Sunday, 9 July 2017

தொடர் ஓட்டம்… தொடரட்டும்….

ஞானப்பால் குடித்தவர் ஞானசம்பந்தர்…
ஞானப்பால் கொடுத்தவர் நம் ஞானையா அவர்கள்…

சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்…
நல்ல போராட்டத்தைப் போராடினேன்…
ஓட்டத்தை முடித்துக்கொண்டேன்…
இதுவே தோழர் ஞானையா அவர்கள்
தன் கல்லறையில் கடைசியாக 
எழுதி வைக்கச்சொன்ன வரிகள்…

பொதுவுடைமைச்சித்தாந்தத்தை…
தன் வாழ்நாள் முழுவதும் காத்து வந்தார்…
தொழிலாளர் வர்க்கத்திற்காக...
கரத்தாலும், கருத்தாலும்
காலமெல்லாம் கடுமையாகப்போராடினார்….
மிக நீண்ட ஓட்டத்தை… 
ஒரு நூற்றாண்டு ஓட்டத்தை...
தொழிற்சங்க வேகத்தோடு… 
மார்க்சீய தாகத்தோடு…
ஓடி ஓடி முடித்துக்கொண்டார்….

அவரது ஓட்டம் முடிந்திருக்கலாம்…
அவர் தொட்டுவிட நினைத்த எல்லைகள்
இன்னும் தூரத்திலேதான் இருக்கின்றன…
தொடர் ஓட்டத்தைத் தொடருவோம்…
எழுச்சியுடன் ஓடுவோம்…
அவர் தொட்டுவிடத்துடித்த
எல்லைகளைத் தொடுவோம்….
அவரது ஓட்டத்தை தொடர்வதே…
அவருக்கு நாம் செய்யும் 
உண்மையான  அஞ்சலியாகும்…

அவரது நீண்ட ஓட்டத்தைப் போலவே…
அவரது நீண்ட உரைகளும்…
செயல்களும்… சிந்தனைகளும்…
நீண்ட காலம் நீண்டிருக்கும்...
நிலையற்ற இவ்வுலகில்...
நீங்காமல் நிலைத்திருக்கும்….

ஞானம் உள்ளளவும்…
ஞாலம் உள்ளளவும்…
ஞானையா புகழ் ஓங்குக….

No comments:

Post a Comment