Wednesday 26 June 2019

பரமக்குடி மாவட்டச்செயற்குழு

காரைக்குடி NFTE மாவட்டச்செயற்குழு 22/06/2019 அன்று 
பரமக்குடி தொலைபேசி நிலைய வளாகத்தில்
 மரத்தடியில்... மாண்புற... மகிழ்வுற நடைபெற்றது. 

மாவட்டத்தலைவர் தோழர் லால்பகதூர் தலைமை வகித்தார். 
பரமக்குடி கிளைச்செயலர் தோழர் தமிழரசன் வரவேற்புரையாற்றினார்.
சம்மேளனசெயலரும் மாநிலத்தலைவருமான தோழர். காமராஜ்...
மதுரை மாவட்டத்தலைவர் தோழர்.சிவகுருநாதன்
மதுரை மாவட்டச்செயலர் தோழர். இராஜேந்திரன்
மதுரை மாவட்டப்பொருளர் தோழர்.செந்தில்
மதுரை CSC கிளைச்செயலர் தோழர்.இரமேஷ்
மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான்
AIBSNLPWA ஓய்வூதியர் சங்க கிளைச்செயலர் தோழர் இராமசாமி
NFTCW ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச்செயலர் தோழர் முருகன்
NFTE மாவட்டச்செயலர் தோழர். மாரி ஆகியோர் பங்கேற்றனர்.
அனைத்துக்கிளைச்செயலர்களும் கருத்துரையாற்றினர்.

தோழர்கள் கருப்புச்சாமி,ஜெயராம் மற்றும் தனசேகரன் ஆகியோரது பணிநிறைவு பாராட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. 

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன...

சென்னைக்கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் விரோதப்போக்கை கண்டித்து... கணக்கில்லாத ஊழல் போக்கைக் கண்டித்து   அதன் மதுரைக்கிளையின் முன்பாக மதுரை மற்றும் காரைக்குடி NFTE மாவட்டச்சங்கங்கள் இணைந்து ஜூலை மாதம் 
அதிரடிப் போராட்டம்.

இராமேஸ்வரம், பரமக்குடி,சிவகங்கை,தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதிகளுக்கு போதிய  அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

நன்கு வருவாய் தரக்கூடிய இராமநாதபுரம் பகுதியில் சேவையைச்சீரழித்து வரும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் 
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்குடிநிர்வாகப்பிரிவு மதுரை வணிகப்பகுதியுடன் இணைக்கப்படுவதற்கு முன்பாக நாலுகட்டப்பதவி உயர்வு உள்ளிட்ட ஊழியர் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

தொலைபேசி எண்ணிக்கை குறைந்து வருவாய் குறைந்து களையிழந்த தொலைபேசி நிலையங்கள் கண்டறியப்பட்டு உடனடியாக மூடப்பட வேண்டும்.

நிரந்தர ஊழியர்கள் இல்லாத தொலைபேசிநிலையங்களில்
ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ஒப்பந்த ஊழியர்கள் நிர்வாகத்தால் நேரடியாகக் கண்டறியப்பட்டு
பொய்முகங்கள்  களையப்பட வேண்டும்.

CORPORATE அலுவலக உத்திரவிற்கிணங்க வாடகைக்கார்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும்.

பரிவு அடிப்படை பணி மறுக்கப்பட்ட தோழர்களுக்கு அவர்களது விண்ணப்பங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்கு மாநிலச்சங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தற்காலிக மாற்றலில் சென்னைக்கு விண்ணப்பித்திருக்கும் தோழியர் செளஜன்யா ATT அவர்களின் சூழலைக் கணக்கில் கொண்டு மாற்றல் பெற்றுத்தர மாநிலச்சங்கம் முழுமுயற்சி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment