Monday 27 August 2018


மூன்றாவது ஊதிய மாற்றமும்...
மூன்றாவது கூட்டமும்….

BSNL ஊழியர்களுக்கான மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான
இருதரப்புக்குழுவின் மூன்றாவது கூட்டம்
27/08/2018 அன்று டெல்லியில் நடைபெற்றது.
ஏற்கனவே ஊழியர் தரப்பு தங்களது எதிர்பார்ப்பு 
ஊதிய விகிதங்களை நிர்வாகத்திடம் அளித்திருந்தது.

NE-I எனப்படும் GROUP D ஊழியர்களின் தற்போதைய 
சம்பள விகிதமான ரூ.7760 -13200 என்பது ரூ.19590 – 69800 
என உயர்த்தப்பட வேண்டும் என்பது ஊழியர் தரப்பு கோரிக்கை.

ஆனால் 27/08/2018 கூட்டத்தில்
நிர்வாகம் GROUP D ஊழியர்களின் அடிப்படைச்சம்பளத்தை
ரூ.7760/=லிருந்து ரூ.18600/= என்று உயர்த்த இசைவு தெரிவித்திருந்தது.  
இது ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி 
என்று சுட்டிக்காட்டிய ஊழியர் தரப்பு  
குறைந்த பட்ச அடிப்படை ஊதியம்
ரூ.19000/= என உயர்த்தப்பட வேண்டும் 
என உறுதியாக வலியுறுத்தியுள்ளது. 
நிர்வாகம் மீண்டும் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது.

குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்துவதைப் போலவே  
அதிகபட்ச ஊதியத்தை MAXIMUM உயர்த்தவும்
நிர்வாகம் தயக்கம் காட்டுகின்றது.
மூன்று கூட்டங்கள் முடிவுற்ற நிலையில்
முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.  
அடுத்த கூட்டம் 10/09/2018ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய மாற்ற நிகழ்வு நத்தை வேகத்தில் நகர்வதாக
ஊழியர் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கூட்டத்திலாவது ஊதிய விகிதங்கள்
இழுத்தடிக்கப்படாமல் இறுதிப்படுத்தப்படும் என நம்புவோம்.

No comments:

Post a Comment