Sunday 1 December 2019


செ ய் தி க ள்
 ------------------------------------------
MTNL சம்பளப்பட்டுவாடா
MTNLலில் செப்டம்பர் 2019ல் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. செப்டம்பர் மாதச்சம்பளம் 04/12/2019 அன்று வழங்கப்படும் என்று MTNL நிர்வாகம் 30/11/2019 தேதியிட்ட 
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

 ------------------------------------------
ITS அதிகாரிகளின் சம்பளம் 

தங்களுக்கு மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்காததை
எதிர்த்து ITS அதிகாரிகள் சங்கம் டெல்லி நீதிமன்றத்தில் 
வழக்குத் தொடுத்திருந்தது. 05/12/2019க்குள் ITS அதிகாரிகளுக்கு 
வழங்க வேண்டிய சம்பளம், ஓய்வூதியப்பங்களிப்பு மற்றும் வைப்புநிதி உள்ளிட்ட அனைத்துப்பிடித்தங்களும் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் 29/11/2019 அன்று நடைபெற்ற விசாரணையில் உத்திரவிட்டுள்ளது.
MTNL ஊழியர்களுக்கு 04/12/2019 சம்பளம்...
ITS அதிகாரிகளுக்கு 05/12/2019 சம்பளம்...
BSNL ஊழியர்களுக்கு எப்போது சம்பளம்?
என்பதே இப்போதையக் கேள்வி...
 ------------------------------------------
ஓய்வூதிய மென்பொருள் பயிற்சி... 


SAMPANN எனப்படும் DOT ஓய்வூதிய மென்பொருள் பயிற்சி 
டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. 
இந்தப் பயிற்சி காணொலிக்காட்சி மூலம் நடைபெறும். 
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணைப்பொதுமேலாளர் நிதி தலைமையிலான குழுவிற்கு பயிற்சி அளிக்கப்படும்.   

ஒவ்வொரு மாவட்டத்திலும் DH - DEALING HANDS – எனப்படும் கையாளும் குழுக்கள் உருவாக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பேர் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு குழுவும் 30 ஊழியர்களது ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தமான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும். விருப்ப ஓய்வு அளித்த ஊழியர்களது எண்ணிக்கைக்கு ஏற்றவாறு குழுக்கள் அமைக்கப்படும். 
மதுரை மாவட்டத்தில் 600 ஊழியர்களும்...
காரைக்குடி மாவட்டத்தில் 200 ஊழியர்களும்....
விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.
எனவே மதுரைக்கு 20 குழுக்களும்... 
காரைக்குடிக்கு 7 குழுக்களும் என மொத்தம் 
27 குழுக்கள் மதுரை வணிகப்பகுதியில் நியமிக்கப்பட வேண்டும்.

 ------------------------------------------
கணக்குப் போட்ட கணக்கு அதிகாரிகள்... 

விருப்ப ஓய்விற்கு நாடுமுழுக்க 75.6 சத ஊழியர்கள்  மற்றும் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். விண்ணப்பிக்கத் தகுதியான 104471 ஊழியர்களில் 78929 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். விருப்பம் தெரிவித்துள்ள கேடர்களில்  கணக்கு அதிகாரிகள் அதிகபட்சமாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விருப்ப ஓய்விற்குத் தகுதியானவர்கள் = 3115
விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்தவர்கள் = 2525
81.1  சத கணக்கு அதிகாரிகள் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.

கேடர்   தகுதியானவர்கள்  விருப்பம் அளித்தவர்கள்
JAO         282                           191
AO          2338                        1894
CAO         244                          214
DGM         251                          226

அதிகமான பணிச்சுமை, மாநிலம் மற்றும் 
அகில இந்திய அளவில் மாற்றல் போன்ற காரணங்களால் 
கணக்கு அதிகாரிகள் மத்தியில் விருப்ப ஓய்வு எண்ணிக்கை 
அதிகமாக உள்ளது என்பது தெளிவாகிறது.

No comments:

Post a Comment