பக்ரீத் தியாகத்திருநாள்…
பக்ரீத் தியாகத்திருநாள்…
இறைத்தூதர்…
இப்ராஹிமிற்கு…
இறைவன் ஆணையிட்டான்…
இதயத்தினும் மேலான…
இன்னுயிர் மைந்தன்…
இஸ்மாயிலைப் பலியிட…
இதயங்கள் படபடத்தன…
இப்ராஹிமோ…
இரும்பென நின்றார்…
இறைவன் கட்டளையை…
இமைப்பொழுதும் தயங்காது…
இப்போதே நிறைவேற்றுகிறேன் என
இரும்பு வாளை ஏந்தினார்….
இஸ்மாயிலின் கழுத்தில்…
இரும்பு வாள் வீழ்ந்தது…
இது…
இறைவனின் திருவிளையாடல்..
இரும்பு வாள் கரும்பானது….
இது…
இப்ராஹிம் விசுவாசத்திற்கு
இறைவன் வைத்த சோதனை…
இறைவிசுவாசம் நின்றது…
இறைவன் அன்பை வென்றது…
இவ்வுலகம் முழுக்க சென்றது…
இஸ்மாயிலுக்குப் பதிலாக
இதோ ஒரு பலியாடு…
இறைவனால் கொடுக்கப்பட்டது…
இனிதே மனிதர்களுக்கு உணவானது…
இதுவே பக்ரீத் வரலாறு…
இன்றோ… மதத்தின் பெயரால்…
இரையாகப் பிறந்த ஆடுகள் தப்பிக்கின்றன..
இறையால் பிறந்த மனிதன் பலியாகிறான்…
இறைவன் பெயரால் மனிதப்பலி…
இந்திய தேசம் கண்களை
இறுக்க மூடிக்கொண்டு பார்த்திராது…
இறைவன் பெயரால் மனிதர்கள் பலியாகும்..
இந்தக் கொடுமை முடிப்போம்…
இணைந்து வாழ்வோம்….
இனிதே வாழ்வோம்…
அனைவருக்கும்
தியாகத்திருநாள் மற்றும்
ஹஜ் பெருநாள்
நல்வாழ்த்துக்கள்...