Thursday, 30 April 2020

மேதின வாழ்த்துக்கள் 

விதைகள் முளைத்தன...
தோழனே...
உன் வியர்வையில்...

கோபுரங்கள் எழுந்தன...

தோழனே...
உன்  தோள்களில்...

சாலைகள் நீண்டன...

தோழனே...
உன் சக்தியில்...

திசைகள் தெரிந்தன

தோழனே...
உன் திறமையில்...

வானம் வசப்பட்டது...

தோழனே...
உன் அறிவியலில்...

உலகம் நிமிர்ந்தது...

தோழனே...
உன் கூனலில்...

தோழனே...

நீயே படைப்பவன்...
நீயே காப்பவன்...

தோழனே...

உன் 'ஒரு சொட்டு'
வியர்வை உள்ளவரை
தொலையாது உலகம்...
அழியாது உலகம்..

அனைவருக்கும் புரட்சிகர
மேதின தொழிலாளர்
திருநாள் நல்வாழ்த்துக்கள்...
மனமார்ந்த வாழ்த்துக்கள் 

கொரோனாக் காலம் மிகவும் கொடியது...
நமது தோழர்களின் நல்லது... கெட்டது என 
எந்த நிகழ்விலும் யாரும் பங்கு கொள்ள இயலாத நிலை...

குறிப்பாக...
முப்பது ஆண்டுகள்... நாற்பது ஆண்டுகள்...
இந்த இலாக்காவிலே பணிபுரிந்து...
ஓய்வு பெறும் அன்று...
அலுவலகத்தில் வாழ்த்துவார் யாருமில்லை...
கரிசனத்தோடு கை குலுக்குவார் எவருமில்லை...
வீடு வரை சென்று விடை கொடுக்க
தோழர்களால் இயலவில்லை...

ஆனாலும் காரைக்குடியில்...
அடாத ஊரடங்கிலும்...
விடை கொடுக்கும் நிகழ்ச்சியை 
விடாது நடத்துகின்றோம்...

இன்று இராமநாதபுரத்தில் பணி நிறைவு பெற்ற 
தோழர்.வெலிங்டன்  - ஓட்டுநர் அவர்களின் 
பணி நிறைவு விழா எளிமையாக இனிமையாக நடைபெற்றது.
கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள் 
சரவணன் JTO... தவசி JTO...
பரமக்குடி கிளைச்செயலர் தோழர் தமிழரசன் 
மற்றும் தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

VRSல்  உயர் அதிகாரிகள் விடை பெற்ற பின்பு...
நமது JTO தோழர்களே... 
அங்குமிங்கும் சுழன்று உயர்  பணி புரிகின்றார்கள்...
மூத்தவர்களை வழியனுப்பும் நிகழ்வை...
பொறுப்புடன்  நடத்திய 
இளையவர்களுக்கு நமது அன்பான வாழ்த்துக்கள்...
வாழ்க.. வளமுடன்...
இன்று 30/04/2020
பணி நிறைவு பெறும் 

BSNLEU சங்கத்தின் 
தமிழ் மாநிலத்தலைவர்...
அகில இந்திய உதவிச்செயலர்...
தமிழ் மாநில AUAB ஒருங்கிணைப்பாளர்..

தோழர் S.செல்லப்பா 
அவர்களின் பணி நிறைவுக்காலம்...
சிறப்புடன் விளங்க அன்புடன் வாழ்த்துகின்றோம்...

எஞ்சிய காலம்...  எளியோருக்காகட்டும்...
பணி நிறைவு வாழ்த்துக்கள் 
M. நாகேஸ்வரன்
இன்று 30/04/2020 
பணி நிறைவு பெறும் 

80களின் இளைய நாயகன்... 
90களின் தொழிற்சங்கத் தலைவன்...

NFTE இயக்கத்தின் 
இணைபிரியாத் தோழன்...

மதுரை பொதுமேலாளர் அலுவலக 
NFTE கிளைத்தலைவர்...

அருமைத்தோழர்...
M. நாகேஸ்வரன்
அலுவலக கண்காணிப்பாளர் 
பொதுமேலாளர் அலுவலகம் - மதுரை 

அவர்களின் பணிநிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க அன்புடன் வாழ்த்துகின்றோம்...
மேதினக்கொடியேற்றம்


01/05/2020
வெள்ளிக்கிழமை - காலை 10 மணி
--------------------------------------------------

பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.
தொலைபேசி நிலையம் - சிவகங்கை
தொலைபேசி நிலையம் - பரமக்குடி
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம்
தொலைபேசி நிலையம் - இராமேஸ்வரம்
--------------------------------------------------
தோழர்களே...
முகங்களில் கவசங்களோடு ..
கரங்களில் கிருமி நீக்கிகளோடு..
நெஞ்சில் நீங்கா உணர்வுகளோடு...
வாரீர்... வாரீர்...
பணி நிறைவு வாழ்த்துக்கள்

இன்று 30/04/2020
காரைக்குடி மாவட்டத்தில்
பணிநிறைவு பெறும் அன்புத்தோழர்கள்

K.ரெத்தினம்
TT/தேவகோட்டை

J.D. வெலிங்டன்
DRIVER/இராமநாதபுரம்

V.பசுவதி
OS/ இராமநாதபுரம்

ஆகியோரின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.

Thursday, 23 April 2020


விலைவாசிப்படி DA முடக்கம்  

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு
வழங்கப்பட வேண்டிய விலைவாசிப்படி DAவை முடக்கி 
மத்திய அரசு இன்று 23/04/2020 உத்திரவு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 
ஜனவரி 2020 முதல் 4 சத DA உயர்ந்துள்ளது
மொத்த DA 21 சதமாகும்.
தற்போதுள்ள சூழலில்....
கொரோனா வியாதியைச் சமாளிக்க
அரசுக்கு அதிக நிதி தேவைப்படுவதால்...
மத்திய அரசு தனது...
ஊழியர்களுக்கும்... ஓய்வூதியர்களுக்கும்...
ஜனவரி 2020 முதல் வழங்கப்பட வேண்டிய DA
ஜூலை 2020 முதல் வழங்கப்பட வேண்டிய DA
ஜனவரி 2021 முதல் வழங்கப்பட வேண்டிய DA
என 18 மாதங்களுக்கு  
விலைவாசிப்படியை முடக்கியுள்ளது.

ஜூலை 2021ல் மறுபரிசீலனை செய்யப்பட்டு
18 மாதங்களில் உயர்ந்த விலைவாசிப்புள்ளிகளையும்
கணக்கில் கொண்டு 01/07/2021 முதல் DA வழங்கப்படும்.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை 
18 மாதங்களுக்கு நிலுவை ஏதும் கிட்டாது.

01/04/2020 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு
VDA என்னும் விலைவாசிப்படி அறிவிக்கப்பட வேண்டும். 
இன்றைய தேதி வரை VDA அறிவிக்கப்படவில்லை.
எனவே அதுவும் முடக்கப்படும் என்றே தோன்றுகிறது.

BSNL ஓய்வூதியர்கள் IDA பிரிவில் ஓய்வூதியம் பெற்றாலும் 
அவர்களுக்கும் இது அமுல்படுத்தப்படும் என்றே தெரிகிறது.

BSNL நிறுவனம் தனது வருமானத்தில் இருந்து
தனது நிறுவனத்தில் பணிபுரியும்
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குகிறது.
ஏப்ரல் 2020 முதல் கிடைக்க வேண்டிய 
IDA உத்திரவும் வெளியிடப்பட்டு விட்டது.
IDAவை BSNL  ஏப்ரல் 2020லிருந்து அனுமதிக்கின்றதா?
இல்லையா என்பது விரைவில் தெரிய வரும்.
இது BSNL  நிர்வாக முடிவைப் பொறுத்தது.

மத்திய அரசின் இந்த முடிவு...
கொரோனாவை விடக்கொடுமையானது.
என்பது மட்டும் நமக்குப் புரிகிறது...

Wednesday, 22 April 2020


ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிக்கரம்

ஓராண்டு காலமாக சம்பளம் இல்லாமல் வாடும் ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வு கொரோனா காலத்தில் மேலும் மோசமாகி விட்டது
பல்வேறு நல்ல உள்ளங்கள் தமிழகம் முழுவதும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

அந்த வரிசையில்....
மதுரைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவுப்பணியாளர்களுக்கு 22/03/2020 அன்று 
பாட்டாளி வர்க்கத்தலைவர் தோழர் லெனின் 
பிறந்த நாளில் ரூ.2500/- நிதியுதவி வழங்கப்பட்டது.

AIBSNLEA முன்னாள் மாவட்டச்செயலரும்...
மதுரை துணைப்பொதுமேலாளருமாகிய
அருமைத்தோழர்.அருணாச்சலம் DGM(TR) அவர்கள்
ஒப்பந்த ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
நிதியுதவி வழங்கிய மதுரைப் பொதுமேலாளர் அலுவலக 
அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு
நமது மனமார்ந்த நன்றிகள் பல.
நிதி திரட்டுவதில் முனைப்புடன் செயலாற்றிய
தோழர்.சுபேதார் அலிகான் அவர்களுக்கும் நமது நன்றிகள்...


Thursday, 16 April 2020

அண்ணல் விழாவும்...
இன்னல் தீர் பணியும்...

ஏப்ரல் -14 
அண்ணல் அம்பேத்கார் அவர்களின் பிறந்த தின விழா வெகு சிறப்பாக 
காரைக்குடி NFTE சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
AITUC மூத்த தோழர் பழ.இராமச்சந்திரன் அவர்கள்
 கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக்கினார்.
பத்து மாத காலமாக சம்பளம் வராமல் துன்பப்படும்
 ஒப்பந்த ஊழியர்களுக்கு அண்ணலின் பிறந்த நாளன்று 
சிறு பொருளுதவி அளிக்கப்பட்டது. 

நிரந்தர ஊழியர்களும்... 
ஓய்வு பெற்ற ஊழியர்களும்...
விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களும்...
பணியில் உள்ள ஊழியர்களும்...
மனதார அளித்த  நன்கொடையால்...
காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பணிபுரியும் 
ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.2000/=
சிறு உதவியாக நமது தோழர்களால் வழங்கப்பட்டது.

விழாவில்...
AITUC மூத்த தோழர் பழ.இராமச்சந்திரன்...
AIBSNLEA மூத்த தலைவர் தோழர்.மோகன்தாஸ் 
SNEA மாநிலச்சங்க நிர்வாகி தோழர். கரு.சண்முகம் 
ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்டச்செயலர் தோழர்.முருகன்...
TRC மனமகிழ் மன்றச் செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் 
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி 
NFTE கிளைச்செயலர் தோழர்.ஆரோக்கியதாஸ் 
மற்றும் திரளான தோழர்கள் கலந்து கொண்டு 
ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்கினர்.

அரசு நிவாரண நிதி என்ற அகன்ற உண்டியலில்...
நிவாரண நிதியினை அள்ளிப் போடாமல்...
நம் கண் முன்னே துயருறும்...
அடிமட்ட ஊழியர்களான ஒப்பந்த ஊழியர்களுக்கு...
தங்கள் உதவிக்கரம் நீட்டிய அன்புத்தோழர்கள் 
அனைவருக்கும் நமது நெஞ்சு நிறை நன்றி உரித்தாகுக...

குறிப்பாக...
தோழியர்களின் பங்கு  மனமார்ந்த பாராட்டுக்குரியது.
தோழியர்கள்... 
காந்திமதி வெங்கடேசன் - ரூ.5000
லெட்சுமி DE - ரூ.5000
ஜோசஃபின் மரிய ஜோதி  SDE - ரூ.5000
சரோஜா AO - ரூ.5000
புனிதா SDE - ரூ.5000
என்ற ஐம்பெரும் தோழியர்களின்...
தேவியர்களின் ஐயாயிரம் பங்கு 
மகத்தானது... மதிப்பானது...
எனவேதான் காரைக்குடி பகுதியில் மட்டும் 
ஒரு லட்சம் அளவிற்கு உதவி புரிய முடிந்தது...
அவர்களுக்கு நமது தலைவணங்கிய 
வணக்கங்களும்... வாழ்த்துக்களும்...

காரைக்குடி பகுதி போலவே...
இராமேஸ்வரம்... இராநாதபுரம்...
பரமக்குடி மற்றும் சிவகங்கை 
பகுதிகளிலும் நமது தோழர்கள் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்...

Wednesday, 8 April 2020

உத்தமத்தலைவன் உதய தின விழா 

ஏப்ரல் - 8 -
தோழர். ஓ .பி.குப்தா பிறந்த நாள் 

காரைக்குடி NFTE சங்க அலுவலகத்தில் தானைத்தலைவர் 
ஓ .பி.குப்தா அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்புடன் நடைபெற்றது.
மூத்த தோழர் முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தோழர்கள் மலரஞ்சலி செலுத்தி சிறப்பு செய்தனர்.

தோழர் முத்துகிருஷ்ணன் தனது தலைமையுரையில்
ஒரு காந்தி... ஒரு ஏசு...ஒரு புத்தர்... ஒரே ஒரு  ஓ .பி.குப்தா என 
அவரது பெருமை சொல்லி அவரது எளிமை மற்றும் தியாகத்தை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார்.

அருமைத்தோழர். காதர் பாட்சா அவர்கள் 
தோழர் குப்தாவின் பிறந்த நாளையொட்டி ...
காரைக்குடி அம்மா உணவகத்தில் 200 பேருக்கு இலவச உணவளித்தார். 
VRSல் சென்ற பின்பு தோழர் குப்தாவால் தான் பெற்ற ஓய்வூதியப் பணத்தில் அவரது பிறந்த நாளில் ஏழை எளியோருக்கு 
இலவச உணவு அளிப்பதை பெருமையாகக் குறிப்பிட்டார்.

மாவட்டத்தலைவர் தோழர் லால் பகதூர் 
மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறப்போகும் தனது மூத்த சகோதரனை விட தனது ஓய்வூதியம் கூடுதலாக கிடைப்பதற்கு 
தோழர் குப்தாவே காரணம் என்று புகழ்மாலை சூட்டினார்.

கிளைச்செயலர் தோழர்.ஆரோக்கியம் அவர்கள் அடிமட்ட ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஒளிவிளக்கு தோழர்.குப்தா என புகழுரைத்தார்.

மாவட்ட உதவிப்பொருளாளர் தோழர்.ஜெயராமன்
குப்தாவை தமக்கு வாழ்வளித்த பெரிய தந்தை...
தோழர்களின் பிரிய தந்தை என மெய் சிலிர்க்க கூறினார்.

இறுதியில் மாவட்டச்செயலர் தோழர்.மாரி 
நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

உலகளந்த தலைவனின்...
உன்னதத் திருநாளில் 
ஊரடங்கு வேளையிலும்..
உணர்வோடு..கலந்து கொண்ட

உழைக்கும் தோழர்கள் 
ஓய்வு பெற்ற தோழர்கள் 
ஒப்பந்த ஊழியர்கள்...
அனைவருக்கும் நன்றிகள் பல...

வாழ்க தோழர். குப்தா புகழ்...
வழி நடத்தட்டும் நம்மை...
தோழர்.குப்தா நிழல்...