Sunday 8 October 2017

அவனொரு ஏசுபிரான்…
அக்டோபர் – 9
தோழர்.சே குவேரா
50வது நினைவு தினம்
  
அர்ஜென்டினாவில் பிறந்தான்…
மருத்துவர் பட்டம் பெற்றான்….
மனித நோயை விட..
மானுட நோயே கொடியதென..
மனதில் உறுதியாய்த் தெளிந்தான்…

லத்தீன் அமெரிக்காவை வலம்வந்தான்…
அடிமை நோயை விரட்டிட….
அல்லும் பகலும் உழைத்தான்…
கியூபாவை விடுவித்தான்…
பதவிகளைத் துச்சமெனெ துறந்தான்…
காங்கோவில் களமிறங்கினான்…
காலம் அவனுக்கு கைகொடுக்கவில்லை…
பொலிவியாவில் போருக்குச் சென்றான்…

தலைவர்களால் கைவிடப்பட்டான்…
தரித்திரங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டான்….

1967 அக்டோபர் – 9…
பொலிவிய மண்ணில்…
தன் புகழுடம்பு சாய்த்தான்…

எங்கெல்லாம் அநீதி எழுகிறதோ….
அங்கெல்லாம் புரட்சி எழட்டும்….
எனப் புரட்சிக்குரல் கொடுத்த…
சென்ற நூற்றாண்டின் மகத்தான
தலைவன்… புரட்சியாளன்…
சேகுவேரா நினைவைப் போற்றுவோம்…

No comments:

Post a Comment