ஒப்பந்த ஊழியர் VDA உயர்வு
VDA என்னும் விலைவாசிப்படி
உயர்ந்துள்ளது.
அதற்கான உத்திரவு CLC முதன்மைத்
தொழிலாளர்
ஆணையரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
A பிரிவு நகரம் UNSKILLED பிரிவு...
ரூ.645/=
(639ல் இருந்து 645 ஆக நாளொன்றுக்கு ரூ.6/= உயர்வு)
B பிரிவு நகரம் UNSKILLED பிரிவு...
ரூ.539/=
(534ல் இருந்து 539 ஆக நாளொன்றுக்கு ரூ.5= உயர்வு)
C பிரிவு நகரம் UNSKILLED பிரிவு...
ரூ.431/=
(427ல் இருந்து 431 ஆக நாளொன்றுக்கு ரூ.4/= உயர்வு)
இன்று ஒப்பந்த ஊழியர்களை BSNL நிறுவனத்தில் இருந்து முற்றாக குறைப்பதற்கான வேலை மும்முரமாக நடைபெற்று வருகின்றது. எங்கும் குறைந்தபட்சக் கூலி வழங்கப்படுவதில்லை.
மதுரை போன்ற B பிரிவு ஊர்களில் 539/= ரூபாய் குறைந்தபட்சக்கூலி. ஆனால் ரூ.400/=மட்டுமே வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு ரூ.139/= சுரண்டப்படுகின்றது. மாதம் நான்காயிரத்துக்கும் மேல் ஒப்பந்த ஊழியர் வயிற்றில் அடிக்கப்படுகின்றது.
காரைக்குடி போன்ற C பிரிவு
ஊர்களில் ரூ.431/= குறைந்தபட்சக்கூலி. ஆனால்
நாளொன்றுக்கு ரூ.300/=மட்டுமே வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு ரூ.131/= வீதம்
மாதம் ஒன்றுக்கு ரூ.நான்காயிரம் வரை அவர்களது கூலி குறைக்கப்படுகின்றது.
நிரந்தர ஊழியர்களுக்கு
உரிய தினத்தில் சம்பளம் வழங்குவதில் அலட்சியம்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு
உரிய கூலியை வழங்குவதில் அலட்சியம்.
காலமும்... சூழலும்...இயற்கையும்...
அரசிற்கும்... நிர்வாகத்திற்கும்...
அதிகாரிகளுக்கும் சாதகமாக உள்ளது.
இந்நிலை ஒருநாள் நிச்சயம் மாறும்...
No comments:
Post a Comment