Friday, 29 June 2018

அன்பின் சமுத்திரம் வாழியவே…
இன்று 30/06/2018 பணி நிறைவு பெறும் 
காரைக்குடி NFTE முன்னாள் மாவட்டச்செயலர்
NFTCL மாநில உதவித்தலைவர்
அம்பாசமுத்திரம் வாழ்….
அன்பின் சமுத்திரம்

தோழர்.இரா.கணபதிராமன்
அவர்களின் பணிநிறைவுக்காலம்…
ஓயுதல் இல்லை…. தலை சாயுதல் இல்லையென….
மண் பயனுறவே எந்தன் மானுடப்பிறப்பென...

உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியர்களுக்காக…
உரிமையிழந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக…
பயன் பெற வாழ்த்துகின்றோம்….

பணி நிறைவு நல்வாழ்த்துக்கள்

30/06/2018 அன்று  
காரைக்குடி மாவட்டத்தில் 
பணி நிறைவு பெறும்...

 அன்றைய போராளி
ஆற்றல் மிகு உழைப்பாளி 
தோழியர். தேன்மொழி முருகேசன் CAO
 -----------------------------------------------------------------------------------
கொள்கையில் சிவந்தவன்….
கோஷத்தில் சிறந்தவன்
P. மகாலிங்கம் OS – காரைக்குடி
  -----------------------------------------------------------------------------------

நல்லவருக்கு நல்லவன்
நாலும் அறிந்த வல்லவன்
C.மோகன் TTஆத்தங்குடி
  -----------------------------------------------------------------------------------

எதிலும் துணிந்தவன்….
நெஞ்சம் நிமிர்ந்தவன்
I.ஞானம் TT தேவகோட்டை
  -----------------------------------------------------------------------------------

அயராது உழைத்தவன்….
அமைதியாய் நிலைத்தவன்
R. கனகராஜன் TT காரைக்குடி

 ஆகிய அன்புத்தோழர்களின் பணிநிறைவுக்காலம்
சீரோடும்…. சிறப்போடும்… வளமோடும்… நலமோடும்
 விளங்க வாழ்த்துகின்றோம்.

Thursday, 28 June 2018


இணைந்த இருதரப்பு ஊதியக்குழு..

DPE  வழிகாட்டுதலின்படி… BSNL ஊழியர்களுக்கு
3வது ஊதியதிருத்தப் பேச்சுவார்த்தையை துவக்குவதற்காக
10 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.

நிர்வாகத்தரப்பில் 5 உறுப்பினர்களும்…
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக
5 உறுப்பினர்களும் குழுவில் இடம் பெறுவார்கள்.  
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தரப்பில்
BSNLEU சார்பாக 3 உறுப்பினர்களும்…
NFTE சார்பாக 2 உறுப்பினர்களும்… இடம்  பெறுவார்கள்.

ஊதியத்திருத்தப் பேச்சுவார்த்தை என்ற மிகப்பெரிய நிகழ்வில்…
ஊழியர்கள் தரப்பில் வெறும் 5 உறுப்பினர்கள் மட்டுமே
என்பது ஏற்புடையதல்ல.

முதலாம் ஊதியத்திருத்தத்தில்...
தோழர்.குப்தா அன்று இருந்த அனைத்து ஒன்பது
தொழிற்சங்கங்களையும் பங்கேற்கச்செய்தார்.
இரண்டாவது ஊதியத்திருத்தத்தில்...
BSNLEU சார்பாக 11 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மூன்றாவது ஊதியத்திருத்தம் DOTல் இருந்து BSNLலில்
பணியமர்ந்த ஊழியர்களுக்கு கடைசி ஊதியத்திருத்தமாகும்.
ஊழியர்களுக்கு சம்பளத்தில் பல்வேறு குறைகள் உள்ளன.
குறைகளை விட பல்வேறு குளறுபடிகளும்  உள்ளன.

இந்நிலையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட
சிறிய குழு பெருமளவில் விவாதங்களை
முன்வைக்க இயலாத சூழல் உருவாகும்.
எனவே குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை
தேசிய JCMல் உள்ளது போல்
BSNLEUக்கு 9 உறுப்பினர்…
NFTEக்கு 5 உறுப்பினர் என உயர்த்தப்பட  வேண்டுமென
BSNLEU சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊதியக்குழுவில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பங்கேற்பு
என்ற நிலையை விட
அனைத்து சங்கங்கள் பங்கேற்பு என்ற நிலையே
தற்போதுள்ள சூழலில் ஊழியர்களுக்கு கூடுதல் பலனளிக்க வல்லது.

எவ்வாறாயினும்…
இணைந்த ஊதியக்குழு அமைப்பு என்பது…
நமது ஒன்றுபட்ட தொடர் போராட்டத்தின் விளைவாகும்
என்பதில் நாம் பெருமை கொள்வோம்.

Tuesday, 26 June 2018


போராட்டங்கள் தொடரட்டும்…
வரலாறாக மாறட்டும்…. 

ஜூலை மாதப் போராட்டங்கள்
26/06/2018 அன்று டெல்லியில் நடைபெற்ற...
BSNL  அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவுகள்….

ஜூலை 11
CORPORATE அலுவலகம்…
மாநிலத்தலைநகர்களில் அமைந்துள்ள 
CCA அலுவலகங்கள்...
மற்றும் மாவட்டத்தலைநகரங்களில்
ஆர்ப்பாட்டம்

ஜூலை 25,26,27
தலைநகர் டெல்லி…
மாநிலத்தலைநகரங்கள்… மற்றும்
மாவட்டத்தலைநகரங்களில்…
தொடர் உண்ணாவிரதம்

கோரிக்கைகள்

தொலைத்தொடர்பு அமைச்சர் அவர்களே…

ஊதிய உயர்வு…
ஓய்வூதிய உயர்வு…
ஓய்வூதியப்பங்களிப்பு..
BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு என
24/02/2018 அன்று அனைத்து சங்கங்களிடம்
அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்…
.
BSNL அதிகாரிகளே….

தத்தளிக்குது…. BSNL…
தவிர்க்க வேண்டாமா? விரயச்செலவுகளை…

சிக்கலில் நிற்கிறது BSNL…
சிக்கனம் வேண்டாமா? இக்கணம்….
 ----------------------------------------------------------------------------------
தோழனே…
தொடர்ந்து செல்... துணிந்து நில்…
தோல்வியும் உன்னிடம் துவண்டு விடும்…

உரிமைக்கான உனது…
போராட்டங்கள் தொடரட்டும்…
நாளை அவை வரலாறாக மாறட்டும்….

Friday, 22 June 2018


முடிவில்லா போராட்டங்கள் முடிந்திடுமா…
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி
NFTE – BSNLEU - NFTCL – TNTCWU
இணைந்த போராட்டம்
25/06/2018 – திங்கள் – மதியம் 12.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.
 =================================================
 முடிவில்லா போராட்டங்கள் முடிந்திடுமா…

அன்றாடக்கூலிகளான ஒப்பந்த ஊழியர்கள்…
அனுதினமும் உழைக்கின்றார்கள்….
அனுதினமும் போராடுகின்றார்கள்….
அரியணையில் அமர்வதற்காகப் போராடுகின்றார்களா?
இல்லை… தோழர்களே…
அணைப்பதற்காகப் போராடுகின்றார்கள்…
அனுதினமும் எரியும் தங்கள் வயிற்றை…
அணைப்பதற்காகப் போராடுகின்றார்கள்…

உழைப்புக்கு கூலி கேட்டு…
வயிற்றுக்கு சோறு கேட்டு….
வாழ்நாள் முழுவதும் போராடுகின்றார்கள்….

இந்தக்கொடுமை முடிந்தபாடில்லை..

காரைக்குடி மாவட்டத்தில்…
கேபிள் பணி செய்யும் தோழர்களுக்கு…
ஏப்ரல் மாத சம்பளம் முழுமையாக வழங்கப்படவில்லை…
15 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது….
மே மாதச்சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை…

HOUSE KEEPING பணி செய்யும் தோழர்களுக்கு…
மே மாதச்சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை…
குத்தகையை புதுப்பிப்பதில்… நீட்டிப்பதில் தாமதம்…

காவல் பணி செய்யும் தோழர்களுக்கு….
மேமாதச்சம்பளம் புதிய குத்தகையில்….
அரைகுறையாக வழங்கப்பட்டுள்ளது….

பலமுறை நிர்வாகத்திடம் இதுபற்றி
எடுத்துக்கூறியும் எந்தப் பலனும் இல்லை…

எனவே…
தொடர்ந்து போராடுகின்றோம்…
இணைந்து போராடுகின்றோம்…
முடிவின்றி போராடுகின்றோம்…
வேறு வழியின்றி போராடுகின்றோம்…

 தோழர்களே…. போராடுவோம்…. வேறு வழி ஏதுமில்லை….

Tuesday, 19 June 2018


ஓய்வூதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்… 

AIBSNLPWA
காரைக்குடி கிளை

01/01/2017 முதல்…
 BSNL ஊழியர்களுக்கு ஓய்வூதிய திருத்தம் கோரி…
 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

20/06/2018 – புதன்  - காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

ஓய்வு பெற்ற ஊழியர்களும்…
ஒப்பந்த ஊழியர்களும்…
நிரந்தர ஊழியர்களும்…
போராட்டத்தில் பங்குபெறுவோம்….
வாரீர்... தோழர்களே...

Monday, 18 June 2018


அம்பை செல்வோம்… அன்பை சொல்வோம்...
பணி நிறைவு விழா

காரைக்குடி NFTE மேனாள் மாவட்டச்செயலர்
NFTCL ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்
தமிழ்மாநில உதவித்தலைவர்
அருமைத்தோழர். 
இரா.கணபதிராமன்
அவர்களின் பணிநிறைவு விழா
24/06/2018 – ஞாயிறு – காலை 10 மணி
அம்பாசமுத்திரம்.

சிறப்புரை
தோழர்.C.K.மதிவாணன்
NFTE அகில இந்திய உதவித்தலைவர்
NFTCL அகில இந்தியப் பொதுச்செயலர்

 மற்றும் தலைவர்களும்... தோழர்களும்...

அம்பை செல்வோம்…
நம் அன்பைச் சொல்வோம்…
வாரீர்… தோழர்களே…

Friday, 15 June 2018


பெருநாள் நல்வாழ்த்துக்கள் 

ரம்ஜான்…
நோன்பு என்னும் மாண்பு சொன்ன…
இஸ்லாத்தின் புனிதத்திருநாள்..
இதுவே இன்பப்பெருநாள்…

 அனைவருக்கும் இனிய
ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

Thursday, 14 June 2018


ஜூன் – 14 தோழர்.சே பிறந்த நாள்… 

உலகம் சமநிலை பெற வேண்டும்…
உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்…
தனியுடமை தரணியில் தகர வேண்டும்…
பொதுவுடமை மண்ணில் வளர வேண்டும்…
எனத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய…
பொதுவுடமைப் போராளி…
இளைஞர்களின் எழுச்சித்தலைவன்…
தோழர்.சேகுவேரா புகழ் பாடுவோம்…

Tuesday, 12 June 2018


பொதுக்குழுக் கூட்ட முடிவுகள்

அருமைத்தோழர்.விச்சாரே அவர்களின் புகழஞ்சலிக் கூட்டம் 
மற்றும் காரைக்குடி GM அலுவலகம் மற்றும் புறநகர்க்கிளைகளின் 
இணைந்த கிளைக்கூட்டம் 12/06/2018 அன்று NFTE சங்க அலுவலகத்தில் தோழர்.லால்பகதூர் தலைமையில் நடைபெற்றது.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டச்செயற்குழு முடிவின்படி காரைக்குடி GM அலுவலகம், புறநகர்க்கிளை, திருப்பத்தூர் மற்றும் தேவகோட்டைக் கிளைகள் ஒரே கிளையாக ஒன்றிணைக்கப்படுகின்றன.

இணைந்த கிளைகளின் கிளைமாநாடு மற்றும் பணிநிறைவு பாராட்டு விழா ஜூலை இறுதி வாரத்தில் காரைக்குடியில் நடத்தப்படும். கிளைமாநாட்டிற்கு தோழர்கள் தங்கள் பங்களிப்பை நல்க வேண்டும்.

காரைக்குடி GM அலுவலகத்தில் எழுத்தர் கேடரிலும்… தொலைபேசி நிலையங்களில் போன்மெக்கானிக் கேடரிலும்  கடும் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே காலியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்து பணிகள் தடங்கலின்றி நடைபெற நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

போன்மெக்கானிக் கேடரில் மிக நீண்ட நாட்களாக OUTDOOR, INDOOR, SALES மற்றும் TOWER பராமரிப்பு பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களை சுழல்மாற்றல் செய்ய வேண்டும்.

காரைக்குடி கல்லுக்கட்டி தொலைபேசி நிலையத்தில் இயங்கி வரும் வாடிக்கையாளர் சேவை மையத்தை GM அலுவலக வாடிக்கையாளர் சேவை மையத்துடன் இணைக்க வேண்டும்.

காலியாக உள்ள அலுவலக இடங்களை வாடகைக்கு விட்டு வருவாய் பெருக்கத்திற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

24/06/2018 அன்று அம்பாசமுத்திரத்தில் நடைபெறவுள்ள காரைக்குடி முன்னாள் மாவட்டச்செயலர் தோழர்.கணபதிராமன் பணிநிறைவு விழாவிற்கு தோழர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.

Monday, 11 June 2018


ஜூன் - 12 
தோழர்.விச்சாரே நினைவு தினம் 

உருவத்திலே அகத்தியன்…
உள்ளத்திலே உயர்ந்தவன்…

எண்ணத்திலே சிறந்தவன்…
NFTEஐ உயர்த்தியவன்…

என்றென்றும் தோழர்கள் 
மனதில் நிறைந்தவன்...

அருமைத்தோழர். விச்சாரே
நினைவைப் போற்றுவோம்…

Sunday, 10 June 2018


பொதுக்குழுக்கூட்டம்

NFTE
GM அலுவலகக்கிளை மற்றும் புறநகர்க்கிளைகள்
காரைக்குடி

தோழர்.விச்சாரே நினைவு தினம்
மற்றும்
இணைந்த பொதுக்குழுக்கூட்டம்

12/06/2018 – செவ்வாய் – மாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.
  ----------------------------------------------------------------------------
ஆய்படு பொருள்
கிளை மாநாடு
கிளைகள் இணைப்பு
தலமட்டப்பிரச்சினைகள்
எழுத்தர், போன்மெக்கானிக் பற்றாக்குறை
தோழர்.கணபதிராமன் பணிநிறைவு விழா…
 ----------------------------------------------------------------------------
தோழர்களே… வாரீர்…
அன்புடன் அழைக்கும்….
GM அலுவலகம் மற்றும் புறநகர்க்கிளைகள்
காரைக்குடி.

Friday, 8 June 2018


மாவட்டம் தழுவிய போராட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு
மல்லி செக்யூரிட்டி குத்தகைக்காரன்
ஏப்ரல் மாத சம்பளம் வழங்காததைக் கண்டித்தும்…

கேபிள் பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு
ஏப்ரல் மாத சம்பளத்தில்…
குத்தகைக்காரர் 15 நாளும்…
அதிகாரிகள் 15 நாளும் சம்பளம் வழங்கும்
கோமாளித்தனத்தை எதிர்த்தும்…

தொழிலாளர் கணக்கில் கட்டப்படாமல்….
நிர்வாகத்தின் வசமுள்ள பல லட்சம் ரூபாய்
EPF பணத்தை தொழிலாளர் கணக்கில் சேர்க்கக் கோரியும்…

2016-17 ஆண்டிற்கு ALERT SECURITY குத்தகைக்காரர்…
போனஸ் வழங்கக்கோரியும்….

மே 2018 முதல் குத்தகை எடுத்துள்ள புதிய குத்தகைக்காரர்…
அடையாள அட்டை… ESI அட்டை வழங்கிட வலியுறுத்தியும்…

திறனுக்கேற்ற கூலி வழங்கிட குழு அமைக்க கோரியும்….

ஒவ்வொரு மாதமும் 7ந்தேதி…. கூலி வழங்கிடக்கோரியும்….

NFTE – NFTCL – BSNLEU – TNTCWU
இணைந்த கண்டன ஆர்ப்பாட்டம்
காரைக்குடி மாவட்டத்தில்…
இராமநாதபுரம்… பரமக்குடி… சிவகங்கை… காரைக்குடி
ஆகிய ஊர்களில் எழுச்சியோடு நடைபெற்றது.

தற்போது காரைக்குடி மாவட்டத்தில்…
துணைப்பொதுமேலாளர்கள் யாரும் இல்லாத நிலையில்..
இது ஒரு அடையாள போராட்டமாக மட்டுமே நடத்தப்பட்டது….

தொழிலாளர் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால்…
வலுவான ஒன்றுபட்ட போராட்டம் விரைவில் வெடிக்கும்….

Thursday, 7 June 2018


தேடிப்பார்த்தோம்…  தென்படவில்லை… 


ஜூன் -7 தோழர்.ஜெகன் நினைவு நாள்...
அவரது புகைப்படங்களைத் தேடிப்பார்த்தோம்…
1998 காரைக்குடி E3 தமிழ்மாநில மாநாட்டுப்
புகைப்படத்திரட்டு தென்பட்டது…
புரட்டிப்பார்த்தால் பல புகைப்படங்கள்
தோழர்களால் திருடப்பட்டிருந்தன….
சொல்லித்தெரிய வேண்டியதில்லை….
திருடப்பட்ட அத்தனைப் புகைப்படங்களும்…
தோழர்.ஜெகன் புகைப்படங்களே…
தோழர்களின் மனதைத் திருடிய
மாபெரும் தலைவனின் புகைப்படங்கள்
திருடப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை….

இரண்டாவது புகைப்படத்திரட்டிலாவது…
ஏதேனும் தென்படுமா என்று தேடினோம்….
தோழர்.ஜெகனின் புகைப்படங்கள்
தேடிப்பார்த்தும் தென்படவில்லை….

ஜெகனின் புகைப்படங்கள் மட்டுமல்ல….
ஜெகன் போன்றதொரு தலைவனையும்…
தேடிப்பார்க்கின்றோம்…. தென்படவில்லை….

தோழர்.ஜெகன் நினைவைப் போற்றுவோம்…
தென்பட்ட புகைப்படங்களை மட்டும்…
தங்கள் கண்பட தந்துள்ளோம்...

Wednesday, 6 June 2018


தோழர்.தார்... மறைந்தார்…


அஞ்சலி

NFTE இயக்கத்தின் அரசியல் வழிகாட்டியும்
டெல்லி மத்திய அரசு தலைமைச்செயலக
ஊழியர் சங்கத்தின் ஆற்றல் மிகு பொதுச்செயலராகத்
திறம்படப்பணியாற்றியவரும்
AITUC சங்கத்தின் தேசிய செயலரும்
தொழிலாளர் உரிமைக்காகப் பல்வேறு
போராட்டங்களை சந்தித்தவருமான
அருமைத்தோழர். GL.தார் அவர்கள்
மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.

அவரது மறைவிற்கு நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்
நல்லடக்கம் இன்று மாலை டெல்லியில் நடைபெறுகின்றது.

Tuesday, 5 June 2018


நீட் என்னும் உயிர்க்கொல்லி…

உயிர் காக்கும் மருத்துவப்படிப்பு…
இன்று…
உயிர் போக்கும் மரித்திடும் படிப்பு…

அன்று… அரியலூர் அனிதா…
இன்று… செஞ்சி பிரதீபா…

சென்ற ஆண்டில் நீட் தேர்வில்
பிரதீபா  பெற்றது.. 155 மதிப்பெண்…
தனியார் மருத்துவக் கல்லூரியில்
சேர்ந்திட மதிப்பெண் இருந்தது…

மதிப்பெண் இருந்தென்ன?
மதிப்பான பணம் வேண்டுமே?
எனவே இந்த ஆண்டு…
மீண்டும் பிரயத்தனம் செய்தாள் பிரதீபா…

தொடர் முயற்சி செய்திட்ட போதும்…
இந்தாண்டு
அவள் பெற்றது 39 மதிப்பெண் மட்டுமே…
காரணம்…
அவள் கற்றது தமிழகக் கல்வி….

மக்கள் நலம்  காக்கும்
படிப்பில் ஆசை வைத்தாள்…
மக்கள் நலன் காக்கும் அரசு... இந்த..
மண்ணிலே இல்லாத காரணத்தினால்….
மனம் உடைந்தாள்… வாழ்வு முடித்தாள்…

தமிழகத்தில்….
அனிதாக்கள்… பிரதீபாக்கள்…
முற்றுப்புள்ளியாகட்டும்…

676 மதிப்பெண் பெற்று….
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த
கீர்த்தனாக்கள் துவக்கப்புள்ளியாகட்டும்…