Saturday, 30 September 2017

வாழ்க… வளமுடன்… நலமுடன்

காரைக்குடி மாவட்டத்தில் 
30/09/2017 அன்று பணிநிறைவு பெறும்
தோழர்களை அன்போடு வாழ்த்துகின்றோம். 

தோழர்.K.நாகநாதன்
TELECOM TECHNICIAN – தேவகோட்டை.

நகைச்சுவை மன்னன்
நாகநாதன்….

நாகநாதன் இருக்குமிடம்…
களை கட்டும்… கலைகள் கட்டும்…

கலையில் சிறந்த நாகநாதன்…
கடைமையில் சிறந்த நாகநாதன்…
கண்ணியமிக்க நாகநாதன்…

BSNLன் வளர்ச்சிக்குத்
தளர்ச்சியின்றி பாடுபட்ட…நாகநாதன்..
தேசத்தின் விடுதலைக்கு
தம்மை அர்ப்பணம் செய்த
தியாகி கந்தசாமியின் வாரிசு….நாகநாதன்…

நாகநாதன் வாழ்க….
நாட்டுப்பற்று கொண்டு…
நலமோடு வாழ்க….வாழ்க என்று
வாழ்த்துகின்றோம்… உளமார…
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------

தோழர்.A.ஜேம்ஸ் மாத்யூ
TELECOM TECHNICIAN – இராமநாதபுரம்

புதுமடத்தில் பணிபுரிந்து
புதுமைகள் செய்த ஜேம்ஸ்…

SURROUNDER என்பது
சகஜமாகிப்போன காலத்தில்…
SURROUNDERக்கு இடம் கொடுக்காது…
புதுமடத்தில் தொலைபேசி இணைப்புக்களை
பேணிக்காத்த பெருமை கொண்ட ஜேம்ஸ்…

பதவியிலே TELECOM TECHNICIAN…
திறமையிலே JUNIOR ENGINEER…

முகவையிலே…
அகன்ற அலைவரிசை இணைப்புக்களை
அற்புதமாகக் காத்திட்ட ஜேம்ஸ்…

கடமை மட்டுமே தெரிந்த ஜேம்ஸ்…
காக்கா பிடிக்காத ஜேம்ஸ்…
நேர்மை கொண்ட ஜேம்ஸ்…
நியாயம் சொல்லும் ஜேம்ஸ்…
எனவே விருதுகள் ஜேம்ஸை
விட்டு விலகிப்போனதில் ஆச்சரியமில்லை…

விருதுகளுக்காகப் பணிபுரியாமல்…
கடமை உணர்வோடு பணிபுரிந்து…
நிறைவோடு பணிநிறைவு செய்யும்
அன்புத்தோழர் ஜேம்ஸ் மாத்யூ
வாழ்க பல்லாண்டு என
அன்போடு வாழ்த்துகின்றோம்…
  ------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
தோழர்.P.அரியமுத்து
TELECOM TECHNICIAN – அழகன்குளம்

அகழ்வாராய்ச்சிக்குப் புகழ் பெற்ற
அழகன்குளத்தில்…
தொல்பொருள் குவியல்கள் நிறைந்து கிடக்கும்
அழகன்குளத்தில்…

தொலைபேசி சேவையைப் பேணிக்காத்த
தொண்டுள்ளம் கொண்ட அரியமுத்து…

இசையறிவு கொண்ட
இனிய சுருதி அரியமுத்து…
இனிய குரலெடுத்து அரியமுத்து பாடினால்….
சங்கக்கூட்டங்களில் மகிழ்ச்சி துள்ளும்…

இசைப்பற்றோடு அசைக்க முடியாத
இயக்கப்பற்றும் கொண்ட

தோழர்.அரியமுத்து வாழ்க… வாழ்க…

Wednesday, 27 September 2017

தோழர்.சென்னக்கேசவன் 
பணி நிறைவு

தமிழ் மாநிலச்சங்கத்தின்
முன்னோடித்தலைவர்களுள் ஒருவரான
அருமைத்தோழர்.சென்னக்கேசவன்
அவர்கள் 30/09/2017 அன்று 
பணிநிறைவு பெறுகின்றார்.
அவரது பணி நிறைவு பாராட்டு விழா
இன்று 28/07/2017 வேலூரில் நடைபெறுகின்றது.
நமது அன்பான வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.


தோழர்.சென்னக்கேசவன்…
அதிகாரியாக ஆனவர்…
ஆற்றல் மிக்கவர்….
இதயம் துடிப்பவர்…
ஈரம் கொண்டவர்…
உறுதி சொல்பவர்…
ஊக்கம் உயர்ந்தவர்…
எளிமை கொண்டவர்…
ஏற்றம் பெற்றவர்…
ஐயம் அறுத்தவர்….
ஒற்றுமை சொல்பவர்…
ஓரவஞ்சனை அற்றவர்…

ஒன்றே…. அவரது வழி…
NFTE ஒன்றே... 
என்றும் அவரது வழி…

வாழ்க…. பல்லாண்டு….
வளர்க… நூறாண்டு….
அன்புடன் வாழ்த்தும்….
காரைக்குடித் தோழர்கள்.
தோழர்.பாலகுரு பணிநிறைவு

திருச்சி மாவட்டத்தின் துடிப்பு மிக்க 
மூத்த தோழர்.பாலகுரு அவர்கள் 
செப்டம்பர் மாதம் பணி நிறைவு பெறுகின்றார்.
 அவரது பணி நிறைவு பாராட்டு விழா திருச்சியில் 
27/09/2017 அன்று சிறப்புடன் நடைபெற்றது.

 அருமைத்தோழர்.மதிவாணன், சம்மேளனச்செயலர் தோழர்.ஜெயராமன், தமிழ்மாநிலச்செயலர் தோழர்.நடராஜன் 
மற்றும் பல தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

இலாக்காப்பணி நிறைவு செய்யும்...
 தோழர்.பாலகுரு அவர்களின்
இயக்கப்பணி தொடர வாழ்த்துகின்றோம்.
தேசிய கருத்தரங்கம்

பொதுத்துறை அதிகாரிகள் 
மற்றும் ஊழியர்களின்
3வது ஊதிய திருத்தம்…
ஊதிய மாற்றப் பேச்சுவார்த்தை குறித்து...
AITUC  CITU INTUC HMS LPF 
சங்கங்கள் இணைந்த
அனைத்து பொதுத்துறை சங்கங்களின்
தேசிய கருத்தரங்கம்.
22/10/2017 – ஹைதராபாத்.
ஒப்பந்த ஊழியர் ஊதியம்


BSNL நிதி நெருக்கடி காரணமாக
தமிழகம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களது சம்பளப்பட்டுவாடா தாமதமானது. நேற்று நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு ஒப்பந்தகாரர்களின் பழைய பில்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. 
எனவே இன்று ஒப்பந்த ஊழியர்களது சென்ற மாதச்சம்பளம் பட்டுவாடா ஆகும். சம்பளப்பிரச்சினைக்கு பரிவோடு தீர்வு கண்ட தமிழ் மாநில நிர்வாகத்திற்கும்... காரைக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும்… நமது நன்றிகள் உரித்தாகுக. 

வருங்காலங்களில் உரிய காலத்தில் சம்பளப்பட்டுவாடா செய்வதற்கு DGM(Finance) சில வழிமுறைகளைக் கூறியுள்ளார். அதனடிப்படையில் வருங்காலங்களில் தாமதங்கள் தொடராமல் செயலாற்றுவோம்.

இந்த ஆண்டிற்கான போனஸ் வழங்குவதற்கு ஒப்பந்தகாரர்களுக்கு உடனடியாக கடிதம் எழுதிடவும், திறன் அடிப்படையில் ஊழியர்களைத் தரம் பிரிப்பதற்கு குழு அமைக்கும் பணி அக்டோபர் முதல் வாரம் துவங்கப்படும் எனவும் DGM(ADMN) உறுதியளித்துள்ளார். 
அவருக்கு நமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

Monday, 25 September 2017

கடலூர்… 
உரிமைகளின் களம்… உணர்வுகளின் களம்….

அடிமட்ட ஊழியர்களின் வாழ்வு உயர….
களம் பல கண்ட கடலூர் மாவட்டத்தின்
NFTCL ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட மாநாடு…
24/09/2017 அன்று விழுப்புரம் நகரில்….
செவிக்கும்… சிந்தைக்கும்… விருந்தாக….
துயரங்களுக்கு மருந்தாக அமைந்தது…

தோழர்.வேதாச்சலம் தலைமை வகித்தார்….
கோரிக்கைகள் முழங்க கொடியேற்றம்,
வரலாறு சொல்லும் கல்வெட்டு திறப்பு….
வாணவேடிக்கைகளுடன் ஊர்வலம்…

தோழர்கள் மனம் நிறைந்த
அமரர்.இராஜேந்திரன் அரங்கம் நிறைந்திட…
அன்பழகன் துவக்கவுரையாற்றிட….
அசோகராஜன் காஷ்மீர் அனுபவங்களை…
ஆப்பிளின் சுவை மிஞ்சி அற்புதமாய் எடுத்துரைக்க…
சம்மேளனச்செயலர் ஜெயராமன் சிறப்புரைக்க…
AITUC மாவட்டச்செயலர் தோழர்.சேகர் அவர்கள்
நெய்வேலி அனுபவங்களை நெகிழ்வோடு எடுத்துரைக்க…

பொதுச்செயலர் தோழர்.மதி அவர்கள்…
காஷ்மீர் முதல் கடல்குமரி வரை
விரிந்து பரந்து வரும் NFTCLன் எழுச்சியை எடுத்துரைக்க…

செவிக்குணவால் சிந்தை மயங்கிய தோழர்கள்
வயிற்றுக்குணவால் நெஞ்சம் மயங்கிட…
மதிய வேளையில்… கருத்தரங்கம் துவங்கியது…

மாநில செயல்தலைவர் தோழர்.மாரி தலைமையேற்க…
தோழர்.பாபு, இளங்கோவன், இரகுநாதன், கணேசன்,
ஆறுமுகம், கோதண்டபாணி, மகேந்திரன், மாரிமுத்து
எனப் பல்வேறு தோழர்கள் ஆழமாய் கருத்துரை வழங்கிட…

மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன்
ஊழியர் பிரச்சினைகளைப் பட்டியலிட்டு…
புதிய நிர்வாகிகளையும் பட்டியலிட்டார்.

ஒரு மனதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும்….
தவறாது வந்திருந்து வாழ்த்துரை வழங்கினர்.
புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்…

மாவட்டத்தலைவர்
தோழர்.ஹரிகிருஷ்ணன்

மாவட்டச்செயலர்
தோழர்.மஞ்சினி

மாவட்டப்பொருளர்
தோழர்.மணிகண்டன்

ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வில்…
ஏற்றம் உண்டாகிட… மாற்றம் பிறந்திட…
NFTCL தன் பங்கினை…
புதிய பாங்கோடு செலுத்திட
நமது நல் வாழ்த்துக்கள்.
முத்துக்குளித்த முத்து நகர் மாநாடு 
முன்னாள் MP தோழர்.அப்பாத்துரை அவர்களுக்கு மூத்த தோழர்.பாலு அவர்கள் பொன்னாடை போர்த்தும் காட்சி. மேடையில் மாநிலச்செயலர் தோழர்.நடராஜன், அருணாச்சலம், சுபேதார் அலிகான், நெல்லை கணேசன், பாலக்கண்ணன் மற்றும் பலர்.
NFTE தூத்துக்குடி மாவட்ட மாநாடு 
25/09/2017 அன்று தொழிற்சங்கத்தின் தோற்றுவாய் நகரான 
தூத்துக்குடியில் சிறப்போடும் நிறைவோடும் நடைபெற்றது. 
பல்வேறு தொழிற்சங்கத்தலைவர்களும், 
அரசியல் தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

அணி என்னும் பிணி விலக்கி
ஒருமனதாக... நிறைமனதாக... கீழ்க்கண்ட தோழர்கள் 
நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்டத்தலைவர்
தோழர்.தங்கவேலு

மாவட்டச்செயலர்
தோழர்.பாலக்கண்ணன்

மாவட்டப்பொருளர்
தோழர்.ஜான்சன் சாமுவேல்

தோழர்.பாலுவின் வழிகாட்டுதலில்...
தோழர். பாலக்கண்ணனின் தொழிற்சங்கப்பயணம் 
புதிய பாதையில்… புதிய வேகத்தில்…
இணைந்தே தொடர… இனிதே தொடர….
நமது நல்வாழ்த்துக்கள்….

வேற்றுமை என்னும் மூச்சடக்கி…
ஒற்றுமை என்னும் முத்துக்குளித்த...
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வாழ்த்துக்கள் பல…

Friday, 22 September 2017

NFTCL
கடலூர் மாவட்ட மாநாடு 

NFTCL
கடலூர் மாவட்ட மாநாடு

24/09/2017 – ஞாயிறு  
காலை 10 மணி – விழுப்புரம்

கொடியேற்றம் – கல்வெட்டு திறப்பு – கருத்தரங்கம் – 
அமைப்பு நிலை – செயல்பாட்டறிக்கை – நிதியறிக்கை – 
விவாதங்கள் – புதிய நிர்வாகிகள் தேர்வு – தீர்மானங்கள்.

பங்கேற்பு
தோழர்.S.ஆனந்தன்
NFTCL மாநிலச்செயலர்

தோழர்.M.சேகர்
AITUC மாவட்டச்செயலர்

தோழர்.C.K.மதிவாணன்
பொதுச்செயலர் – NFTCL

மற்றும் தலைவர்களும்… தோழர்களும்….
தோழர்களே… வாரீர்…

Thursday, 21 September 2017

குத்தகையை ரத்து செய்… 


இன்று தேதி….22
இன்றுவரை ஒப்பந்த ஊழியர்களுக்கு..
காரைக்குடி மாவட்டத்தில் கூலி கொடுக்கப்படவில்லை…
ஜூன் மாதம் வரை பல ஒப்பந்தகாரர்களுக்கு பில்கள் பட்டுவாடா செய்யப்பட்டிருந்தும் கூட அவர்கள் கூலியைத் தர மறுக்கின்றனர்.

எல்லா பில்களும்  பட்டுவாடா ஆனால்தான்
கூலியைக் கொடுப்பது என்ற இறுமாப்பு நிலைக்கு
ஒப்பந்தகாரர்கள் சென்று விட்டனர்.

தொலைபேசியில் அழைத்தால் அவர்கள் சட்டை செய்வதில்லை…
ஒப்பந்தகாரர்களது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால்…
இதோ.. எங்கள் உரிமையாளரைப் பேசச்சொல்கின்றோம்..
என்று சொல்லி விட்டு நம்மை அலைபேசியில்
அநாதையாக விட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
நிர்வாக அதிகாரிகள் தொடர்பு கொண்டாலும் இதே நிலைதான்…

எனவே…
காரைக்குடி மாவட்டத்தில்…
தொழிலாளர் சட்டங்களுக்குப் புறம்பாக செயல்படும்
ஒப்பந்தகாரர்களின் குத்தகையை ரத்து செய்யவும்….
அவர்களைக் கறுப்புப் பட்டியலில் 
BLACK LISTல் சேர்க்க கோரியும்…

இன்று 22/09/2017 மதியம் 01.00 மணியளவில்
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 
கண்டன ஆர்ப்பாட்டம் 
நடைபெறும்…
ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும்
தவறாது கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

Wednesday, 20 September 2017

நிகழ்வுகள்

24/09/2017
NFTCL 
கடலூர் மாவட்ட மாநாடு
விழுப்புரம்.
----------------------------------------------------------------
25/09/2017
NFTE 
தூத்துக்குடி மாவட்ட மாநாடு
தூத்துக்குடி.
----------------------------------------------------------------
26/09/2017
NFTE
மதுரை மாவட்டச்செயற்குழு
வத்தலக்குண்டு.
----------------------------------------------------------------
27/08/2017
NFTE
தோழர்.பாலகுரு
பணிநிறைவு பாராட்டு விழா
திருச்சி
----------------------------------------------------------------
28/09/2017
தோழர்.சென்னக்கேசவன்
பணி நிறைவு பாராட்டு விழா
வேலூர்.
----------------------------------------------------------------
02/10/2017
NFTCL
கோரிக்கை மாநாடு
திருச்சி.
----------------------------------------------------------------
06/10/2017
NFTE 
தமிழ் மாநிலச்செயற்குழு
தஞ்சை
----------------------------------------------------------------
12/10/2017  & 13/10/2017
NFTE 
மத்திய செயற்குழு
விஜயவாடா.

Monday, 18 September 2017

அஞ்சலி...தோழர்.S.பிச்சுமணி 
தோழர்.S.பிச்சுமணி


புதுவையின் மூத்த தோழர்.S.பிச்சுமணி அவர்கள் 
உடல்நலக்குறைவால் சென்னையில் இயற்கை எய்தினார். 

போராட்டங்களில் புடம் போடப்பட்டவர். 
பல்வேறு பழிவாங்குதல்களைச் சந்தித்த போதிலும் 
அயராது சங்கப்பணி ஆற்றியவர். 
புதுவை NFTE இயக்கத்தோடு இரண்டறக்கலந்தவர். 

அவரது மறைவிற்கு நமது செங்கொடி தாழ்த்திய 
அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
தோழியர்.சத்தியம்மாள்- இரங்கல் கூட்டம் 

உடல்நலக்குறைவால் அகால மரணமுற்ற
 மதுரை முன்னணித்தோழியர்.
சத்தியம்மாள் 
அவர்களுக்கு நினைவஞ்சலிக்கூட்டம் 
18/09/2017 அன்று மதுரை 
NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
 தோழர்களும், தோழியர்களும் கலந்து கொண்டு தோழியர்.சத்தியம்மாள் அவர்களின் சங்கப்பற்றினை, 
சீரிய குணநலன்களை நினைவு கூர்ந்தனர்.

தோழியர்.சத்தியம்மாள் அவர்களின்
மறைவிற்கு நமது அஞ்சலி உரித்தாகுக...

Friday, 15 September 2017

சிறந்த ஊழியர் விருது அறிவிப்பு

தமிழ் மாநிலத்தின் 2016ம் ஆண்டிற்கான 
சிறந்த அதிகாரிகள் மற்றும் ஊழியருக்கான 
VISHIST SANCHAR SEWA 
விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊழியர்கள்

S.குணசேகர் – TM -  தூத்துக்குடி
S.இராதாகிருஷ்ணன் – DRIVER – நெல்லை
V.மணி – SR.TOA – காரைக்குடி
S.மைக்கேல் அல்போன்ஸ் – STM – கோவை
V.சந்திரசேகர் – SR.TOA – சென்னை
S.கிருஷ்ணன் – TTA – குடந்தை
PB.பாலாஜி – TTA – கோவை
G.பிரியா – TTA – திருச்சி

அதிகாரிகள்

S.டைட்டஸம் – SDE – நாகர்கோவில்
O.அன்பழகன் – SDE - திருச்சி
VK.முரளிதரன் – JAO – சென்னை
A.பாண்டியன் – AGM – காரைக்குடி
K.சமுத்திரவேலு – DGM – கடலூர்
V.சிவக்குமார் – SR.SDE – சென்னை

விருது பெற்ற தோழர்களுக்கு நமது நல்வாழ்த்துக்கள்.
காரைக்குடி மாவட்டத்திற்கு ஊழியர் மற்றும் அதிகாரிகள் 
என இரண்டு பிரிவிலும் விருதுகள் கிடைத்துள்ளன.
விருது பெற்றுள்ள தோழர்.V.மணி நமது சங்கத்தோழர் என்பதும், விரைவில் ஓய்வு பெறவுள்ள அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் நமக்கு மிக்க மகிழ்ச்சி.

அதிகாரிகள் பிரிவில் விருது பெற்றுள்ள 
தோழர். A.பாண்டியன் SNEA சங்கத்தின் மாவட்டச்செயலர். 
நேர்மையும் கடமை உணர்வும் கொண்ட தோழர். சங்கப்பற்று மிக்கவர். இருவருக்கும் நமது நல்வாழ்த்துக்கள்.