Thursday 16 June 2016

வீர வாஞ்சி - துயரமும்... பெருமிதமும் 

1911 -  ஜூன் - 17 

ஆணவமும் அதிகாரத்திமிரும் கொண்ட 
ஆஷ் கலெக்டரை வீர வாஞ்சிநாதன்
சுட்டுக்கொன்ற பெருமிதமிக்க நாள்.

ஆங்கிலேயரின் கையில் தான் 
அகப்படலாகாது என தன்னைத்தானே 
வீர வாஞ்சி சுட்டுக்கொண்ட துயரமிக்க நாள்...


2011 - ஜூன் -17
ஆஷ் கொலையின் நூற்றாண்டு தினத்தில்...
ஜூன் 17 பெருமிதமும் துயரமும் மிக்க நாள் என்று...
வாஞ்சியின் வாரிசுகளுக்கு எழுதிய கடிதத்தில்..   
ஆஷ் கலெக்டரின் வாரிசுகள்  குறிப்பிட்டார்கள்...
---------------------------------------------------------------------------
துயரமும்.. பெருமிதமும் 
ஒருங்கே அமையப்பெற்ற  இந்த நாளில்... 
இராபர்ட் வில்லியம் ஆஷ் அவர்களின் வாரிசுகளாகிய நாங்கள் 
இலட்சியத்திற்காகவும்.. விடுதலைக்காகவும் பாடுபட்ட 
வாஞ்சி அய்யரின் குடும்பத்திற்கு 
அன்பையும்... ஆறுதலையும்.. நட்பையும் 
வெளிப்படுத்தும் விதமாக  இந்தக் கடிதத்தை எழுதுகின்றோம்.

விடுதலை வேட்கை கொண்ட 
உங்கள் தாத்தா வாஞ்சியின் செயல் 
அதிகார வேட்கை கொண்ட 
எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது.

அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு 
அதி தீவிரமாகச் செயல்படுபவர்களும்...
அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளில் 
அதி தீவிரமாகச் செயல்படுபவர்களும்...
சமயங்களில் பெரும்பிழை செய்யும் சூழல் ஏற்படுகிறது.

நமது தாத்தாக்களின் முடிவே இதற்குச்சான்று...

நமது முன்னோர்கள் மறைந்து விட்டார்கள்..
ஆனால்  உயிர் வாழும் வாய்ப்பைப் பெற்றுள்ள நாம் 
அவர்களின் நினைவுகளோடு...
பழையவற்றை மறந்து...
அன்பையும்... அமைதியையும் போற்றி 
சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது...

அன்புடன் 
இராபர்ட் ஆஷ் குடும்பத்தினர்..
அயர்லாந்து..
-------------------------------------------------------------------------------------------------------------------

வாஞ்சியின் தியாகமும்..
ஆஷ் குடும்பத்தினரின் மடலும்.. 
நம் சிந்தனைக்குரியது...

No comments:

Post a Comment