Wednesday, 9 February 2022

 சங்கப்பணி வளர்க

 
05/02/2022 இராமேஸ்வரத்தில் NFTE மாவட்டச்செயற்குழு மிகச்சிறப்பாக மாவட்டத்தலைவர் தோழர். சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் தோழர் சுப்பிரமணியன் நடந்து முடிந்த மாநில மாநாட்டில் மாநில உதவித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால்... ஒருவருக்கு ஒரு பதவி என்னும் அடிப்படையில்  மாவட்டத்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

எனவே மாவட்டச்செயற்குழு இராமேஸ்வரத்தின் மூத்த தோழரும் NFTE இயக்கத்தின் அசையாச்சொத்துமாகிய தோழர் ஜேம்ஸ் வாலண்ட்ராயன் அவர்களை மாவட்டத்தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது. மாவட்டச்செயற்குழுவில் சிறப்புரையாற்றிய AITUC மீனவர் சங்கத்தலைவரும்... இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தாலுகா செயலாளருமாகிய தோழர் முருகானந்தம் அவர்கள் தோழர் ஜேம்ஸ் வாலண்ட்ராயன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

NFTE  காரைக்குடி மாவட்டத்தலைவர் 

தோழர் ஜேம்ஸ் வாலண்ட்ராயன் 

அவர்களின் தொழிற்சங்கப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment