Friday 27 June 2014

JCM  நிலைக்குழு 
STANDING COMMITTEE

26/06/2014 அன்று நடைபெற்ற JCM நிலைக்குழு கூட்டத்தில் பின்வரும் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. நமது சங்கத்தின் சார்பில் தோழர்கள் 
இஸ்லாம் மற்றும் C.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • RM/GRD தோழர்களின்   STAGNATION தேக்கநிலை தீர்வு எட்டப்படவில்லை. எனவே இயக்குனர் HR வசம் பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • போனஸ் வழங்குவது பற்றி அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் விவாதிக்கப்படும்.
  • 01/01/2007 முதல் சம்பள மாற்ற நிலுவை வழங்குவது பற்றி DOTயிடம் இருந்து பதிலேதும் இல்லாததால் மீண்டும் DOTயை அணுகுவது.
  • ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமாக DOTக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும்.
  • 78.2 சத IDA இணைப்பின் அடிப்படையில் ஊனமுற்ற தோழர்களுக்கு போக்குவரத்துப்படி மாற்றியமைக்கப்படும்.
  • போட்டித்தேர்வு எழுதி பெற்ற பதவி உயர்வுகளை POST BASED PROMOTIONS  நாலு கட்டப்பதவி உயர்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது  என்ற கோரிக்கையை அதற்காக நியமிக்கப்பட்ட குழு பரிசீலனை செய்யும்.
  • 7100 சம்பளத்தில் இருந்து 6500 சம்பளத்திற்கு இறக்கம் பெற்ற SR.TOA தோழர்கள் அந்தப்பதவி உயர்வை மறுதலித்து அடுத்த பதவி உயர்வை முதற்கட்டப்பதவி உயர்வாகப்பெறலாம். இது  TTA/DRIVER மற்றும்   LDC/TOA மாறுதல் செய்த தோழர்களுக்கும் பொருந்தும்.
  • SC/ST  தோழர்களுக்கு தகுதி மதிப்பெண்களில் தளர்வு செய்தல் பற்றி குழுவின் பரிந்துரை எதிர்பார்க்கப்படுகின்றது.
  • LTC மற்றும் மருத்துவப்படிகளை திரும்ப தருதல் பற்றி DIRECTOR(HR) உடன் விவாதிக்கப்படும்.
  • BSNLலில் நியமனம் பெற்ற தோழர்களுக்கு ஓய்வூதியப்பலனில் BSNL பங்காக அடிப்படைச்சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 2 சதம் பங்களிப்பு தருதல் சம்பந்தமான பரிந்துரை பற்றி முடிவெடுக்கப்படும்.
  • TM பயிற்சி முடித்து பதவி உயர்வு பெறாத தோழர்களின் நிலை பற்றி எந்த முடிவும் எட்டப்படவில்லை.
  • கருணை அடிப்படை வேலை சம்பந்தமாக மாற்றுத்திட்டங்களை உருவாக்குவது பற்றி சங்கங்களுடன் ஆலோசனை செய்யப்படும்.

2 comments:

  1. புதுடெல்லி,
    துறை ரீதியான விசாரணையில் பணியாளர் ஒருவருக்கு சாதகமாக செயல்படுவதற்காக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பி.எஸ்.என்.எல்-ன் கர்னல் யூனிட்டு பொது மேலாளரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
    இதுதொடர்பாக லஞ்சத் தடுப்பு சட்டம் 1988, பிரிவு 7-ன் கீழ் அவர் மீது வழக்கையும் பதிவு செய்துள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
    கர்னல் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இளநிலை டெலிகாம் அதிகாரியாக பணியாற்றி வரும் ஒருவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், விசாரணையில் அவருக்கு சாதகமாக செயல்படுவதற்கு பொது மேலாளர் ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர ஒப்புக்கொள்வதாக கூறிய இளநிலை டெலிகாம் அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார்.
    இதையடுத்து, லஞ்சம் பெற்ற பொதுமேலாளர் கையும் களவுமாக பிடிபட்டார். உடனடியாக அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் சி.பி.ஐ. நடத்திய ரெய்டில் கணக்கில் வராத ரூ.6.50 லட்சம் ரொக்கம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், மற்றும் முதலீட்டு பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.

    ReplyDelete
  2. படித்ததில் பிடித்தது.........நண்பர்களுக்காக தமிழில்

    ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

    கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."

    ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

    "மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."

    "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
    "உன்னுடைய உடைமைகள்........."

    "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"
    "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."

    "என்னுடைய நினைவுகளா?............."
    "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"

    "என்னுடைய திறமைகளா?..........."
    "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."

    "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
    "மன்னிக்கவும்...........குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."

    "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
    "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"

    "என் உடல்?..........."
    "அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."

    "என் ஆன்மா?"
    "இல்லை........அது என்னுடையது.........."
    மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........
    கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,

    கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"

    -- ஒவ்வொரு நொடியும் வாழ்
    -- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
    -- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......அது மட்டுமே நிரந்தரம்.......
    -- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

    ReplyDelete