Wednesday 6 September 2017

காந்தி முதல்... கெளரி வரை…. 


தோட்டாக்கள் தீரும் வரை எழுதித் தீர்ப்போம்.
எழுதுகோல் உங்களை அச்சுறுத்தினால்
பீரங்கிகளைக் கொண்டு வாருங்கள்
எழுதும் கரங்களையெல்லாம்
ஓர் இடத்தில் அடைத்து அணுகுண்டு வீசுங்கள்...
துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பின்பும்
வீரியமிக்க எழுத்துக்கள்.. 
முளைத்துக்கொண்டுதான் இருக்கும்” … 
என்று
வலதுசாரிகளைப் பார்த்து…
வலிமையுடன் முழங்கினார்…
கர்நாடகாவின்... கெளரி லங்கேஷ்…

அன்று...
தேசத்தந்தையின் தேகத்தின் மீது….
பாய்ந்த அதே குண்டுகள்…
இன்று...
முற்போக்கு எழுத்தாளர்…
கெளரி லங்கேஷ் மீது..
ஈவிரக்கமின்றி பாய்ந்துள்ளது…

பேனா முனையைக் கண்டு….
பேதலித்துப் போன பேடிகள்….
துப்பாக்கி முனையில் பழி கேட்கும்…
துன்மார்க்க நிலை… துயரமிக்க நிலை…

இரத்தச்சேற்றில் வளர்கிறது தாமரை…
இரத்தக் கறையில் ஜொலிக்கிறது காவி நிறம்…

இது…
காளியின் தேசமா?
கல்லறைப்பசி கொண்ட…
காலிகளின் தேசமா?...

இங்கு….
துப்பாக்கிச்சத்தம் தொடர்ந்திடுமா?
துர்ப்பாக்கிய நிலை பெருகிடுமா?
ஆயுத எழுத்துக்கள் மீது…. ஆயுதங்களா?

இந்நிலை மாற்றிட…
இந்திய தேசமே எழுந்திடு….

ஆயுத எழுத்துக்களால்…
கெளரி லங்கேஷிற்கு...
அஞ்சலி செலுத்திடு….

ஈவு.. இரக்கமற்ற... 
ஆயுதப்பேடிகளை அழித்திடு...

No comments:

Post a Comment