Monday 27 June 2016


BSNL  சங்க அங்கீகார விதிகளின்படி 
மொத்த ஊழியர்களில் 50 சதத்திற்கும் மேல் 
வாக்குகள் பெற்ற சங்கம் ஏகபோக சங்கமாக...
BSNLலில் அங்கீகாரம் பெற்ற ஒரே சங்கமாக அறிவிக்கப்படும். 

 50 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று 
ஒரே சங்கமாக கோலோச்சும் கனவில் இருந்த BSNLEU  
நடந்து முடிந்த தேர்தலில் மொத்த வாக்குகளில்  50 சதத்திற்கும் குறைவாகப் பெற்றதால் அதன் ஒரு சங்க நப்பாசை தகர்ந்தது. 

எனவே BSNLன்  சங்க அங்கீகார விதிகளை எதிர்த்து
 ஆந்திர உயர்நீதிமன்றத்தில் BSNLEU சங்கத்தைச்சேர்ந்த 
M.தாரநாத் என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார். 

ஒரே சங்க அங்கீகாரத்திற்கு 50 சதம் என்பதை
 மொத்த வாக்குகள் அடிப்படையில் கணக்கிடக்கூடாது எனவும், 
பதிவான வாக்குகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும்...
 JCM தலைவர்,செயலரைத் தேர்ந்தெடுக்க  ஊழியர்களுக்கு 
உரிமை வழங்க கோரியும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.  
மேற்படி வழக்கு 04/07/2016 அன்று விசாரணைக்கு வருகிறது.

ஆனால் BSNLEU மத்திய சங்கம் மேற்படி வழக்கில் 
தனக்கோ... ஆந்திர மாநிலச்சங்கத்திற்கோ 
எந்தவித  சம்பந்தமும் இல்லை என அறிவித்துள்ளது. 
வம்புM - வழக்குM BSNLEU சங்கத்திற்குப் புதியதல்ல. 
இது நாம் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். 

இருப்பினும்... செங்கொடித்தோழர்கள்...
செத்தாலும்  பொய் சொல்லமாட்டார்கள்...  
என்ற உலகளாவிய நம்பிக்கையின் அடிப்படையில் 
BSNLEUவின் வாக்குமூலத்தை நாமும் நம்புவோம்.
ஓங்கட்டும்... இடது சாரி ஒற்றுமை... 

No comments:

Post a Comment