Sunday, 25 November 2018


வேலை நிறுத்த விளக்கக்கூட்டம் 

26/11/2018 – திங்கள் காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி
மற்றும் தொலைபேசி நிலையம் - பரமக்குடி 
--------------------------------------------------------------------------------
மாலை 03 மணி
தொலைபேசி நிலையம் - சிவகங்கை
மற்றும் தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம் 
------------------------------------------------------------------------------------
அனைத்து தோழர்களும்
வேலை நிறுத்த விளக்கக் கூட்டத்தில்
திரளாய்ப் பங்கேற்க அன்புடன்  அழைக்கின்றோம்…

அனைத்து சங்க கூட்டமைப்பு – காரைக்குடி.

தாங்க இயலா துயரம்….

தேவிபட்டினம் தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர். R.நாகராஜன் TELECOM TECHNICIAN
இன்று 25/11/2018 மதுரையில் மரணமடைந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக மழைநேரத்தில்
இருசக்கர வாகனப் பயணத்தின்போது நின்று கொண்டிருந்த 
லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானார். 
தலையில் காயம் ஏற்பட்டு
மதுரை ஹன்னா ஜோசப் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  

கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஏறத்தாழ 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.
மதுரை ஹன்னா ஜோசப் மருத்துவமனை
அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை என்பதால்
தங்களது சொந்த செலவில்
தோழர் நாகராஜன் குடும்பத்தினர் சிகிச்சை மேற்கொண்டனர்.

மிகுந்த பொருட்செலவு செய்தும்
அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
பணியில் உள்ள BSNL ஊழியர்கள் மரணமுற்றால்
LIC மூலம் ஒரு லட்சம் ஆயுள்காப்பீடு வழங்கப்படுகின்றது.

விபத்து ஏற்பட்டு 15 நாளைக்குள் இறந்தால்
மூன்று லட்சம் இழப்பீடு வழங்கப்படுகின்றது.
தோழர் நாகராஜன் 2 மாதம்  கழித்து இறந்திருப்பதால்
மூன்று லட்சம் இழப்பீடு கூட கிடைக்காது.
LICயுடனான ஆயுள் காப்பீட்டு உடன்பாடு
சுத்தப் பைத்தியக்காரத்தனமான ஒரு உடன்பாடு
என்பதில் எந்தவித சந்தேகமும் நமக்கு இல்லை…

20 லட்சம் கடன் வாங்கிச் செலவு செய்தும்…
தோழர் நாகராஜனின் உயிரைக் காப்பாற்ற முடியாத
அவரது குடும்பத்தினர் மருத்துவப் பில்களை
பட்டுவாடா கோரி சமர்ப்பணம் செய்தால்
ஆயிரத்தெட்டு கேள்விகள் கிளர்ந்தெழும்…
வெந்து போயுள்ள அவரது குடும்பத்தினர்
மேலும் நொந்து நூலாவார்கள் என்பது சர்வ நிச்சயம்…
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவபில் இழுத்தடிக்கப்படும்…
20 லட்சம் பில்லுக்கு 2 லட்சம் பட்டுவாடா செய்யப்படுமா
என்பது கூட கேள்விக்குறிதான்…
நமது கடந்த கால கசப்பான அனுபவங்கள்
அப்படித்தான் சொல்கின்றன….

தோழர் நாகராஜன் வாழ்வில் விதி விளையாடியது…
இனி அவரது மருத்துவ பில்களிலும் விதி விளையாடும்…
எனவே ஒரு விதி விளையாட்டு இல்லாத
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை…
உருவாக்க வேண்டியது நமது கடமையாகின்றது….

கடமை உணர்வும் கண்ணியமும் மிக்கத்
தோழர் நாகராஜனது மறைவு தாங்க முடியாத சோகமாகும்.
தோழர் நாகராஜனது நினைவு என்றும் நம் 
தோழர்கள் நினைவை விட்டு அகலாது.
நமது வேதனை மிக்க அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்…
விபத்தில் இறந்து அகால மரணமடையும்
தோழர்களின் குடும்பங்களுக்கு
உரிய இழப்பீடு  கிட்ட வகை செய்வோமேயானால் 
அதுவே நாகராஜன் போன்ற தோழர்களுக்கு
நாம் செலுத்தும் அஞ்சலியாகும்…

Friday, 23 November 2018


நவம்பர் – 24… 64வது சம்மேளன தினம்

சங்கங்கள் இணைந்தன…
சங்கடங்கள் அகன்றன…
வேதனைகள் தொலைந்தன..
சாதனைகள் பிறந்தன…

கரங்கள் உயர்ந்தன…
சிரங்கள் நிமிர்ந்தன…
காக்கும் கரங்களைக் காத்திடுவோம்..
இணைந்த கரங்களை போற்றிடுவோம்…

என்றென்றும் போற்றுவோம்…
நம் NFTE புகழ் பாடுவோம்…
 -------------------------------------------------------------------------------
சம்மேளன தினக்கொடியேற்றம்

24/11/2018 – சனிக்கிழமை – மாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

தலைமை 
தோழர். அ.சேக் காதர்பாட்சா
காரைக்குடி கிளைத்தலைவர்

கொடியேற்றம்
தோழர் ம.ஆரோக்கியதாஸ்
காரைக்குடி கிளைச்செயலர்

சிறப்புரை
தோழர். பா.லால்பகதூர்
மாவட்டத்தலைவர்…

நன்றியுரை
தோழியர். லெ.பாண்டியம்மாள்
காரைக்குடி கிளைப்பொருளர்..

தோழர்களே… வருக…

உடனே நீளட்டும்… உதவிக்கரங்கள்… 

சோறுடைத்த சோழபூமி இன்று..
சோதனையில் தவித்து நிற்கின்றது…
அறச்சீற்றத்தினும் வலியது…
அமைதியிழந்த இயற்கைச்சீற்றம்…
உதவுவது நம் தலையாய கடமை…

எனவே கோவை மாநிலச்செயற்குழு
பாதிக்கப்பட்ட தஞ்சை,நாகை,திருவாரூர்..
காரைக்கால்,வேதாரண்யம்,திருத்துறைப்பூண்டி
பகுதிகளுக்கு உடனடியாக உதவிட வேண்டுகோள் விடுத்தது…
அனைத்து மாவட்டங்களும் தங்களது பங்களிப்பை
உடனடியாக செய்து முடித்துள்ளன.

கூடுதல் பங்களிப்பை உணர்வுப்பூர்வமாக
உடனடியாகச் செய்து முடித்த
கடலூர் குடந்தை மாவட்டங்களுக்கு நமது வாழ்த்துக்கள்…

நாமும் நமது பங்கினைச் செலுத்திட வேண்டும்…
எனவே  காரைக்குடி NFTE – AITUC சங்கங்கள் இணைந்து
திருத்துறைப்பூண்டி பகுதி மக்களுக்கு
நிவாரணப்பொருட்கள் அளித்திடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
நாளை 25/11/2018 ஞாயிற்றுக்கிழமை லாரியில் நிவாரணப்பொருட்கள் திருத்துறைப்பூண்டி கொண்டு செல்லப்பட்டு
நமது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தோழர்.உலகநாதன் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

தோழர்கள் தங்கள் பங்களிப்பை 
பொருட்களாக தந்து உதவிட வேண்டும்.
போர்வைகள்,கைலிகள்,துண்டுகள்,சேலைகள்,
வேட்டிகள்,நைட்டிகள் மற்றும் அரிசி,பருப்பு போன்ற உணவுப்பொருட்களாக அளித்திட வேண்டும்.
பழைய துணிகளைத் தவிர்க்கவும்….

நாளை மதியத்திற்குள் தோழர்கள் தங்களது பங்களிப்பை
NFTE சங்க அலுவலகத்தில் சேர்த்து விட வேண்டும்…
இராமநாதபுரம்,பரமக்குடி பகுதி தோழர்கள்
தங்கள் பங்களிப்பை 26/11/2018 அன்று
மாநிலச்செயலர் தோழர்.நடராஜன் அவர்களின் 
வருகையின்போது  அளித்திட வேண்டும்…
கிளைச்செயலர்கள் உரிய கவனம் செலுத்திட வேண்டுகின்றோம்…

Wednesday, 21 November 2018


அறவழிப் போராட்டம் வெல்லட்டும்… 


ஓய்வூதிய மாற்றம் கோரி…
உண்ணாவிரதம் மேற்கொள்ளும்…
ஓய்வு பெற்ற மூத்த தோழர்களின்…
அறவழிப்போராட்டம்
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்…

NFTE மாவட்டச்சங்கம் - காரைக்குடி.

Tuesday, 20 November 2018


வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்.. 
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

4G அலைக்கற்றை… 
ஊதிய மாற்றம்…
ஓய்வூதிய மாற்றம்…
ஓய்வூதியப்பங்களிப்பில் மாற்றம் கோரி…

BSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்...
டிசம்பர் 3 முதல் நாடுதழுவிய
காலவரையற்ற வேலைநிறுத்தம்

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தில்…
காரைக்குடி, சிவகங்கை,பரமக்குடி மற்றும்
இராமநாதபுரம் ஆகிய நான்கு இடங்களில்... 
வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்

26/11/2018 – திங்கள்கிழமை – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
 தலைமை : தோழர்.பூமிநாதன் – BSNLEU

பங்கேற்பு:
தோழர்.லால்பகதூர் – NFTE
தோழர்.பிரான்சிஸ் – SNEA
தோழர்.யுவராஜ் – AIBSNLEA
தோழர்.நாகேஸ்வரன் – AIBSNLPWA
தோழர்.இராதாகிருஷ்ணன் – AIBDPA
தோழர்.முருகன் – NFTE CLU
----------------------------------------------------------------------------------------
மாலை 03 மணி- தொலைபேசி நிலையம் – சிவகங்கை
 தலைமை : தோழர்.குமரேசன் – SNEA

பங்கேற்பு
தோழர்.முருகன் – NFTE
தோழர்.ஆனந்த் - AIBSNLEA
தோழர்.ரவி – BSNLEU
தோழர்.சந்திரன் – AIBSNLPWA
தோழர்.தர்மராஜ் – NFTE CLU

காரைக்குடி மற்றும் சிவகங்கையில்... சிறப்புரை

 தோழர்.பாபு 
மாநில உதவிச்செயலர் BSNLEU

 தோழர்.காமராஜ் 
மாநில உதவிச்செயலர் AIBSNLEA
---------------------------------------------------------------------------------------- 
காலை 10 மணி - தொலைபேசி நிலையம் – பரமக்குடி
 தலைமை : தோழர்.மாரி – NFTE

பங்கேற்பு 
தோழர்.தியாகராஜன் – SNEA
தோழர்.தமிழரசன் – NFTE
தோழர்.கூரிகுணராஜன் – BSNLEU
தோழர்.இராமசாமி – AIBSNLPWA
தோழர்.மோகன் – NFTE CLU
------------------------------------------------------------------------------------------
மாலை 03 மணி – தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
தலைமை : தோழர்.வெங்கடேசன் – AIBSNLEA

பங்கேற்பு
தோழர்.அரியமுத்து NFTE
தோழர். பிரேம்குமார் BSNLEU
தோழர்.தவசிமணி SNEA
தோழர்.இராமமூர்த்தி AIBSNLPWA
தோழர்.ஆறுமுகம் TNTCWU
தோழர்.தங்கராஜ் – NFTE CLU

பரமக்குடி மற்றும் இராமநாதபுரத்தில்... சிறப்புரை
தோழர்.நடராஜன்  
மாநிலச்செயலர் NFTE
 ------------------------------------------------------------------------------------
தோழர்களே….
டிசம்பர் 3 காலவரையற்ற
வேலை நிறுத்த விளக்க கூட்டத்தில்…
அதிகாரிகள்…. ஊழியர்கள்…
ஓய்வு பெற்ற ஊழியர்கள்…
ஒப்பந்த ஊழியர்கள் என
அனைவரும் அணி திரள்வீர்…

அனைவரையும் அறைகூவி அழைக்கும்…
வெ.மாரி – தலைவர்...
மு.பூமிநாதன் – ஒருங்கிணைப்பாளர்...
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு – காரைக்குடி…

Wednesday, 14 November 2018


மாநாடு வெல்ல வாழ்த்துக்கள் 

AIBSNLPWA
அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம்
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
 -----------------------------------------------------------------------------
மாவட்ட மாநாடு
15/11/2018 – வியாழன் – காலை 10 மணி
மீனாட்சி திருமண மண்டபம் – பரமக்குடி
 ------------------------------------------------------------------------------
தலைமை : தோழர்.S.ஜெயச்சந்திரன் 
மாவட்டத்தலைவர் - AIBSNLPWA 
 -------------------------------------------------------------------------------
பங்கேற்பு
தோழர். V.மாரி
மாவட்டச்செயலர் NFTE

தோழர். R.வெங்கடாச்சலம்
மாநிலச்செயலர் AIBSNLPWA

மற்றும் தலைவர்கள்…

மூத்த தோழர்களின் ஊன்றுகோலாம்…
AIBSNLPWA நலச்சங்கத்தின்
மாவட்ட மாநாடு வெற்றி பெற
அன்புடன் வாழ்த்துகின்றோம்…

NFTE தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி.

Tuesday, 13 November 2018


ஓரணியாய் கூடுவோம் பேரணியில்… 
தோழர்களே…
நவம்பர் 14
நமது தேசத்தின் ஆலயங்களாம்..
பொதுத்துறைகளை உருவாக்கி…
கலப்பு பொருளாதாரம் கண்ட
இந்திய தேசத்தின் சிற்பி
ஜவஹர்லால் நேரு பிறந்த நன்னாளில்…

நமது உரிமைகளுக்காக…
BSNL வளர்ச்சிக்காக…
பொதுத்துறை காப்பதற்காக…
நாம் நடத்தும்…
நவம்பர் 14 பேரணியில்..
ஓரணியாய்.. பேரணியாய்
அணி திரள்வோம் தோழர்களே…

கஜாப் புயல் கரைகடக்கும்…
பாம்பன் தீவு தொடங்கி…
பன்றிக்காய்ச்சல் பரவிக்கிடக்கும்…
காரைக்குடி வரை…
பணிசெய்யும் நிரந்தர ஊழியர்கள்…
பணிநிறைவு பெற்ற தோழர்கள்…
பணிசெய்தே பாடுபடும் ஒப்பந்த ஊழியர்கள்…
அணி அணியாய்.. ஓரணியாய்…
காரைக்குடி நோக்கி திரண்டு வாரீர்….

JCM தலமட்டக்குழு

காரைக்குடி மாவட்ட JCM தலமட்டக்குழுக் கூட்டம் 
16/11/2018 வெள்ளிக்கிழமையன்று காரைக்குடி
 பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெறும்.

 தலமட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும்  
தவறாது கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

Monday, 12 November 2018


நவம்பர் 14... நாடெங்கும் பேரணி… 

BSNL நிறுவனத்திற்கு…
4G அலைக்கற்றை வழங்கக்கோரி…

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு
மூன்றாவது ஊதியமாற்றம் அமுல்படுத்தக்கோரி…

BSNL ஓய்வூதியர்களுக்கு…
ஓய்வூதிய மாற்றம் செய்திடக்கோரி…

BSNL ஓய்வூதியப்பங்களிப்பை…
அரசு விதிகளின்படி பிடித்தம் செய்யக்கோரி…

BSNL ஊழியர்களின் பல்வேறு…
ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி...

AUAB அனைத்து அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பாக...

நவம்பர் 14 அன்று…
தேசமெங்கும் தெருவோரப்பேரணி…

 தேசியத்தலைவர் தேவர் சிலை தொடங்கி...
தேசத்தலைவர் இராஜீவ்காந்தி சிலை வரை…

ஒட்டுமொத்த BSNL ஊழியர்கள் அதிகாரிகளின்...
ஒன்றுபட்ட கோரிக்கைப்பேரணி…

14/11/2018 – புதன்கிழமை – 
மாலை 03.00 மணி - காரைக்குடி...
 பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக...
அணிதிரள்வீர் தோழர்களே…
அனைத்து சங்க கூட்டமைப்பு – காரைக்குடி.

ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு…
சென்ற ஆண்டிற்கான போனஸ் வழங்கிடக்கோரி…
அக்டோபர் மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யக்கோரி…
அநியாயமான ரூ.500/= பிடித்தம் திருப்பி தரக்கோரி…
முழுமையான வைப்புநிதியை முறையாக செலுத்தக்கோரி…

NFTE – BSNLEU இணைந்த
கண்டன ஆர்ப்பாட்டம்

13/11/2018 – செவ்வாய்க்கிழமை – மதியம் 12.30 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

மற்றும்…
இராமேஸ்வரம் – இராமநாதபுரம்
பரமக்குடி – சிவகங்கை
தொலைபேசிநிலையங்கள் முன்பாக

தோழர்களே…
அநியாயங்கள் தொடரும்வரை…
போராட்டங்களும் தொடரும்….
அணி திரள்வீர்… ஆர்ப்பரிப்பீர்…

Sunday, 11 November 2018


மாவட்டச்செயற்குழு போராட்ட முடிவுகள்

13/11/2018 செவ்வாய்க்கிழமையன்று
இராமேஸ்வரம், இராமநாதபுரம், பரமக்குடி,
சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் 
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினை தீர்விற்காக
கோரிக்கை ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் பணிபுரியும்
ஒப்பந்த ஊழியர் தோழியர்.முத்துமாரி அவர்களுக்கு எதிரான
வன்கொடுமைப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
பாதிக்கப்பட்ட பாவப்பட்ட பெண்ணிற்கு நியாயம் வழங்கக்கோரி   
27/11/2018 அன்று சிவகங்கைத் தொலைபேசி நிலையம் முன்பாக
கண்டன ஆர்ப்பாட்டம் 
மற்றும் மகளிர்நிலையக் காவல் நிலையத்தில்
ஊர்வலமாகச்சென்று மனு கொடுத்தல்..

தோழர்களே…. அணி திரள்வீர்…

குத்தகைக்காரர்களின் கொடுமை காணீர்…

காரைக்குடி மாவட்டத்தில் பல காலமாக
குத்தகை எடுத்து கொழித்து வருகின்றார்கள் குத்தகைக்காரர்கள்.
எந்த சட்டதிட்டங்களையும் அமுல்படுத்துவதில்லை.
நிர்வாகம் சொல்லும் எதையும் மதிப்பதில்லை.
அவர்கள் தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதி பாரீர்…

ALERT SECURITY கோவை

கடந்த நான்கு ஆண்டுகளாக காரைக்குடி மாவட்டத்தில்
HOUSE KEEPING மற்றும் EOI குத்தகை எடுத்து வந்த
ALERT SECURITY நிறுவனம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக
போனஸ் பட்டுவாடா மறுப்பு…

நான்கு ஆண்டுகளிலும் ஒரு மாதம் கூட உரிய தேதியில்
சம்பளம் பட்டுவாடா செய்யாத அலட்சியப்போக்கு…

ஆகஸ்ட் 2018 மாதச்சம்பளத்தில் காரணம் ஏதுமின்றி
ரூ.500/= அநியாயப் பிடித்தம்.

2018 ஜூன் 2018 மாத EPF தொகையை ஊழியர்கள் கணக்கில்  
இன்னும் வரவு வைக்காமல் ஏமாற்றும் திருட்டுத்தனம்…

மாதந்தோறும்  சரியான தொகையில் EPF செலுத்தாமல்
குறைவான தொகையில் EPF பணம் செலுத்தும் கொடுமை…

MALLI SECURITIES CHENNAI

ஏப்ரல் 2018 வரை பல்வேறு குத்தகை எடுத்து
மகிழ்ந்து வந்த MALLI SECURITIES சென்ற ஆண்டிற்கு போனஸ் வழங்காமல் இழுத்தடிப்பு…

கிராமப்புற பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் 
தொடர்ந்து குறைவான சம்பளம் வழங்கியது…

OFF LINE காலங்களில் EPF தொகையை
முழுமையாக செலுத்தாமல் ஏமாற்றியது.

OFF LINE கால EPF தொகையை 
முழுமையாக ONLINEல் மாற்றி வரவு வைக்காதது…

RAMANI SCREEN சென்னை

மே 2018 முதல் குத்தகை எடுத்துள்ள
RAMANI SCREEN நிறுவனம் தீபாவளிக்கு முன்பு
அக்டோபர் மாதச்சம்பளத்தைப் பட்டுவாடா செய்வதாக
நிர்வாகத்திடம் 99.9 சதம் உறுதி அளித்தும்
இன்றுவரை பட்டுவாடா செய்யாத 100 சதக்கொடுமை…

மே 2018 முதல் அக்டோபார் 2018 வரையிலான காலத்திற்கு
போனஸ் வழங்குவதாக உறுதி அளித்து
ரூ.2000/- மட்டும் அதுவும் குறைவான ஊழியர்களுக்கு மட்டும்
வழங்கி விட்டு ஏமாற்றும் வித்தை…

குத்தகைக்காரர்களின் இந்தக்கொடுமை எதிர்த்தும்
BSNL நிர்வாகத்தை உடனடியாகத் தலையிடக்கோரியும்...

13/11/2018 செவ்வாய்க்கிழமையன்று
மாவட்டம் தழுவிய 
கண்டன ஆர்ப்பாட்டம்
தோழர்களே… அணி திரள்வீர்… 

Thursday, 8 November 2018


சங்க விழா… சங்கமிப்போம்…. 

தோழர்களே…
நமது மாவட்டச்சங்கத்தின் செயற்குழு…
காரைக்குடி பகுதி கிளைகளின் இணைப்பு மாநாடு
பணிநிறைவு பெற்ற தோழர்களின் பாராட்டு விழா…
ஒப்பந்த ஊழியர்களின் சிறப்புக்கூட்டம்.. என

நவம்பர் 10 அன்று சங்க விழாக்கள்…
பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில்…
மாவட்டத்தலைவர் தோழர்.லால்பகதூர் அவர்கள்
தலைமையில் சிறப்புடன் நடைபெறவுள்ளது.

மாநிலச்செயலர் அன்புத்தோழர். நடராஜன்
அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கிளைச்செயலர்களும்…
மாவட்ட சங்கப் பொறுப்பாளர்களும்
JCM மற்றும் பணிக்குழு உறுப்பினர்களும்…
ஒப்பந்த ஊழியர்களும்… முன்னணித்தோழர்களும்…
தவறாது கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றோம்.

தோழமையுடன்…
 பா. லால்பகதூர் - மாவட்டத்தலைவர்
 வெ.மாரி - மாவட்டச்செயலர்