Wednesday, 28 February 2018


பணி நிறைவு வாழ்த்துக்கள்
தோழர்.இராஜகோபால் 

மதுரை NFTE மேனாள் மாவட்டச்செயலரும்…
STR பகுதியின் தலைவருமான…
அன்புத்தோழர்.இராஜகோபால் அவர்கள்
மதுரையில் 28/02/2018 அன்று பணி நிறைவு பெற்றார்.
அவரது பணி நிறைவுக்காலம்
சீரோடும்…. சிறப்போடும்…
சீரிய சமூகப்பங்களிப்போடும்….
சிறந்து விளங்கிட வாழ்த்துகின்றோம்….

பணி நிறைவு வாழ்த்துக்கள்
தோழர்.ஜோசப் 

நாகர்கோவில் NFTE மேனாள் மாவட்டச்செயலர்…
அருமைத்தோழர். ஜோசப் அவர்கள்
28/02/2018 அன்று பணி நிறைவு பெற்றுள்ளார்.
அடிமட்ட ஊழியர்கள் மத்தியில் சங்கத்தை வளர்த்தவர்…
சிறந்த சமூகப்பணியாளர்…
அவரது சேவைக்காலம் போலவே
ஓய்வுக்காலமும் சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்…

உயர்ந்த மனிதருக்கு உளமார்ந்த அஞ்சலி
 
திரு.இரத்தினவேல் பாண்டியன்

சிறந்த நீதிமானும்
இந்தி எதிர்ப்பு போராளியும்
மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியும்
சமூகநீதி காத்திட்ட மண்டல் குழு தலைவரும்….
மத்திய அரசு ஊழியர்களின்...
5வது ஊதியக்குழுவின் தலைவருமான
திரு.இரத்தினவேல் பாண்டியன்
அவர்களின் மறைவிற்கு
நமது சிரம் தாழ்ந்த அஞ்சலி

Tuesday, 27 February 2018


பணி நிறைவு வாழ்த்துக்கள்

28/02/2018 – காரைக்குடி மாவட்டத்தில்
பணி நிறைவு பெறும் அன்புத்தோழர்கள்
N.கோபாலகிருஷ்ணன்
OS/பரமக்குடி

S.இராஜாமணி
OS/சிவகங்கை

V.சுப்பிரமணியன்
TT/சிவகங்கை

C.தங்கராஜ்
TT/திருப்பத்தூர்

ஆகியோரின் பணிநிறைவுக்காலம்
வளமுடனும்நலமுடனும்
 விளங்க அன்புடன் வாழ்த்துகின்றோம்.

இன்று போல் என்றும் வாழ்க…
 28/02/2018
NFTE சம்மேளனச்செயலர்
சென்னைத் தொலைபேசி
தோழர்.T.R. இராஜசேகரன்…
பணி நிறைவு
 ----------------------------------------------------------------------------------------
ஹாக்கியிலே…
வீரம் நிறைந்த கேப்டன்…
சங்கத்திலே… 
தோழர். மதிவாணனின்..
விசுவாசம் நிறைந்த… துணை கேப்டன்…
இளமை குன்றா இராஜசேகரன்…
இனிமை குன்றா இராஜசேகரன்…
இன்று போல் என்றும் வாழ்க…
இதயம் கனிந்த வாழ்த்துக்களுடன்…
NFTE – NFTCL சங்கங்கள்

Monday, 26 February 2018

நில்கவனிAIRCELL…

தமிழகம் மற்றும் சென்னையில் 
அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட… 
அதிக COVERAGE கொண்ட AIRCELL நிறுவனம் 
இன்று தொலைத்தொடர்பில் OUT OF COVERAGE ஆகிவிட்டது

மிக முக்கிய காரணம் Jioவின் போட்டியால் வந்த வினையாகும்
TOWER உரிமையாளர்களுக்கு உரிய கட்டணம் செலுத்தாத காரணத்தால்
6500 செல்கோபுரங்கள் செயலிழப்பு.  

2015 மற்றும் 2016ல் செயல்பாட்டு லாபம் ஈட்டி வந்த AIRCELL நிறுவனம்
தற்போது டிசம்பர் 2017ல் 120 கோடி நட்டத்தை சந்தித்துள்ளது

இன்றைய தேதியில் 15500 கோடி வங்கிக்கடன்
நிறுவனம் மஞ்சள் கடிதம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது
புதிய INSOLVENCY PROFESSIONAL இயக்குநர் குழு அமைக்கப்பட்டுள்ளது

சொத்துக்களை விற்றுத்தான் கடனை அடைக்கும் நிலை உள்ளது
நாடு முழுவதும் சேவை செய்தாலும் 
தமிழகம் மற்றும் சென்னைதான் AIRCELL நிறுவனத்தின் பலமாகும்

மொத்தமாகவே தனது சேவையை நிறுத்துமா? அல்லது 
சேவையை சுருக்கி தமிழகத்தில் மட்டுமே தொடருமா
என்ற கேள்வியும் எழுந்துள்ளது

ஏறத்தாழ 5000 ஊழியர்கள் பணிசெய்கின்றனர்
அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது

அரசு முத்திரை பெற்ற அம்பானிகளால் 
கண்மூடித்தனமான போட்டி என்ற பெயரில் 
நமது நாட்டில் தொலைத்தொடர்பு சேவை சீரழிக்கப்பட்டு  வருகிறது.

களத்தில் உள்ள போட்டியாளர்களைக் காலி செய்து விட்டு 
ஏகபோக வெற்றியை அனுபவிக்க JIO துடிக்கிறது.
இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய 
ஒழுங்கு படுத்த வேண்டிய 
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் 
TRAI வாயில் விரலோடு வேடிக்கை பார்க்கிறது.

இன்றைக்கு... AIRCELL…
நாளைக்கு... AIRTEL… BSNL…
என்ன செய்யப்போகிறது அரசு?

Sunday, 25 February 2018


துயர் துடைப்பு போராட்டம்

சம்பளத்தாமதம் என்னும்...
மாதாந்திர வேதனையைத் தீர்த்திட…
ஆட்குறைப்பு என்னும் அநியாயம் தடுத்திட…

தலைநகர் சென்னையில்…
தமிழ்மாநில நிர்வாக அலுவகம் முன்பாக…
மார்ச் 2... 
மாநிலம் முழுவதுமிருந்து...
அணிதிரள்வோம்…. ஆர்ப்பரிப்போம்…
வாரீர்… தோழர்களே…

Wednesday, 21 February 2018


காரைக்குடி JCM கூட்டம்

காரைக்குடி மாவட்ட JCM தலமட்டக்குழுக்கூட்டம்
இன்று 22/02/2018 நடைபெறுகின்றது.
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி JCM தலைவராகவும்,
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன்
JCM செயலராகவும் செயல்படுவார்கள்.

NFTE சார்பாக கீழ்க்கண்ட தோழர்கள்
உறுப்பினராகக் கலந்து கொள்வார்கள்.

1.   V.மாரி – மாவட்டச்செயலர் – காரைக்குடி
2.   N.பாலமுருகன் – கிளைச்செயலர் தேவகோட்டை
3.   G.தங்கராஜ் – கிளைச்செயலர் – இராமநாதபுரம்
4.   A. தமிழரசன் – கிளைச்செயலர் – பரமக்குடி
5.   B.முருகன் – கிளைச்செயலர் – சிவகங்கை

பார்வையாளர்களாக...
தோழர்.லால்பகதூர் – மாவட்டத்தலைவர் – காரைக்குடி… தோழர்.சுப்பிரமணியன் – மாவட்ட உதவிச்செயலர் – இராமநாதபுரம் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

மாநிலத்தின் பல பகுதிகளில் JCM கூட்டங்கள் நடைபெறாத நிலையில்... காரைக்குடியில் கூட்டம் நடத்திட முடிவெடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றிகள்.

JCM அமைப்பு ஊழியர் பிரச்சினைகளை 
உரிய முறையில் தீர்க்கும் என நம்புகிறோம். 

Monday, 19 February 2018


ஊதிய மாற்றம் பிரதமர் அலுவலக விளக்கம்

BSNL ஊழியர்களுக்கு...
ஊதிய மாற்றம் வழங்குவது சம்பந்தமாக
22/12/2017 அன்று நமது NFTE சங்கம்
பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது.  

DPE இலாக்காவிடமிருந்து நமது பொதுச்செயலருக்கு
அதற்கான பதில் 31/01/2018 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர்களுக்கான 
8வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக
24/11/2017 அன்று DPE தனது 
வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளதென்றும்…
அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் விலக்குப்பெறவேண்டுமெனில்
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டுமெனவும்….
அதற்காக DOTஐ அணுக வேண்டுமெனவும்
நமது பொதுச்செயலருக்கு கடிதம் அறிவுறுத்தியுள்ளது.

DOTஐச் சந்தித்து அதன் மூலம் ஊதிய மாற்றம் அளிப்பதற்கு
BSNLக்கு நட்டத்திலிருந்து விலக்கு என்னும் பரிந்துரை பெறப்பட்டு
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே
நமது ஊதிய மாற்றம் என்பது நடைமுறைக்கு வரும்.
அதற்குள் இந்த அரசின் காலம் முடிந்தாலும் முடிந்து விடலாம்.
ஊதிய மாற்றம் நமது காலம் முடிவதற்குள் வந்தால் சரிதான்.

Friday, 16 February 2018


செய்திகள்
DESIGNATION COMMITTEE பதவி பெயர்மாற்றக்குழுக் கூட்டம் 
15/02/2018 அன்று நடைபெற்றது. விடுபட்ட பதவிகளின் பெயர்மாற்றங்கள் குறிப்பாக TELECOM FACTORY 
பகுதியில் இறுதி செய்யப்பட்டன.
--------------------------------------------------------------------------------
PLI COMMITTEE  போனஸ் குழுக்கூட்டம் 15/02/2018 அன்று நடைபெற்றது. 2015-16ம் ஆண்டிற்கான போனஸ் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.  போனஸ் வழங்குவதற்காக 2013-14… 2014-15… 2015-16ம் ஆண்டுகளுக்கான வருவாய் மற்றும் வாடிக்கையாளர் இணைப்பு ஆகியவற்றை ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டது. அடுத்த கூட்டம் 09/03/2018 அன்று நடைபெறும். உலகிலேயே மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய போனசைப் பற்றி விவாதம் நடத்துவது நம்மைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது. வாழ்த்துக்கள்.
--------------------------------------------------------------------------------
JTO இலாக்காத்தேர்வு
2016-17 மற்றும் 2017-18ம் ஆண்டு காலியிடங்களுக்கான 
JTO இலாக்காத்தேர்வுகளை அறிவிக்கக் கோரி நிர்வாகத்திடம் நமது மத்திய சங்கம்  வலியுறுத்தியுள்ளது. சென்றமுறை 2015-16ம் ஆண்டிற்கான தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது.

--------------------------------------------------------------------------------

ஆயுள் காப்பீட்டுத்திட்டம்
மத்தியப்பிரதேச மாநிலத்தில் BSNLலில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு குறைந்த PREMIUM காப்பீட்டுத்தொகையில் கூடுதல் ஆயுள் காப்பீட்டுத்தொகை கிடைக்கும் வகையில் புதிய ஆயுள் காப்பீட்டுத்திட்டம் LIC மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு மத்திய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

--------------------------------------------------------------------------------

ஒப்பந்த ஊழியர் சம்பளம்
தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 2017 மற்றும் ஜனவரி 2018 ஆகிய இரு மாதங்களுக்கான சம்பளம் ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.  எப்போது வழங்கப்படும் என்ற உத்திரவாதமும் இல்லை. ஒப்பந்த ஊழியரைக் குறைக்கும் நடவடிக்கையில் இது ஒரு மறைமுக நடவடிக்கையாகவே தோன்றுகிறது. வேலை மட்டுமே வாங்குவோம்… சம்பளம் பற்றிப் பேசமாட்டோம் என்பது மனிதநேயத்திற்கு எதிரான செயல். தமிழ் மாநில நிர்வாகம் மனித நேயத்தில் மிகவும் பின்தங்கிப் போவது மிக மிக வருத்தத்திற்குரியது. தமிழ்மாநில நிர்வாகத்தை எதிர்த்து ஒப்பந்த ஊழியர்கள் போராட்டக்களம் காணாமல் அநீதி களைய முடியாது.

--------------------------------------------------------------------------------
மாற்றுத்திறனாளி போக்குவரத்துப்படி

40 சத உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு போக்குவரத்துப்படி இரண்டு மடங்கு வழங்கப்படுகிறது. கை அல்லது காலில் 40 சதம் ஊனம் உள்ளவர்களுக்கும்… கை மற்றும் காலில் சேர்த்து 50 சதம் ஊனம் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் 
என நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Wednesday, 14 February 2018


கூட்டு நிறுவனம் - JOINT VENTURE

09/02/2018 அன்று திரு.மோதிலால் வோரா MP அவர்கள்
BSNL துணை நிறுவனம் அமைப்பது பற்றி…
நாடாளுமன்ற மேலவையில் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு
நமது இலாக்கா அமைச்சர் கீழ்க்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.

 அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள BSNL நிறுவனம் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருகிறது.

தற்போது BSNLலில் 66847 செல்கோபுரங்கள் உள்ளன. 
அவற்றில் 61124 கோபுரங்கள் BSNLன் சொந்த நிதியிலும்…
5723 கோபுரங்கள் USO நிதியிலிருந்தும் நிறுவப்பட்டன.

மேற்கண்ட செல்கோபுரங்களைத் தனியாகப்  பிரித்து 
துணைநிறுவனம் ஆரம்பித்திட அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய துணை நிறுவனம் BSNLன் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மேலும் புதிதாக உருவாக்கப்படும் துணை நிறுவனம் 
இரண்டு ஆண்டுகளில் தனது சொத்துக்களையும்…நிதிநிலையையும் மேம்படுத்திய பின்பு…தக்கதொரு பங்குதாரருடன் இணைந்து… 
JOINT VENTURE COMPANY - கூட்டு நிறுவனத்தை உருவாக்கும்…

புதிய செல்கோபுர நிறுவனம் தனியாரிடம் விடப்படுமா?
அவ்வாறு விடப்பட்டால் அதற்கு காரணம் என்ன?
என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதில் இல்லை….

வறுமையை விரட்டுவோம்….
வறுமையை விரட்டுவோம்….
வேலைவாய்ப்பை உருவாக்குவோம்…
அரசியல்வாதிகளின் அரிச்சுவடி முழக்கம் இது…
ஆட்சிகள் மாறுகின்றன…
காட்சிகள் மட்டும் மாறுவதில்லை…

ஆண்டுதோறும் வறுமை வளர்கிறது…
வேலையில்லாதோர் எண்ணிக்கை…
வேகமாய் உயர்கிறது….
இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை
உலகில் எங்கும் இல்லாத அளவு 
மிகவேகமாய் உயருவதாக
ILO - INTERNATIONAL LABOUR ORGANISATION
சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலையோடு
சமீபத்திய தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது 2 கோடி படித்த இளைஞர்கள்
வேலையில்லாமல் திண்டாடுவதாகவும்…
2019ல் இது மிக உயருமென்றும்….
உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு
வேலையில்லாத் திண்டாட்டம்…
இந்திய தேசத்தில் தலைவிரித்தாடும் எனவும்
ILO தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது….

பாரத தேசத்தில்...
வேலைவாய்ப்பை உருவாக்குவோம்..
படித்த இளைஞர்கள் இரண்டு கோடி பேருக்கு..
ஆண்டு தோறும் வேலை தருவோம்….
பாரதப்பிரதமரின் தேர்தல் கால உறுதிமொழி இது…

இதோ…. உறுதிமொழி நிறைவேறுகிறது…
படித்த இளைஞர்களை…
பாரதநாட்டு மன்னர்களை…
பக்கோடா அழைக்கிறது….
வாருங்கள்…
வறுமையை விரட்டுவோம்….

Sunday, 11 February 2018


NFTCL - மாநில செயற்குழு முடிவுகள்

10/02/2018 அன்று கீரனூரில் 
NFTCL மாநில செயற்குழு மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
பொதுச்செயலர் தோழர்.C.K.மதிவாணன் அவர்களின் 
உணர்ச்சியுரை தோழர்களை உற்சாகப்படுத்தியது. 
AITUC போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனப் பொதுச்செயலர் தோழர்.லட்சுமணன் அவர்கள் சிறப்புரையாற்றினார். 
AIBSNLE மாநில உதவிச்செயலர் தோழர்.காமராஜ் அவர்கள் 
எழுச்சிமிகு அரசியல் உரையாற்றினார்.
சிறப்பான ஏற்பாடுகளைக் கீரனூர் தோழர்கள்...
தோழர்.மில்டன் தலைமையில் செய்திருந்தனர்.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

கோரிக்கை மனு – 20/02/2018
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒப்பந்த ஊழியர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் சிக்கல்கள் உள்ளன. அவற்றை முழுமையாகத் தொகுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம்
 கோரிக்கை மனு அளிக்க வேண்டும். 
அதன் நகல் அந்தந்த பகுதி 
தொழிலாளர் நல ஆணையர்களுக்கும்...(ALC/RLC)
சென்னை DY.CLC துணைத் தொழிலாளர்
 ஆணையருக்கும்  அனுப்பப்பட வேண்டும்.

பெருந்திரள் போராட்டம் – 02/03/2018…
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக
சம்பளம்  பட்டுவாடா செய்யப்படாத கொடுமையைக் கண்டித்தும்…
ஒவ்வொரு மாதமும் 7ம்தேதி சம்பளம் வழங்கக்கோரியும்…
ஆட்குறைப்பு என்ற தமிழ் மாநில நிர்வாகத்தின் கவைக்குதவாத
புதிய பூச்சாண்டித்தனத்தைக் கடுமையாக கண்டித்தும்….

சென்னையில் உள்ள தமிழ்மாநில...
 முதன்மைப்பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக
தமிழகம் முழுவதுமுள்ள ஒப்பந்த ஊழியர்கள் திரண்டு
பெருந்திரள் போராட்டம் நடத்துவது.

தோழர்களே… அணி திரள்வோம்…. அநீதி களைவோம்….

BSNL புத்தாக்கத்திட்டம்

தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வரும்...
BSNL நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்ய 
DPE வழிகாட்டுதலின்படி அரசு முடிவெடுத்துள்ளது.

புத்தாக்கத்திட்டத்தை உருவாக்க
INDIAN INSTITUTE OF MANAGEMENT எனப்படும்...
மூன்று IIM கல்வி நிறுவனங்களிடம் விருப்பம் கேட்கப்பட்டுள்ளது
இதில் அகமதாபாத் IIM கல்வி நிறுவனம்
விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது


புத்தாக்கத்திட்டம் தயார் செய்யப்பட்டு… 
அரசின் ஒப்புதல் பெறப்பட்ட பின்புதான் 
ஊழியர்களின் சம்பளப்பிரச்சினை கவனம் பெறும்...
அதுவரை பொறுமை கடலினும் பெரிது….

எரிந்து விழும் சாம்பலிலும்
எழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவையாக
எழுந்து நிற்கும் BSNL என்று நெஞ்சுரம் கொள்வோம்
எதிர்காலம் நமதென்று உரக்கச் சொல்வோம்...