Monday 9 December 2019


செய்திகள்

சங்கம் விட்டு சங்கம் மாறும் வசதி

தற்போதுள்ள விதிகளின்படி BSNL ஊழியர்கள் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் சங்கம் விட்டு சங்கம் மாற விருப்பம் தெரிவிக்கலாம். 31/01/2020 அன்று விருப்ப ஓய்வில் அதிக ஊழியர்கள் செல்லவிருப்பதால் இம்முறை சங்கம் மாறும் சடங்கை நிர்வாகம் தள்ளிப்போட்டுள்ளது. எனவே இந்த முறை  யாரும் சங்கம் விட்டு சங்கம் மாற இயலாது. மேலும் சங்கம் விட்டு சங்கம் மாறும் விருப்பத்தை தற்போது அதற்கான படிவத்தில் நிரப்பி நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். ஆனால் வருங்காலங்களில் ஊழியர்கள் VRSக்கு விருப்பம் தெரிவித்தது போல் சங்கம் மாறுவதற்கான விருப்பத்தையும் தங்களது ESS இணையத்தின் மூலமாக தெரிவிக்கலாம் என நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கங்கள் தங்களது கருத்தினை 10/12/2019க்குள் தெரிவிக்க வேண்டும் என நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இணையதள வசதி மூலம் விருப்பம் தெரிவிக்கும் முறைக்கு BSNLEU சங்கம் வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ESS இணையத்தின் மூலம் சங்கம் மாறிட விருப்பம் தெரிவித்தாலும் VRSல் கடைப்பிடிக்கப்பட்டதைப் போல PRINT OUT எடுக்கப்பட்டு அந்தப்  படிவத்தில் சம்பந்தப்பட்ட  ஊழியர், 
அவரது மேலதிகாரி, மாறவிருக்கும் சங்கத்தின்  சங்க நிர்வாகி ஆகியோரின்  கையெழுத்து பெறப்பட வேண்டும் என்ற தற்போதைய  நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
-----------------------------------------------
SAMPANN மூலம் ஓய்வூதிய விண்ணப்பங்கள்

09/12/2019 முதல் விருப்ப ஓய்வு ஊழியர்கள் SAMPANN மூலம் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. BSNL மாநிலங்கள் மற்றும் SSAக்கள் DOTயின் SAMPANN இணையத்துடன் இணைக்கப்பட்டு விட்டன. இனி ஒவ்வொரு ஓய்வூதியருக்கும் உபயோகிப்பாளர் வசதி USER ID ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தப் பணி முடித்த பின்புதான் விருப்ப ஓய்வு ஊழியர்கள் SAMPANN மூலம் தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்ய முடியும். எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் இந்தப்பணி சற்று தாமதமாகவே நடைபெறும் என்று தெரிகிறது.
-----------------------------------------------
பதவி உயர்வும் ஒழுங்கு நடவடிக்கைகளும்...

ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான அதிகாரிகளுக்கு 5 கட்டப்பதவி உயர்வு வழங்குவது பற்றி BSNL நிர்வாகம் 25/09/2019 அன்று விளக்கம் அளித்திருந்தது. அதன்படி பதவி உயர்வுத்தேதிக்குப் பின்பாக ஒழுங்கு நடவடிக்கை அமைந்திருந்தால் அது பதவி உயர்வைப் பாதிக்காது என நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. இந்த நடைமுறை ஊழியர்களுக்கும் அமுல்படுத்தப்பட வேண்டும் 
என சங்கங்கள் கோரிக்கை எழுப்பியுள்ளன.

No comments:

Post a Comment