Tuesday 12 February 2019


கோவணமும் களவு போகுமோ?

பட்டுச்சட்டையைப் பற்றிய
கனவில் மூழ்கியிருந்தபோது….
அவன் கட்டியிருந்த...
கோவணமும் களவு போனது…
என்பது கவிஞர் வைரமுத்துவின் வரிகள்.

BSNL ஊழியர்கள்..ஊதிய உயர்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும்போது…
கையில் கிடைக்கும் சம்பளமும் காணாமல் போகுமோ?
என்ற கவலையை BSNL நிர்வாகம் உருவாக்கியுள்ளது…

நேற்று 12/02/2019 நமது CMDயுடன் அனைத்து சங்க கூட்டமைப்பின் 
தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்தக் கூட்டத்தில் ஊதிய உயர்வு பற்றிப்பேச வேண்டிய 
CMD அவர்கள் ஊதியத்தைப் பறிப்பது பற்றி பேசியுள்ளார்.
BSNLன் நிதிநிலை மிக கவலைக்கிடமாக உள்ளதாகவும்
அதனால் BSNL ஊழியர்கள் பிப்ரவரி மாத சம்பளத்தை
விட்டுக்கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் பத்தாண்டுகளுக்குப் பின்
தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியமாற்றத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் போது கையில் வாங்கிக்கொண்டிருக்கும்
சம்பளத்தைப் பிடுங்க முயற்சிக்கும்
BSNL நிர்வாகத்தின் போக்கு மிகவும் கொடுமையானது.

ஆனால் கூட்டமைப்பின் தலைவர்கள் 
CMDயின் அர்த்தமற்ற
கோரிக்கையை உடனடியாக நிராகரித்துள்ளனர்.
மேலும் போராட்டம் என்பது நடந்தே தீரும் எனவும்
தெளிவுபட எடுத்துரைத்துள்ளனர்.

பல சமயங்களில் பல தலைவர்கள்
இந்த மாதம் சம்பளம் வருமா? பாருங்கள் தோழர் என்று
புலி வருது பாணியில் கூறுவதுண்டு.
இதோ இன்று புலி வந்து விட்டது.
இந்தக் கொடும்புலியைப் போராட்டத்தடி கொண்டு
தாக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தை தீவிரமாக்குவோம்…
ஒதுங்கி நிற்போரையும் உரமேற்றி போராடவைப்போம்.
அரசு ஆணவத்திற்கு… நிர்வாக ஆணவத்திற்கு
போராட்டமே சரியான பதிலடியாகும்….

தோழர்களே உணர்வு கொள்வீர்…
இப்போது இல்லையெனில்...
இனி எப்போதுமில்லை… 

BSNLஐக் காத்திட..
நமது உரிமைகளை நிலைநாட்ட...
இதுவே இறுதிக்கட்டம்…

2 comments:

  1. finally we expecting the tiger at any time. but i cant understand how the three days strike will be favorable to us. assume that the proposed strike is 100%. then what will be the net result, as a customer never want to lose his signal at any cost and he never worry about others problem like teacher;s strike. according to us, those three days if all are in strike , then what is the effect of strike/ i dont think the government will come down but present condition will make every employee to hurt.......

    ReplyDelete
  2. If we won't show our unity and protest, before March 2019 we will be finished. Our leaders are not astrologers to predict today. We should stay United since our leaders are also like us only.First of all we should keep that we are struggling for our cause not for an individual's problem. We should stand United first and fight. We should follow the directions of our leaders and try to yield some positive results.

    ReplyDelete