நன்மனச் செம்மல்
அகில இந்திய சிறப்பு
அழைப்பாளர்
அருமைத்தோழர். செம்மல் அமுதம்
அவர்கள் கொரோனா கொடும் நோயால்
நேற்று 30/05/2021 இயற்கை
எய்தினார்.
---------------------------------------------
தோழர். செம்மல் அமுதம்
மிகவும் அன்பான... அறிவான...
அற்புதமான தோழர்...
அகில இந்தியச்சங்கம்... மாநிலச்சங்கம்... மாவட்டச்சங்கம்
என அனைத்து பகுதி அமைப்புக்களுக்கும்
பேருதவியாக இருந்தார்.
பேலியோ என்னும் இயற்கை
உணவு சார்ந்த
அமைப்பிலும் முக்கியப்
பங்காற்றினார்.
காரைக்குடி பகுதியில்
பல பேலியோ சிறப்புக்கூட்டங்களில்
கலந்து கொண்டு சிறப்புரை
ஆற்றியுள்ளார்.
செய்திகளை முந்தித் தருவதிலும்...
அதனை முதிர்ச்சியோடு
தருவதிலும் அவர் இணையற்றவர்.
ஆதாரமற்ற செய்திகளை அவர்
பரப்புவதில்லை.
பன்மொழி அறிந்தவராக...
இன்மொழி பகருபவராக
பரந்த மனம் கொண்டவராக...
பண்போடு பழகுபவராக...
தனது இறுதி மூச்சுவரை
பயணித்தார்̣...
டெல்லியில் சிலகாலம்
அமர்ந்து தொழிற்சங்கப் பணியாற்றிய
காலத்தில் பல தனிநபர்
மற்றும் பல்வேறு
பொதுப்பிரச்சினைகள் தீர்ந்திட
உதவிகரமாக இருந்தார்.
அகில இந்தியத்தலைவர்
மற்றும் பொதுச்செயலர் இருவரிடம்
ஆழமான உண்மையான நட்புக்
கொண்டிருந்தார்.
இடதுசாரி சிந்தனை கொண்டவர்
என்றாலும்
ஜனநாயகக் கோட்பாடுகளில்
மிகவும் நம்பிக்கை கொண்டவர்.
தொழிற்சங்க அரங்குகளில்
தனது கருத்தை
ஆழமாக அழுத்தமாக எடுத்துரைப்பார்...
அவருக்கு உடன்பாடு இல்லாத
பிரச்சினைகளில்
அலுக்காது விவாதம் புரிந்து
தனது கருத்தை எடுத்துரைப்பார்..
பெரும்பான்மை முடிவுக்கு
என்றும் கட்டுப்படுவார்...
விருப்ப ஓய்வுத்திட்டத்தின்
சாதக பாதக அம்சங்களை
அலசி ஆராய்ந்து விருப்ப
ஓய்வுத்திட்டம் சாலச்சிறந்தது
என்ற நிலைபாட்டினைக்
கொண்டிருந்தார். பிரச்சாரம் செய்தார்.
BSNL நிறுவன வளர்ச்சியில்
மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்...
அவரது மறைவு தோழர்களுக்கு
மிகப்பெரும் பேரிழப்பு...
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
NFTE இயக்க வரலாற்றில் அவருக்கு
எப்போதும் தனித்த இடமுண்டு...
இனியொரு செம்மல்... NFTE இயக்கம்
காணப்போவதில்லை....
செவ்வணக்கம்... தோழர்... செம்மல்...