Friday, 31 August 2018


பணி தொடர வாழ்த்துக்கள்…. 

31/08/2018 அன்று பணிநிறைவு பெற்ற
NFTE மாநிலத்தலைவரும்…
NFTE சம்மேளனச்செயலருமான
அருமைத்தோழர்.P.காமராஜ் அவர்களின்…
ஓய்வுக்காலப் பணி உயர்ந்திடவும்…
சங்கப்பணியோடு சமூகப்பணி தொடர்ந்திடவும்…
காரைக்குடி மாவட்ட சங்கத்தின் சார்பாக
மனமார வாழ்த்துகின்றோம்.
---------------------------------------------------------------------------------------- 
பணி நிறைவு பாராட்டு விழா

01/09/2018 – சனிக்கிழமை – காலை 10 மணி 
சாய்பாபா திருமண மண்டபம் – புதுவை
 -------------------------------------------------------------------------------------
பங்கேற்பு
தோழர்.சந்தேஷ்வர்சிங்
NFTE பொதுச்செயலர்
மற்றும் அனைத்து சங்கத்தலைவர்கள்.
 ----------------------------------------------------------------------------------
பணிநிறைவு விழா சிறந்திட…
பாங்குடன் வாழ்த்துகின்றோம்…

கிளை மாநாடு மற்றும் மாவட்டச்செயற்குழு

AIBSNLPWA
அனைத்திந்திய BSNL ஓய்வூதியர்கள் நலச்சங்கம்
-------------------------------------------------------------------------------
 சிவகங்கை கிளை மாநாடு
மற்றும்…
காரைக்குடி மாவட்டச்செயற்குழு
 ---------------------------------------------------------------------------------
01/08/2018 – சனிக்கிழமை – காலை 10 மணி
MMP திருமண மண்டபம் – சிவகங்கை

தோழர்களே… வருக…

பணிநிறைவு வாழ்த்துக்கள்

ஆகஸ்ட் 31ல்..

பணிநிறைவு பெற்ற…
சங்கம் வளர்த்த... 
மாநிலச்சங்க முன்னோடிகளின்….
பணிநிறைவுக்காலம்…
பாவப்பட்டோருக்கு பயனுள்ளதாக…
இயக்கத்திற்கு பலமுள்ளதாக….
அமைந்திட வாழ்த்துக்கள்…

--------------------------------------------------
பெயரிலே PRINCE
செயலிலே KING
தஞ்சை மண்ணின்…
தன்னிகரற்ற தலைவர்
தோழர்.S.பிரின்ஸ்
--------------------------------------------------
இயக்க சேவையில்…
இணையசேவையில்…
இணையற்ற சேவை புரிந்த…
வேலூரின் வழிகாட்டி…
தோழர்.P.மதியழகன்
--------------------------------------------------
சொல்லில் கனிவு…
செயலில் உறுதி…
இயக்கத்தில் உருக்கு…
தோழமைப் பெருக்கு…
சேலத்தின் சிறப்பு…
தோழர்.P.கஜேந்திரன்
--------------------------------------------------

Thursday, 30 August 2018


பணி நிறைவு வாழ்த்துக்கள்

காரைக்குடி மாவட்டத்தில்
இன்று 31/03/2018
பணிநிறைவு பெறும்
பண்பின் அடையாளம்…
பணிவின் சிகரம்

அருமைத்தோழர்.
N.பாஸ்கரன் ‘
TT - இராமேஸ்வரம்
அவர்களின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க
வாழ்த்துகின்றோம்.

Monday, 27 August 2018


மூன்றாவது ஊதிய மாற்றமும்...
மூன்றாவது கூட்டமும்….

BSNL ஊழியர்களுக்கான மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான
இருதரப்புக்குழுவின் மூன்றாவது கூட்டம்
27/08/2018 அன்று டெல்லியில் நடைபெற்றது.
ஏற்கனவே ஊழியர் தரப்பு தங்களது எதிர்பார்ப்பு 
ஊதிய விகிதங்களை நிர்வாகத்திடம் அளித்திருந்தது.

NE-I எனப்படும் GROUP D ஊழியர்களின் தற்போதைய 
சம்பள விகிதமான ரூ.7760 -13200 என்பது ரூ.19590 – 69800 
என உயர்த்தப்பட வேண்டும் என்பது ஊழியர் தரப்பு கோரிக்கை.

ஆனால் 27/08/2018 கூட்டத்தில்
நிர்வாகம் GROUP D ஊழியர்களின் அடிப்படைச்சம்பளத்தை
ரூ.7760/=லிருந்து ரூ.18600/= என்று உயர்த்த இசைவு தெரிவித்திருந்தது.  
இது ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி 
என்று சுட்டிக்காட்டிய ஊழியர் தரப்பு  
குறைந்த பட்ச அடிப்படை ஊதியம்
ரூ.19000/= என உயர்த்தப்பட வேண்டும் 
என உறுதியாக வலியுறுத்தியுள்ளது. 
நிர்வாகம் மீண்டும் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது.

குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்துவதைப் போலவே  
அதிகபட்ச ஊதியத்தை MAXIMUM உயர்த்தவும்
நிர்வாகம் தயக்கம் காட்டுகின்றது.
மூன்று கூட்டங்கள் முடிவுற்ற நிலையில்
முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.  
அடுத்த கூட்டம் 10/09/2018ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய மாற்ற நிகழ்வு நத்தை வேகத்தில் நகர்வதாக
ஊழியர் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கூட்டத்திலாவது ஊதிய விகிதங்கள்
இழுத்தடிக்கப்படாமல் இறுதிப்படுத்தப்படும் என நம்புவோம்.

Friday, 24 August 2018


செய்திகள்
கேரள வெள்ள நிவாரணத்திற்கு 
BSNL ஊழியர்களின் பங்களிப்பாக 
ஒரு நாள் அடிப்படைச்சம்பளத்தை 
BASIC PAY பிடித்தம் செய்திடக்கோரி 
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 
 நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 -------------------------------------------------------------------------------------
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 24/08/2018 அன்று 
CMDயுடன் சந்திப்பு நிகழ்த்தியது. ஊதியமாற்றம்… ஓய்வூதிய மாற்றம்… ஓய்வூதியப்பங்களிப்பு மற்றும் 4G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இலாக்கா அமைச்சர் அளித்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படாத அவலநிலை சுட்டிக்காட்டப்பட்டது. இது சம்பந்தமாக DOT செயலருடன் கூட்டமைப்பு சந்திப்பு நிகழ்த்த ஆவண செய்திட கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியத்திட்டத்திற்கு BSNL நிர்வாகம் கூடுதல் பங்களிப்பு செய்திடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 -------------------------------------------------------------------------------------
NFTE தேசிய செயற்குழுக் கூட்டம் 2018 அக்டோபர்
 24 மற்றும் 25 தேதிகளில் உத்தரகாண்ட மாநிலம்
 ஹரித்துவார் நகரில் நடைபெறுகின்றது.
  -------------------------------------------------------------------------------------
தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கு சீனாவில் தகவல் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க DOT உத்தேசித்துள்ளது. அலிபாபா மற்றும் HUAWEI நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
  -------------------------------------------------------------------------------------
மத்திய அரசின் ஓய்வூதியத்திட்டத்தில் இல்லாத தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் பணிக்கொடை உச்சவரம்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்டதைப் போலவே
 ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  -------------------------------------------------------------------------------------
பரிவு அடிப்படை வேலைக்கு விண்ணப்பித்து உரிய தகுதி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கிட CORPORATE அலுவலகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. காலியிடங்களைப் பொறுத்து
 30க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் தமிழகத்தில் 
பணி நியமனம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  -------------------------------------------------------------------------------------
BSNL ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அலைபேசி ரூ.600/- 
PREPAID திட்டம் ஓட்டுநர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Wednesday, 22 August 2018


தியாகத்திருநாள்


தமக்கு ஒரு பங்கு…
ஏழைகளுக்கு ஒரு பங்கு….
நண்பர்களுக்கு ஒரு பங்கு…
என உணவை…
சேர்ந்து உண்ணவும்…
பகிர்ந்து உண்ணவும்…
வழிகாட்டிய….
தியாகத்திருநாள் பக்ரீத் போற்றுவோம்…
----------------------------------------------------------------------
உண்ணும் உணவை...
சேர்ந்து உண்பவர்களும்…
பகிர்ந்து உண்பவர்களும்…
உண்மையான சொர்க்கத்தை..
உலகில் அடைகிறார்கள்…
-அண்ணல் நபிகள் நாயகம்-

Monday, 20 August 2018

தோழர்.ஜீவா 
பிறந்த நாள் விழா 

21/08/2018 – செவ்வாய் – மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி.

தலைமை
தோழர்.வெ.மாரி
மாவட்டத்தலைவர் 
தமிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம்

வரவேற்புரை
முனைவர். கரு.முருகன்
மாவட்டச்செயலர் 
தமிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம்

-: பங்கேற்பு :-
எழுத்தாளர். சந்திரகாந்தன்
பேராசிரியர். பழனியப்பன்
வழக்கறிஞர். மணிபாரதி
ஜோல்னா ஜவஹர்
தோழர்.சி.முருகன்

மற்றும் தோழர்கள்…

ஜீவா என்னும்..
அற்புதத் தலைவனின் புகழ் பாடுவோம்…
தோழர்களே… வருக…

Thursday, 16 August 2018


அஞ்சலி


பாலைவனத்தில் ஓர் பசுமை…
முள்வெளியில் ஓர் புல்வெளி…
எட்டிமரத்தில் ஓர் இனியபலா..
தரிசுநிலத்தில் ஓர் தாமரை…
காவித் தலைவன்… ஆயினும்…
காவியத்தலைவன்…

முன்னாள் பிரதமர்..
அடல் பிஹாரி வாஜ்பாய்
அவர்களின் மறைவிற்கு…
சிறந்த தலைவருக்கு….
சிரம் தாழ்த்திய நமது அஞ்சலி

Monday, 13 August 2018


கொடியேற்றம்



விடுதலைத்திருநாள்

கொடியேற்றம்
NFTE சங்கக் கொடிமரத்தில்
தேசியக்கொடியேற்றுபவர்

காரைக்குடி GM அலுவலக
கிளைத்தலைவர்….
தோழியர்.TS.தமிழரசி

15/08/2018 – புதன் காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம்காரைக்குடி
 தோழர்களேவாரீர்

அஞ்சலி 

பத்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராக…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்….
சிறந்த பாராளுமன்றவாதி என்று விருது பெற்றவரும்…
மக்களவையின் முன்னாள் சபாநாயகரும்…
1968 முதல் 2008 வரை… 40 ஆண்டுகள்
பொதுவுடமை இயக்கத்தில்
தன்னை பிணைத்துக்கொண்டவருமான..

தோழர்.சோம்நாத் சாட்டர்ஜி
அவர்களின் மறைவிற்கு
நமது ஆழ்ந்த அஞ்சலி….

Thursday, 9 August 2018


ஓய்வற்று உழைத்திடுக… 

மலைக்கோட்டை மாநகரில்
ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற AIBSNLPWA
அனைத்திந்திய BSNL ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின்
மாநில மாநாட்டில் மாநிலச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அருமைத்தோழர். 
R.வெங்கடாச்சலம் 
அவர்களின் சங்கப்பணி 
சிறக்க வாழ்த்துகின்றோம்.

விதிகளில் தெளிவும்…
விஷயங்களில் நெளிவு சுழிவும்…
மிக்க அவரது தலைமையில் AIBSNLPWA 
வீரிய நடைபோட வாழ்த்துக்கள்…

இதுநாள்வரை…
மாநிலச்செயலராகத் திறம்படப் பணியாற்றிய…
அருமைத்தோழர்.முத்தியாலு 
அவர்களுக்கு… நமது அன்பான 
வாழ்த்துக்களும்… வணக்கங்களும்…

பணி தொடரட்டும்... 

AIBSNLPWA காரைக்குடி மாவட்டத்தலைவர்…
தோழர்.ஜெயச்சந்திரன் அவர்கள்..
AIBSNLPWA மாநில மாநாட்டில்…
மாநில உதவித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீரிளமை மிக்க அவரது செயல்பாடு….
சென்னையிலும் தொடர….
நமது அன்பான வாழ்த்துக்கள்…

கூடல்நகரின் கூட்டுறவு வாழ்க…
 மதுரை கூட்டுறவு சங்கத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்து சங்க வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து சங்கங்களும் ஓரணியில் நின்று தேர்தலை சந்தித்தது பாராட்டுக்குரியது.

ஒற்றுமை என்பதை விடுத்து
தனித்துப் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்த
FNTO சங்கத்தின் நிலை பரிதாபத்துக்குரியது.

வெற்றி பெற்ற தோழர்களுக்கு 
நமது வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்ற தோழர்கள்

NFTE
மகாலக்ஷ்மி .
ஆனந்த குமார் .SM 
பரமசிவம் .
  
BSNLEU
ஹேமலதா .P    
அருள்மொழி .
கண்ணன் .
  
AIBSNLEA
விஜயராஜன் .

SNEA
சாந்தி.
அழகுபாண்டிய ராஜா .

SEWA
கண்ணன் .

TEPU
ராதாகிருஷ்ணன் .

கூட்டுறவு சிக்கன நாணய சங்கம்…
கூட்டுறவாகவும்….
சிக்கனமாகவும்…
நாணயமாகவும்…
நடந்திட நமது நல்வாழ்த்துக்கள்….

Wednesday, 8 August 2018


ஊழியர் தரப்பு கோரிக்கை

இன்று 09/08/2018 இரண்டாவது ஊதியச்சுற்றுப் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெறவுள்ளது.  ஊதியமாற்றம் பற்றி 02/08/2018 அன்று NFTE மற்றும் தோழமைச்சங்கங்கள் கூடி விவாதித்தன.
 03/08/2018 அன்று NFTE மற்றும் BSNLEU சங்கங்கள் கூடி விவாதித்தன.
அதனடிப்படையில் கீழ்க்கண்ட புதிய சம்பள விகிதங்களை 
நமது கோரிக்கையாக ஊழியர் தரப்பு 08/08/2018 அன்று ஊதியக்குழு தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.

குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.19590/= எனவும்
அதிகபட்ச அடிப்படை ஊதியம் ரூ.39990/= எனவும்
ஊழியர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நிர்வாகத்தின் நிலை என்ன என்பது 
இன்றைய பேச்சுவார்த்தையில் தெரியவரும். 
 -----------------------------------------------------------------------------------------------------------
2017 மூன்றாவது ஊதிய மாற்றம்
ஊழியர் தரப்பு கோரிக்கை
--------------------------------------------------------------------------------------------------
2007     சம்பள விகிதம்       2017 புதிய சம்பள விகிதக்கோரிக்கை 
--------------------------------------------------------------------------------------------------------------------
NE-1=                        7760 - 13200                                             19590 -- 69800

NE-2=                        7840 - 14700                                             19790 -- 70500

NE-3=                        7900 - 14880                                              19950 -- 71110

NE-4=                        8150 - 15340                                              20580 -- 73450

NE-5=                        8700 - 16840                                              21970 -- 78320

NE-6=                        9020 - 17430                                              22770 --  81160

NE-7=                        10900 - 20400                                            27520 --  98220

NE-8=                        12520 - 23440                                            31610 -- 112700

NE-9=                        13600 - 25420                                            34330 – 122340

NE-10                      14900 - 27850                                            37620 -- 134100

NE-11                     16370 - 30630                                            39980 – 139980

NE-12                     16390 - 33830                                            39990 – 139990
---------------------------------------------------------------------------------------------------


Tuesday, 7 August 2018

உறங்கிவிட்ட உதயசூரியன் 
தமிழினத்தலைவர்…
தமிழின் காவலர்…
சமூகநீதிக்கு உயிர்தந்து..
சமத்துவபுரம் சமைத்திட்ட…
உறங்கிவிட்ட உதயசூரியனுக்கு...
லைர் மறைவிற்கு…
நமது அஞ்சலி…

Monday, 6 August 2018


AIBSNLPWA
ஓய்வற்றோர் சங்கம்…

இவர்கள்…
ஓய்வுற்றவர்கள் அல்ல….
ஓய்வற்றவர்கள்…

மூத்தவர்கள் அல்ல…
காத்தவர்கள்…

முதியவர்கள் அல்ல….
புதியவர்கள்…

நரைத்தவர்கள் அல்ல…
விறைத்தவர்கள்…

தொழுபவர்கள் அல்ல…
எழுபவர்கள்…

சலித்தவர்கள் அல்ல…
வலுத்தவர்கள்…

கூனியவர்கள் அல்ல…
பேணியவர்கள்….

இவர்கள்…
ஓய்வுற்றவர்கள் அல்ல….
ஓய்வற்றவர்கள்…

 60:40ஐ அகற்றிட்ட…
78.2ஐ அடைந்திட்ட….
 ஓய்வற்றோர் சங்கத்தின்…மலைக்கோட்டை மாநகர்…
மாநில மாநாடு வெல்லட்டும்….