநில மாநாட்டில் மாநில உதவித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால்... ஒருவருக்கு ஒரு பதவி என்னும் அடிப்படையில்  மாவட்டத்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

எனவே மாவட்டச்செயற்குழு இராமேஸ்வரத்தின் மூத்த தோழரும் NFTE இயக்கத்தின் அசையாச்சொத்துமாகிய தோழர் ஜேம்ஸ் வாலண்ட்ராயன் அவர்களை மாவட்டத்தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது. மாவட்டச்செயற்குழுவில் சிறப்புரையாற்றிய AITUC மீனவர் சங்கத்தலைவரும்... இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தாலுகா செயலாளருமாகிய தோழர் முருகானந்தம் அவர்கள் தோழர் ஜேம்ஸ் வாலண்ட்ராயன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

NFTE  காரைக்குடி மாவட்டத்தலைவர் 

தோழர் ஜேம்ஸ் வாலண்ட்ராயன் 

அவர்களின் தொழிற்சங்கப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Thursday, 3 February 2022

மாவட்டச்செயற்குழு 

தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

காரைக்குடி 

மாவட்டச்செயற்குழு

---------------------------------------------

05/02/2022 – சனிக்கிழமை – காலை 10 மணி

புனித ஜேம்ஸ் மகால் – இராமேஸ்வரம்

---------------------------------------------

தலைமை 

தோழர். வே. சுப்பிரமணியன் 

 மாவட்டத்தலைவர்

---------------------------------------------

வரவேற்புரை 

தோழர். ஜேம்ஸ் வாலண்ட்ராயன் 

மாவட்ட உதவிச்செயலர்

---------------------------------------------

அமைப்பு நிலை – ஊழியர் பிரச்சினைகள் – ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் - BSNL சேவை -மார்ச் 28 &29 அகில இந்திய வேலைநிறுத்தம் – தலமட்டப்போராட்டங்கள்.
---------------------------------------------

அகவை 60 அடைந்த விருப்ப ஓய்வு தோழர்களுக்கு பாராட்டு

பாராட்டுப் பெறுவோர்  : தோழர்கள் 

R. இராமமூர்த்தி, JTO/இராமநாதபுரம்

A. அந்தோணி, TT/தங்கச்சிமடம்

R. சிவசாமி, TT/சிவகங்கை

S. அழகர்சாமி, TT/சிவகங்கை

S.S. மாரி, TT/ பரமக்குடி

S. இராஜேந்திரன் TT/ பரமக்குடி

 ---------------------------------------------

சிறப்புரை : தோழர்கள் 

S.E. முருகானந்தம் 

செயலர் மீனவர் சங்கம் - AITUC

வே. சுப்பிரமணியன்

மாநில உதவித்தலைவர் – NFTE

க. சுபேதார் அலிகான்  

மாநில அமைப்புச்செயலர் – NFTE

 ---------------------------------------------

பங்கேற்பு : தோழர்கள் 

பா. முருகன் – மாவட்டச்செயலர் – NFTE

நா. ஜெகன் – மாவட்ட இணைச்செயலர் - NFTE

J. பங்கஜ்குமார் – மாவட்டப்பொருளர் NFTE

பா. லால்பகதூர் – மாவட்டத்தலைவர் – TMTCLU

அ. தமிழரசன் – NFTE தலைவர் - இராமநாதபுரம் மாவட்டம்

மா. ஆரோக்கியதாஸ் – NFTE செயலர் – சிவகங்கை மாவட்டம்

S. சதீஷ் பாலாஜி – NFTE செயலர் - இராமநாதபுரம் மாவட்டம்

B. இராஜன் – முன்னாள் கிளைச்செயலர் NFTE

இரா. இராமமூர்த்தி – AIBSNLPWA மற்றும் வெ. மாரி

 ---------------------------------------------

நன்றியுரை 

தோழர். K. சேதுராஜன் – மாவட்ட உதவித்தலைவர்

 ---------------------------------------------

தோழர்களே... வருக....

அன்புடன் அழைக்கும்

NFTE மாவட்டச்சங்கம் – காரைக்குடி