இணைப்பே இன்பம்...
கூலியாட்களின்
கூலியை மறுப்பவர்கள்…
அவர்களின் குருதியைக்
குடிப்பவர்களாவார்கள்…
உழைப்புச்சுரண்டலைப்
பற்றி
பைபிள் இப்படித்தான்
கூறுகின்றது…
உலகம் முழுவதும்
கூலியாட்களின்
குருதி குடிக்கப்படுகின்றது…
இதோ நம் கண் முன்னால்…
நமது துறையில்
ஒப்பந்த தொழிலாளர்கள்
உழைப்புச்சுரண்டல்
செய்யப்படுகின்றார்கள்…
நமது பகுதியில்….
இந்த சுரண்டலில்
இருந்து அவர்களை விடுவிக்க..
அருமைத்தோழர் ஜெகன்
அவர்கள்
இந்தியாவிலேயே
முதன்முறையாக…
TMTCLU என்னும்
ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை
தமிழகத்தில் உருவாக்கினார்…
பல்வேறு உரிமைகளை
நாம் வென்றெடுத்திருந்தாலும்…
ஒப்பந்த தொழிலாளர்
விடியலுக்காக…
நாம் இன்னும் நீண்ட
தூரம் பயணிக்க வேண்டியுள்ளது…
இந்நிலையில்
NFTE என்னும் பதாகையின் கீழ்
இரண்டு ஒப்பந்த
தொழிலாளர் சங்கங்கள் இயங்குவது…
ஒப்பந்த தொழிலாளர்
முன்னேற்றத்திற்கு
முட்டுக்கட்டையாக
அமையும்…
எனவே பிரிந்து
கிடக்கும்
ஒப்பந்த தொழிலாளர்
சங்கங்களை
இணைப்பது என்ற
முடிவை
NFTE தமிழ்மாநிலச்சங்கம்
மேற்கொண்டது…
19/01/2019 அன்று
சென்னையில்
NFTE தமிழ்மாநிலச்சங்க
அலுவலகத்தில்…
தோழர் ஆர்.கே.,
அவர்கள் தலைமையில்…
ஒப்பந்த தொழிலாளர்
சங்க
சிறப்பு மாநிலச்செயற்குழு
வெகுசிறப்புடன் நடைபெற்றது.
TMTCLU
பொதுச்செயலர் தோழர்.செல்வம் வரவேற்புரையாற்றினார்…
NFTE
மாநிலச்செயலர் தோழர் நடராஜன் துவக்கவுரையாற்றினார்…
தோழர்கள்
திருச்சி மில்டன்,
தஞ்சை
கிள்ளிவளவன், காரைக்குடி மாரி
ஆகியோர்
முன்னிலை வகித்தனர்…
அனைத்து
ஒப்பந்த தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்…
சம்மேளனச்செயலர்
தோழர். காமராஜ்,
சம்மேளன
சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல் அமுதம்,
மாநில
உதவிச்செயலர் தோழர் முரளி,
மூத்த
தோழர் சேது ஆகியோர் சிறப்புரையாற்றினர்…
தோழர்
ஆர்.கே. அவர்கள் நிறைவுரையாற்றினார்…
NFTCW
என்னும் பெயரில் நாம் புதிதாய் பணியாற்றுவோம் என
தோழர்
ஆர்.கே அவர்கள் அறிவித்த போது…
அரங்கம்
அதிர்ந்தது…. மனம் குளிர்ந்தது….
விரைவில்
தமிழகத்தில்
NFTCW
அமைப்பு மாநாடு நடத்தப்படும்…
அதற்கான
ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அகில
இந்திய அளவில்
ஒப்பந்த
தொழிலாளர் சங்கம்…
AITUC
வழிகாட்டுதலில்…
NFTE
தலைமையில்….
விரைவில்
உருவாக்கப்படும்…
NFTE
தலைமையிலான
ஒப்பந்த
தொழிலாளர் சங்கம்
ஒப்பந்த
தொழிலாளர் உரிமைகளை
வென்றெடுக்கும்…
அவர்களை
சங்கச்சுரண்டலில் இருந்தும்…
சகல சுரண்டல்களில்
இருந்தும் விடுவிக்கும்…
அது வரை
அமைதி காப்போம்…
உதவாக்கரை
விமர்சனங்களை
ஒதுக்கித்
தள்ளுவோம்…
வாளால்
மரித்தவர்களை விட…
வாயால்
மரித்தவர்களே அதிகம்
என்பது
பைபிள் வசனம்….
நாம்
மரிப்பதற்காகப் பிறந்தவர்கள் அல்ல..
மரித்தாலும்…
உயிர்த்தெழுவோம்…
அதுவே நமது மரபு… பாரம்பரியம்… சிறப்பு…