Wednesday 1 August 2018


அமைச்சருடன்... கூட்டமைப்பு சந்திப்பு 

இன்று 01/08/2018 நாடாளுமன்ற வளாகத்தில் தொலைத்தொடர்பு அமைச்சர் திரு.மனோஜ் சின்கா அவர்களுடன்  அனைத்து சங்க கூட்டமைப்புத்தலைவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது.

BSNLEU… NFTE… SNEA.. AIBSNLEA… AIGETOA… BSNLMS… ATM BSNL… 
மற்றும் TEPU சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டனர். 
NFTE சார்பாகத் தோழர்.சேஷாத்திரி DY.GS கலந்து கொண்டார்.

24/02/2018 அன்று அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின் போது...
ஊதியமாற்றம் பெற...BSNL நிறுவனத்திற்கு 
நட்டத்தில் இருந்து விதிவிலக்கு…
வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு…
ஓய்வூதிய மாற்றம்…
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு…
ஆகிய பிரச்சினைகளைத் தீர்த்திட வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால்  5 மாதங்கள் கடந்த பின்பும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை கூட்டமைப்புத்தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

கூட்டமைப்பின் கோரிக்கைகளை செவிமடுத்த அமைச்சர்...
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றி 
விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும்…
ஊதியமாற்றம்… ஓய்வூதிய மாற்றம் மற்றும்
ஓய்வூதியப் பங்களிப்பு பற்றி
DOT செயலருடன் 03/08/2018 அன்று விவாதம்
செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.

தங்களது கோரிக்கைகளுக்காக குரல் எழுப்பும் ஊழியர்கள்
BSNL நிறுவனத்தின் வருவாய் உயர்விற்கு
கூடுதலாக உழைத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அமைச்சருடனான சந்திப்பிற்கு கேரள நாடாளுமன்ற உறுப்பினர் திரு.M.B.இராஜேஷ் அவர்கள் உறுதுணை புரிந்தார்.
கூட்டமைப்பின் சார்பாக அமைச்சருக்கும்…
திரு.M.B.இராஜேஷ் MP அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment