Monday, 30 May 2016

ஞானப்பெருக்கே... வாழ்க...
நேர்மை மிடுக்கே... வாழ்க... வாழ்க...
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி - பணி நிறைவு நாள்  31/05/2016
அறிவில் ஆதவன்...
உருவில் வாமனன்..

கலையாத  இளமை...

வளையாத தலைமை...

பணிவுமிகு  இமயம்...

பாசமிகு இதயம்...

எளியோரிடம் அன்பு...
வலியோரிடம் அம்பு...

ஊராருக்கு  ஆரூரான்..

உற்றாருக்கு ஆருயிரான்...

ஞானையாவின் ஞானப்பிள்ளை...
குப்தாவின்  செல்லப்பிள்ளை...

ஜெகன் இல்லம் தந்தவன்..
ஜெகன் உள்ளம்  நிறைந்தவன்...

நெருக்கடிகள் தராதவன்...

நெருக்கடியில் தளராதவன்...

தோழர்களுக்கு குழந்தைச்சாமி...

தலைவர்களுக்கு  தகப்பன்சாமி...

வாசிப்பில் வசித்திடும் ஞானி..

நேசிப்பில்  வாழ்ந்திடும் தேனீ..

பேச்சும் எழுத்தும் மூச்சு...
கேட்போர் நெஞ்சில் வீச்சு..

சிவப்புச் சிந்தனை சிறக்கட்டும்...
சிறகுகள் மேலும் விரியட்டும்...

பாட்டாளிக்கு வழிந்த  உன் வியர்வை.. 
இனி... பாமரனுக்காகப்  பெருகட்டும்...


வசித்திடு... பல்லாண்டு...
வாசித்திடு... நூறாண்டு...

இன்று 31/5/2016 பணி நிறைவு பெறும் 
மாநிலச்செயலர் 
தோழர். பட்டாபிராமன் 
அவர்களை 
காரைக்குடி மாவட்டத் தோழர்கள்  சார்பாக 
வாழ்த்தி... வணங்கி... மகிழ்கின்றோம்...
வளமுடன்...வாழ்க... 
நலமுடன்... வாழ்க...
தோழர் .K.N. பிச்சைமூர்த்தி... OFFICE  SUPERINTENDENT.. RAMNAD  

அலுவலகத்தில் தலைமைப்பாத்திரம் 
தோழர்களின் அன்புமிகு  கதாபாத்திரம் 
NFTE  சங்கத்தின் அட்சயப்பாத்திரம்...

இராணுவத்தில் சீருடைப்பணி... 
இலாக்காவில் சீரிய  பணி..
மூர்த்தி பெரிது... கீர்த்தியும் பெரிது...

இன்று 31/05/2016 பணி நிறைவு பெறும் 
இராமநாதபுரத்தின் இளைய சண்முகநாதன்...
அன்புத்தோழர்  
அலுவலகக் கண்காணிப்பாளர்...
NFTE மாவட்டத்துணைத்தலைவர் 
தோழர் .K.N. பிச்சைமூர்த்தி... 

அவர்களின்  பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகிறோம்...

Saturday, 28 May 2016

NFTE  மத்திய செயற்குழு

நமது NFTE சங்கத்தின் 
மத்திய செயற்குழு ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 
டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும்
 மாநிலச்செயலர்கள்  மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Friday, 27 May 2016

தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் மன்றம்  

NFTE , TEPU மற்றும் SEWA சங்கங்கள் இணைந்து 
NATIONAL FORUM OF BSNL WORKERS 
NFBW என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தோழர்.சுப்புராமன்  TEPU  - தலைவராகவும் 
தோழர்.C.சிங் NFTE  - ஒருங்கிணைப்பாளராகவும் 
தோழர்.PN.பெருமாள்  - SEWA  துணை ஒருங்கிணைப்பாளராகவும் 
NFBW  அமைப்பின் பொறுப்பாளர்களாக  செயல்படுவார்கள்.

நமது NFTE  சங்கத்தின் 
தேசிய செயற்குழுக்கூட்டம்  கூடி முடிவெடுக்கும்வரை 
JAC மற்றும் ஏனைய FORUMகளில் 
NFTE  பங்கேற்பதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

NFBW  செயல்பாடு சிறக்க நமது வாழ்த்துக்கள்.

Wednesday, 25 May 2016

அதிகாரிகள் சங்க 
உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் 

BSNL அதிகாரிகள் சங்கத்தேர்தல் நடத்துவதற்கான 
அறிவிப்பை நிர்வாகம் 25/05/2016 அன்று வெளியிட்டுள்ளது.
பதிவு செய்து ஓராண்டு அனுபவமுள்ள அதிகாரிகள் அமைப்புக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
27/09/2016 அன்று தேர்தல் நடைபெறும்.

 உத்தேச...தேர்தல் கால அட்டவணை 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 24/06/2016

தகுதி பெற்ற சங்கங்களின் பட்டியல் வெளியீடு  :  01/07/2016

விண்ணப்பங்களை விலக்கிக்கொள்ள கடைசி நாள் : 05/07/2016

தேர்தலில் போட்டியிடும் சங்கங்களின் பட்டியல் வெளியீடு : 12/08/2016

தேர்தல் நடைபெறும் நாள் : 27/09/2016

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்  நாள் : 29/09/2016

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படியொரு 
அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டது. 
 பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த முறையாவது தேர்தல் நடக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.
ஏனெனில் உலகில் தொழிலாளிகளுக்கு ஒரு சட்டம் 
அதிகாரிகளுக்கு ஒரு சட்டம் என்பது எழுதப்படாத சட்டம்.

Tuesday, 24 May 2016

தமிழ் மாநில மாநாடு 

தலைமைப்பண்பில்...
தலைசிறந்த...
தமிழ் மாநிலச்சங்கத்தின்..

தமிழ் மாநில மாநாடு

ஜூலை 21 & 22  - வேலூர்

கொடி உயர்த்திடுவோம்...
கோட்டையில் கூடிடுவோம்...

தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி. 
மாவட்டச்செயற்குழு 

28/05/2016 - சனிக்கிழமை - காலை 10 மணி 
NFTE  சங்க அலுவலகம் - காரைக்குடி.

தலைமை : தோழர்.சுந்தரராஜன் 
மாவட்டத்தலைவர் 

சிறப்புரை 
தோழர்.சேது 

ஆய்படுபொருள் 
          • தேர்தல் முடிவுகள் 
          • மாவட்ட மாநாடு 
          • மாநில மாநாடு 
          • ஊழியர் பிரச்சினைகள் 
          • அமைப்பு நிலை 
          • மற்றும் இன்ன பிற 

தோழர்களே...
சந்திப்போம்...சிந்திப்போம்...
சங்கமிப்போம்...சங்க அலுவலகத்தில்...
அனைவரும் வாரீர்... 
அன்புடன் அழைக்கும் 
NFTE  மாவட்டச்சங்கம் - காரைக்குடி.

Monday, 23 May 2016

விடுப்புச் சம்பளம் 20 சத நிறுத்தம்... நிறுத்தம் 

தற்போது ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு விடுப்புச்சம்பளம் 
LEAVE ENCASHMENT முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது.  
ஓய்வு பெறும்  தோழர்களுக்கு  20 சத விடுப்புச்சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறும்... ஓய்வூதிய உத்திரவு வந்த பின்னே  அதனைப் பட்டுவாடா செய்யலாம் எனவும்  மாநில நிர்வாகம்
  19/05/2016 அன்று உத்திரவிட்டிருந்தது. 

PAY ANOMALY காரணமாக ஏப்ரல் 2016ல் ஓய்வு பெற்ற 8 தோழர்களின் ஓய்வூதியம் இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே ஓய்வு பெறும்  தோழர்களுக்கு அவர்களது சம்பளம் கூடுதலாகவோ... தவறுதலாகவோ கணக்கிடப்பட்டிருந்தாலோ...  அல்லது  பிடித்தங்கள் செய்ய வேண்டியிருந்தாலோ நிறுத்தி வைக்கப்பட்ட 20 சத விடுப்புச்சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம்  என்பது நிர்வாகத்தின் கணக்கு.

இது நாள் வரையுள்ள நடைமுறையை மாற்றுவது சரியல்ல என்றும் ஓய்வு பெறும் தோழர்களுக்கு முழுமையான 
விடுப்புச்சம்பளம்   பட்டுவாடா செய்யப்பட வேண்டும் 
எனவும்  நமது மாநிலச்சங்கம் 
PGM FINANCE அவர்களுடன் விவாதித்தது. 
நிர்வாகம் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. 

ஓய்வு பெறும் தோழர்களுக்கு உதவிட்ட...
மாநில நிர்வாகத்திற்கும்... 
மாநிலச்சங்கத்திற்கும்.. நமது நன்றிகள்..

Sunday, 22 May 2016

இந்திய அஞ்சல் வங்கி PBI

வரும் மார்ச் 2017 முதல் 
இந்திய அஞ்சல் வங்கிச்சேவை துவக்கப்படும் என 
தகவல் தொடர்புத்துறை அமைச்சர் 
திரு.இரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.  

அஞ்சல் துறை நாடு முழுக்க 1,54,939  கிளைகளைக்  கொண்டுள்ளது.
 7000 இந்தியர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்ற விகிதத்தில் 
அஞ்சல்  துறையின் சேவை நாடு முழுக்க விரிந்து பரந்துள்ளது. 
எனவே அஞ்சல் துறையின் கட்டுமான வசதியைப்  பயன்படுத்தி 
அஞ்சல் வங்கிச்சேவையைத் துவக்க வேண்டும் 
என  2006ம் ஆண்டிலேயே விவாதிக்கப்பட்டது. 

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 
அஞ்சல் வங்கிச்சேவை துவக்கம் தள்ளிப்போடப்பட்டு வந்தது. 
கடைசியாக 2015 ஆகஸ்ட்ல் RESERVE BANK OF INDIA 
அஞ்சல்துறைக்கு வங்கிச்சேவை ஆரம்பிக்க அனுமதி அளித்துள்ளது. அனுமதி பெற்ற 18 மாதங்களுக்குள் வங்கிச்சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே மார்ச் 2017ல் வங்கிச்சேவையை  
ஆரம்பிக்க அரசு உத்தேசித்துள்ளது.

ஏற்கனவே 2014ல் அஞ்சல் துறை ATM வசதியை
 முக்கிய நகரங்களில் ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
அஞ்சல் நிலையங்களில் 90 சதம் கிராமப்புறங்களில் அமைந்துள்ளதால் 
அஞ்சல் வங்கி ஆரம்பிக்கப்படுவதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு வங்கிச்சேவை எளிதில் கிடைக்கும். 

அஞ்சல் துறை போலவே நமது BSNL நிறுவனமும் விரிந்து பரந்த கட்டுமான அமைப்பை உடையது.  BSNL உருவாக்கத்தின் போது 
தனியாக  BSNL நிதிக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற 
கோரிக்கை எழுந்தது. ஆனாலும் அது உருப்பெறவில்லை.
ஏழாவது...ஊதியக்குழு 

மத்திய அரசு ஊழியர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட 
7வது ஊதியக்குழுவின் முடிவுகளை அமுல்படுத்துவது சம்பந்தமாக மத்திய அமைச்சரவை செயலர் தலைமையில் குழு ஒன்று  அமைக்கப்பட்டது. இந்தக்குழு தனது பரிந்துரையை 
ஜூன் 2016ல் சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது. 
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப்பின் ஜூலை 2016ல் ஊதியக்குழுவின் முடிவுகள் அமுலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள குறைந்த பட்ச அடிப்படை ஊதியமான
 7000த்தை 18000மாக உயர்த்துவதற்கு
 7வது ஊதியக்குழு பரிந்துரை செய்திருந்தது. 
DA ரூ. 8750/= ஆக 125 சதம் உயர்ந்துள்ள நிலையில்..
 7000க்கு 18000 அடிப்படை சம்பளம் 
என்பது மிகவும் குறைவான உயர்வாகும்.  
மொத்த உயர்வு 14.29 சதமேயாகும்.

அடிப்படைச்சம்பளம்        = 7000
DA 125 சதம்                           = 8750
மொத்தம்                               = 15750
15750ல் 14.29 சத உயர்வு   = 2250
மொத்தம்                              = 18000 ( 15750 + 2250)
MULTIPLICATION FACTOR   = 2.57   ( 7000 X  2.57 = 18000)

6வது ஊதியக்குழுவில் 
30 முதல் 40 சதம் வரை ஊதிய உயர்வு கிட்டியது.
 ஆனால் 7வது ஊதியக்குழு மிகக்குறைந்த அளவில்  
சம்பள உயர்வைப் பரிந்துரை செய்துள்ளது. 

இது மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.  எனவே ஊழியர் தரப்பு  
குறைந்தபட்ச அடிப்படைச்சம்பளமாக ரூ.26000/- 
வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

ஊழியர் தரப்புக் கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும்...
அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் ரூ. 20000/=மாக 
 உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன் மூலம் MULTIPLICATION FACTOR  
2.57லிருந்து 2.86ஆக உயரும் வாய்ப்புள்ளது. (7000 X 2.86 = 20000)
மேலும் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது 
ஆண்டு உயர்வுத்தொகையை 3 சதத்திலிருந்து 5 சதமாக 
உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பிரதமரின் வெளிநாட்டுப்பயணங்கள் முடிவுற்றபின்
 ஏழாவது ஊதியக்குழுப் பரிந்துரைகள் அமுலுக்கு வரும்.. 
ஆகஸ்ட் மாதம் நிலுவை கைக்கு வரும்  
என்பது மத்திய அரசு ஊழியர்களின் நம்பிக்கையாகும்.
அவர்களது நம்பிக்கை நிறைவேற வாழ்த்துகிறோம்...

அது சரி...
நமது ஊதியக்குழு என்னாச்சு? என்ற 
உங்களின் கேள்வி காதில் விழாமல் இல்லை...
ஆறு தேர்தலில் டபுள் ஹாட்ரிக் வெற்றி பெற்று...
உலகமகா சாதனை படைத்துள்ள... 
BSNLEU சங்கம்தான் உரிய பதில் சொல்ல வேண்டும்...
 வாழ்த்துக்கள் 

இன்று 22/05/2016 
ஏராளமான  தடைகளுக்குப்பின் 
JTO போட்டித்தேர்வெழுதும் 
இளைய... TTA  சகோதரர்களுக்கு.. 
இளநிலைப்  பொறியாளர் தோழர்களுக்கு...

பதவி உயர்ந்திட...
பலன்கள் நிறைந்திட...
நமது அன்பான வாழ்த்துக்கள்...
நூறாண்டு காலம் வாழ்க...
NFTE  மாநிலப்பொருளர் 
தோழர்.அசோகராஜன் அவர்களின்
அன்புப்புதல்வனின் திருமண வரவேற்பு விழா 
20/05/2016 அன்று புதுவையில் 
மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

தோழர்கள் ஆர்.கே., சேது..
பட்டாபி.. ஜெயராமன்.. தமிழ்மணி...
மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 
இருந்து வந்த தலைவர்களும் தோழர்களும் 
திரளாகக் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தோழர்.ஜெகன் பெயர் கொண்ட..
அசோகராஜனின் அன்புப்புதல்வனின் 
மணவாழ்வு... சிறந்திட..
அன்போடு வாழ்த்துகிறோம்.
வாழ்க... நலமுடன்...
தோழர். மாலி 
தோழர்.மாலி... 
NFTE  இயக்கத்தின் சாணக்கியர்...
தாயின் பரிவு... தந்தையின் அறிவு..
தன்னகத்தே கொண்ட தன்னலமில்லாத்  தலைவர்...

மே 18ல் பிறந்த.. 
ஜெகனின்  இளையவர்...
சிந்தையில் முதியவர்...
நலமாய் வாழ்ந்திட 
நமது அன்பு வாழ்த்துக்கள்...

Saturday, 21 May 2016

தோழர் ஜெகன் பிறந்ததின விழா 

தோழர்.ஜெகன் பிறந்ததின விழா 17/05/2016 அன்று
 காரைக்குடி NFTE  சங்க அலுவலகத்தில் 
NFTE  இளைஞரணி  ஒருங்கிணைப்பாளர் 
தோழர்.சுபேதார் அலிகான் 
தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

அனைத்து தோழர்களும் தோழர் ஜெகன் பற்றிய 
தங்களது சொந்த அனுபவங்களை 
உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தனர்.

காலத்தால் மறையாத 
தோழர்.ஜெகன் புகழ் ஓங்குக...

Thursday, 19 May 2016

அங்கீகார உத்திரவுகள் 

நடந்து முடிந்த BSNL தொழிற்சங்க 
அங்கீகாரத் தேர்தல் முடிவுகளையொட்டி 
வெற்றி பெற்ற சங்கங்களுக்கான 
அங்கீகார உத்திரவை BSNL நிர்வாகம் 
இன்று 19/05/2016 வெளியிட்டுள்ளது.

50 சதத்திற்கும் குறைவாக...
15 சதத்திற்கும் அதிகமாக..
வாக்குகள் பெற்ற சங்கங்கள் 

அங்கீகாரம் பெறும் முதன்மைச் சங்கம் - BSNLEU 
அங்கீகாரம் பெறும் இரண்டாவது சங்கம் - NFTE BSNL 
அங்கீகார காலம்: 19/05/2016 முதல் 18/05/2019 வரை மூன்று ஆண்டுகள் 

அங்கீகார வசதிகள்:

  • தகவல் பலகை 
  • தொலைபேசி வசதி 
  • மாற்றலில் இருந்து விதிவிலக்கு
  • JCM கூட்டுக்குழுவில் உறுப்பினர் நியமனம் 
  • சிறப்பு சிறு விடுப்பு 
  • சம்பளத்தில் சந்தாப்பிடித்தம் 
  • ஊழியர் சம்பந்தபட்ட உத்திரவுகளின் நகல்களை வழங்குதல்

2 சதத்திற்கும் அதிகமாக...
 7 சதத்திற்கும்  குறைவாக...
வாக்குகள் பெற்ற  
FNTO மற்றும் BTEU  சங்கங்களுக்கு 
கீழ்க்கண்ட வசதிகள் வழங்கப்படும்.

  • தகவல் பலகை 
  • தொலைபேசி வசதி 
  • சம்பளத்தில் சந்தாப்பிடித்தம் 
  • இலாக்கா வளர்ச்சி சம்பந்தமாக கடிதம் எழுதுதல்

JCM கூட்டுக்குழு 

அகில இந்தியஅளவிலும்... 
மாநிலம் மற்றும் மாவட்டங்கள் அளவிலும்...
JCMல் BSNLEUவிற்கு 9 இடங்களும் 
NFTEக்கு 5 இடங்களும் ஒதுக்கப்படும்.

JCM உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின்
உறுப்பினர்களாக இருக்க வேண்டும். 
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் 
மறுசீரமைப்பு செய்யப்படும்போது 
 JCM குழுவும் அதற்கேற்றவாறு 
மறுசீரமைப்பு செய்யப்படும்.

தோழர்களே...
அங்கீகாரம் என்னும் அகங்காரம் கொல்வோம்..
அங்கீகாரம் என்னும் ஆயுதம் கொள்வோம்...
நமது நிறுவனத்தைக் காப்போம்...
நமது நியாயமான உரிமைகளை மீட்போம்...
நாளைய வாழ்விற்கு நல்வழி காண்போம்...
கரித்துக்கொட்டும் காட்சி மாற்றுவோம்...
அங்கீகரித்து... வாழ்வோம்... வளர்வோம்...

Tuesday, 17 May 2016

அகில இந்திய  விருதுகள் 

2015ம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான  
சிறந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  
சிறந்த தொலைபேசி நிலையம் மற்றும் 
சிறந்த வாடிக்கையாளர் மையத்திற்கான 
விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சஞ்சார் சேவா விருது:
1. திரு. அப்துல் ஹமீது - TM - NTP 
2. திருமதி. ரேகா - SR. TOA  - மகராஷ்டிரா 
3. திரு. சுருதி ரஞ்சன் - TTA  - ஒரிசா 
4. திரு.ரவிகாந்த் சின்ஹா - RM  - NTR 
5. திரு. ஆஷுதோஷ் - AO - ஒரிசா 
6. திரு. பிரசாத் ராவ் - DE - ஆந்திரா 

சிறந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 
பட்டியலில் தமிழகம் இடம் பெறவில்லை.

சிறந்த தொலைபேசி நிலைய விருது 
மாவட்டத்தலைநகர்கள் 
1. பிரிவு  I  - கோவை 
2.  பிரிவு  II  - சேலம் 
3.  பிரிவு  III - திருநெல்வேலி 

மேற்கண்ட விருதுகள் அனைத்தும் 
தமிழகத்திற்கே கிடைத்துள்ளன.

சிறந்த வாடிக்கையாளர் சேவை மையம் 
சிவில் லைன் CSC - அகோலா - மகராஷ்டிரா.

அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

Monday, 16 May 2016

மே - 17 - எல்லோரும்... கொண்டாடுவோம்...

மே - 17
மேதினியில் சிறந்த நாள்...
குணத்தில் சிறந்த தலைவனின்...பிறந்த நாள்...
கொள்கையில் சிவந்த தலைவனின்  பிறந்த நாள்...

மே - 17
உலகத்தொலைத்தொடர்பு நாள்... 
உலகின் பொதுவுடைமை தொலைத்தொடர்பு...
உள்ளங்கையில் உலகம் அடக்கியது தொலைத்தொடர்பு..

மே - 17
NFTE  இளைஞர் தினம்...
சிந்தையில் இளமை... செயலில் இளமை...
இளமையின் வடிவம்  NFTE...
  ----------------------------------------------------------------------------------------------------
முப்பொழுதும் மனம் நிறைக்கும் 
முப்பெரும்  விழா 
 -------------------------------------------------------------------------------------------------------
17/05/2016 - செவ்வாய் - மாலை 5 மணி 
NFTE  சங்க அலுவலகம் - காரைக்குடி.

தலைமை 
தோழர்.சுபேதார் அலி கான் 
NFTE -  மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் 

- : பங்கேற்பு :-
முன்னாள் இளைஞர்கள்...
இந்நாள்  இளைஞர்கள்...
எந்நாளும் இளைஞர்கள்... 


எளிமையின் பிறப்பை...
எல்லோரும் கொண்டாடுவோம் ... வாரீர்...

அன்புடன்  அழைக்கும் 
NFTE  மாவட்டச்சங்கம் - காரைக்குடி.

Friday, 13 May 2016

JCM இடங்கள் 

நடந்து முடிந்த சங்க சரிபார்ப்புத் தேர்தல் 
முடிவின் அடிப்படையில்
மொத்தமுள்ள 14 JCM இடங்களில் 
நமது NFTE சங்கத்திற்கு 5 இடங்களும்
BSNLEU சங்கத்திற்கு 9 இடங்களும்  கிடைக்கும்.
மற்றெந்த சங்கமும் 7 சதம் வாக்குகள் பெறாததால்
 JCMல் பங்கேற்க இயலாது.

JCM இடங்கள் கணக்கீட்டு முறை 

NFTE பெற்ற வாக்கு சதவீதம் -           31.97

BSNLEU  பெற்ற வாக்கு சதவீதம் -     49.56

மொத்த சதவீதம்                               -    81.53 

மேற்கண்ட 81.53 சதத்தில்...
INTER-SE RATIO OF VOTE 

NFTE யின் வாக்கு சதவீதம் - 39.21

BSNLEU வின் வாக்கு சதவீதம் - 60.79

7 சத அடிப்படையில்...கிடைக்கும் இடங்கள் 
NUMBER OF CLEAR SEATS

NFTEக்கு கிடைக்கும் இடங்கள் = 5 (5 x 7 = 35)
மீதி -  BALANCE PERCENTAGE OF VOTES = 4.21 ( 39.21 - 35)

7 சத அடிப்படையில்...
BSNLEU விற்கு கிடைக்கும் இடங்கள் = 8 (8 x 7 = 56)
மீதி - BALANCE PERCENTAGE OF VOTES = 4.79 (60.79 - 56)

மீதியில் கூடுதலாகப் பெற்றது BSNLEU  (4.79 > 4.21)
எனவே மீதியுள்ள ஒரு இடமும் BSNLEUவிற்கு அளிக்கப்படும்.

மேற்கண்ட கணக்கீட்டின் அடிப்படையில்...
NFTEக்கு 5 இடங்களும்...
BSNLEUவிற்கு 9 இடங்களும் 
JCMல் ஒதுக்கப்படும்.
முடிந்தது... விடிந்தது.. 
தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள் 

நடந்து முடிந்த சங்க அங்கீகாரத்தேர்தலின் 
அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று 
13/05/2016 வெளியிடப்பட்டுள்ளன. 

31/03/2016 அன்று...
மொத்த வாக்காளர்கள் 164244 ஆகும்.
BSNLEU சங்கம்  31/03/2016க்குப்பின்  
JTO பதவியில் நியமனம் செய்யப்பட்டவர்கள்...
ஓய்வு பெற்ற ஊழியர்கள்..
ஓய்வெடுக்கச்சென்ற ஊழியர்கள்...
இறந்து போன ஊழியர்கள்...
வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றவர்கள் 
மற்றும் காசியாத்திரை சென்றவர்கள்..
ஆகியோரை மொத்த வாக்காளர்கள் 
கணக்கில் இருந்து கழிக்க வேண்டும் 
என கோரிக்கை வைத்தது.  
காரணம் மொத்த வாக்காளர்கள்  கணக்கில் 
50 சதம் வாக்குகளைப் பெற்று விட்டால் 
தான்.. ஒரு சங்கம் மட்டுமே BSNLலில் 
காலத்தைக் கழித்து விடலாம் என்று 
BSNLEU  மனப்பால் குடித்தது. 
மனப்பால் BSNLEUவின்  மகத்தான கோரிக்கை 
நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு  
424 வாக்காளர்கள் கழிக்கப்பட்டு  
மொத்த வாக்காளர்கள் 163820 என்று கணக்கிடப்பட்டு 
அதன் அடிப்படையில்  அதிகாரப்பூர்வ முடிவுகள்
இன்று  வெளியிடப்பட்டுள்ளன.

சில துளிகள்:

மொத்த வாக்காளர்கள்  : 163820

வாக்களித்தவர்கள் - 153840

வாக்களிக்காதவர்கள் - 9980 - 6.1 சதம்

செல்லாத வாக்குகள்  - 1395

செல்லுபடியான வாக்குகள் - 152445

NFTE - 52637 - 31.97 சதம் 

BSNLEU - 81195 - 49.56

FNTO - 8697 - 5.31 சதம் 

BTEU BSNL - 4846 - 2.96 சதம் 

எந்த சங்கமும் 50 சதத்திற்கும் மேல் வாக்குகள் பெறாததால்...
15 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்ற 
NFTE மற்றும் BSNLEU சங்கங்கள் 
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பாவம் FNTO...
7 சத வாக்குகளைப் பெற முடியாமல்
5.31 சதமே வாக்குப்பெற்றதால் 
JCMல் ஒரு இடத்திற்கு கூட வழியில்லாமல் போனது.

FNTO சங்கம் பெற்ற வாக்குகளை விட 
வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகம் 
என்பது வருத்தத்துடன் குறிப்பிடத்தக்கது.

தோழர்களே...
BSNLEU  சங்கத்திற்கு...
50 சதப் பெரும்பான்மை  கிடைக்காமல்... 
BSNLEU வின்  ஒரே சங்க கனவு கலைந்து விட்டது...


இத்தோடு....

முடிந்தது.. 
BSNLEUவின் ஒரே சங்கக்கனவு..

விடிந்தது... 
BSNL ஊழியர் வாழ்வு...

Thursday, 12 May 2016

அகில இந்தியத் தேர்தல் முடிவுகள் 

அகில இந்திய அளவில் 
மொத்த வாக்குகள் 164244

மொத்த வாக்குகளில்.. 
நமது  NFTE  சங்கம் 
52167 வாக்குகளைப் பெற்று 
31.7 சதமும் 

BSNLEU  சங்கம் 
81150 வாக்குகளைப் பெற்று
49.4 சதமும் பெற்றுள்ளன.

BSNLEU சங்கம் 50 சதத்தை அடையவில்லை.

அதனால்...
BSNL நிறுவனமும்... BSNL  ஊழியர்களும் 
பெரும் பேராபத்திலிருந்து தப்பியுள்ளனர்.


பேராபத்தில் இருந்து 
தப்பிப்பிழைத்துக்கொண்ட 
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

Election-2016
Sl.No.
Circle   
Total Votes
NFTE 
%
BSNLEU
%
1
A&N
152
70
46.05
73
48.03
2
AP
19046
6326
33.21
9631
50.57
3
ALT
95
51
53.68
32
33.68
4
AS
3476
439
12.63
2636
75.83
5
BH
4763
1941
40.75
1314
27.59
6
CO
479
151
31.52
91
19.00
7
CH.TD
6060
2531
41.77
2207
36.42
8
CHG
1376
756
54.94
513
37.28
9
GJ
13752
4605
33.49
5386
39.17
10
HP
2382
755
31.70
1324
55.58
11
HR
3398
1435
42.23
1563
46.00
12
J&K
1654
703
42.50
738
44.62
13
JH
2173
1098
50.53
406
18.68
14
KTK
12466
4273
34.28
6481
51.99
15
KR
9941
631
6.35
6370
64.08
16
CATD
5637
215
3.81
3501
62.11
17
MP
6733
2354
34.96
3757
55.80
18
MH
16221
4948
30.50
8022
49.45
19
NE-I
1368
65
4.75
1112
81.29
20
NE-II
1175
114
9.70
846
72.00
21
NTR
971
491
50.57
205
21.11
22
OR
2845
1101
38.70
1337
46.99
23
PB
5702
2115
37.09
2934
51.46
24
RAJ
7736
2488
32.16
4228
54.65
25
TN
12126
5584
46.05
4976
41.04
26
UP (E)
8612
3138
36.44
3410
39.60
27
UP (W)
5422
2077
38.31
2734
50.42
28
UTL
1551
411
26.50
863
55.64
29
WB
5083
738
14.52
3497
68.80
30
T&D
46
3
6.52
35
76.09
31
TFJ
485
174
35.88
241
49.69
32
TFCA
586
180
30.72
341
58.19
33
TFM
516
193
37.40
198
38.37
34
TS
146
9
6.16
99
67.81
35
BRBAIT
70
4
5.71
49
70.00

 TOTAL
164244
52167
31.76
81150
49.41