Monday 5 February 2018

செய்திகள்

தொலைத்தொடர்பு இலாக்கா அமைச்சர் திரு.மனோஜ்சின்கா அவர்களோடு 06/02/2018 மாலை 05.00 மணியளவில் BSNL அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் 
என செய்திகள் வெளியாகியுள்ளன.
----------------------------------------------------------------------------
அமைச்சரோடு அனைத்து தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதால் 06/02/2018 அன்று திட்டமிட்டப்பட்டிருந்த அனைத்து தொழிற்சங்க கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------
06/02/2018 அன்று நடைபெறவிருந்த DESIGNATION COMMITTEE... பதவிகளின் பெயர் மாற்றக்குழுக் கூட்டம் 
நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------
BSNL நிறுவனம் நாடுமுழுக்க 10000 செல்கோபுரங்களை நிறுவத்திட்டமிட்டுள்ளதாக தொலைத்தொடர்பு இலாக்கா அமைச்சர் 
நாடாளுமன்ற மேலவையில் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------------
4G சேவையை அளிப்பதற்காக BSNL நிறுவனம் அலைக்கற்றை ஒதுக்கீடு கோரியுள்ளதாகவும்…. ஒதுக்கீட்டு செலவான ரூ.13885 கோடியில் ரூ.7233/- கோடியை மட்டும் BSNL 10 தவணைகளாகச் செலுத்தும்  என தொலைத்தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------------
2016-17ம் ஆண்டிற்கான BSNL நிறுவனத்தின்
 தணிக்கை செய்யபட்ட வரவு செலவு ஆண்டறிக்கை 
மற்றும் நிதியறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
2016-17ம் ஆண்டில் 4793 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. 
2015-16ம் ஆண்டில் நட்டம் 4859 கோடியாகும்.
 முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு 
66 கோடி நட்டம் குறைந்துள்ளது.
----------------------------------------------------------------------------
போனஸ் குழுவின் ஊழியர் தரப்பு 
31/01/2018 அன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 BSNLEU சார்பாக தோழர்கள்.அபிமன்யு, பல்பீர்சிங்,
 ஸ்வபன் சக்கரவர்த்தி ஆகியோரும்...
 NFTE சார்பாக தோழர்கள்.சந்தேஷ்வர்சிங், குல்கர்னி 
ஆகியோரும் ஊழியர் தரப்பாக செயல்படுவார்கள். 
சென்ற முறை போனஸ் பெற பெரும் முயற்சி எடுத்த 
அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அவர்கள் 
இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment