Monday 24 June 2019


செ ய் தி க ள்
BSNL நிறுவனத்தை புத்தாக்கம் செய்வது குறித்து இலாக்கா அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு 18/06/2019 அன்று 
NFTE மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது. 
இப்போதெல்லாம் மந்திரிகளுக்கு மடல் வரையத்தான் முடிகிறது.  பார்த்துப் பேசிய பழங்காலம் போய்விட்டது
----------------------------------------------------------------
2018ம் ஆண்டிற்கான போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வை உடனடியாக அறிவிக்கக்கோரி CORPORATE நிர்வாகம் 
மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தேர்வெல்லாம் நடக்கும்.  தேர்வு எழுதத்தான் SSLC படித்த எவருமில்லை.
----------------------------------------------------------------
காஜியாபாத் நகரில் உள்ள ALTTC என்னும் சிறப்புமிகு பயிற்சிக் கேந்திரத்தை DOT தனது வசம் எடுத்துக்கொள்வதற்கு முடிவுசெய்துள்ளது. ஏறத்தாழ 80 ஏக்கர் நிலமும் ஏகப்பட்ட கட்டிடங்களும் ALTTCயில் உள்ளன. DOTயின் இந்த முடிவை நமது மத்திய சங்கம் 
வன்மையாகக் கண்டித்துள்ளது. 
அப்படியே 1 லட்சத்து 70ஆயிரம் ஊழியர்களையும் அதிகாரிகளையும் DOT தன் வசம் TAKE OVER செய்தால் நல்லது.
----------------------------------------------------------------
BSNL நிறுவனம் மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளதால்  ஜூன் மாத சம்பளத்தைக் கூட ஊழியர்களுக்கு வழங்க இயலாத நிலையில் இருப்பதாகவும், இந்நிலை தொடர்ந்தால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்திட இயலாது எனவும், இதனால் அரசு உடனடியாக BSNL நிறுவனத்திற்கு ஆபத்துக்கால உதவி அளித்திட வேண்டும் எனவும்  மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக 
பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. 
BSNL  நிறுவனத்திற்கு மூடுவிழா என்று முன்பு செய்தி போட்டவர்கள்தானே இவர்கள்...
----------------------------------------------------------------
ஏறத்தாழ 8 லட்சம் கிலோமீட்டர் அளவிற்கு நாடு முழுவதும் போடப்பட்டுள்ள BSNL FIBRE வலைப்பின்னலைத் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதன் மூலம் வருவாய்ப் பெருக்கம் செய்யலாமென  DOT பரிசீலித்து வருவதாக 
பத்திரிக்கைகளில் செய்திகள் உலா வருகின்றன. 
மொத்தமாக BSNL நிறுவனத்தையே அப்பன்
 அம்பானியிடம் அடகு வைத்து விடலாம்.
----------------------------------------------------------------
25/06/2019 அன்று டெல்லியில் நடைபெறவிருந்த மாநில தலைமைப்பொதுமேலாளர்கள் CGM கூட்டம் நிர்வாகக் காரணங்களுக்காக  மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 
டெல்லியிலும் தண்ணீர்  பஞ்சம் இருக்கலாம்...

No comments:

Post a Comment