Tuesday 12 May 2020


DA முடக்கத்தை எதிர்த்து வழக்கு

ஜனவரி 2020 முதல் மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கான DA விலைவாசிப்படியை முடக்கி வைத்து 
மத்திய அரசு உத்திரவிட்டது. இதனால் ஏறத்தாழ 50லட்சம் 
மத்திய அரசு ஊழியர்களும் 61 லட்சம் ஓய்வூதியர்களும் 
நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்.

மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசு வெளியிட்ட
DA முடக்க உத்திரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில்
11/05/2020 அன்று வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த திரு.பிரதீப் சர்மா என்பவர்
மேற்கண்ட வழக்கைத் தொடுத்துள்ளார்.

பேரிடர் மேலாண்மைச்சட்டம் 2005ல்  
பேரிடர் காலங்களில் இது போல் சம்பளம் உள்ளிட்ட
சலுகைகளைப் பிடித்தம் செய்வதற்கு
மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

தேசத்தில் பொருளாதார நெருக்கடி அறிவிக்கப்படாத நிலையில்
DA முடக்கம் என்பது அரசியலமைப்புச்சட்டம் 360க்கு எதிரானது.

ஊதியம் என்பது ARTICLE 300 Aன் கீழ் பாதுகாக்கப்படுகின்றது.
எனவே ஊதிய வெட்டு என்பது  சட்டரீதியாக தவறானது.

ஊதியம் என்பது அரசின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டதல்ல...
ஊதியம் என்பது ஒரு நாள் தாமதப்படுத்தப்பட்டாலும்
அது ஊதியமறுப்புக்கு சமமாகும்.

ஏறிவிட்ட விலைவாசியை சமாளிக்கவே ஊழியர்களுக்கும்
ஓய்வூதியர்களுக்கும் விலைவாசிப்படி வழங்கப்படுகின்றது.
அதிலும் டெல்லி போன்ற மாநகரங்களில் அனைத்து
அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணக்கின்றி ஏறிவிட்டது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இந்த விலைவாசியை
எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

மேலும் இன்று சுகாதாரத்துறை மற்றும் பல்வேறுத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் கொரோனாவை எதிர்த்து உரமுடன் போரிட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் DA முடக்கம் என்பது அவர்களின் உற்சாகத்தைக் குலைத்து விடும்... குறைத்து விடும்... 


என்று திரு.பிரதீப் சர்மா 
டெல்லி நீதிமன்றத்தில் வழக்குரைத்துள்ளார்.

No comments:

Post a Comment