இருதரப்பு ஊதியக்குழு அமைத்தல்
பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றக்குழு அறிவிக்கப்பட்டது தோழர்கள் அறிந்ததே. அதனையொட்டி
பொதுத்துறை ஊழியர்களின் சம்பள மாற்றத்திற்கான இருதரப்பு பேச்சுவார்த்தை ஊதியக்குழு BILATERAL WAGE NEGOTIATING COMMITTEE அமைப்பதற்கு அந்தந்த பொதுத்துறைகளுக்கு வழிகாட்டுதல் வழங்கி உத்திரவிட DPE இலாக்கா செயலருக்கு நமது மத்திய சங்கம்
14/06/2016 அன்று கடிதம் எழுதியுள்ளது.
=======================================================================
வீட்டு வாடகைப்படி
78.2 சத IDA சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி
HRA வழங்க வேண்டும் என நமது சங்கம் தொடர்ந்து BSNL நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றது. தற்போது BSNL நிதி நிலை சீரடைந்து வருவதால் உடனடியாக மேற்கண்ட கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி நிர்வாகத்திற்கு
நமது மத்திய சங்கம் கடிதம் அளித்துள்ளது.
=======================================================================
வங்கிக்கடன் ஒப்பந்தம்
ORIENTAL BANK OF COMMERCE வங்கியுடன் போடப்பட்ட
BSNL ஊழியர்களுக்கான கடன் வழங்கும் ஒப்பந்தம்
05/04/2017 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
=======================================================================
இளநிலைப் பொறியாளர் பயிற்சி முறை மாற்றம்
முன்னாள் TTAவான இந்நாள் JUNIOR ENGINEER பதவிக்கு
பயிற்சி மையங்களில் 10 வார காலப்பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது பயிற்சி முறையில் மாற்றம் செய்து நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. அதன்படி பயிற்சி மையத்தில்...
6வார கால அடிப்படைப்பயிற்சியும்,
4 வார காலம் FIELD TRAINING
செயல்முறைப்பயிற்சியும் அளிக்கப்படும். செயல்முறைப்பயிற்சிக்குப்பின் பயிற்சியாளர்கள்
மீண்டும் பயிற்சி மையங்களுக்கு சென்று தங்களது
பணி நியமன உத்திரவைப் பெற வேண்டும்.
நிர்வாகத்தின் இந்தப்போக்கைப் பார்க்கும்போது...
TECHNICIAN என்ற TTA என்ற JEக்களை
ஊழியர்கள் NON-EXECUTIVE என்னும் பிரிவில் இருந்து பிரித்தெடுத்து மற்ற பொதுத்துறைகளில் உள்ளது போல் தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பிரிவாக மாற்றுவதற்கான முயற்சியாகத் தெரிகிறது.
=======================================================================
ஓய்வூதியக் கணக்கீடு
BSNLலில் ஓய்வு பெறும் தோழர்களுக்கான ஓய்வூதியக் கணக்கீடு தற்போது MANUAL கையேட்டு முறையில் செய்யப்பட்டு வருகிறது. இனிமேல் ஓய்வூதியக்கணக்கீட்டை கணிணியில் ERP மூலம் கணக்கிட்டுக் கொள்ள SAPல் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 2016 முதல் இந்த வசதியை சம்பளம் தயார் செய்யும்
அதிகாரிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.