Tuesday 4 February 2020

தனியார்கள் தேவதூதர்கள் அல்ல....

விருப்ப ஓய்விற்குப்பின் மனித நடமாட்டம் இல்லாமல்
நமது அலுவலகங்கள் களையிழந்துள்ளன. குறிப்பாக வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஊழியர் பற்றாக்குறையால் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வாடிக்கையாளர் சேவையை முழுமையாகத் 
தொடர இயலாத சூழல் எல்லா இடங்களிலும் நிலவுகிறது.

 வாடிக்கையாளர் சேவை மையங்கள் தனியாருக்கு விடப்படும் என்று நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. எந்தெந்த வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியாருக்கு விடுவது? எந்தெந்த மையங்களை 
BSNL நடத்துவது என்ற விவரங்கள் இன்று 04/02/2020 மாநில அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.

பரமக்குடி வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும்  ஒட்டுமொத்தமாக விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனர்.  எனவே பரமக்குடி பகுதியில் பல காலம் விற்பனை உரிமம் பெற்றுள்ள சங்கரா ஏஜன்சி  என்ற FRANCHISEE நிறுவனம் தற்காலிகமாக பரமக்குடி வாடிக்கையாளர் சேவை மையத்தை நிர்வகித்து வருகின்றது. குத்தகைக்கு விடும் முன்பே தனியாரை அனுமதித்ததில் நமக்கொன்றும் பிரச்சினையில்லை. 

ஆனால் பரமக்குடி CSCயில் மறைமுக அனுமதியோடு பணிபுரியும் சங்கரா ஏஜன்சி வாடிக்கையாளர்களிடம் DUMMY SIM கொடுப்பதற்கு ரூ.150/= வசூல் செய்துள்ளனர். DUMMY SIM ரூ.100/=க்கு கொடுக்கப்பட வேண்டும். கூடுதலாக 50 ரூபாய் வசூல் செய்துள்ளனர். 
OUTSOURCING அனுமதி பெறுமுன்பே இப்படி என்றால் அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்தால் எவ்வளவு கொள்ளை அடிப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்பிரச்சினையை பரமக்குடித் தோழர்கள்  Watsapp மூலம் நமக்குத் தெரியப்படுத்தினர்.  நாமும் Watsapp மூலம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
 மேற்கண்ட அநியாய வசூல் பரமக்குடியில்
இனியும் தொடரக்கூடாது... தொடராது என்று நம்புவோம்.

தோழர்களே...
அரசு ஊழியர்கள் என்றால் 
கடமை மறந்தவர்கள்... 
நேர்மை துறந்தவர்கள் என்றொரு 
மோசமான மதிப்பீடு இந்த தேசத்தில் உள்ளது.
அதே நேரம் தனியார்கள் என்றால்...
ஏதோ தேவதூதர்கள் என்றொரு மயக்கமும் உள்ளது.

உண்மையில் அரசு ஊழியர்கள் 
தங்கள் நேரம் காலம் துறந்து... 
சொந்த நலன் மறந்து 
தங்கள் வாழ்நாள் முழுவதும் 
தங்களுடைய நிறுவனத்திற்காக 
தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கின்றனர்.

தனியார்கள் முழுக்க முழுக்க 
லாபம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு
நேர்மை இழந்து மக்களிடம்...
வாடிக்கையாளர்களிடம் கொள்ளை அடிக்கின்றனர். 
ஒருபுறம் மக்களிடம் கொள்ளை... 
மறுபுறம் தங்களிடம் பணிபுரியும் 
ஊழியர்களிடம் உழைப்புச்சுரண்டல் 
என்று கைவரிசை காட்டுகின்றனர்.
ஆளும் வர்க்கம் தனியாருக்கு 
முழுக்க முழுக்க சாதகமாக இருப்பதால் 
ஏகபோகமாக நமது தேசத்தில் வாழ்கின்றனர். 
அதன் ஒரு அடையாளமே பரமக்குடி நிகழ்வு...

நாம் ஒருமுறை அல்ல...
ஓராயிரம் முறை அழுத்தமாகச் சொல்வோம்...
தனியார்கள் தேவதூதர்கள் அல்ல...
தேசத்தைச் சுரண்டுபவர்கள்...
அரசு ஊழியர்கள் உழைக்காத கூட்டமல்ல...
உழைத்து உழைத்து ஓடாய்ப்போன கூட்டம்...
அவர்களின் பெருமையை காலம் மட்டுமே உணர்த்தும்.
வெகு விரைவில் BSNL உணரும்...

No comments:

Post a Comment