Tuesday 10 December 2019


நிதி ஒதுக்கீடு...

BHARAT  NET –II  திட்டச் செலவுகளுக்காக 1500 கோடி ரூபாயை 
BSNL மற்றும் BBNL நிறுவனங்களுக்கு DOT ஒதுக்கியுள்ளதாக பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

BSNLக்கு 750 கோடியும் BBNLக்கு 750 கோடியும்
 USO நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. 
இரண்டு நிறுவனங்களின் பணியிலும் ஈடுபட்ட குத்தகைக்காரர்களுக்கு பலகோடி ரூபாய் பில்கள் பாக்கி இருந்தன. குத்தகைக்காரர்கள் 
DOT அதிகாரிகளைச் சந்தித்து தங்களது பிரச்சினையை எடுத்துக்கூறியதன் அடிப்படையில் மேற்கண்ட நிதி ஒதுக்கீடு 
நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மேலும் 3300 கோடி ரூபாய் வங்கிக்கடனும் இம்மாதம் 
BSNL நிறுவனத்திற்கு கிடைக்கும் எனவும் செய்திகள் கூறுகின்றன. 
எனவே டிசம்பர் மாதம் அனைத்துப் பில்களும், நிலுவைகளும் பட்டுவாடா செய்யப்படும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 
VRSல் செல்லும் ஊழியர்கள் புண்ணியத்தால் ஆண்டிற்கு 7000 கோடி செலவு குறையும் எனவும், BSNLன் நிதிநிலை விரைவில் 
மேம்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஒப்பந்தக்காரர்கள் அதிகாரிகளைப் பார்த்தார்கள் கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டது. நமக்கு ஒன்றும் வருத்தமில்லை. 
ஆனால் பாவப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் போராடினாலும், வாதாடினாலும், மன்றாடினாலும்... அவர்களுக்கான  கூலி கிடைக்கவில்லையே என்பதுதான் வருத்தத்திலும் வருத்தமாகும்.

No comments:

Post a Comment