Thursday 6 July 2017

இரட்டை மலை… 
ஒடுக்கப்பட்டோரின்… இமயமலை…
07/07/1859
இரட்டை மலை சீனிவாசன்
பிறந்த நாள் 
இரட்டைமலை… இந்திய வரலாற்றில்
இருட்டடிப்பு செய்யப்பட்ட…இமயமலை...

தாழ்த்தப்பட்ட சமூகத்தின்..
தமிழகத்தின் முதல் பட்டதாரி…  
எந்தப்பெயராலே உன்னை
இழிவாக அழைக்கின்றார்களோ..
அந்தப்பெயராலேயே
உன்னை மேம்படுத்திக்கொள்.. என்று
உரமோடு உரக்கக்கூறியவர்…

இலண்டன் வட்டமேசை மாநாட்டிலே…
இராவ்சாகிப் இரட்டைமலை சீனிவாசன்…
பறையன்… தீண்டத்தகாதவன்….
என்று தன் மேல்கோட்டில் அடையாளச்சின்னத்தோடு…
அடங்காத சினத்தோடு கலந்து கொண்டவர்….

மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் கைகுலுக்க முனைந்த போது…
நான் தீண்டத்தகாதவன்… 
என்னைத்தீண்டாதே என்று பொங்கியவர்…

அரசியல் அதிகாரமே…. அடிமைப்பட்டவர்களின்
அடிமைத்தனம் ஒழிக்கும் என்று ஆர்ப்பரித்தவர்…

பறையன் என்ற வார இதழ் தொடங்கி….
உரிமை முரசொலித்தவர்…
பறையன் மகாஜனசபையைத் தோற்றுவித்தவர்…
பாமர மக்களின் உரிமைகளைப் பறையடித்தவர்…
தாழ்த்தப்பட்டோர் கல்விக்கழகம் உருவாக்கியவர் ….
தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்கும் நிலையை நிஜமாக்கியவர்...
ஒடுக்கப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என
சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்…
குடி கெடுக்கும் குடியை நிறுத்தச்சொல்லி….
அரசு விடுமுறையிலும்… விழா நாட்களிலும்…
மதுக்கடைகளை மூடச்சொல்லி….
சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றச்செய்தவர்…
மண் சுமந்து கல் சுமந்து கட்டிய கோவிலிலே…
தாழ்த்தப்பட்ட மக்கள்.. ஒடுக்கப்பட்ட மக்கள்
தடுக்கப்பட்ட கொடுமை எதிர்த்துப் போராடியவர்…
சென்னை மைலாப்பூரிலே….
பார்ப்பனர் தெரு… பறையர் வரக்கூடாது…
என்ற அறிவிப்புப் பலகையை அகற்றி
பரபரப்பான வெற்றி கண்டவர்…
காந்தியா? அம்பேத்காரா? என்ற கேள்வி எழுந்தபோது..
அண்ணல் அம்பேத்கார் பக்கம் நின்று வலு சேர்த்தவர்…
எத்தனை தியாகங்கள் செய்த போதிலும்
அத்தனையும் இருட்டடிப்பு செய்யப்பட்டது…
அவரைப் பற்றிய நினைவுகளே இன்றுள்ளன…
குறிப்புகளோ… வரலாற்றுப்பதிவுகளோ இன்றில்லை…
இருண்ட மக்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர…
தன் வாழ்நாள் முழுவதும் போராடிய
உத்தமர் தாத்தா என ஒடுக்கப்பட்டோர்
உணர்வோடு அழைக்கும் 
இரட்டைமலை சீனிவாசன்
நினைவுகளைப் போற்றுவோம்

No comments:

Post a Comment