Friday 16 February 2018


செய்திகள்
DESIGNATION COMMITTEE பதவி பெயர்மாற்றக்குழுக் கூட்டம் 
15/02/2018 அன்று நடைபெற்றது. விடுபட்ட பதவிகளின் பெயர்மாற்றங்கள் குறிப்பாக TELECOM FACTORY 
பகுதியில் இறுதி செய்யப்பட்டன.
--------------------------------------------------------------------------------
PLI COMMITTEE  போனஸ் குழுக்கூட்டம் 15/02/2018 அன்று நடைபெற்றது. 2015-16ம் ஆண்டிற்கான போனஸ் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.  போனஸ் வழங்குவதற்காக 2013-14… 2014-15… 2015-16ம் ஆண்டுகளுக்கான வருவாய் மற்றும் வாடிக்கையாளர் இணைப்பு ஆகியவற்றை ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டது. அடுத்த கூட்டம் 09/03/2018 அன்று நடைபெறும். உலகிலேயே மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய போனசைப் பற்றி விவாதம் நடத்துவது நம்மைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது. வாழ்த்துக்கள்.
--------------------------------------------------------------------------------
JTO இலாக்காத்தேர்வு
2016-17 மற்றும் 2017-18ம் ஆண்டு காலியிடங்களுக்கான 
JTO இலாக்காத்தேர்வுகளை அறிவிக்கக் கோரி நிர்வாகத்திடம் நமது மத்திய சங்கம்  வலியுறுத்தியுள்ளது. சென்றமுறை 2015-16ம் ஆண்டிற்கான தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது.

--------------------------------------------------------------------------------

ஆயுள் காப்பீட்டுத்திட்டம்
மத்தியப்பிரதேச மாநிலத்தில் BSNLலில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு குறைந்த PREMIUM காப்பீட்டுத்தொகையில் கூடுதல் ஆயுள் காப்பீட்டுத்தொகை கிடைக்கும் வகையில் புதிய ஆயுள் காப்பீட்டுத்திட்டம் LIC மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு மத்திய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

--------------------------------------------------------------------------------

ஒப்பந்த ஊழியர் சம்பளம்
தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 2017 மற்றும் ஜனவரி 2018 ஆகிய இரு மாதங்களுக்கான சம்பளம் ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.  எப்போது வழங்கப்படும் என்ற உத்திரவாதமும் இல்லை. ஒப்பந்த ஊழியரைக் குறைக்கும் நடவடிக்கையில் இது ஒரு மறைமுக நடவடிக்கையாகவே தோன்றுகிறது. வேலை மட்டுமே வாங்குவோம்… சம்பளம் பற்றிப் பேசமாட்டோம் என்பது மனிதநேயத்திற்கு எதிரான செயல். தமிழ் மாநில நிர்வாகம் மனித நேயத்தில் மிகவும் பின்தங்கிப் போவது மிக மிக வருத்தத்திற்குரியது. தமிழ்மாநில நிர்வாகத்தை எதிர்த்து ஒப்பந்த ஊழியர்கள் போராட்டக்களம் காணாமல் அநீதி களைய முடியாது.

--------------------------------------------------------------------------------
மாற்றுத்திறனாளி போக்குவரத்துப்படி

40 சத உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு போக்குவரத்துப்படி இரண்டு மடங்கு வழங்கப்படுகிறது. கை அல்லது காலில் 40 சதம் ஊனம் உள்ளவர்களுக்கும்… கை மற்றும் காலில் சேர்த்து 50 சதம் ஊனம் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் 
என நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment