Tuesday, 31 October 2017

மூன்று நாள் முற்றுகைப்போர்…

மத்திய அரசின் தொழிலாளர் 
விரோதப் போக்கை கண்டித்து
நவம்பர் 9 10 11 தேதிகளில்…
தலைநகர் டெல்லியில்...

12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி….
அனைத்து மத்திய சங்கங்கள் பங்கேற்கும்…

மூன்று நாள் முற்றுகைப்போர்…

உணர்வோடு பங்கு பெறுவோம்….
நம் உரிமைகளை மீட்டிடுவோம்….
வாரீர்... தோழர்களே...
 -----------------------------------------------------------------------------------
தோழர்கள் தங்குமிடம்
தோழர்கள் தங்குவதற்காக NFTE மத்திய சங்கம்
 கீழ்க்கண்ட தங்குமிடத்தை ஏற்பாடு செய்துள்ளது. 
வெளியூர்த்தோழர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அகில பாரத இந்து மகா சபா...
மந்திர் மார்க்….புது டெல்லி.

தங்குமிடம் புதுடெல்லி இரயில் நிலையத்தில் இருந்து 
ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 
நவம்பர் 8 & 9 இரண்டு நாட்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொடர்புக்கு : 011-23365138

Friday, 27 October 2017

மாநில கருத்தரங்குகள்

மிழக அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு
மாநிலம் தழுவிய கருத்தரங்குகள்

மத்திய அரசின் மக்கள் விரோத… 
தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து 
நவம்பர் 9,10,11 தேதிகளில் நடைபெறும் 

நாடாளுமன்ற முற்றுகை 
விளக்க கருத்தரங்கம்

29/10/2017 – ஞாயிறு – மாலை 3 மணி
HMS சங்க அலுவலகம் – எழும்பூர் – சென்னை.

30/10/2017 – திங்கள் மாலை 3 மணி
SRMU சங்க அலுவலகம் – ரயில் சந்திப்பு நிலையம் – திருச்சி.

தோழர்களே… வாரீர்…

Thursday, 26 October 2017

மணக்கட்டும்… மதுரை... 

மதுரை…
மல்லிகைக்கும்...பெயர் பெற்றது…
மல்லுக்கும்... பெயர் பெற்றது...

பல்வேறு காரணங்களால்…
மதுரை
NFTE மாவட்டச்சங்கம் தொடர்ந்து
மனக்குமுறலுக்கு ஆளானது…
காலவரையற்ற போராட்டத்திற்கு தயாரானது…
மாவட்ட நிர்வாகம் மல்லுக்கு நின்றது…
கூடவே மாற்றுச்சங்கமும் வரிந்து கட்டியது…
மாநிலச்சங்கம் தலையிட்டது…
மாநில நிர்வாகம் வழிகாட்டியது….

இரண்டு சங்கங்களையும் அழைத்துப் பேசியது
மதுரை மாவட்ட நிர்வாகம்…

ஒருதலைப்பட்சம் தனக்கு இல்லை….
நடுநிலையே தனது நிலை என்பதை..
ஆக்கப்பூர்வமான தனது அணுகுமுறையால்
மதுரை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது…

இது.. வடகிழக்குப் பருவமழைக்காலம்….
இதோ… மதுரையிலே வெப்பம் தணிகிறது…
இதமாய்... தோழமை துளிர் விடுகின்றது…

NFTE என்னும் பாரம்பரியச்சங்கமும்…
BSNLEU என்னும் பெரும்பான்மைச்சங்கமும்…
தோழமையோடு நின்று… கரம் கோர்த்து…
தொழிலாளர் துயர் தீர்க்கும் நிலை உருவாகிறது…

நமது நிறுவனமாம் BSNL காத்திட வேண்டும்…
தொழிலாளர் உரிமைகளை வென்றிட வேண்டும்…
மக்கள் விரோத அரசுகளை அகற்றிட வேண்டும்…
இந்த திசைவழியில்… 
NFTE மதுரை மாவட்ட சங்கம்…
தோழமையுடன் அனைவருடன் கரம்கோர்த்து
தொடர்ந்து நடைபோடும்…. என்று நம்புகிறோம்…

NFTEன் மாண்பை… மரபைக் காக்க..
மதுரை மாவட்டச்சங்கம் பாடுபடவேண்டும்….
இதுவே நமது வேண்டுகோள்… விழைவு…
மணக்கட்டும்….. மதுரை… மல்லிகையாய்…

வாழ்த்துக்களுடன்…
NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்….

Tuesday, 24 October 2017

அமைதி வழியில் மதுரை…
24/10/2017 அன்று மதுரைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் திட்டமிடப்பட்டிருந்தது. 

உண்ணாவிரதம் துவங்கும் முன்பே மதுரை துணைப்பொதுமேலாளர் திரு.சந்திரசேகரன் அவர்கள் தோழர்களை சந்தித்து 25/10/2017 அன்று BSNLEU – NFTE இணைந்த பேச்சுவார்த்தையை மாவட்ட நிர்வாகம் நடத்தவிருப்பதாகவும், பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் எழுத்துப்பூர்வமாகவும் வேண்டுகோள் விடுத்தார். எனவே மதுரைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்ட நிர்வாகத்தின் 
ஆக்கப்பூர்வமான அணுகுமுறைக்கு நமது நன்றி.
 பல்வேறு மாவட்டங்களிலும் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு நல்கிய முன்னணித்தோழர்களுக்கும் நமது நன்றி. இன்றைய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முறையில் நடைபெற்று அமைதிவழியில் பிரச்சினைகளைத் தீர்த்திடும் என நம்புவோம்.

Sunday, 22 October 2017

மதுரை மாவட்டப்போராட்டம்

அன்று...
வளையாத செங்கோலுக்குப் 
பெயர்பெற்றது பழம்பெரும் மதுரை…

இன்றோ...
BSNLன் மதுரை...
தனது  உத்திரவுகளை… 
நிர்வாக நடைமுறைகளை…
தனது  வசதிக்கு… 
தனக்கு வேண்டியவர்  சதிக்கு...
வளைப்பதற்குப் பெயர் பெற்றுள்ளது…

வலுத்தவன் கண்ணில் வெண்ணெய்…
இளைத்தவன் கண்ணில் சுண்ணாம்பு…
இதுதான்...
இன்றைய மீனாட்சியின் தேனாட்சி...
இதுதான்...
இன்றைய மதுரை மாவட்ட நிர்வாகம்… 

எனவே மதுரை மாவட்டத்தின்…
ஒருதலைப்பட்ச...  
நிர்வாக நடைமுறையை எதிர்த்து…
பாரபட்ச அணுகுமுறையைக் கண்டித்து…

மதுரைப் பொதுமேலாளர் 
அலுவலகம் முன்பாக 
24/10/2017 - செவ்வாய்  காலை 10 மணி  முதல் 

காலவரையற்ற
உண்ணாவிரதப்போராட்டம்

தென்பகுதி மாவட்டச்செயலர்கள்...
மாநிலச்சங்க நிர்வாகிகள்...
மற்றும் முன்னணித் தோழர்கள்...
பங்கேற்பு...

மதுரை செல்வோம்...
சாயும் தராசு முள்ளை...
சரி செய்வோம்...

மதுரை செல்வோம்...
சார்பற்ற அணுகுமுறையை
 உறுதி செய்வோம்...

மதுரை செல்வோம்...
நீதியை...  நியாயத்தை...
நிலை நிறுத்துவோம்...

உணர்வோடு... உறுதியோடு...
வாரீர்…. தோழர்களே…
தொடரும்… முத்தரப்பு பேச்சுவார்த்தை… 
20/10/2017 அன்று சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை 
NFTCL சார்பாக ஒப்பந்த ஊழியர்களின் 
கீழ்க்கண்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி
நாம் வேலைநிறுத்த அறிவிப்பு செய்திருந்தோம்.

  • குறைந்தபட்ச போனஸ் ரூ.7000/=
  • ஊதியத்துடன் கூடிய வார விடுப்பு
  • ஆண்டுதோறும் 15 நாள் விடுமுறை
  • 7ம்தேதி சம்பளப்பட்டுவாடா
  • அடையாள அட்டை
  • திறனடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பளம்
  • காலியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களைப் பணியமர்த்துதல்..


 நமது வேலைநிறுத்த அறிவிப்பையொட்டி 20/10/2017 அன்று சென்னையில் உதவித்தொழிலாளர் ஆணையர் திரு.அண்ணாத்துரை அவர்கள் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழ்மாநில நிர்வாகத்தின் சார்பாக உதவிப்பொதுமேலாளர் திரு.இராஜசேகரன் கலந்து கொண்டார்.

NFTCL சார்பாக...
மாநிலத்தலைவர் தோழர்.பாபு,
மாநிலப்பொருளர் தோழர்.சம்பத்,
உதவிப்பொருளர்.தோழர்.இரத்தினம்
NFTE சென்னை மாநில உதவிச்செயலர் தோழர்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்கெல்லாம் போனஸ் வழங்கப்படவில்லை…
எங்கெல்லாம் அடையாள அட்டை வழங்கப்படவில்லை…
எந்தெந்த ஊர்களில் சம்பளம் என்ன தேதிகளில் வழங்கப்பட்டது…
எங்கெல்லாம் விடுப்பு வழங்கப்படவில்லை…
என்பது பற்றி தொழிலாளர் ஆணைய அலுவலகத்திற்கு
NFTCL சார்பாக விரிவான தகவல் அளிக்கப்பட வேண்டும்.
அதனடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என உதவித்தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அனைத்துப்பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என
BSNL நிர்வாகத்தின் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்சப் போனஸ் வழங்குவது,
உரிய தேதிகளில் சம்பளம் வழங்குவது…
திறனடிப்படையில் கூலி வழங்குவது…
போன்ற முக்கிய கோரிக்கைகள் 
இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. 

எனவே சட்டரீதியான அடுத்த கட்ட நடவடிக்கைக்கும்...
போராட்டத்திட்டத்திற்கும் நாம் தயாராவோம் தோழர்களே….

Tuesday, 17 October 2017

தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்
deepavali animation greetings க்கான பட முடிவு
அனைவருக்கும்  
தீபத்திருநாள்  
நல்வாழ்த்துக்கள் 
TTA இலாக்காத்தேர்வு

2016ம் ஆண்டு காலியிடங்களுக்கான JE (TTA) இலாக்காத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு CORPORATE அலுவலகத்தால் 16/10/2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தக்காலியிடங்கள் – 8834
தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள் = 774
OC/OBC பிரிவு = 591... SC பிரிவு=122... ST பிரிவு= 61
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் – 15/12/2017
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 15/01/2018
தேர்வு நடைபெறும் நாள் : 28/01/2018
தேர்வு ONLINE முறையில் நடைபெறும்.
தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.
தேர்வு OBJECTIVE ரகம்.
தவறான பதிலுக்கு ¼ மதிப்பெண் குறைக்கப்படும். (NEGATIVE MARKS)

01/07/2016 அன்று வயது 55க்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது
இரண்டாண்டு ITI தேர்ச்சி அல்லது 3 ஆண்டு DIPLOMA தேர்ச்சி.

01/07/2016 அன்று 5 ஆண்டு சேவைக்காலம் இருக்க வேண்டும்.
ரூ.9020 – 17430 சம்பள விகிதத்தில் இருக்க வேண்டும்.
அதற்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
TTA சம்பளத்திற்கு சமமான சம்பளவிகிதத்தில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்தகைய ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு உயர்வுத்தொகை மட்டும் வழங்கப்படும்.


தோழர்கள் தேர்வுக்குத் தயாராகவும்….

Monday, 16 October 2017

கந்தக மலர்கள்

காகிதங்களில் கல்வியை அறிந்ததில்லை…
காகிதங்களில் கந்தகமே அறிந்தோம்…

கந்தகம் எரிந்தால்தான்…
காந்துகின்ற எங்கள் வயிறு அணையும்…

புத்தகங்களை நாங்கள் புரட்டியதில்லை….
கந்தகங்களே எங்கள் வாழ்வைப் புரட்டிப்போடும்…

நாடாள்வோர்... 
நமத்துப்போன பட்டாசாகிப் போனபின்…
நாங்கள் யாரிடம் சொல்வோம்… செல்வோம்…
உணர்வோடு நடைபெற்ற
ஒன்றுபட்ட ஆர்ப்பாட்டம்
காரைக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 

இராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 
 
சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 
16/10/2017 அன்று அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்
 காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தில்
 காரைக்குடி, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை
  ஆகிய இடங்களில் மிக்க எழுச்சியோடு நடைபெற்றது. 
கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

Sunday, 15 October 2017

 அனைத்து சங்க ஆர்ப்பாட்டம் 

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL
BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
செல்கோபுரங்கள் தனி நிறுவனம்
துவங்குவதை நிறுத்தக்கோரி…

  BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 
3வது ஊதியமாற்றத்தை உடனடியாக அமுல்படுத்தக்கோரி….
----------------------------------------------------------------
நாடு தழுவிய
ஆர்ப்பாட்டம்
16/10/2017 – திங்கள் – மாலை 05 மணி.
----------------------------------------------------------------
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள்

கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம் – காரைக்குடி
பங்கேற்பு : தோழர்கள்
A.பாண்டியன் - மாவட்டச்செயலர் – SNEA
V.மோகன்தாஸ் – மாவட்டச்செயலர் - AIBSNLEA
G.முத்துக்குமரன் - மாவட்டச்செயலர் – FNTO
M.பூமிநாதன் - மாவட்டச்செயலர் – BSNLEU
B.லால்பகதூர் – மாவட்டத்தலைவர் – NFTE

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
பங்கேற்பு : தோழர்கள்
P.வெங்கடேசன் – மாவட்டத்தலைவர் - AIBSNLEA
K.தமிழ்மாறன் – மாவட்ட உதவிச்செயலர் - NFTE
S.தவசிமணி - மாவட்ட உதவிச்செயலர் - SNEA
S.கூரி குணராஜன் - மாவட்ட உதவிச்செயலர் – BSNLEU
N.குமார் - கிளைச்செயலர் – FNTO

தொலைபேசி நிலையம் – சிவகங்கை
பங்கேற்பு : தோழர்கள்
V.மாரி – மாவட்டச்செயலர் – NFTE
K.குமரேசன் – மாவட்ட செயற்குழு உறுப்பினர் – SNEA
S.ஆறுமுகம் – கிளைச்செயலர் – FNTO
P.இரவி – மாவட்ட உதவிச்செயலர் – BSNLEU


தோழர்களே… அணி திரள்வீர்…

Friday, 13 October 2017

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL
BSNL அனைத்து சங்கக் கூட்டமைப்பு

BSNL அனைத்து சங்கங்களின் கூட்டம் 13/10/2017 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் AIBSNLEA மாவட்டச்செயலர் தோழர்.V.மோகன்தாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்ட முடிவுகள்

16/10/2017 அன்று நடைபெறவுள்ள 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை
இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய வருவாய் மாவட்டத்தலைநகர்களிலும்…
SSA தலைநகராகிய காரைக்குடியிலும் 
மாலை நேரத்தில் நடத்துவது.

நமது போராட்டம் மக்களைச் சென்றடையும் வகையில் பத்திரிக்கைகளில் செய்திகளை வெளியிடச்செய்வது.

16/11/2017 மனிதச்சங்கிலி இயக்கத்தை மிகத்திரளான  ஊழியர்கள் பங்கேற்பில் நடத்துவது. ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும்
 ஒப்பந்த ஊழியர்களையும் இணைத்துக்கொள்வது.

மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு மாவட்டம் முழுமையும் 
விளம்பரம் செய்வது... விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

டிசம்பர் 12… 13 இரண்டுநாட்கள் வேலை நிறுத்தத்தை 
முழுமையான முறையில் நடத்துவது.

கூட்டமைப்பு நிர்வாகிகள்

தலைவர்
V.மாரி – மாவட்டச்செயலர் - NFTE

உதவித்தலைவர்  
V.மோகன்தாஸ் – மாவட்டச்செயலர் - AIBSNLEA

செயலர்
M.பூமிநாதன் – மாவட்டச்செயலர் – BSNLEU

உதவிச்செயலர்
A.பாண்டியன் – மாவட்டச்செயலர் – SNEA

பொருளர் 
G.முத்துக்குமரன் – மாவட்டச்செயலர் – FNTO

Thursday, 12 October 2017

ஒப்பந்த ஊழியர் போராட்டம்

ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 
திருச்சியில் 02/10/2017 அன்று  நடைபெற்ற NFTCL  கோரிக்கை மாநாட்டில்... 10/10/2017 அன்று தமிழகம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்திடவும்... 16/10/2017  முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்திடவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. 

அதனடிப்படையில் 04/10/2017 அன்று NFTCL சார்பாக 
வேலைநிறுத்தக் கடிதம் நிர்வாகத்திற்கும்... 
DY.CLC தொழிலாளர் ஆணையர் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.  உடனடியாக பிரச்சினைகளைத் தீர்க்கச்சொல்லியும்...
 13/10/2017க்குள் உரிய தகவல் அளிக்கச்சொல்லியும்... 
தொழிலாளர் ஆணையர் 06/10/2017 அன்று 
BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். 
10/10/2017 அன்று நமது வேலைநிறுத்தக்கடிதம் சம்பந்தமாக DY.CLC  நம்மை அழைத்திருந்தார். 

NFTCL தமிழ்மாநிலச்சங்கம் சார்பாக
 மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன், மாநில செயல்தலைவர் தோழர்.மாரி ஆகியோர் DY.CLC... RLC மற்றும் ALC ஆகிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர். 

ஒப்பந்த ஊழியர்களது கோரிக்கைகள் சட்டப்படி நியாயமானது என்றும்... அதனை BSNL நிர்வாகம் நிறைவேற்ற வேண்டியது அவர்களது கடமை என்றும்... தங்களது அலுவலகம் அதனைக் கண்காணித்து வருவதாகவும் தொழிலாளர் ஆணையர் கூறினார். மேலும் அமைச்சருடன் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், தற்போதைய RLC பதவி உயர்வில் பெங்களூரு செல்வதாலும் உடனடியாக நிர்வாகத்தை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திட இயலாத சூழல் இருப்பதை உணர்த்தினார். எனவே நம்முடைய போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனை எழுத்துப்பூர்வமாகவும் நமக்கு கொடுத்தார். 

எனவே நமது 16/10/2017 முதல் திட்டமிடப்பட்டிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுகின்றது. ஒப்பந்த ஊழியர்களது கோரிக்கைகள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன 
என்பதைப் பொறுத்து... முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் 
நமது அடுத்த கட்டப்போராட்டம் அமையும். 

இதனிடையே தமிழ் மாநில நிர்வாகம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்திடக்கோரி மாவட்ட நிர்வாகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. NFTCL  மாவட்டச்சங்கப் பொறுப்பாளர்களும்... 
மாநிலச்சங்க நிர்வாகிகளும் தங்களது பகுதியில் ஒப்பந்த ஊழியர்கள்  
பிரச்சினைகள் தீர்விற்காக கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.  
NFTE
மாவட்டச்செயற்குழு
14/10/2017 – சனிக்கிழமை - காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி

பணி நிறைவு பாராட்டு
தோழர்கள்…

S.கணேசன் 
TT காரைக்குடி

M.நாகநாதன் 
TT தேவகோட்டை

K.கண்ணன்
TT பரமக்குடி

P.அரியமுத்து
TT அழகன்குளம்

A.ஜேம்ஸ் மாத்யூ
TT இராமநாதபுரம்

S.கணேசன்
DRIVER இராமநாதபுரம்

R.வரதராஜன்
JE கீழக்கரை

M.ஈஸ்வரன்
TT இராமேஸ்வரம்

சிறந்த ஊழியர் விருது பாராட்டு

தோழர்.V.மணி 
OS காரைக்குடி.

: பாராட்டுரை
தோழர். K.அசோகராஜன்
NFTCL அகில இந்தியத்துணைத்தலைவர்


தோழர்களேவாரீர்...