Wednesday 15 February 2017

தேயிலையின் கண்ணீர்..


தேயிலைத் தண்ணீர் சுறுசுறுப்பைத் தரும். 
தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் 
கதையோ கண்ணீரைத் தரும். 
தேயிலை உற்பத்தி அதிகம் உள்ள மேற்கு வங்கத்தில் 
தற்போது ஒரு நாளைக்கு 
ரூ.143/- மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. 

தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக 
2015ம் ஆண்டு 27 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 
தற்போது மேற்கு வங்கத்தில் 
தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டுள்ளது. 
இந்த குறைந்த பட்சக்கூலி 
A பிரிவு பகுதிகளில் ரூ.290.23 பைசாவாகவும், 
B பிரிவு பகுதிகளில் ரூ.256.50 பைசாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
கூலி உயர்வு ஜனவரி 2017 முதல் அமுல்படுத்தப்படுகிறது.

இத்தனை ஆண்டுகால பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சியில் 
கூலி வெறும் 143/- என்பது பெருங்கொடுமை.  
அதனினும் கொடுமை தேயிலைத் தோட்ட முதலாளிகள் 
தற்போதைய கூலி உயர்வை கடுமையாக எதிர்த்திருப்பது.  

மத்திய அரசு அறிவித்துள்ள 
குறைந்தபட்சக்கூலி ரூ.350/- என்பது கூட
தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. 

உலகில் பொதுவுடைமைப்புரட்சி பிறந்து 
100 ஆண்டுகள் ஆனபோதும் 
சுரண்டல் என்பது சுதந்திரமாக வலம் வருவது வேதனைக்குரியது. 

No comments:

Post a Comment