கொரோனா துயர் துடைப்பு நிதி
BENEVOLENT FUND
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை சுழன்று அடிக்கின்றது. BSNL ஊழியர்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்படும் ஊழியர்களின் துயர் துடைக்க இன்று 06/05/2021 நிர்வாகத்துடன் அனைத்து சங்கத் தலைவர்களின் காணொளிக்கூட்டம் நடைபெற்றது. NFTE சார்பில் பொதுச்செயலர் தோழர். C.சிங் மற்றும் அகில இந்தியத்தலைவர் தோழர். இஸ்லாம் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு GM PERSONNEL திரு. R.K. கோயல்
அவர்கள் தலைமை வகித்தார்.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
BENEVOLENT FUND ஏற்படுத்தப்படும்.
---------------------------------------------------------
அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் GR’D முதல் CMD வரை ஒரு நாள் சம்பளத்தை நிதியாக வழங்க வேண்டும்.
---------------------------------------------------------
அதே அளவு நிதியை நிர்வாகம் தன் பங்காக வழங்கிடும்.
---------------------------------------------------------
பணியில் இருக்கும் போது கொரோனாவால் மரணமுறும் ஊழியர் குடும்பத்திற்கு ரூபாய்
பத்து லட்சம் நிவாணர நிதியாக வழங்கப்படும்.
---------------------------------------------------------
பணியில் இருக்கும் போது கொரோனா கொடிய நோயால் மரணமுறும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும்.
---------------------------------------------------------
பணியில் உள்ள ஊழியர்களின் சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படும்.
---------------------------------------------------------
BSNL நேரடி நியமன ஊழியர்களின் EPF உள்ளிட்ட ஓய்வூதியப்பலன்கள் தாமதமின்றி ஊழியர்களின் கணக்கில் செலுத்தப்படும்.
---------------------------------------------------------
BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு நிர்வாகம் செலுத்திடும் பங்களிப்புத் தொகை CONTRIBUTION உயர்த்தப்படும்.
---------------------------------------------------------
மேற்கண்ட யாவும் இன்று நடைபெற்ற கூட்ட முடிவுகளாகும்.
இவை யாவும் BSNL வாரியத்தின் முன்பாக விரைவில்
ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும்.
BSNL வாரியத்தின் ஒப்புதலைப் பொறுத்து
அவை நடைமுறைப்படுத்தப்படும்.
No comments:
Post a Comment