எல்லோரும் கொண்டாடுவோம்...
ஜூலை - 27 நாடு முழுவதும் மக்கள்
தங்கள் மனம் கவர்ந்த அன்புத்தலைவனை...
அப்துல் கலாமை நினைவு கூர்ந்து
நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
அதே தினத்தில் BSNLEU சங்கம் ஸ்வீட் எடு கொண்டாடு
என்று கொண்டாட்டம் நடத்திக்கொண்டிருந்தது.
காரணம் வேறொன்றுமில்லை... BSNL ஓய்வூதியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்தி BSNL உத்திரவு வெளியாகியுள்ளது.
மேலும் இதுநாள் வரை BSNLலிடம் இருந்து கறக்கப்பட்ட
60:40 என்ற நிதிச்சுமை நம்மிடம் இருந்து இறக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியச்செலவு முழுவதும் அரசையே சாரும்
எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இது உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான்.
பத்தாண்டுகளாக 60:40 பிரச்சினை எழுப்பப்பட்டு வந்தது.
தோழர்.குப்தா இதனை தொடங்கி வைத்தார்.
மூன்று ஆண்டுகளாக 78.2 பிரச்சினை எழுப்பப்பட்டு வந்தது.
பல்வேறு அமைப்புக்கள் குரல் எழுப்பி வந்தன.
குறிப்பாக AIBSNLPWA தொடர்ந்து
இடைவிடாமல் இப்பிரச்சினையை எழுப்பி வந்தது.
அரசு இல்லத்தின் அனைத்துக்கதவுகளையும் தட்டி நியாயம் கேட்டது.
மேற்கண்ட இரு பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டது
BSNL ஊழியர்கள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.
இது எல்லோரும் கொண்டாட வேண்டிய வெற்றி. ஆனால் கொண்டாடுவதாலேயே வெற்றி அவர்களுக்கு சொந்தமாகிவிடாது.
விடுதலையைக் கொண்டாடுவது என்பது வேறு...
விடுதலைக்குப் பாடுபடுவது என்பது வேறு...
தியாகங்களை மேடையில் பேசுவது என்பது வேறு...
தியாகங்களை மேற்கொள்வது என்பது வேறு...
78.2 இணைப்பு... 60:40 ஒழிப்பு...
எல்லோருக்கும் சொந்தமானது...
எனவே எல்லோரும் கொண்டாடுவோம்...